(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 13. விடுதலை? சாலையிலே புலவரால் குத்துண்டு வீழ்த்தப்பட்ட நல்லடிக்கோன் அரை நாழிகைப் பொழுது சென்ற பின் நினைவு பெற்றான். நினைவு வந்த உடனேயே பந்து போல் எழுந்து குதித்தான். சுற்றிலும் நோக்கினான். தன்னுடைய தேர் மட்டும் நிற்பதைக் கண்டான். பல்லக்கைக் காணவில்லை. விறு விறென்று சிறிதே நடந்து கிழக்கு நோக்கிப் பார்த்தான். சிவிகையின் உருவமே தெரியவில்லை. அவன் மனம் துயரத்தாலும் வெட்கத்தாலும் கோபத்தாலும் கணத்துக்குக் கணம் பொருமியது. வானத்தில் நிறைமதியைக் கண்டான். அகன்ற நிலப்பரப்பெங்கும் வெள்ளொளியைப் பார்த்தான். எங்கும் அமைதி குடிகொண்டிருப்பதைச் சிந்தையில் கொண்டான்.
அவன் கால்கள் மிக வேகமாகத் தேர்ப்பக்கமாகச் சென்றன. தேரில் ஏறி அமர்ந்தான்: ‘என்னுடைய முதல் காரியம், சேரனை விடுதலை செய்யாமல் சிறையில் வாழ்விப்பது; இரண்டாம் காரியம், அத்தியைச் சிறைப்பிடிப்பது’ என்று சொல்லிக் கொண்டே தேரைச் செலுத்தினான். கருவூர் நோக்கித் தேர் கடுகியது. ‘சேரன் விடுதலையாகியிருந்தால் என்ன செய்வது? என் உடம்பாட்டைப் பெறாமலே விடுதலை செய்து விடுவாரா? சேரனை விடுதலை செய்தால் அடுத்தாற்போல் மருதியையும் விடுதலை செய்ய நேருமே. மருதியை விடுதலை செய்வதானால் நான் துறவியாகிவிட வேண்டியது தான்!’ என்று உறுதி செய்து கொண்டே சென்றான். நல்லடிக்கோனின் தேர் கருவூரை அணுகியது. ஆவலோடு நகரை நோக்கிக் குதிரைகளை முடுக்கினான். ஆமிராவதி அணையைக் கடந்து கோட்டை வாயிலை அடைந்தது தேர். சட்டென்று தேரை நிறுத்தினான். விரைவாகத் தேரைவிட்டு இறங்கினான். குணவாயில் கோட்டத்தை நோக்கி நடந்தான். குணவாயில் கோட்டத்தின் முன் புறத்தை அடைந்ததும், சிறைக் காவலர்கள் தலைவணங்கி நின்றார்கள். “சேரன் என்ன செய்கிறானடா!” என்றான் நல்லடிக்கோன். “வேந்தே, உண்பதற்குத் தண்ணீர் வேண்டுமென்றார், ஒருவன் ஆமிராவதிக்குப் போயிருக்கிறான்; இன்னும் வரவில்லை; அதனால் கோபங்கொண்டு ஏதோ சொன்னார். ஓலையில் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார்...” என்று சிறைக்காவலன் ஒருவன் சொன்னான். “அடே, கவனமாக இருங்கள்! யாரையும் உள்ளே விடாதீர்கள்! நான் விரைவில் வருகிறேன்” என்று கூறி விட்டு மிக வேகமாகத் தேர் இருக்குமிடம் வந்தான். தேரில் ஏறிக்கொண்டான். கோட்டை மதிலுக்குள் புகுந்து தேர் ‘கட கட’ என்ற முழக்கத்தோடு சென்றது. நடுவானத்தை அடைந்து கொண்டிருந்தது நிறைமதி. வீதியில் நிசப்தமாக இருந்தது. ஜனங்கள் யாவரும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டனர். இடையாமத்தில் கண் விழித்து, நிலா முற்றத்தில் அமர்ந்து இன்பப் பொழுது போக்கும் காதலர் மட்டும் வீதியில் முழக்கிட்டுச் செல்லும் தேரைக் கண்டு வியப்புற்றார்கள். அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மாந்தருடைய கவனத்தையும் அத்தேர் முழக்கம் வசீகரித்தது. இந்நிலையில் தேர் அரண்மனையை அடைந்தது. அரண்மனைக்குள் புகுந்ததும் வாயில் மாடத்தின் வாயிலிலே தேர் நின்றது. மிகுந்த ஆதுரத்தோடு தேரிலிருந்து நல்லடிக்கோன் குதித்தான். வாயில்மாடத்துக்குள் புகுந்தான். புகுந்த