24

     புதுவெள்ளம் ஆற்றின் இருகரையும் புரள ஓடிக் கொண்டிருந்தது. வெள்ளத்தின் விசித்திர வேகத்தைப் பார்த்துக் கொண்டு மாரியப்பன் புன்னை மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருந்தான். ராமசாமிக் கவுண்டரும், அவனைச் சேர்ந்த ஆசாமிகளும், புளி மஞ்சிக் கயிறு திரித்துக் கொண்டு அங்கேயே பேசிக் கொண்டிருந்தார்கள். இன்றையப் பேச்சு ரொம்ப ரசமாகவும், கார சாரமாகவும் இருந்தது. ஆனால், மாரியப்பனுக்கு அது மகா வேதனையை அளித்தது. இருந்த போதிலும் வெளிக்கு ஒன்றையுமே காட்டிக் கொள்ளாமல் வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஓடும் வெள்ளத்தைப் பார்க்கப் பார்க்க ஒரே பரவசமாக இருந்தது. அடடா! நீரின் மேலே மிதந்து செல்லும் விந்தைப் பொருள்களை என்னவென்று சொல்வது. ‘குபுகுபு’வென்று பொங்கிப் பாயும் புது நீரின் வனப்புத்தான் என்ன? எத்தனை எத்தனையோ விதமான கழிவுகள்.

     இளம் பெண்கள் ஆற்றங்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். சிலர் வேடிக்கையாகப் பேசிக் கொண்டே வெகு நேரமாக நின்று கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர், தழை தாம்புகளை ஆற்று நீரில் தூவிக் கொண்டிருந்தார்கள். குழந்தை குட்டிகளின் அழுகை யெல்லாம் கூட இந்த ஆனந்தத்தில் மறைந்து விட்டது.

     ராமசாமிக் கவுண்டர் அடிக்கடி கோபத்தோடு, “அட, என்னப்பா உங்களுக்கு வெளையாட்டு வெனயம் தெரிய மாட்டீங்குது? இன்னம் ஏலத்துக்கு ரண்டு நாள் தான் இருக்குது. இதுக்கு என்ன பண்ணலாம்? எப்படியும் மணியாரன் தலை தூக்காமப் பண்ணீரோணும். அப்பத்தா நாமெல்லாம் மனுசரு. இல்லாட்டி இருந்தென்ன போயென்ன?” என்றான்.

     “ஆமாங் கண்ணா, ஆமாங்க” என்று நாலைந்து பேர் ஆமோதித்தார்கள். “நாம் ஒரு கட்டுமானமா இருந்திட்டா அவனென்னத்தைப் பண்ணிப் போடுவான்? அவனுக்குச் சகாயம் செய்யரவங்க ஆரு?” என்றான். ‘நல்ல கேள்விதான் நல்ல யோசனைதான்’ என்பதை பக்கத்திலிருந்தவர்கள் ஆமோதித்தார்கள்.

     “சங்கதி வெளியே தெரிய வாண்டாம். செட்டியார் எடுத்தாலும் நாளைக்கு சுவாதீனத்துக்கு நம்ம தயவில்லாமெ என்ன நடந்தறப் போகுது? அப்ப பாக்கவேணும் மணியக்காரன் மொகத்தை! நாமதான் மொதல் ஏத்துப் பூட்டோணும். என்ன நாஞ் சொல்றது?” என்றார் ராமசாமிக் கவுண்டர்.

     எப்போதுமே முருகப்பன், ராமசாமிக்கு யோசனை சொல்லி வருகிறவன். முருகப்பனுக்கு இப்பொழுது சட்டென இன்னொரு யோசனை உதயமாயிற்று. “போலீசு கீலீசு வருமுங்களா? அந்த அமீனா கிட்டக் கேக்காதெ போச்சுங்களா! நாமுளும் பத்து இருபது ஆளுத் தயாரா வெச்சிருந்தா என்னுங்கோ?” என்றான்.

