(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

1. ஆமிராவதி

     சலசல வென்ற முழக்கத்தோடு வராக மலையிலிருந்து வடகிழக்காக ஓடி வருகின்றது ஆமிராவதி நதி. அதன் இரு கரையிலும் இடைவெளி இல்லாமல் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன மாமரங்கள். அந்த மாமரச் சாலை வழியே ஆஜானுபாகுவான இருவர், நதியின் போக்கையே துணையாகக் கொண்டு நடந்து வருகிறார்கள். அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? ஆமிராவதி நதியின் அலை முழக்கமும், இரு கரையிலிருந்தும், மா வடுக்கள், பூவும் தளிருமாகக் கொத்துடன் நதியில் ‘துடும் துடும்’ என்று விழும் சப்தமும், பறவையினங்களின் ‘கலகல’ப்புச் சப்தமும், சிறிது தூரத்துக்கு அப்பால் பசும் புல் மேடுகளில், மேய்ந்து திரியும் பசுக் கூட்டங்களின் குரலும், அவற்றின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளின் ‘கண கண’ என்ற இனிய நாதமும், சாலையிலே நடந்து செல்லும் கம்பீர புருஷர் இருவருடைய உள்ளத்தையும் கிளர்ச்சியுறச் செய்தன.


ஒளி ஓவியம்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

குறள் இனிது
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

தமிழகத்தில் ஆசீவகர்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

திருப்பட்டூர் அற்புதங்கள்
இருப்பு இல்லை
ரூ.115.00
Buy

சிக்கனம் சேமிப்பு முதலீடு
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

சாயங்கால மேகங்கள்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

காலை எழுந்தவுடன் தவளை!
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

நெப்போலியன்
இருப்பு உள்ளது
ரூ.330.00
Buy

வளம் தரும் விரதங்கள்
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

தமிழ்நாட்டு வரலாறு
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

சூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

மூலிகையே மருந்து!
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

ஜமீன் கோயில்கள்
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

வெற்றி சூத்திரங்கள் பன்னிரண்டு
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

சேரமான் காதலி
இருப்பு உள்ளது
ரூ.300.00
Buy

டிஜிட்டல் மாஃபியா
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

சிலையும் நீ சிற்பியும் நீ
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

நரேந்திர மோடி
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

ஆரோக்கியமே அடித்தளம்!
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy
     தளிரும் பூவும் சுழன்று கரையிலே மோதிச் செல்லும் அந் நதியின் அழகிலே கண்ணையும் கருத்தையும் பறி கொடுத்தவர்களாய்த் தலை நிமிர்ந்து இறுமாந்து நடந்து செல்லும் அவ்விருவரும் ஆண் சிங்கம்போல் மிடுக்கு உடையவர்களாய்த் தோன்றினாலும் அவர்கள் வீரர்கள் அல்லர். ஆம்! வில்லும் வாளும் கொண்டு போர்க் களத்திலே முன்னின்று எதிர் பொரும் வீரர் அல்லர் என்பது உண்மைதான்; ஆனால் உலக வாழ்க்கையாகிய அரங்கத்திலே மனம், மொழி, மெய் - இவற்றால் முக் குற்றங்களையும் வேர் அறுத்த தவ வீரர்கள் அவர்கள். அவர்களுடைய பார்வையிலே தவ ஒளி வீசுகிறது. நெடுந்துரம் நடந்துவரும் அவர்கள் நடையிலே சிறிதும் தளர்ச்சி இல்லை; விடைபோன்று மிடுக்குடன் நடந்து வருகிறார்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? நடையில் தளர்ச்சி இல்லாவிட்டாலும் ஒருவாறு, அவர்கள் வரும் வழியை நோக்க, நெடுந்தூரத்திலிருந்து வருகிறார்கள் என்று அறியலாம்.

     ஆம்! ஆமிராவதி நதியின் ஜன்மஸ்தானமாகிய ஆனை மலைத் தொடரிலிருந்துதான் வருகிறார்கள். நதி புறப்பட்ட இடத்திலிருந்து, அது, வராக மலையின் பாறைகளில் அலை மோதி வரும் வழியாகவே, அவர்கள் வருகின்றனர். அவர்கள் நடையில்தான் என்ன வேகம்! நெடுந்துரம் அவர்கள் வந்துவிட்டார்கள். காட்டுப் பிராந்தியங்களைக் கடந்து விட்டார்கள். ஆமிராவதியின் ஜன்மஸ்தானத்தில் புறப்பட்ட அவர்கள், அந்நதியின் இறுதி எல்லையை அணுகிவிட்டார்கள். இறுதி எல்லை எது?