உடனே உள்ளே யாரோ சிலர் பேசும் குரல் கேட்டது. அந்தக் குரல் அவன் மனக் கிளர்ச்சியை அதிகம் ஆக்கியது. மிகுந்த பரபரப்போடு சென்றான் உள்ளே. நள்ளிரவில் அப்படி யார் பேசிக்கொண்டிருப்பார்கள்? அதுவும் அரசனின் அரண்மனையிலா? - நல்லடிக்கோன் பாம்புபோல் புகுந்தான். அரண்மனையின் முன் மண்டபத்தில் சிலர் கூடியிருந்தார்கள். நாலு புறமும் விளக்குகள் விளங்கின. விளக்குகளிலிருந்து தீச்சுடர்கள் சிதறிய வண்ணமாக இருந்தன. மந்திரியர், சேனாபதியர், புலவர்கள், வீரர் சிலர்- இவர்களுக்கு நடுவே அரசன் செங்கணான் சிங்காதனத்தில் அமர்ந்திருந்தான். அவனுக்கு அருகில் - மிக அணிமையில் ஓர் ஆதனத்தில் பொய்கையார் என்ற புலவர் அமர்ந்திருந்தார். சோழன் செங்கணான் இரு கைகளாலும் ஏதோ குறிப்பிட்டுக் ‘கல கல’ வென்று நகை செய்தான். அதே சமயம் நல்லடிக்கோன் அரசனை அணுகி வணங்கி நின்றான். செங்கணான் பேராச்சரியம் அடைந்தான். ‘சேரனின் விடுதலை’ என்ற பேச்சைக் கேட்டதும் அவனுக்கு நிலைகொள்ளவில்லை. “அப்படியா?... இதோ பார், புலவர் பொய்கையார், ‘களவழி நாற்பது’ என்ற பிரபந்தம் பாடி வந்திருக்கிறார். சேரனை நாம் வெற்றிகண்ட சிறப்பைப் பாடியிருக்கிறார். கழுமலத்துப் போரைப் பற்றியும் திருப்போர்ப்புறத்து போரைப் பற்றியும் புகழ்ந்திருக்கிறார். நம் பூத உடல் அழிந்தாலும், வெற்றிப் புகழை என்றும் இருக்கும்படி தம் பாக்களால் நிலைநாட்டிவிட்டார். உலகம் உள்ளளவும் நம் வெற்றிப் புகழ் நிலைநிற்கும்படி செய்துவிட்டார் இந்தக் கவிஞர்!” “இப்படி அமர்ந்துகொள்” என்றான் அரசன். நல்லடிக்கோன் அரசனுக் கு அருகில் அமர்ந்து கொண்டான். “குமர! ‘பிரபந்தம்’ அரங்கேற்றம் ஆவதென்றால் சாமான்யமா? அதோ புலவர்களைப் பார்! பொய்கையாரின் பிரபந்த அரங்கேற்றத்தை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டியது பிரதானம். பிரபந்தத்திலுள்ள குற்றங்கள், குணங்கள் முதலியன அவர்களுக்குத் தானே தெரியும்! மாலையில்தான் பிரபந்த அரங்கேற்றம் தொடங்கியது. இன்று பிற்பகலில்தான் பிரபந்தமே பாடியிருக்கிறேன் என்கிறார் பொய்கையார். அதனால் தான் இவ்வளவு நாழிகை ஆயிற்று. இப்போதுதான் பிரபந்தத்தின் கடைசிப் பாட்டு முடிந்தது. ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு முத்துக்கள்!” “தந்தையே, பொய்கையாருடைய பாட்டுக்கள் மிக இனிமையாக இருந்தாலும், சேரனை நினைக்கையில்... வேறு விதமாகி விடுமே! பொய்கையாருடைய பாடலுக்குத் தகுந்த பரிசாக அவர் பிறந்த நகராகிய தொண்டிப் பட்டினத்தையே அவருக்கு அளித்து விடுவோம். அல்லது இந்தக் கருவூரையே வேண்டுமானாலும் கொடுத்து விடுவோம்!” என்றான் நல்லடிக்கோன். “குமர! அப்படிச் சொல்லாதே! நான் வாக்குறுதி கொடுத்துவிட்டேன். ‘விடுதலை’ கொடுத்துவிட்டேன்” என்றான் சோழன். “முடியாது! ஒரு காலும் முடியாது! சேரனுக்கு விடுதலையளிப்பதானால் எனக்கும் விடுதலை அளித்து விடுங்கள்! நான் எங்காவது போய் விடுகிறேன்.” “மைந்த, ஏன் பதற்றம்? சேரன் எப்படி இளைத் து விட்டான் தெரியுமா? அல்லாமல் அவனும் ஒரு மன்னன்! மக்கள் உயிர் காக்கும் காவலன்! ஏதோ முறைகேடு என்னிடம் செய்தான்! நன்னனுக்கு இடம் கொடுத்தான். போர்த் தொல்லை