     கொஞ்ச நேரம் யாரும் பேசவில்லை. பிறகு, மாரியப்பன் உட்கார்ந்திருப்பதைக் கவனித்த முருகப்பன், “ஏனுங்க, நம்ம பள்ளிக்கொடத்துத் தம்பியைக் கேட்டாத் தெரியுமிங்களே? ஏனப்பா, கலகம் செய்யறதுக்கு மிந்தியே செய்வாங்கிண்ணு நம்ம மேலே எளுதி வச்சா கோர்ட்டிலே புடிச்சுக்குவானா?” என்றான்.

     மாரியப்பன் சிரித்துவிட்டு, ஓடும் தண்ணீரையே பார்த்துக் கொண்டிருந்தான். போலீசில் பிடிப்பதும் பிடிக்காததும் சென்ற பல வருஷங்களாகப் பல கலகங்கள் செய்து அனுபவப்பட்ட அங்குள்ள பலருக்குத் தெரியும்! ராமசாமிக் கவுண்டர் பேச்சை மாற்ற வேண்டி, “அது கெடக்குது அப்புனு, நாளைக்கெ காங்கயத்துக்கு ஒரு ஆளை அனுப்புங்க. செட்டியார் என்ன சொல்றாங்கிறதையும் கேட்டுக்குவோம். அவனையும் சமயம் பார்த்துச் சிக்க வெச்சு, குடுமியை அறுத்து உட்டற வேணும்” என்றார்.

     “ஆமாங்க, அப்படித்தான் செய்யோணும்” என்று முருகப்பனை மற்றவர்களும் ஆமோதித்தார்கள்.

     கொஞ்ச நேரம் மெதுவாகச் சிரித்துக் கொண்டு இதையே திருப்பித் திருப்பிப் பேசிக் கொண்டிருந்தார்கள். மாரியப்பன் வேண்டா வெறுப்பாக அந்தப் பேச்சுக்கள் முடியு மட்டும் அங்கிருந்தான். பிறகு மெதுவாக அங்கிருந்து புறப்பட்டான்.

     வெகுநேரம் தோட்டத்தில் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தான். பிறகு ஆற்றங்கரை யோரமாக நடந்து சென்றான். பாறைகளின் இடையே புது வெள்ளம் தேங்கி நின்றது. அதிலே மீன்கள் துள்ளிக் கொண்டிருப்பதும், பருந்துகளும் கொக்குகளும் மேலே வட்டமிட்டுக் கொண்டிருப்பதும் பார்க்க வேடிக்கையாகவே தான் இருந்தது. ஆனால், எந்த வேடிக்கையிலும் அவன் மனம் செல்லவில்லை.

     எப்போது மத்தியானம் ஆகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் கடூரமான வெறுப்புப் பரவிக் கொண்டிருந்தது.

     வண்ணான் மூட்டையுடன் துணி துவைக்க வந்தவன், வெள்ளத்தைப் பார்த்து அப்படியே மலைத்து நின்று விட்டான். அவனுக்கு அந்த அதிசயத்தை விட இந்த வெயிலில் மாரியப்பன் ‘வேடிக்கை’ பார்ப்பது ரொம்ப விசித்திரமாக இருந்தது.

     தன்னைக் கவனிப்பதைக் கண்டு, “என்னப்பா பாக்கறே?” என்றான் மாரியப்பன்.

     “ஒண்ணுமில்லீங்க; கழுதை போனது வல்லீங்க” என்றான்.

     “எந்தக் கழுதை?” என்றான் மாரியப்பன். தண்ணீரில் தான் கழுதை அடித்துக் கொண்டு போய் விட்டதாக்கும் என்று எண்ணினான்.

     பிறகு, வண்ணான் வேலியோரம் நின்று கொண்டிருந்த தன் வெண் புரவிகளைக் காட்டினான். சற்று நேரம் அவனோடு பேசிக் கொண்டிருந்து விட்டு, நேராக மணியக்காரர் தோட்டத்தை நோக்கி நடந்தான் மாரியப்பன். வழி நெடுக என்னென்ன பேச வேண்டும், எப்படி அதை ஆரம்பிக்க வேண்டும் என்பதைப் பற்றித் தீர்மானித்துக் கொண்டு சென்றான்.