     சேர நாட்டின் தலை நகரான கருவூர்க் கோட்டையின் புறமதிலில் அந்நதி அலைமோதிச் சென்று நகரின் வட கீழ்த் திசையிலே, காவிரி நதியோடு கலக்கின்றது. அதன் இறுதி எல்லை அதுதான்; அது மட்டுமா! ஆமிராவதி, தன் அழகுச் செல்வத்தையல்லவா, காவிரிக்குத் தியாகம் செய்கிறது? ஆமிராவதியைப் போன்றே, மணிமுத்தா நதி என்ற உபநதியும் அதே இடத்தில் சங்கமம் ஆகின்றது. ஆமிராவதியும் மணிமுத்தா நதியும் காவிரி யோடு சங்கமமாகும் அவ்விடத்தை ‘முக்கூடல்’ என்று ஏன் சொல்லக்கூடாது? அம்மூன்று நதிகளின் சந்திப்பாகிய முக்கூடல்தான் சேரநாட்டின் எல்லையையும், சோழநாட்டின் எல்லையையும் பிரித்துக்காட்டி, ஓர் எல்லைக் கல்லாக விளங்குகிறது; எவ்வளவு முக்கியமான இடம் அது! கருவூர்க் கோட்டைக்கு நான்கு காததூரத்தில்தான், சோழ நாட்டின் தலைநகர், உறையூர் விளங்கு கிறது. ஆகவே, சோழருக்கும் சேரருக்கும் எதிர்பாராத விதம் அடிக்கடி போர் மூள்வதற்கும், இரு ராஜஸ்தானங்களும் அருகருகே இருந்தமையே காரணம். குடகுமலையிலிருந்து உற்பத்தியாகும் காவிரியாறு, தென் கிழக்காகப் பாய்ந்து இடையே சேர நாட்டில் புகுந்து, கருவூர்க் கோட்டையை அணுகிச் செல்கிறது. ஆனால் காவிரி, சோழ நாட்டுக்கே உரிய ஜீவநதியல்லவா? அதேபோல் சேர நாட்டுக்கே உரியதாக, சேரநாட்டிலேயே பாய்ந்து வரும், ஜீவ நதியாக, விளங்குவது ஆமிராவதி. காவிரிக்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல ஆமிராவதி. ஆதலால் மாவின் மணம் கமழும் தெள்ளிய தண்ணீரால் சேர நாட்டை வளமுறச் செய்யும் அந் நதியைக் கண்டு, சாலை வழியே நடந்து வரும் வைராக்கிய புருஷர்கள் இருவரும் உடலும் உள்ளமும் பூரித்து வியப்புற்றதில் என்ன அதிசயம்?

     அவ்விருவரும் ஆனைமலைத் தொடரிலிருந்து ஆமிராவதியின் அழகை அநுபவித்து வருகிறார்கள். மாமரச் சோலையிலே நிலமகளின் கூந்தல் பிரிவென அழகு பூத்துச் செல்லும் அந்நதியின் இயற்கை வனப்பிலே - அதன் தெள்ளிய பளிங்கு நீரிலே தளிரும் பூவும் சுழியிட்டுச் செல்லும் அதன் அழகிலே - சில்லென்ற, மலயத் தென்றல், மாமணம் நாலாபுறமும் பரவ, ஆமிராவதியை அணைந்து அள்ளி மாமரச் சோலையின் இருபுறமும் வீசிச் செல்லும் தன்மையிலே - மாமரக் கிளைகள் மீது அமர்ந்து மாந்தளிரைக் கோதி உள்ளக் குது குதுப்போடு, நீரோட்டத்தைப் பார்த்து, ‘ஆமிராவதி! ஆமிராவதி’ என்று இன் குரலை எடுத்துக் கூவும் குயிலினங்களின் பேரின்பத் தொனியிலே - அவ்விருவரும் ஈடுபட்டார்கள். ஆசை வேர் அறுத்த வைராக்கிய சீலர்களான அம்முனிவர்களின் உள்ளமும் நெகிழ்ந்ததென்றால், ஆமிராவதியின் வசீகர அழகை என்னென்று சொல்வது? இயற்கையழகிலே உள்ளம் நெகிழாதவர் யார்?