செய்தான். வேறு என்ன? எவ்வளவோ துயர் செய்தான் என்பது உண்மை. ஆனால் இன்று மாலை அவனைப் போய்ப் பார்த்தேன்! மனம் மயங்கி விட்டேன். இன்று காலையில் கூட, புலவர் பொய்கையாரிடம் மறுத்துக் கூறினேனேயன்றி விடுதலைக்கு உடம்படவில்லை. சேரனின் உடல் நலம் கெட்டுவிட்டது. ‘மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்ன’ மன்னன் அவன்! என்பதை அறிந்தேன். பொய்கையாரின் உதவியையும் கருதினேன். நீயே யோசித்துப் பார்! குன்றன்ன தோளான் சேரன்! அவன் தோள்கள் இன்று எப்படி இருக்கின்றன தெரியுமா? குழைந்து வாடி இருக்கின்றன. சேரனைச் சிறையிலிருந்து விடுதலை செய்வது நமக்கு எவ்வளவு பெரும்புகழ் தரும் என்பதை யோசித்தாயா? முடிமன்னனான அவனைச் சிறைப் பிடித்து வலியடக்கியபின் மீட்டும் சிறை வீடு செய்தால் உலகம் என்றென்றும் புகழும்; பாண்டியன் புகழ்வான்; கரிகாலன் புகழ்வான்; இரு பெரு வேந்தரும் நன்கு மதிப்பார்கள்.” “தந்தையே! தங்கள் கட்டளை! எனக்கும் விடுதலை விரும்புகிறேன்.” “நல்லடிக்கோன்! உன் பெயருக்கேற்ப உன் குணம் அமையாதது என்னே வியப்பு!” என்றார் புலவர் பொய்கையார். எரித்து விடுவான்போல் பொய்கையாரைப் பார்த்தான் நல்லடிக்கோன். அவன் முகம் கோபத்தால் சிவந்தது. “தந்தையே, சேரனுக்கு விடுதலை அளிப்பது உறுதியா?” என்றான் நல்லடிக்கோன். “ஆம்! குமர, உறுதி! முக்காலும் உறுதி!” “விடுதலையை மாற்ற முடியாதா, எனக்காக.” “முடியாது! புலவருக்குக் கொடுத்த வாக்கை மீற முடியாது. சேரனுக்கு இப்போதே விடுதலை அளித்து விட்டேன். இதற்கு நீ வருந்திப் பயனில்லை!” “தந்தையே, நான் போய் வருகிறேன்!“ “ஏன்? இவ்வளவு கோபம் உனக்கு வரக் காரணம்? என்ன நேர்ந்தது? நான் ‘பொய்யன்’ என்று பழிக்கப் படுவதில் உனக்கு விருப்பம் உண்டா?” “இல்லே! தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் டோய் வருகிறேன்.” நல்லடிக்கோனின் தீவிர கோபத்தைக் கண்டான் செங்கணான். “உன் விருப்பம்போல் செய்” என்ற வார்த்தை செங்கணானிடமிருந்து வந்தது. மறுகணமே, நல்லடிக்கோன் மின்னலென மறைந்தான். “புலவரே, சேரனுக்கு விடுதலை அளித்தாகி விட்டது: அவனும் விடுதலை பெற்றுவிட்டால் இன்று இரவு அமைதியாக உறங்கலாம்; ஆகவே, புறப்படலாமா, குணவாயில் கோட்டம்?” என்றான். “அதுவே நேர்மை! சோழ! நீ சூரிய குலத்தவன் என்பதை உண்மையாக்கி விட்டாய்! இரவைப் பகலாக்கி விட்டாய்! உன்னுடைய ஒளியும் சூரியனோடு ஒப்பிடக் கூடியதுதான்” என்று கூறிக்கொண்டே எழுந்தார் புலவர். சோழன் செங்கணான், பொய்கையார், மற்றப் புலவர்கள், மந்திரியர் முதலியோர் புடைசூழ அரண்மனையை விட்டுப் புறப்பட்டான். நல்லடிக்கோனின் நினைவு அவனை இடையிடையே கலங்க வைக்காமல் இல்லை. செங்கணான் தேரில் ஏறிக்கொண்டான். புலவர்கள் பல்லக்குகளில் ஏறிக்கொண்டனர். மந்திரியர் முதலியோர் குதிரைகளில் சென்றனர். ‘முன் செய்த புண்ணியப் பயனே இன்று சேரன் விடுதலை பெறப்போகிறான்’ என்று புலவரும் மந்திரியரும் தமக்குள் பேசிக்கொண்டனர். ‘விடுதலை செய்ய முடியாது என்ற செங்கணானே இன்று நேரில் சென்று விடுதலை செய்ய முற்பட்டு விட்டானே!’ என்று புலவர் பொய்கையார் ஆச்சரியம் கொண்டார். ‘நான் சிறைப்படுத்திய சேரனை, நானே மீண்டும் விடுதலை செய்ய முற்பட்டேனே!’ என்று தனக்குத்தானே வியந்துகொண்டு சென்றான் செங்கணான். குணவாயில் கோட்டத்தை யாவரும் அடைந்தனர். செங்கணான் தேரிலிருந்து இறங்கினான். புலவர்கள் பல்லக்கைவிட்டு இறங்கி அரசனிடம் வந்தனர். மந்திரியர் முன் வந்தனர். செங்கணானின் வரவைக் கண்டு சிறைக் கோட்டக் காவலர் நடுங்கி விலகி நின்றனர். வாயில் கதவுகளைத் திறந்துவிட்டனர். செங்கணான் அகல நின்றபடியே உள்ளே பார்த்தான். நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவன் போல் சேரன் கணக்கால் இரும்பொறை படுத்திருந்தான். செங்கணான் முதலியவர் வந்ததையும், வாயில் கதவுகள் திறக்கப் பெற்றதையும் கூட மதியாமல் உறங்கிக் கொண்டிருந்தான். செங்கணான் திகைத்து விட்டான். ‘மானமுடைய மன்னனாயிருந்தால், சிறைப்பட்ட மனக் கொதிப்பால் தூக்கம் வருமா?’ என்று சந்தேகம் கொண்டான். முன் மண்டபத்தில் அப்படியே ஓர் ஆதனத்தில் அமர்ந்தான். அவனைச் சுற்றிலும் புலவரும் மந்திரியரும் சூழ்ந்து கொண்டனர். “பொய்கையாரே, பார்த்தீர்களா! சேரன் உறக்கம் இன்னும் கலந்த பாடில்லை. மானமுடைய மன்னனுக்குச் சிறைக் கோட்டத்தில் உறக்கம் உண்டோ! இதை நீங்கள் ஏன் பாடலில் அமைக்கவில்லை?” என்று நகை செய்தான். பொய்கையார் தலை குனிந்தார். “வேந்தே! என் பழைய நண்பன் சேரன் கணக்கால் இரும்பொறை, இவன் அல்ல என்று எண்ணுகிறேன்; என் நண்பனின் வெறும் உருவம் இது!” என்றார் புலவர். அப்போது சிறைக் கோட்டக் காவலன் ஒருவன் அரசன் முன் வந்து சொல்லலானன்; அவன் சொல்லிய விஷயம் சேரனைப் பற்றியதே என்பதில் சந்தேகம் இல்லை. சிறைக் கோட்டக் காவலன் சொல்லப்போகும் செய்தி என்னவோ என்று திகைத்து நின்றார் பொய்கையார். செங்கணான் புன்னகையோடு புலவரைக் கை அமர்த்தினான். அவனுக்கு அருகில் பொய்கையார் முதலிய யாவரும் அமர்ந்து கொண்டனர். “சேரன், நம் வரவை அறியும்வரை இங்கேயே சிறிது பேசிக் கொண்டிருக்கலாம். சிறைக்காப்போன் சேரனைப்பற்றி ஏதாவது சொல்லிவிடுவானோ என்று பயப்படுகிறீரா, பொய்கையாரே!” என்றான் செங்கணான். “இல்லை; விடுதலை ஆனபின் கவலை எனக்கு எதற்கு? சிறை காப்போன் என்ன சொன்னலும் உண்மைக்கு மாறாக இராதல்லவா?” பொய்கையார் இவ்வாறு சொல்லிவிட்டுச் சிறைக் காப்போனைப் பார்த்தார். “அடே நீ என்ன சொல்ல விரும்புகிறாயோ அதை மறைக்காமல் சொல்லிவிடு” என்றான் செங்கணான். “வேந்தே, இன்றுவரையில் சேரவேந்தர் எதையும் தாமாக விரும்பிக் கேட்டதில்லை; உணவுகளைக் கூட அப்படியே அருந்துவதில்லை. கொண்டு வைக்கும் உணவு வகைகளை சிறிதே அருந்திவிட்டு எங்களுக்குக் கொடுத்துவிடுவார். என்ன சொல்லியும் கேட்பதில்லை;. இன்றிரவு முன்னிரவில் ‘தண்ணீர் வேண்டும்’ என்று தாமாகக் கேட்டார். கோட்டத்தில் தண்ணீர் இல்லை. உடனே ஒருவனே அனுப்பி ஆமிராவதியிலிருந்து எடுத்து வரச் சொன்னேன். அவன் வருவதற்குள் மூன்று முறை ‘தண்ணீர்’ என்று கேட்டு விட்டார். அவன் வருவதற்குச் சிறிதே நாழிகை ஆயிற்று. அவன் வந்தவுடன் தண்ணீர் எடுத்துச் சென்று கொடுத்தேன். வாங்கிக் கொண்டவர் ஏதோ முணு முணுத்துக் கொண்டே பற்களை நெறு நெறெனக் கடித்துக் கொண்டார் எனக்குத் திகில் உண்டாயிற்று...” “என்னைக் கடுங்கோபத்தோடு பார்த்தார்; என் கண்களில் நீர் துளும்பிவிட்டது; மன்னிக்கவேண்டும். ஆமிராவதியிலிருந்து தண்ணீர் எடுத்துவர நாழிகை ஆகிவிட்டது” என்று தலை வணங்கினேன். “‘அடே, உன் மீது குற்றமில்லை. உன்னைச் சிறைக் கோட்ட காவலனாக நிறுவிய உங்கள் அரசன் மீதும் குற்றமில்லை. அரச குலத்திலே என்னைப் பிறப்பித்த தெய்வத்தின் மீதுதான் குற்றம்!’ என்று கூறிக்கொண்டே, கையிலிருந்த தண்ணீர்க் கிண்ணத்தை சுவர் மீதே வீசி எறிந்தார்; தண்ணீர் அருந்தாமல் அவ்விதம் செய்ததைப் பார்த்து நான் பயந்து விட்டேன். உடனே ஏதோ வேகத்துடன் நிமிர்ந்து அமர்ந்து கொண்டார். பக்கத்தில் இருந்த எழுத்தாணியையும் ஓலையையும் எடுத்துக் கொண்டு ஏதோ எழுதினார். எழுதிக்கொண்டிருக்கும் போதே அவர் கண்களிலிருந்து களகள வென்று நீர் வார்ந்தொழுகுவதை விளக்கொளியில் நன்றாகப் பார்த்தேன். சரேலென்று எழுதிய ஓலையை மார்பில் வைத்துக்கொண்டே படுத்துவிட்டார். அப்படியே உறங்கியவர் இன்னும் எழுந்திருக்கவில்லை” என்று பேசி முடித்தான் சிறைக்கோட்டக் காவலன். பொய்கையார் கலங்கிவிட்டார். செங்கணான் பெருமூச்சு விட்டான். சேரனின் நிலையைக் கேட்டு மனம் இரங்கியே செங்கணான் பெருமூச்சு விட்டான் போலும். அவனுடைய பெருமூச்சிடையே, தன் குற்றம் முழுவதையும் உணர்ந்து வெதும்புவான்போல் வெம்மை வீசியது. “புலவரே, சிறைக் காவலன் சொன்னவை...” என்று தழுதழுத்த குரலோடு கேட்டான். “சேரனே இவ்வளவு துயரத்துக்கு...” என்று புலவர் கம்பீரமாகப் பேசினார். “அது என் குற்றமா?” “அடிமை செய்த குற்றம் ஆனாலும், அந்த அடிமையின் அரசன் மீதே அக்குற்றம்...” என்றார் பொய்கையார். “குடிகள் செய்த குற்றம், குடிகளைக் காக்கும் வேந்தனையே சாரும்” என்றார் மற்றொரு புலவர். சேரநாட்டு முடி மன்னன் சிறைக் கோட்டக் காவலனை நோக்கி, “‘தண்ணீர் தா’ என்று கேட்கும் நிலையில் அவனை வைத்தவர் யாரோ?” என்றார் புலவர் பொய்கையார். என்ன தைரியம் புலவருக்கு! “புலவரே! கோபம் ஏன்? என்னுடன் சமமாக நின்று போர் புரிந்த சேரனை நான்... அவ்விதம் செய்ய விரும்ப வில்லை. அடிமை செய்த குற்றம் என்னை அணுகாது; இதோ அடிமையை ஒறுக்கிறேன்” என்று செங்கணான் சீற்றத்தோடு உறையிலிருந்து வாளை உருவி, சிறைக் காவலன் மீது வீசினான். ‘ஆ’ என்ற கூக்குரலுடன் அவன் வெட்டுண்டு வீழ்ந்தான். புலவர்களும் மந்திரியரும் திகைத்து விட்டார்கள். தன் இருக்கையை விட்டுச் செங்கணான் மிடுக்குடன் எழுந்தான், நீண்ட பெருமூச்சு விட்டான் மீட்டும். “புலவர்களே, உங்கள் பழி மொழிக்கு நான் ஆளாவதா? உங்களிடம் புகழை விரும்பிய நான்... அதை இழப்பேனோ? புகழே எனக்கு ஒளியல்லவா?... வாருங்கள், சேரனை என் கைகளால் தொட்டு எழுப்பி விடுதலை செய்கிறேன்” என்று புறப்பட்டான். ‘சேரனின் விடுதலைக்காக வந்த இடத்தில், இந்த எதிர்பாராத கொலைக் காட்சியைக் காண நேர்ந்ததே!’ என்று பொய்கையார் முதலிய புலவர் மருண்டனர். சோழனின் மன மாற்றம் கண்டு பொய்கையார் திகைப்புற்றார். சோழனிடம் அவருக்கு முதலில் உண்டான வெறுப்பு, அவனுடைய பெருந்தன்மையைக் கண்ட அளவிலே முற்றும் மாறிவிட்டது. ‘சேரனை ஒருக்காலும் நான் விடுதலை செய்யேன்’ என்று வஞ்சினம் பேசிய செங்கணான், ‘சேரனை என் கைகளால் தொட்டு எழுப்பி விடுதலை செய்கிறேன்’ என்று சொல்லிப் புறப்படுவ தென்றால் யாருக்குத்தான் வியப்பு உண்டாகாது? சேரனிடம் சோழனுக்கு எல்லை கடந்த கோபம் இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அக் கோபத்தைப் புலவர் பொய்கையார் - மெள்ள மெள்ள மிக எளிதிலே மாற்றிவிட்டார். அதுமட்டுமா? சேரனிடம் மிகுந்த மதிப்பை அவன் கொள்ளும்படியாகவும் செய்து விட்டார். சோழனின் வெற்றிச் சிறப்பை புகழ்ந்து, ‘பிரபந்தம்’ பாடி அவனை உள்ளம் குளிரச்செய்து அவன் மனப்போக்கையே மாற்றிய புலவர் - பொய்கையார், இப்போது சோழனின் போக்கை இழிவுபடுத்திக் கூற முற்பட்டுவிட்டார்; சேரனை நடத்தும் முறை, நெறி தவறிய செயல் என்று கடிந்து கூறி விட்டார். புலவர் கோபத்திற்குச் சோழன் அஞ்ச வேண்டியதாயிற்று; தலைபணிந்து நிற்க நேர்ந்தது. ஆனால் மேன் மேல் பொய்கையாரின் கோபம் பெருகவில்லை; தம், கோப வார்த்தைகளுக்குத் தலை வணங்கும் செங்கணானின் உள்ளத் தொனியைக் கண்டு வியந்தார். முன்னிலும், மிகுதியாகச் சோழனிடம் பெரு மதிப்புக் கொண்டார். அவ்வாறு சோழன் மாறியதற்குக் காரணம் என்ன? புலவரிடம் அரசனுக்கு இருந்த மதிப்பு என்று அதைச் சொல்வதா? அல்லது சேரனை நடத்தும் முறையில் தான் தவறியது எண்ணித் தலைபணிந்தான் என்று கூறுவதா? புலவர்களும் மந்திரியரும் புடைசூழ, செங்கணான் சிறைக்கோட்டத்திற்குள் ஆதுரத்தோடு புகுந்தான். சேரனை அச்சமயம் அவன் பகைவனாகக் கருதிப் போகவில்லை. நட்புரிமை கொண்டாடி, சேரனைத் துயில் எழுப்பப் புகுந்தான். சோழனின் போக்கைக் கண்டு யாவரும் திகைக்காமல் இருக்க முடியுமா? ‘சோழனின் புத்தி மாற்றத்திற்குக் காரணம் என்ன? அதிசயமாக இருக்கிறதே! தடுமாற்றம் அடைந்துவிட்டானா என்ன?’ என்று தமக்குள் எண்ணிக்கொண்டார்கள்! - ஆம்! உண்மை அது தான். சோழன் சேரனை அணுகியவுடன் பொய்கையாரை மௌனமாகப் பார்த்தான். “என்ன, புலவரே! உம் நண்பர் மெய்மறந்து உறங்குகிறார்!” என்று புன்னகையோடு சொன்னான். “ஆம்! மிகவும் அயர்ந்து உறங்குகிறான்! எவ்வளவு நாட்களாயிற்றோ உறங்கி!” என்றார் பொய்கையார். சோழன் தயக்கத்தோடு நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்தான்; சேரனின் தோள்களிலே தன் இரு கைகளையும் வைத்தான்; ஆயினும் என்ன? - உறக்கம் தெளியவில்லை சேரனுக்கு. “நண்பா!” என்று வாய் திறந்து அழைத்தான். அதன் பின் அவன் சிந்தனை மாறியது. சற்று. அமைதியோடு: “பொய்கையாரே, இது பொய் உறக்கம்!” என்றான் சோழன் செங்கணான். செங்கணானின் வார்த்தைகளைக் கேட்டவாறே. பொய்கையார் சேரனின் நடு மார்பை நோக்கினார். அம் மார்பிடையே கிடந்த ஓர் ஓலையைக் கண்டார்; வியப்புற்றார். சட்டென்று குனிந்து அவ்வோலையை எடுத்தார். பிரித்துப் படித்தார். மற்றப் புலவர்களையும், சோழனையும் நோக்கிக் கையமர்த்திவிட்டு, “இது சேரன் பாடிய பாடல்! மார்பிடையே வைத்துக் கொண்டிருக்கிறான்! இவன் மனம் எவ்வளவு நொந்திருக்கிறது என்பதை இப் பாடல் சொல்கிறது! கேளுங்கள்” என்று ஓலையைப் பிரித்து விளக்கொளியிலே படிக்கலானார். அங்கிருந்தோர் யாவரும் - சேரனை எழுப்ப முயன்ற செங்கணானும் பொய்கையார் படிப்பதை ஆவலோடு கேட்கலானார்கள். சேரனின் நோயுற்ற இருதயத்திலிருந்து எழுந்த பாடல் ஏழே வரிகள்!