     ஆனால் தோட்டத்தில் மணியக்காரரைக் காணோம். வீட்டிற்குப் போய் வெகுநேரம் ஆகிவிட்டது என்று ஆள்க்காரன் சொன்னான். சீக்கிரமாகத் தன் மனசிலுள்ளதைச் சொல்லி ஆகவேண்டும். எப்படிச் சொல்வது? கடந்த பத்து வருஷங்களாக அடி எடுத்து வைக்காத வீட்டிற்குப் போவதா? சிரிப்பை அவனால் அடக்க முடியவில்லை. ‘என்னடா இது! நாமா இப்படி யெல்லாம் பார்க்கிறோம்? செய்ய உத்தேசித்த காரியங் கணக்கென்ன? இப்போது குறுக்கே வந்து நுழையும் சிந்தனை என்ன?’ என்று எண்ணினான். வேகமாகப் புறப்பட்டான்; கொஞ்ச நேரத்தில் மணியக்காரர் வீட்டிற்கே வந்தும் விட்டான்.

     மணியக்காரர் குளித்துச் சாப்பிட்டுவிட்டு அப்போதுதான் போய்ப் படுத்தார். பகலில் தூங்கும் வழக்கமில்லா விட்டாலும் அன்றைக்கென்னவோ படுக்க வேண்டும் போல் தோன்றியது அவருக்கு.

     அத்தை துணிகளைத் துவைக்க கிணற்றுப் பக்கம் போய்க் கொண்டிருந்தாள். காலடிச் சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்ததும், அவள் கண்களையே நம்ப முடியாமல் திகைப்பில் ஆழ்ந்துவிட்டாள். சிறு வயதிலிருந்தே, “தொரை” என்று தான் அவனைக் கூப்பிட்டு வந்தாள். “யாரு நம்ம தொரைக்கண்ணா?” என்றாள். பரிவும், அன்பும் ததும்பும் அந்த அழைப்பிலே அவன் மகிழ்ந்து நின்று விட்டான். இதற்குள் செல்லாயாளும் உள்ளே யிருந்து வந்து சேர்ந்தாள். இன்னும் கூட உலராத கூந்தல், இடைவரை புரண்டு கொண்டிருந்தது. நகை நட்டு இல்லாவிட்டாலும், அந்த முகத்திலே ஒரு பிரகாசம் வீசிக் கொண்டிருப்பது போல இருந்தது. சாதாரணச் சிவப்புப் புடவை தான் உடுத்தியிருந்தாள். மாராப்பைச் சரியாகப் போட்டுக் கொண்டு, என்னவோ சொல்ல வாயெடுத்தாள். உதட்டருகே புன்னகை விளையாடிக் கொண்டிருந்தது. அடடா! கொஞ்சம் தெரியாமல் போய்விட்டதே! மாரியப்பன் வருவது தெரிந்திருந்தால், இன்னும் எவ்வளவு அழகாகச் சிங்காரித்துக் கொண்டிருப்பாள்!

     “ஐயன் இருக்காங்களா?” என்றான்.

     அரைத் தூக்கத்தில் இருந்த மணியக்காரர் காதுக்கு அது என்னவோ லேசாகக் கேட்டது. கண்ணைத் துடைத்துக் கொண்டு அவரும் எழுந்து வந்தார். மாரியப்பனைக் கண்டதும் என்ன சொல்வதென்றே அவருக்குத் தெரியவில்லை. அது ஒரு நாளும் கைக்கூடாது என்று முடிவு பண்ணிவிட்ட, அந்தக் காரியம் எதிர்பாராத விதமாகக் கைக்கூடினால், நமக்கு எப்படி இருக்கும்? என்ன செய்யத் தோன்றும்? அதே நிலையில் தான் இருந்தார் மணியக்காரர்.