     ஆனை மலைத் தொடரிலிருந்து புறப்பட்ட அவர்கள், பல காதங்கள் கடந்து ஆமிராவதியின் சங்கமத்தை அடைந்து விட்ட பின்பும் சிறிதும் களைப்புக் கொள்ளவில்லை. ஆமிராவதியின் சங்கமத்திற்கு அணிமையிலேயே இருவரும் நின்றனர். அவர்கள் நின்ற இடந்தான், கருவூர்க்கோட்டையின் புறமதிலின் வாயிற்புறம். வானையளாவிய மதில்கள் , மேக ஸஞ்சாரத்தை ஊடுருவி அசைந்தாடுகின்றதும், வில்லின் வடிவம் எழுதப் பெற்றதுமான கொடிகள், எழு நிலைக் கோபுரங்கள், அதற்கு அப்பால் விளங்கும் மாடமாளிகைகளின் சிகரங்கள், புறமதிலை ஒட்டினாற்போல் விளங்கும், பல உப்பரிகைகள் அமைந்த மாளிகைகள், மதிலை அணைந்து விளங்கும் பெரிய அகழி - இவை யாவும் அவ்விருவர் கண்களுக்கும் விருந்தளித்தன.

     சுற்றுப்புறத்தை ஒரு முறை பார்த்தார்கள். ‘சேர நாட்டின் ராஜ கிருகம் இவ்வளவு சிறப்புடையதா!’ என்று தமக்குள் கூறிக்கொண்டவர்களாய் ஆழ்ந்த பெரு மூச்சு விட்டனர். கோட்டையின் வாயிலில், வாள் வீரர் இருவர் மிடுக்குடன் காவல் காத்து நிற்பதையும் கண்டார்கள். முனிவர் இருவரது உள்ளமும் முடுகியன.

     “நாம் நாடிவந்த இடம் இதோ பேரழகுடன் தோற்றம் அளிக்கின்றது! ஆனால் உள்ளே போவதற்குத் தடை இல்லாமல் இருக்க வேண்டும்!” என்று ஒருவர் மற்றொருவரைப் பார்த்துச் சொன்னார்.

     “தடை நமக்கும் உண்டா? துறவிக்குப் பகையென்றும், நட்பென்றும் வேறுபாடு எதுவும் இல்லையே! இந்த உலகில், ஆசை அகற்றிய துறவி ஒருவன் எங்கும் சுதந்தரமாகப் போகலாம். தமிழ் நாட்டிலே நமக்கு இதுகாறும் இவ்விதத் தடை எங்கும் ஏற்பட்டதில்லையே!” என்றார் அவர்.

     “ஆம்! போய்த்தான் பார்ப்போமே!”

     இருவரும் கோட்டை மதிலின் முன்புறத்தை அணுகினார்கள். மிடுக்கு வாய்ந்த நடையோடு வரும் இவர்களைக் கண்டு, வாள்வீரர் இருவரும் சிறிதே வியப்போடு பார்த்தார்கள். உலக வாழ்க்கையை வெறுத்த முனிவர்களே இவ்விரு வரும் என்று உணர்ந்தார்கள். ஆனால் சேர வேந்தனுடைய கட்டளை அவ்விருவருக்கும் நினைவுக்கு வந்தது. சட்டென்று நிமிர்ந்து நின்றார்கள். முனிவர்களின் வருகையைத் தடை செய்யும் நோக்கத்தோடு இரு வாள் வீரரும் மதில் வாயிலின் முன் வாள்களை நீட்டினார்கள். போகும் வழியிலே, குறுக்காக வாள் நீட்டப்பட்டதைக் கண்டு முனிவர் இருவரும் புன்னகை செய்தவாறே நின்றார்கள். மின்னல் ஒளியோ என்று கூறும்படி இருந்தது அவர்கள் புன்னகை. முனிவர் இருவரையும் வெறித்துப் பார்த்தார்கள் வாள் வீரர். வீரரின் மார்பு நிமிர்ந்தது. வில்லெழுதிய கவசம் அவர்கள் மார்பை அலங்கரித்தது.

     “யாரையா நீங்கள்?” - வீரர் கேட்ட கேள்வி இதுதான்.

     “நாங்கள், ஆனைமலையிலிருந்து வரும் ஜைனத் துறவிகள்!”

     “ஐயா! குற்றம் பொறுக்கவேண்டும்; ஆனால், நகருக்குள் போவதற்கு அநுமதியில்லாமல்...”

     “உலக வாழ்க்கையை வெறுத்த எங்களுக்குமா? இவ்விதத் தடை சேர நாட்டில் மட்டுமே...”

     “இல்லை, இல்லை; இந்நாட்டிலும் தடை இல்லைதான். ஆனால் இச்சமயம் பெரியயுத்தம் ஒன்று நடக்கிறது...”

     “எங்கே?”

