பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 9 ...
801 இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித் துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம் உறக்கத்தை * நீக்கி உணரவல் லார்க்கட் கிறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே. 3
802 ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும் வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப் பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே. 4
803 நாவின் நுனியை நடுவே சிவிறிடிற் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் மூவரு முப்பத்து மூவருந் தோன்றுவர் சாவதும் இல்லை சதகோடி யூனே. 5
804 ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல் வானூறல் பாயும் வகையறி வாரில்லை வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத் தேனூறல் உண்டு தெளியலு மாமே. 6
805 மேலையண் ணவில் விரைந்திரு காலிடிற் காலனும் இல்லை கதவுந் திறந்திடும் ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவான் பராநந்தி ஆணையே. 7
806 நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச் சந்தித் திருக்கில் தரணி முழுதாளும் பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச் சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே. 8
807 தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர் நாவினை நாடின் நமனுக் கிடமில்லை பாவினை நாடிப் பயனறக் கண்டவர் தேவினை யாடிய தீங்கரும் பாமே. 9
808 தங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர் ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக் கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட ஊங்கரும் பாகியே ஊனீர் வருமே. 10
809 ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத் தேனீர் பருகிச் சிவாய நமவென்று கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும் வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே. 11
810 வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர் காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும் பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக் * கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே. 12 * கோய்ந்தறிந்
811 கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர் தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங் காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந் தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே. 13
812 தீவினை யாளர்த்தஞ் சென்னியி லுள்ளவன் பூவினை யாளர்த்தம் பொற்பதி யானவன் பாவினை யாளர்த்தம் பாகவத் துள்ளவன் மாவினை யாளர்த்தம் மதியிலுள் ளானே. 14
813 மதியி னெழுங்கதிர் போலப் பதினாறாய்ப் பதிமனை நூறு*நூற் றிருபத்து நாலாய்க் கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி எதிர்மலை யாமல் இருந்தனன் தானே. 15 * நூற்றைம்பதோ டொன்றாய்க் கதிமன வுள்ளே
814 இருந்தனள் சத்தியு மக்கலை சூழ இருந்தனள் கன்னியு மந்நடு வாக இருந்தனள் மானேர் முகநில வார இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே. 16
815 பொழிந்த இருவௌளி பொன்மண் ணடையில் வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக் கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக் கொழுந்தது வாகுங் குணமது தானே. 17
816 குணமது வாகிய கோமள வல்லி மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில் தனமது வாகிய தத்துவ ஞானம் இனமது வாக இருந்தனன் தானே. 18
817 இருந்த பிராணனும் உள்ளே எழுமாம் பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின் மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே. 19
818 மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக் கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப் பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக் குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே. 20
819 ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங் கழிகின்ற வாயுவுங் காக்கலு மாகும் வழிகின்ற காலத்து வட்டக் கழலைப் பழிக்கின்ற காலத்துப் பையகற் றீரே. 21
820 பையினி னுள்ளே படிக்கத வொன்றிடின் மெய்யினி னுள்ளே விளங்கும் ஒளியதாங் கையினுள் வாயுக் கதித்தங் கெழுந்திடின் மையணி கோயில் மணிவிளக் காமே. 22
821 விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி * நலங்கிடுங் கண்டத்து நாபியி னுள்ளே வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச் சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே. 23 * நலங்கிடுங் காமத்து நாடியி னுள்ளே
822 சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ் சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ் சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற் சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே. 24
823 தூர தரிசனஞ் சொல்லுவன் காணலாங் காராருங் கண்ணி கடைஞான முட்பெய்தி ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற் பாரா ருலகம் பகன்முன்ன தாமே. 25
824 முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும் நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத் தன்னெழு கோயில் தலைவனு மாமே. 26 19. * பரியங்க யோகம் (* பரியங்கி யோகம்)
825 பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திக் காயக் குழலி கலவி யொடுங்கலந் * தூசித் துளையுறத் தூங்காது # போகமே. 27 * தூசத் துணையறத் # யோகமே; போதமே; மோகமே