     சற்று நேரத்திற்குள் உள்ளே போய் உட்கார்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்த பேச்சைக் கேட்கக் கேட்க செல்லாயாளின் உள்ளம் பூரித்து எல்லையில்லா மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்துவிட்டது. அவளால் சும்மா இருக்கவே முடியவில்லை. காய்ச்சிய பாலை மீண்டும் ஒரு தரம் காய்ச்சி சூடாகக் காப்பியைத் தயாரித்தாள். காரை விற்று பல வருஷங்களாகியும், மணியக்காரர் வீட்டில் ‘காப்பி’ போடுவதை இன்னும் நிறுத்தவில்லை. கண்ணில் கண்ட எலுமிச்சம்பழத்தை எடுத்து பானகமும் போட்டு விட்டாள். காப்பி, பானகம் ஆயிற்று. இனியென்ன செய்யலாம் என யோசித்தாள். தானாகச் சிரித்துக் கொண்டாள். குறுக்கும் நெடுக்குமாகப் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தாள். அத்தைக்கு மகிழ்ச்சியும் ஆச்சரியமும் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தாலும் அவசரத்தில் பெண் கீழே விழுந்துவிடப் போகிறாளோ என்ற கவலை வேறு!

     மணியக்காரருக்கு வரவர உற்சாகம் அதிகரித்துக் கொண்டே வந்தது. “ஆமாப்பா, சொல்லு ராசா” என்று கேட்டுக் கொண்டே வந்தார். மாரியப்பன் மளமளவென்று பேசிக் கொண்டே இருந்தான்.

     “இப்படியே இதை விடப்படாதுங்க. என்னைக் கொண்டு உங்களைக் கெடுப்பது; உங்களைக் கொண்டு என்னைக் கெடுப்பது. இப்படியேதானெ நாளுதுக்கும் நடந்து வந்திருக்குது. எதிர் ஊட்டுக்காரனுக்கு ரண்டு கண்ணு போறதிண்ணா, நம்ம கண்ணிலே ஒண்ணைப் போக்கடிச்சுக்கலாமா? அந்தக் கதை தானுங்க இது. ஆனா இனிமேலு நீங்களோ நானோ ஒருத்தரும் கவலைப்படப் படாது. எல்லாரும் நல்லா இருக்கவேணுமிண்ணா, நம்ம பூமிகளுக்குள்ளே, நம்ம சம்மதம் இல்லாமெ எந்தக் கொம்பன் காலெடுத்து வச்சிருவானுங்க? நாம் ஒருத்தருக்கும் அநியாயம் நெனைக்க வாண்டாங்க. நாம் அநியாயத்துக்குப் போக வாண்டாங்க” என்றான்.

     “ஆனா உங்க அப்பன் கேக்க வேணுமே? நம்ம ராமு கேப்பானா தம்பி?” என்றார் வருத்தமுடன்.

     “நடந்ததை மறந்து விடுங்கோ. நாஞ் சொல்றனுங்களெ, அதைச் செரிபண்ணிப் போடறனுங்க. இப்படியெ போனா இன்னும் குத்துப்பழி வெட்டுப்பழி எல்லாம் வந்து தானுங்க தீரும். நீங்களே பாருங்க. அவுங்களை நாஞ் சொல்லித் திருத்திக்கறனுங்க” என்றான்.

     மாரியப்பனால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கை மணியக்காரருக்கு ஏற்பட்டது. காலையில் குவிந்திருந்த சஞ்சல சாயைகள் பளிச்சென்று விலகிவிட்டது.

     “தம்பி நீ வந்ததே நல்லதாப் போச்சு” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

     மாரியப்பனுக்கு எல்லாமே ஒரு இனிய கதை போல இருந்தது. இப்போது ஏறக்குறைய கிராமம் முழுதும் அவன் சொல்லைத் தட்டப் போவதில்லை. தன் தகப்பனைச் சுலபத்தில் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்பதில் அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

     இதற்குள் செல்லாயா சாப்பிட பழங்களும், குடிக்க பானகமும் கொண்டு வந்தாள்.

     மணியக்காரர் இந்த உலகையே மறந்திருந்தார். அவர் கண்ணுக்கு எதிரே வறுமையே தென்படவில்லை. கிராமும், அதைச் சுற்றிப் பல மைல் தூரத்திற்குக் குளிர்ந்த பசும் பச்சையுமே தென்பட்டது.

     “மாப்பிள்ளெ! பத்து வருஷத்துக்கு முந்தி நான் நெனச்சது இப்பத்தான் நடக்கப் போகுது” என்றார். செல்லாயா வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

     அன்று மத்தியானம் தன் மகன் சாப்பிட வரவில்லையே என்று மாரியப்பன் தாய் வழி பார்த்துக் கொண்டிருந்தாள். ஊர்ச் சாவடியிலே ஏழெட்டுப் பெரியவர்களும், சிறுவர்களும் படுத்துக் கொண்டும் உட்கார்ந்து கொண்டு மிருந்தார்கள். மணியக்காரர் வீட்டுக்கு எதிரில் தான் சாவடி. ராமசாமிக் கவுண்டர் அங்குதான் உட்கார்ந்திருந்தார். ஏனோ இன்னும் சோறு தின்னக் கூட மகன் வீட்டிற்கு வரவில்லையே என்று தான் அப்போது அவரும் யோசித்துக் கொண்டிருந்தார்.

     வெயில் கொஞ்சம் கொஞ்சமாகத் தாழ்ந்து கொண்டு வந்தது.

     மாரியப்பன் மத்தியானச் சாப்பாட்டையும் மணியக்காரர் வீட்டிலேயே முடித்துக் கொண்டு வெளியே அப்போதுதான் வந்து கொண்டிருந்தான்.

     ஊர்ச் சாவடியிலிருந்த இரண்டு மூன்று பேர் இந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். மணியக்காரரும் மாரியப்பனும் சிரித்துப் பேசிக் கொண்டு வருவது அவர்களுக்குப் பெருமித்த ஆச்சரியத்தை அளித்தது.

     “என்னப்பா என்ன?” என்று முருகணன் அரைத் தூக்கத்தில் இருந்த ராமசாமிக் கவுண்டரைத் தட்டி எழுப்பினான்.

     “அடப் போனாப் போகுது. காத்துக் குளு குளுண்ணு அடிக்குது. இந்நேரத்திலே தோட்டத்திலெ வேலை என்ன? இன்னிக்கு ஏத்துப் பூட்டலை” என்றான்.

     “அட, எந்திருச்சுப் பாரப்பா!” என்றான் ஆத்திரமும் கோபமும் கலந்த குரலில் முருகணன்.

     எழுந்திருக்காமலே சங்கதியைக் கேட்ட ராமசாமிக் கவுண்டர், “சும்மா வெளையாடாதே” என்றார்.

     பக்கத்திலிருந்தவர்கள் ‘கொல்’லென்று சிரித்தார்கள். அவர் கண்ணை மூடிப் படுத்துக் கொண்டு தான் இருந்தார்.

     மணியக்காரரும் மாரியப்பனும் ஆற்றங்கரைப் பக்கம் புறப்பட்டார்கள்.

     வெள்ளம் பாதிக்கு மேல் வடிந்திருந்தது.

     அதைப் பார்த்ததும் மணியக்காரர், அவன் புறம் திரும்பி, “தம்பி, இப்படித் தானப்பா! கார்த்தாலெ இருந்த தண்ணி இப்ப எங்கப்பா? வேகந்தான் எங்கெ? என்னமோ நாலு நாளைக்கு அப்படி இருக்கறதுதான். நம்ம ராமணனும் எதையும் மனசிலெ போட்டுக்க மாட்டான். உம்... நீர் அடிச்சா நீர் வெலகியா போகும்?” என்றார்.

     ஓடும் வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டு என்னவோ யோசித்தபடி மாரியப்பன், “ஆமாம்” என்றான்.


புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247