     “சேரவேந்தனுக்கும், சோழவேந்தனுக்கும்! எப்போதும் இந்தத் தொல்லை அதிகம்! பகைவர் துறவி வேஷத்தோடு உள்ளே புகுந்துவிடுகிறார்கள்; அதனால் எங்கள் அரசர் இவ்விதம் எல்லாத் துறவிகளுக்குமே...”

     “அப்படியானால் உங்கள் அரசன் அநுமதியை நாங்கள் எப்படிப் பெறமுடியும்? இந்நகரைப் பார்க்க வேண்டியது எங்களுக்கு அவசியமாக இருக்கிறது.”

     “அடிகளே! அதோ தெரிகிறது பாருங்கள், பெரிய மாளிகை!” என்று கண்களால் குறிப்பிட்டான் ஒரு வீரன். அந்த திக்கைப் பார்த்த முனிவர்கள், ஒரு பெரிய மாளிகையைக் கண்டார்கள். ஏழு நிலைகளுள்ள மாளிகை அது. மிக உயர்ந்து விளங்கியது அம்மாளிகை. அதைப் பார்த்த பின்பு, மீண்டும் வீரரை நோக்கினர்.

     “ஏன்? அம்மாளிகையின் விசேஷம் என்ன? அதோ, மேல் உப்பரிகையில் சிறு கூட்டம் தெரிகிறது!” என்று கையால் சுட்டிக் காட்டினர்கள் முனிவர்கள்.

     “ஐயோ! என்ன விபரீதம் இது! கையால் சுட்டிக் காட்டாதீர்கள்! பெருங்கேட்டை உண்டு பண்ணாதீர்கள்! அந்த மாளிகையின் உப்பரிகையில்தான் சேர வேந்தர் இருக்கிறார். படைகள் வெற்றியுடன் வருகின்றனவா என்பதை எதிர்பார்த்து அங்கே இருக்கிறார். அந்த மாளிகைக்குத்தான் ‘வேளாவிக்கோமாடம்’ என்று பெயர். அதன் உப்பரிகையிலிருந்து பார்த்தால், உறையூர் கூடக் கண்களுக்குப் புலப்படும்...”

     “அப்படியா? அரசன் இங்கேதான் இருக்கிறானா?”

     “அப்படிக் கேட்காதீர்கள் - அதோ-” என்று வீரர் இருவரும் அருகில் வரும் ஒரு வீரனை எதிர்நோக்கினார்கள்.

     “அடே, இவர்களுடன் என்ன பேச்சு? அரசனைச் சுட்டிக் காட்டிப் பேசிய இவர்களைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்களா? அரசர் இவர்களைப் பிடித்து வரக் கட்டளையிட்டிருக்கிறார்” என்று வந்த வீரன் கடுஞ் சொற்களைக் கக்கினன்.

     “வீர! நாங்களே உங்கள் அரசரிடம் வருகிறோம்; முன்னே போ” என்று இரு முனிவர்களும் வேளாவிக் கோமாடத்தை நோக்கி நடந்தார்கள். முன்னே மிடுக்குடன் சென்றான் வீரன்.

     வேளாவிக்கோமாட மாளிகையின் மேல் உப்பரிகையில், ‘சேரவேந்தன் கணைக்கால் இரும்பொறை’ நின்றவாறே, முனிவர் இருவரின் வருகையைக் கூர்ந்து கவனித்தான். அவனுடன் நின்ற மற்ற வீரர் தலைவர்களும் வியப்போடு நின்றார்கள்.

     முன்னே வீரர்கள் செல்ல முனிவர்கள் போயினர். வேளாவிக்கோ மாளிகைக்குள் புகுந்தார்கள்; பல நூறு படிகளில் ஏறி, பல மாடங்களையும் கடந்து மேல் உப்பரிகையை அடைந்தார்கள். அரசன் திரும்பிப் பார்த்தான். முனிவரின் முகத்தோற்றத்தைக் கண்டவுடன் சந்தேகம் இல்லாதவனாய்ச் சட்டென்று கை குவித்து வணங்கினான்.

     “வேந்தே! வாழ்க! எம் அருகப் பரமேஷ்டியின் அருளால் உனக்கும் உன் நாட்டிற்கும் மங்களம் உண்டாகுக!”

     முனிவர்களின் ஆசி மொழிகள் அவனைப் பூரிப்புக் கொள்ளச் செய்தன.