‘குழவி யிறப்பினும் மூன்றடி பிறப்பினும் ஆளன்று என்று வாளிற் றப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீ இய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை இன்றி வயிற்றுத்தித் தணியத் தாம் இரந்துண்ணும் அளவை ஈன்மரோ இவ்வுலகத் தானே’*
(* பாட்டின் பொருள்: பிள்ளை இறந்து பிறப்பினும் தசைத் தடியாகிய மணை பிறந்தாலும் அவற்றையும் ஆள் அல்லவென்று கருதாமல் வாள் ஒச்சுதலில் நீங்காதவர் அரசராயிருக்க, பகைவர் வாளால் படாமல், சங்கிலியால் கட்டப்பட்ட நாய்போல, கட்டித் துன்பத்தைச் செய்து இருத்திய உறவல்லாத உறவினருடைய உபகாரத்தால் வந்த தண்ணீரை யாசித்து உண்பேம் அல்லேம் என்னும் மனவுறுதியில்லாமல், வயிற்றினிடம் தீயை மாற்ற வேண்டி தாமே யாசித்து உண்ணும் அளவினை உடையாரை, அவ்வரசர் இவ்வுலகத்தில் பெறுவார்களோ!) “செங்களுன், இப்பாடலின் கருத்தை அறிந்தாயா? முடி மன்னனான சேரனின் இருதயம் எவ்வளவு புண்பட்டிருக்கிறது! புண்பட்ட சோர்வில் உறங்குகிறான்; சுக நித்திரையல்ல இது!” என்றார் பொய்கையார். சோழனின் மனம் திடுக்கிட்டது. சேரன் பாடிய பாடல் அவன் உள்ளத்தைச் சுட்டது; புலவனும் அரசனுமான வேந்தனைச் சிறைப்படுத்தி - அவனை உண்ணும் நீருக்கும் தடுமாற வைத்த பெரும்பழி தன்னைச் சார்ந்து விட்டதே என்று கலங்கினான். “புலவரே, பாடல் என்னை நிலை கலங்கச் செய்கிறது! என் அறிவே கலங்கி விட்டது! நண்பனை எழுப்பும்! என் மனம் தடுமாறுகிறது!...” என்று சோர்வோடு சொன்னான் செங்கணான். புலவர், தம் ஆருயிர் நண்பனாகிய கணைக்காலிரும் பொறையைத் தொட்டு எழுப்பினார். “நண்பா கணைக்கால்! இன்னும் உறக்கமா?” - இவ்வாறு சொல்லிக்கொண்டே சேரனின் முகத்தை அசைத்தார். அவன் கண்கள் மூடியிருந்தன. பரபரப்புற்று அவன் நெற்றியைத் தடவினார். சில்லென்று இருந்தது; திடுக்கிட்டார். புலவரின் உடலம் பதறியது; உள்ளம் கொந்தளித்தது. சேரனின் மார்பைத் தொட்டார். பனிநீரை விடக் குளிர்ந்திருந்தது. பந்து போல் எழுந்து சேரனின் இரு பாதங்களையும் தீண்டினார். சந்திர காந்தக் கற்களில் இருக்கும் தண்மை காணப் பட்டது. “நண்பா, நண்பா!” என்று வாய்விட்டுக் கூவினார். சேரனின் மூக்கினிடையே காற்றின் இயக்கம் அற்று விட்டதை அறிந்தார். சேரனின் ஆன்மா விடுதலை பெற்றதை உணர்ந்தார். அவர் கண்களில் நீர் பெருகியது. சோழன் பதறி எழுந்தான். புலவர் பரிசோதித்ததைத் தானும் பரிசோதித்தான். சேரன் விண்ணுலக விருந்தாகி விட்டதைத் தெரிந்து கொண்டான். அப்புறம் என்ன? மற்றப் புலவர்களும் சூழ்ந்து கொண்டார்கள் உண்மையை அறிந்து. “விடுதலை! விடுதலை! சோழா, சோழா, சேரனுக்கு விடுதலை அளித்துவிட்டாய்! உன் புகழ் குன்றிலிட்ட விளக்கென ஒளிரும்! புலவர்களே, மந்திரியரே! சேரனின் உயிர் விடுதலை பெற்றுவிட்டது. இதோ அவன் உடல் மட்டும் சிறைபட்டுக் கிடக்கிறது. சேரனை உயிருடன் நான் காணக் கொடுத்து வைக்கவில்லை. இனி நான் என்ன செய்வேன்? என் ஆருயிர் நண்பன் பிரிந்தான். என் உதவியை எதிர்பாராமலே விடுதலை அடைந்தான். அந்தோ! நான் என்ன தீவினை செய்தேன்! இவ்வளவு