![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 1 அக்டோபர் 2025 11:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 16 |
ராஜம் கிருஷ்ணன் நூல்கள் |
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருக்கு மணம் செய்விக்கப்பட்டார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார். ஒரு நாவலுக்கான பொருளை முன்பே திட்டமிட்டு, சம்பந்தப்பட்ட இடங்களில் பிரயாணம் செய்து, மக்களின் வாழ்வைக் கண்டறிய அங்கேயே தங்கி உய்த்துணர்ந்த பின்னரே நாவலை எழுதுவார். இதுவே இவரது தனிச் சிறப்பாகும். 1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர், அதன் விளைவாக 'முள்ளும் மலர்ந்தது' என்ற நாவலை எழுதினார். திருமதி ராஜம் கிருஷ்ணன் 'முள்ளும் மலர்ந்தது' நாவலை எழுதச் சம்பல் பள்ளத்தாக்குகளுக்கு நேரில் செல்லத் தீர்மானித்ததும், அவரது கணவர் தமது உத்தியோகத்தையே ராஜினாமா செய்துவிட்டு உடன் புறப்பட்டார். எத்தனை பேர்களால் இப்படிப்பட்ட தியாகங்களை, இலக்கிய ஆர்வத்தை முன்னிட்டுச் செய்ய முடியும்? அப்படி அங்கு அவர் தங்கியிருந்த போது மாபெரும் கொள்ளையன் மான்சிங்கின் மகன் தாசில்தார் சிங் என்பவனுடன் பேச சுமார் அரைமணி நேரம் பொறுமையாக அவனெதிரே இவர் அமர, அந்த மீசைக்கார கொள்ளையனோ, ஒரு தினசரியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, அப்படியே இழுத்தடித்துக் கொண்டிருந்தானாம்! ராஜம் அம்மாவின் பொறுமையைக் கண்டு, பின்னர் மனம் திறந்த அவன், நான்கு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தானாம்! இவன் சுமார் 400 கொலைகள் செய்தவன் என்பது குறிப்பிடத் தக்கது! இந்த 'முள்ளும் மலர்ந்தது' புத்தகத்திற்கு முன்னுரை எழுத திரு. ஜெயப்ரகாஷ் நாராயணணை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும், அவரைச் சுற்றி இருந்தவர் இவரை அருகிலேயே அண்ட விடவில்லை. சரி, வினோபா பாவேயிடம், சென்று வாங்கிலாம் என்றால், புத்தகத்தை (தமிழ்) முழுதும் பார்த்த அவர், தமிழிலேயே, "நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டவன். எனவே, என்னால் எந்த முன்னுரையும் தரலாகாது," என்றாராம்! ராஜம் அம்மாவோ, அங்கேயே சத்தியாக்ரகம் செய்து, "நீங்கள் தரும் வரை நான் இங்கேயே அமர்வேன்," என்று சொல்லி இருந்த இடத்தை விட்டு நகரவில்லையாம்! மனம் நெகிழ்ந்த பாபா (வினோபா பாவேயை அப்படித்தான் அழைத்தர்களாம்), "ஆசீர்வாதங்கள். அன்புடன், பாபா," என்று தமிழிலேயே எழுதி கையெழுத்திடாராம்! ஆனால் அந்தப் புத்தகம் எங்கோ போய்விட்டதுதான் மிகவும் வருத்தமான விஷயம். டாக்டர் ரெங்காச்சாரியின் சுய சரிதை எழுதுகையில், அவர் தொழில் புரிந்த எத்தனையோ ஊர்களுக்கு சென்று பயனுற்றவர்களை பேட்டி எடுத்துள்ளார். அதிகாலை நடை செல்லும் போது இவர் பிரசவம் பார்த்த ஆடு மேய்க்கும் பெண்ணையும் பார்த்து அவளைப் பேட்டி எடுத்துள்ளார். டாக்டர் ரெங்காச்சாரி வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்ப்பாராம். எனினும் ஒரு மருத்துவ கருத்தரங்கத்துக்கு செல்ல நேரிட்டபோது, உடன் சென்ற அவரது நண்பர் மட்டுமே இவர் பேசியதைப் பதிவு செய்திருந்தாராம். படுத்த படுக்கையாய் இருந்த அநத நண்பரைப் பேட்டி காண ராஜம் அம்மா, செல்கையில், டாக்டரின் பெயரைக் குறிப்பிடதுமே, 'இரு, நான் சொல்கிறேன்' என்று அந்த நிலையிலும், விரிவாக செய்திகளைப் பகிர்ந்து கொண்டாராம். (நண்பர் கஸ்தூரி ஸ்ரீநிவாசன்?) மறுநாள் பத்திரிகையை பிரித்த ராஜம் கிருஷ்ணனுக்கு தூக்கிவாரிப் போட்டதாம்! அந்த நண்பரின் மரணச் செய்தியைக் கண்டு! திரு. கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில் 2002ல் அவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. அதன் பிறகு தனது உறவுக்காரர்கள் சிலரை நம்பி தன்னிடமிருந்த பணத்தையும் சொத்துக்களையும் விட்டு வைத்தார் ராஜம் கிருஷ்ணன். ஆனால் அவர்களோ இவரை ஏமாற்றிவிட, 83 வயதில் நிர்க்கதியாய நிற்க வேண்டிய நிலை. அவரது நண்பர்களும், ஒரு சகோதரரும் உதவி செய்து அவரை பாலவாக்கம் விச்ராந்தி முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். ஆனால் யாரும் தன்னைப் பார்த்து இரக்கப்படுவதை இந்த நிலையிலும் விரும்பாத ராஜம் கிருஷ்ணன் இப்போதும் அதே உற்சாகத்துடன் எழுத்துப் பணியைத் தொடர்கிறார். இவரது கடைசி புத்தகம் ‘உயிர் விளையும் நிலங்கள்'. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அதை பெண்கள் எதிர்நோக்கும் விதங்கள் குறித்து 25க்கும் மேற்பட்ட கட்டுரைகளோடு கூடிய இந்தப் புத்தகம் பெண்களுக்கு புதிய விழிப்பை உண்டாக்கும் முயற்சி. முதுமையில் தற்போது பொருளாதார கஷ்டத்தினாலும் உடல்நலிவினாலும் கஷ்டப்பட்டு வந்த திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்களின் வேண்டுகோளினை ஏற்று தமிழக அரசு, ஒரு சிறப்பு ஏற்பாடாக கருதி, முதல் முறையாக உயிரோடிருக்கும் ஒரு எழுத்தாளரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அவரின் படைப்புக்களுக்கு ஈடாக அவருக்கு 3 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையை மாண்புமிகு தமிழக துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 11-07-2009 அன்று மருத்துவமனையில் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து அளித்து சிறப்பித்தார். அவரின் எழுத்துக்களுக்கு இந்த தொகை பெரிதல்ல என்றாலும், அநத சிறிய தொகை அவரது கஷ்டங்களைப் போக்கினால் நல்லதே. அவர் உடல் நலம் தேறி பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுவோம்! விருதுகள் 1952ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதை தொகுப்பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது. 1953ல் கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண் குரல்' நாவல். 1958ல் ஆனந்த விகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. 1973ம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருதை 'வேருக்கு நீர்' என்ற நாவலுக்காக இவர் பெற்றார். 1975ல் சோவியத்லாந்து - நேரு பரிசைக் கோவா விடுதலைப் போராட்டத்தைச் சித்தரிக்கும் இவரது 'வளைக்கரம்' நாவல் பெற்றது. 1979ல் இலக்கியச் சிந்தனைப் பரிசை தனது 'கரிப்பு மணிகள்' நாவலுக்குப் பெற்றார். 1982ல் பாரதீய பாஷா பரிஷத் பரிசையும் இலக்கியச் சிந்தனைப் பரிசையும் ஒரு சேர இவரது 'சேற்றில் மனிதர்கள்' நாவல் பெற்றது. 1987ல் தமிழ்நாடு அரசு பரிசை இவரது 'சுழலில் மிதக்கும் தீபங்கள்' நாவல் பெற்றது. 1991ல் தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருதைப் பெற்றார். இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன. புதினங்கள் அல்லி (சிறு கதைகள்) அவள் (சிறுகதைகள்) அமுதமாகி வருக அழுக்கு அன்னையர் பூமி ஆண்களோடு பெண்களும் இக்கிணி அரசகுமாரி இந்திய விடுதலைப் போரில் பெண்கள் இறுதியும் தொடக்கமும் உயிர்ப்பு உயிர் விளையும் நிலங்கள் ஊசியும் உணர்வும் கதைக்கனிகள் கல்வி (சிறுகதை) களம் (சிறுகதைகள்) கனவு காக்கானி காலந்தோறும் பெண் காலம் காலம்தோறும் பெண்மை கிழமைக்கதைகள் (சிறுகதை) கூடுகள் கை விளக்கு சத்திய தரிசனம் சத்திய வேள்வி டாக்டர் ரங்காச்சாரி தங்கமுள் தோட்டக்காரி நட்புறவின் அழைப்பு நித்திய மல்லிகை (சிறுகதை) பச்சைக்கொடி (சிறுகதை) பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி பாரத குமாரிகள் பானுவின் காதலன் புதிய கீதம் இசைக்கின்றனர் புதியதோர் உலகு செய்வோம் புயலின் மையம் பெண் விடுதலை : இலக்கியத்திலும் வாழ்விலும் மண்ணகத்துப் பூந்துளிகள் மயிலம்பட்டு வள்ளி மலர்கள் மலை ரோஜா (சிறுகதைகள்) மாயச் சூழல் மானுடத்தின் மகரந்தங்கள் மின்னி மறையும் வைரங்கள் (சிறுகதை) முள்ளும் மலர்ந்தது யாதுமாகி நின்றாய் வண்ணக்கதைகள் (சிறுகதை) வளைக்கரம் விடியும் முன் விலங்குகள் |