     “அடிகளே! இதில் அமருங்கள்! என் குற்றம் பொறுக்க வேண்டும்; சந்தேகம் பெரிதும் இவ்விதக் கஷ்டங்களை அளிக்கின்றது” என்றான். முனிவர்கள் அரசன் குறிப்பிட்ட ஆசனத்தில் அமர்ந்தார்கள். “வேந்தே! உன்னுடைய தற்காப்புக்கு வேண்டியதே இது. ஆனால் உன்னுடன் போர் தொடுத்த சோழன் யார்?”

     “அதோ தெரிகிறது பாருங்கள் உறையூர்ப்பட்டினம்! அதன் அரசன் சோழன் செங்கணான் என்பவன் என்னோடு தீராப் பகையுடன் இருந்து வருகிறான்; ஒரு முறையா, இரு முறையா? பல தடவைகள் யுத்தம் நடந்தது. தோல்வியும் வெற்றியும் மாறி மாறி இரு பக்கமும் இருந்து வருகிறது. போர் என்றால் அற்பமா? எவ்வளவு நஷ்டம்!” என்று பெரு மூச்சு விட்டான்.

     அதைக் கேட்டாற்போலவே முனிவர் இருவரும் உப்பரிகையின் முன்னிடம் சென்று கருவூர்க்கோட்டையின் அழகைக் கண்டு நின்றார்கள். நானாபுறமும் பார்த்தார்கள். உறையூரின் தோற்றத்தையும், இடமகன்ற சாலைகளையும், முக்கூடலின் அழகையும் கண்டார்கள். கருவூரின் அகநகர்க் காட்சியையும் பார்த்தார்கள்.

     “சேர வேந்த! உன் நாட்டின் அழகைக் காணவே இங்கு வந்தோம்; ஆனை மலையிலிருந்து வருகிறோம். உன் நாட்டின் பெருமையை நன்றாக அறிந்தோம். இந்த மாளிகை இவ்வளவு உயர்ந்து விளங்குவதாலேயே இந்நகரின் வனப்பை நன்றாகக் காண முடிகிறது. உறையூரின் தோற்றங்கூடத் தெரிகிறதே!” என்று கூறியவாறே ஜைனத் துறவிகள் நகர்க் காட்சியில் மனம் ஒன்றியிருந்தார்கள். அரசனின் பார்வை பரபரப்போடு, முக்கூடலின் கரையோரமான இடமகன்ற சாலையை நோக்கியது. கீழ்த்திசையிலிருந்து காவிரியின் கரையோரமாக வரும் ஒரு கூட்டம் அவன் கண்களுக்குப் புலப்பட்டது. அவன் அதைக் கண்டு ஆவலோடும் திகிலோடும் மேலும் உற்றுநோக்கினான். சிறிது நாழிகைக் கெல்லாம் அந்தச் சிறு கூட்டத்தைத் தொடர்ந்தாற் போல் பெருங்கூட்டம் தெரிந்தது. தன்னுடைய பெரும் படையே வருகிறது என்பதை உணர்ந்தான். ஆனால் வெற்றிக்கு அறிகுறியாக ஒன்றும் தெரியாததைக் கண்டு கலங்கினான். நால்வகைப் படைகளும் கோட்டையை அணுகிவரும் பெரு முழக்கத்தைக் கேட்டு உப்பரிகையிலிருந்து யாவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

     ஆமிராவதி நதியின் கரையோரமாக, சேரனின் மாபெரும் படை பேராரவாரத்துடன் வருகிறது. சாலையிலிருந்து எழுந்த தூளி ஆகாயத்தைக் கவிந்து கொண்டது. படைகள் தலைகால் தெரியாமல் வேகமாக வருகின்றன. கோட்டை மதிலை அவை அணுகியவுடன் மதில் கதவுகள் ‘தடால்’ எனத் திறக்கப்பட்டன. ஏன் அவ்வளவு வேகம்? படைகளின் எதிர்பாராத வேகத்தைக் கண்டவாறே, சேரன் வேளாவிக்கோ மாளிகையின் உப்பரிகையில் பரபரப்போடு நிற்கிறான்.

     கணக்கற்ற பெரும்படைகள் மிக வேகத்தோடு கோட்டைக்குள் புகுவதென்றால், அதனல் உண்டாகும் சப்தம் சாமானியமானதா? எங்கும் எதிரொலிக்கிறது சேனை செல்லும் ஆரவாரத்தால் உண்டான முழக்கம். அரசன் கூர்ந்து கவனிக்கலானான். அவன் கண்கள் சுழன்றன.மருதியின் காதல் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11


சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் :  அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி :  சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி :  மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல் | கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் :  திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் :  அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் :  தினசரி தியானம்