826 போகத்தை யுன்னவே போகாது வாயுவு மோகத்தை வெள்ளியு மீளும் வியாழத்தில் சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந் தாதிற் குழைந்து தலைகண்ட வாறே. 28
827 கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும் வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத் தண்டொரு காலுந் தளராது அங்கமே. 29
828 அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப் பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத் தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே. 30
829 தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந் தலைவனு மாயிடுந் தன்வழி போகந் தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே. 31
830 அஞ்சு * கடிகைமேல் ஆறாங் கடிகையில் துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால் நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது பஞ்ச கடிகை பரியங்க யோகமே. 32 * கடிகையில் ஆறாங் கடிகைமேற்
831 பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே. 33
832 ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில் விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன் பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில் எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்தே. 34
833 ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும் வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம் வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச் சோர்ந்தன சித்தமுஞ் சோர்வில்லை வெள்ளிக்கே. 35
834 வௌளி யுருகிப் பொன்வழி ஓடாமே கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார் கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே. 36
835 வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன் சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம் பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும் வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே. 37
836 வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தந் தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனந் திங்களிற் செவ்வாய் * புதைத்திருந் தாரே. 38 * புதனிருந் தானே
837 திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக் கருத்தழ காலே கலந்தங் கிருக்கில் வருத்தமு மில்லையா மங்கை பங்கற்குந் துருத்தியுள் வௌளியஞ் சோரா தெழுமே. 39
838 எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால் மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின் விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே. 40
839 வெளியை அறிந்து வெளியி னடுவே * ஒளியை அறியி னுளிமுறி யாமே தெளிவை அறிந்து செழுநந்தி யாலே வெளியை அறிந்தனன் மேலறி யேனே. 41 * உளியை
840 மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின் மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர் நாலா நிலத்தி னடுவான வப்பொருள் மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே. 42
841 மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப் பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து தன்னொடு தன்னை தலைப்பெய்ய * வல்லாரேன் மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே. 43 * வல்லீரே
842 வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கிய வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை வீங்க வலிக்கும் விரகறி வாளரும் ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே. 44
843 உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற் கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும் இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி பதமறிந் தும்முளே பார்க்கடிந் தாளே. 45
844 பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது ஊரில்லை காணும் ஒளியது * ஒன்றுண்டு கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே. 46 * ஒன்றில்லை 20. அமுரிதாரணை
845 உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க் கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும் உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில் நடலைப் படாதுயிர் நாடலு மாமே. 1
846 தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில் ஒளிதரு மோராண்டில் ஊனமொன் றில்லை வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங் களிதருங் காயங் கனகம தாமே. 2
847 நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர் மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள் தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின் மாறும் இதற்கு மறுமயி ராமே. 3
848 கரையரு கேநின்ற கானல் உவரி வரைவரை என்பர் மதியிலா மாந்தர் நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு நரைதிரை மாறு நமனுமங் கில்லையே. 4
849 அளக நன்னுத லாயோ ரதிசயங் களவு காயங் கலந்தஇந் நீரிலே மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில் * இளகும் மேனி இருளுங் கபாலமே. 5 * இளகிடு
850 வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும் நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான் ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ் சோதி மருந்திது சொல்லவொண் ணாதே. 6 21. சந்திர யோகம்
851 எய்து * மதிக்கலை சூக்கத்தி லேறியே எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள் எய்துங் கலைபோல ஏறி இறங்குமாந் துய்யது சூக்கத்து தூலத்த காயமே. 1 * மதிநிலை
852 ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள் ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள் ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழி ஆகின்ற யோகி அறிந்த அறிவே. 2
853 ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன் நாறா நலங்கினார் ஞாலங் கவர்கொளப் பேறாங் கலைமுற்றும் பெருங்கால் ஈரெட்டு மாறாக் கதிர்க்கொள்ளு மற்றங்கி கூடவே. 3
854 பத்தும் இரண்டும் பகலோன் உயர்க்கலை பத்தினொ டாறும் உயர்க்கலை பான்மதி ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்க்கலை அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே. 4
855 எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட் சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை கட்டப் படுமீ ரெட்டா மதிக்கலை ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாவே. 5
856 எட்டெட்டும் ஈராறும் * ஈரெட்டுந் தீக்கதிர் சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக் கட்டப் படுந்தார கைகதிர் நாலுள கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே. 6 * ஈரெட்டுத்
857 எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச் சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ் செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால் நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே. 7
858 அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத் தங்கிய தாரகை யாகுஞ் சசிபானு வங்கிய தாரகை யாகும் பரையொளி தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே. 8
859 தரணி சலங்கனல் கால்தக்க வானம் அரணிய பானு அருந்திங்கள் அங்கி முரணிய தாரகை முன்னிய ஒன்பான் பிரணவ மாகும் பெருநெறி தானே. 9
860 தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத் தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத் தாரகை பூவிற் சகலத்தி யோனிகள் தாரகைத் தாரகை தானாஞ் சொரூபமே. 10
861 முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும் பிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும் அப்பதி னைஞ்சும் அறியவல் லார்கட்குச் செப்பரி யான்கழல் சேர்தலு மாமே. 11
862 அங்கி எழுப்பி யருங்கதிர் ஊட்டத்துத் தங்குஞ் சசியால் தாமம்ஐந் தைந்தாகிப் பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத் திங்கள் கதிரங்கி சேர்க்கின்ற யோகமே. 12
863 ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள் கன்றிய காலன் * கருத்துழி வைத்தபின் சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. 13 * கருக்குழி; கழுக்குறி
864 அங்கி மதிகூட வாகும் கதிரொளி அங்கி கதிர்க்கூட வாகு மதியொளி அங்கி * சசிகதிர் கூடவத் தாரகை தங்கி யதுவே சகலமு மாமே. 14 * சிவத்தினிற்
865 ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில் ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே. 15
866 காணும் பரிதியின் காலை இடத்திட்டு மாணும் மதியதன் காலை வலத்திட்டுப் பேணியே யிவ்வாறு பிழையாமற் செய்வீரேல் ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே. 16
867 பாலிக்கும் நெஞ்சம் * பறையோசை ஒன்பதில் ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன் மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங் காலைக்குச் சங்கு கதிரவன் தானே. 17 * பரையோசை
868 கதிரவன் சந்திரன் காலம் அளக்கும் பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும் அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப எதிரவ நீச நிடமது தானே. 18
869 உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை * அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார் # அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின் தந்தைக்கு முன்னே $ மகன்பிறந் தானே. 19 * அந்தித்த வண்ணம் அறிவா லறிந்திலர் # அந்தித்த வண்ணம் அறிவா லறிந்தபின் $ மகனிருந் தானே
870 ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும் ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள் ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல் வேதியன் அங்கே வெளிப்படுந் தானே. 20
871 பாம்பு மதியைத் * தினலுறும் பாம்பினைத் தங்கு கதிரையஞ் # சோதித் தனலுறும் பாம்பு மதியும் பகைதீர்த் $ துடங்கொளீஇ நீங்கல் @ கொடானே நெடுந்தகை யானே. 21 * தினலுறு மப்பாம்பு # சேரத் தினலுறும் $ துடன் கொளின் @ கொடானெம்
872 அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப் பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று நயந்தரு பூரணை உள்ள நடத்தி வியந்தரு பூரணை மேவுன்ய் சசியே. 22
873 சசியுதிக் கும்அள வுந்துயி லின்றிச் சசியுதித் தானேல் தன்தூண் அருந்திச் சசிசரிக் கின்றள வுந்துயி லாமற் சசிசரிப் * பிங்கட்டன் கண்டுயில் கொண்டதே. 23 * பின்கட் டன்றுயில்
874 ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள் நாழிகை யாக நமனை அளப்பர்க்கள் ஊழி முதலாய் உயர்வார் உலகினில் தாழவல் லார் * இச் சசிவன்ன ராமே. 24 * இன் வழிச்சைவ ராமே
875 தண்மதி பானுச் சரிபூமி யேசென்று மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின் தண்மதி வீழ்வள விற்கண மின்றே. 25
876 வளர்கின்ற ஆதித்தன் தன்கலை யாறுந் தளர்கின்ற சந்திரன் தன்கலை யாறு * மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே. 26 * மலர்ந்தேறு பன்னிரண்டோ டெட்டு நாலாம்
877 ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக் காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில் ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே. 27
878 வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ் சூறுற நாங்குந் தொடர்ந்துற வேநிற்கும் ஈறிலி னன்கலை யீரைந்தொ டேமதித் தாறுட் கலையுள் அகலுவா வாமே. 28
879 உணர்விந்து சோணி உறவினன் வீசும் புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில் உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில் உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே. 29
880 விடாத மனம்பவ நத்தொடு மேவி நடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக் கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு படாதன இன்பம் பருகார் அமுதமே. 30
881 அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற் குமிழிக் குட்சுட ரைந்தையுங் கூட்டிச் சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே. 31
882 உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந் தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத் தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங் கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே. 32
883 மாறு * மதியும் # மதித்திரு மாறின்றித் தாறு படாமல் தண்டோடே தலைப்படில் ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும் பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே. 33 * மதியுமா தித்தனு மாறின்றித் # ஆதித்தனு; மதித்திடு மூன்றாம் தந்திரம் முற்றிற்று நான்காம் தந்திரம் * (* இது சிந்தியாகமத்தின் சாரம் என்பர்) 1. அசபை
884 போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத் தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே. 1 (இப்பாடல் 2988-ம் பாடலாகவும் வந்துள்ளது)
885 ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி ஈரெழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய் மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே. 2
886 தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றுந் தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றுந் தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றுந் தேவர் உறைகின்ற தென்பொது வாமே. 3
887 ஆமே பொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம் ஆமே திருக்கூத்து அனவரத் தாண்டவம் ஆமே பிரளயம் ஆகும்அத் தாண்டவம் ஆமேசங் காரத்து அருந்தாண் டவங்களே. 4
888 தாண்டவ மான தனியெழுத்து ஓரெழுத்து தாண்டவ மானது அனுக்கிரகத் தொழில் தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரம் தாண்டவக் கூத்துத் தமனியந் தானே. 5
889 தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும் தானே அகார உகாரம தாய்நிற்கும் தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத் தானே தனக்குத் தராதலம் தானே. 6
890 தராதல மூலைக்குத் தற்பர மாபரன் தராதலம் வெப்பு நமசி வாயவாந் தராதலஞ் சொல்லில் தான்வா சியவாகும் தராதல யோகந் தயாவாசி யாமே. 7
891 ஆமே சிவங்கள் அகார உகாரங்கள் ஆமே பரங்கள் அறியா விடம்என்ப ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம் ஆமே சிவகதி ஆனந்த மாமே. 8
892 ஆனந்த மூன்றும் அறிவுஇரண்டு ஒன்றாகும் ஆனந்தம் சிவாய அறிவார் பலரில்லை ஆனந்த மோடும் அறியவல் லார்கட்டு ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே. 9
893 படுவது இரண்டும் பலகலை வல்லார் படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள் படுவது சங்காரத் தாண்டவப் பத்தி படுவது கோணம் பரந்திடும் வாறே. 10
894 வாறே சதாசிவ மாறிலா ஆகமம் வாறே சிவகதி வண்டுறை புன்னையும் வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள் வாறே பொதுவாகு மன்றின் அமலமே. 11
895 அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம் அமலந் திரோதாயி யாகுமா னந்தமாம் அமலஞ் சொல் ஆணவ மாயை காமியம் அமலந் திருக்கூத்தங் காமிடம் தானே. 12
896 தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும் தானே தனக்குத் * தன்மலை யாய்நிற்கும் தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும் தானே தனக்குத் தலைவனும் ஆமே. 13 * தனமலை
897 தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத் தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத் தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத் தலைவனு மாய்நின்ற தாளிணை தானே. 14
898 இணையார் திருவடி எட்டெழுத் தாகும் இணையார் கழலிணை ஈர்ஐஞ்ச தாகும் இணையார் கழலிணை ஐம்பத் தொன்றாகும் இணையார் கழலிணை ஏழா யிரமே. 15
899 ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய் ஏழா யிரத்தும் ஏழுகோடி தானாகி * ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம் ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே. 16 * ஏழாயிரத்துயர்
900 இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம் இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணம் தானே. 17 |
சர்மாவின் உயில் ஆசிரியர்: க.நா. சுப்ரமண்யம்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
இது சக்சஸ் மந்திரம் அல்ல! ஆசிரியர்: சித்தார்த்தன் சுந்தரம்வகைப்பாடு : சுயமுன்னேற்றம் விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|