முயன்றும் என் எண்ணம் நிறைவேறவில்லை. சேரனின் உயிர் நிறைந்த உடலை விடுதலை செய்யும் பாக்கியத்தை இழந்தேன். உயிரற்ற வெறும் தசையை விடுதலை செய்யவே இங்கு நான் வந்தேன். என் உயிர் பிரிந்து எங்கோ மறைந்துவிட்டது. புலவனும், பெரிய வீரனும், பெருவள்ளலுமான நண்பனை இழந்தேன்! இழந்தேன்! சேரநாட்டுக் குடிமக்கள் செய்த தீவினை! யான் செய்த பெரும் பாவம்! சேரனின் ஆன்மா பிரிந்து விண் வாழ்வுற்றது! ஆனால், சோழா, நீ தேடிக்கொண்டாய் பெரும்பழியை! உன் பழி என்றும் மாயாது! என் பாக்களால் உன் புகழை விளங்க வைத்தேன்; உன் வெற்றிச் சிறப்பை உலகறியச் செய்தேன்! ஆனால் நீ தேடிக் கொண்ட இப்பெரும் பழி!... அப்புகழை ஓங்க விடுமா! அருந்துவதற்குத் தக்க தருணத்திலே தண்ணீர் பெறாமல், அகம் புழுங்கி மாய்ந்தான் சேரன்! ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமானி’ன் மாண்பு பெற்றான். இதனால் சேரனின் புகழ் வானையளாவிவிட்டது; உனக்கோ பெரும் பழியை, வாடா மலர் மாலையாகச் சூட்டிவிட்டான்!” என்று அரற்றினார் புலவர். “உன்னால் சிறைப் பிடிக்கப்பட்டான்! உன்னால் காவல் செய்யப்பட்ட சிறைக் கோட்டத்திலேயே உயிர் நீத்தான். நா வறட்சியுற்று, அருந்தத் தண்ணீர் பெறாமல் - அடிமைகளால் அவமதிப்புற்று ஆவி நீத்தான்! இக்கொடும் பழிக்கு நீ ஆளாகிவிட்டாய்! எம்மை ஒத்த புலவர்கள் உன்னை வெறுக்கும் தன்மையை அடைந்தாய்! உன்னை ஒத்த மன்னர்கள் உன்னை இகழ்ந்து பேசவும் ஆளாகி விட்டாய்!” என்று அங்கே சூழ்ந்து நின்ற புலவர் பழிமொழி கூறினார்கள். “ஆம்! பழி கொண்டேன்! சேரனை மாய்த்த பழி என்னைத் தொடராமல் என் வாழ்நாள் இன்றோடு முடியட்டும்! புலவர்களே! நான் அறிந்து செய்யவில்லை! நான் செய்த குற்றம்...” என்று கூறிக்கொண்டே செங்கணான் சேரன்மீது சாய்ந்தான். அவன் விழிகள் அன்றலர்ந்த செம்மலரென விளங்கியவை மூடிக்கொண்டன. செங்கணான் சாய்ந்து வீழ்ந்ததைக் கண்டவுடன் புலவர்கள் அவனைப் பிடித்தார்கள். செங்கணான் ஆன்மாவும் அவன் உடலைவிட்டு அகன்றது:_சேரனை மாய்த்த பெரும் பழியும் ஒழிந்தது. சேரனைத் தேடிக்கொண்டு, சோழன் சென்றுவிட்டான். “ஆ! சோழா! சோழா! நீயும் பிரிந்தனையோ! இது நீதியோ திருநறையூர்த் திருமாலின் திருவருள் பெற்ற நீ, இந்நாளில் உயிர் நீத்தது முறையோ! அந்தோ! எம் வாய்கொண்டு உன்னைப் புகழ்ந்தோம்; இகழ்ந்து சினந்தோம். இதற்கோ நீ பிரிந்தாய்! அரசர்க்கு மானத்தின் மிக்கது இல்லை என்பதை அறிவித்து விட்டாய்! உன்னைத் தொடர்ந்த பழியையும் மாய்த்து விட்டாய்! எங்கள் உள்ளத்திலே தீராத புண்ணை உண்டாக்கி விட்டாய்! புலவர்க்குப் புகலிடமான உன்னையும் சேரனையும் ஒருங்கே இழந்தோம்; ஊழ்வினையின் செயல் இவ்வாறு இருக்குமென்று அறியோம்...” என்று பொய்கையார் முதலிய புலவர் புலம்பினர். மந்திரியர் மனம் இடிந்து நிலை கலங்கி நின்றார்கள். குணவாயில் கோட்டமாகிய சிறைக் கோட்டத்திலே சேரன் கணைக்காலிரும்பொறையின் உடல் ஒருபுறமும் சோழன் செங்கணான் உடல் ஒருபுறமும் இரு மலைகளெனக் கிடந்தன. உயிரற்ற இரு உடல்களைச் சுற்றிலும் சூழ்ந்து புலவரும் மந்திரியரும் வீரரும் கண்ணீர் விட்டு நின்றார்கள். |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |