16. பாவம்! பன்னீர்ச்செல்வம்... வட்டிக்கடைப் பன்னீர் செல்வத்திற்குக் குறிஞ்சியூரில் இன்னொரு பெயர் அவரிடம் கடன் வாங்கி அனுபவப் பட்டவர்களால் சூட்டப்பட்டிருந்தது. 'நட்சத்திரேயன்' என்ற திருப்பெயர் தான் அது. அசல் வசூலாவதற்குள் அரட்டியும் மிரட்டியும் அவர் வசூல் செய்யும் வட்டிப் பணத்தின் தொகை சில சமயங்களில் அசலைக் காட்டிலும் கூட அதிகமாகிவிடும். அசல் தொகையை மொத்தமாகக் கொடுத்து அடைப்பதற்கு முன் கடன் வாங்கியவர் தனித்தனியாக எவ்வளவு கொடுத்தாலும் அவையெல்லாவற்றையும் வட்டிக் கணக்கில் தான் வரவு வைப்பார் மனிதர். மொத்தமாக அசலைக் கொடுத்து அடைக்க முடியாத எவனாவதொரு அப்பாவி 'அசல் அடைபட்டுக் கொண்டு வருகிறது' - என்ற நம்பிக்கையோடு வட்டியோடு சிறிது சிறிதாக - தவணையில் கொடுத்துக் கொண்டு வருவான். இந்தக் கல்நெஞ்சுக்கார மனிதரோ அசல் கணக்கில் ஒன்றும் வரவு வைக்காமல் வட்டிப்பணம், தவணையாக வந்த பணம் - எல்லாவற்றையும் சேர்த்து வட்டிக் கணக்கிலேயே வரவு வைத்து வாயில் போட்டுக் கொள்வார். வருட முடிவில், "அசல் இன்னும் அப்படியே இருக்கிறது? எப்போது அடைக்கப்போகிறாய்?" - என்று அவர் அதட்டிக் கேட்கும் போது அவரிடம் கடன் வாங்கிய ஏழைக்கு வயிறு பற்றி எரியும்.
இதனால் ஊரிலுள்ள நல்ல விளை நிலங்களில் பெரும்பாலானவை அவருக்குச் சொந்தமாயிருந்தன. வீடுகளிலும் இரண்டு மூன்று அவர் வசமாயிருந்தன. அப்படி வந்த வீடுகளையெல்லாம் குடியிருப்பவர்களுக்கு வாடகை பேசி விட்டிருந்தார். அந்தச் சிறிய ஊரில் மாதத்திற்கு இரண்டு ரூபாய் மூன்று ரூபாய்க்கு வசதியுள்ள வீடுகள் வாடகைக்கு கிடைத்து வந்தன. அந்த முறையை மாற்றி எட்டு ரூபாய், பத்து ரூபாய், என்று வீட்டு வாடகை உயரக் காரணமாயிருந்தவரே அவர் தாம். இவையெல்லாம் போதாதென்று இப்போது சில மாதங்களாக வட்டிக்கடைப் பன்னீர்ச்செல்வம் இன்னொரு புதிய தொழிலின் மூலமும் பணம் குவிக்கத் தொடங்கியிருந்தார். அந்த ஊரைச் சுற்றி நாற்புறமும் இருந்த மலைத்தொடர்களில் விறகுக்குப் பயன்படும் மரங்கள் கணக்கில்லாமல் இருந்தன. அவற்றை மலைப் பகுதிகளிலேயே வெட்டி கரிக்காக மூட்டம் போட்டு எரித்துக் கரிமூட்டைகளாக மாற்றினால் பக்கத்து நகரங்களில் மூட்டை நாலு ரூபாய் - ஐந்து ரூபாய்க்கு விலை போயிற்று. சர்க்கார் - காட்டிலாகாவின் பாதுகாப்புக்குட்பட்ட மலைப் பகுதிகளில் பெயருக்குச் சிறிது பணம் கட்டிப் 'பட்டுப் போன - காய்ந்து வற்றிய மரங்களை மட்டும் வெட்டிக் கொள்ளலாம்' - என்று லைசென்ஸ் பெற்றுக் கொண்டு பச்சை மரங்கள், பலனுள்ள மரங்கள் - எல்லாவற்றிலுமே கைவைத்தார் அவர். 'இப்படிச் செய்கிறீர்களே' - என்று கேட்பதற்காகத் திறந்த வாய்களில் எல்லாம் பணத்தைப் போட்டு அடைத்து வைத்தார். பத்து லட்சம் ரூபாய் இலாபம் கிடைக்கிற போது பத்து ரூபாயை அந்தக் காரியத்துக்கு ஒத்துழைக்கிறவர்கள் பக்கம் வீசி ஏறிந்து விட்டால் குடியா முழுகிவிடும்? பச்சை மரங்களையும் பயனுள்ள மரங்களையும் வெட்டக்கூடாதென்று லைசென்ஸிலும் சட்டத்திலும் நிபந்தனைகள் இருக்கின்றன! இருந்தால் இருக்கட்டுமே! அவற்றை யாராவது கவனித்தால் தானே? அழகியநம்பி கொழும்புக்குக் கப்பலேறி விட்டான் என்றவுடன் அவருக்கு ஒரு நம்பிக்கை உண்டாயிற்று. கடனைத் தரச் சொல்லி மிரட்டினால் - பழைய காலத்து மாதிரியில் அரண்மனை போல் கட்டப்பட்ட அந்தப் பெரிய வீடு தன்னுடைய கைக்கு வந்துவிடும் என்ற சபலம் தட்டியது பன்னீர்ச்செல்வத்திற்கு. ஆண்பிள்ளையில்லாத வீடு. நாலுமுறை நேரில் போய் அதட்டிக் கேட்டால், "இப்போது எங்களால் ஒன்றும் கொடுக்க முடியாது! இருப்பது இந்த வீடு ஒன்றுதான். முடியுமானால் இதை எடுத்துக் கொள்ளுங்கள்" - என்று வல்வழக்குப் பேசுவார்கள். அதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு கோர்ட் மூலம் வீட்டைக் கைப்பற்றி விடலாம். அசலைக் கேட்டாலாவது 'இரண்டு வருஷம் தவணை பாக்கியிருக்கிறதே' - என்று மறுத்துச் சொல்லுவார்கள். அதுவும் நியாயந்தான். 'வட்டியே ஐந்நூறு ரூபாய்க்கு மேலாகிறது. தரப்போகிறீர்களா? இல்லையா?' - என்றால் அவர்களுக்குப் பதில் பேச வாயில்லை. 'இப்போதுள்ள நிலையில் அழகியநம்பியின் தாயும், தங்கையும் எனக்கு ஒரு சல்லிக் காசு தர முடியாது. கொழும்பில் போன புதிதில் அழகியநம்பியாலும் அவ்வளவு பணம் சேர்த்து அனுப்ப முடியாது. நான் மட்டும் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் முயற்சி செய்தால் அந்த வீடு நிச்சயம் என் வசத்திற்கு வந்துவிடும்.' என்று ஒரு மாதிரித் தமக்குள் தீர்மானம் செய்து கொண்டிருந்தார் பன்னீர்ச்செல்வம். அந்தக்காலத்தில் பெட்ரோல் கிடைப்பது கடினமாக இருந்ததால், சர்வீஸ் பஸ்கள், சாமான் லாரிகள் - எல்லாம் கரியில் தான் ஓடின. பன்னீர்ச்செல்வத்தின் கரி விறகு - தயாரிப்புத் தொழில் பெருகுவதற்கு அமோகமான சூழ்நிலை வாய்த்திருந்தது. மனிதர் பணத்தை மலையாகக் குவித்தார். அவ்வளவு பணத்தை ஆள்கிறவருக்குக் கிட்டங்கி வைத்துக் கொள்ள ஒரு வீடு தானா கிடைக்காது? செண்டுக்குப் பத்து ரூபாய் வீதம் பணம் கொடுத்தால் ஊர்க்கோடியில் அருமையான காலிமனை விலைக்குக் கிடைக்கும். அந்தக் காலி மனையை விலைக்கு வாங்கி நூறு ரூபாய் செலவழித்தால் ஒரே சமயத்தில் நானூறு ஐநூறு கரி மூட்டைகளையும், நூறு டன் விறகையும் அடுக்கும்படியான ஒரு பெரிய கொட்டகை போட்டு விடலாம். ஏனோ, அந்தப் பணக்காரருக்கு அது தோன்றவே இல்லை. அழகியநம்பி என்ற ஒரு ஏழையின் வீட்டைத்தான் அவருடைய கண்கள் தேடின. அன்று வீடுதேடிச் சென்று அழகியநம்பியின் தாயைப் பார்த்து 'பதினைந்து நாட்களில் வட்டிப் பணம் கைக்கு வந்து சேராவிட்டால் நான் மிகவும் கெட்டவனாக நடந்து கொள்வேன்' - என்று மிரட்டிய போது கூட அந்த வீட்டை வசப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு தான் மிரட்டிவிட்டு வந்திருந்தார். அப்போதிருந்து பதினைந்து இருபது நாட்களில் அந்த வீடு தம் வசமாகிவிடும் என்று ஒவ்வொரு நாளும் கோழிக்கனாக் கண்டு கொண்டிருந்தார் அவர். ***** பன்னீர்ச்செல்வம் இப்படி ஏதாவது செய்து விடுவார் என்பதை அவர் வந்து விசாரித்துவிட்டுச் சென்ற விதத்திலிருந்தே அனுமானித்துக் கொண்டிருந்தாள் அழகியநம்பியின் அன்னை. 'பிள்ளையும் ஊரில் இல்லாத சமயத்தில் இருக்கிற ஒரே ஆதரவான வீட்டை இழந்துவிடக் கூடாது. என்ன தந்திரம் செய்தாவது, வட்டிப் பணத்தை இந்த மனிதன் முகத்தில் விட்டெறிந்து விட்டால் இன்னும் ஒரு வருடத்திற்கு இவன் நம் வீட்டு வாசல் படியை மிதிக்க முடியாது. கடன் நோட்டு காலாவதியாவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறதே?" - என்று எண்ணிக் கொண்டு ஒரு தீர்மானத்தோடு காந்திமதி ஆச்சியின் இட்டிலிக்கடைக்கு வந்திருந்தாள் அந்தம்மாள். காந்திமதி ஆச்சியின் கையில் ரொக்கமாக கொஞ்சம் இருப்பு உண்டு என்பது முத்தம்மாள் அண்ணிக்குத் தெரியும். தான் வீடு தேடிப் போய்க் கேட்டாள் ஆச்சி மறுக்கமாட்டாள் என்ற நம்பிக்கை அந்த அம்மாளுக்கு இருந்தது. காந்திமதி ஆச்சியைச் சந்தித்த முத்தம்மாள் அண்ணி சிறிது நேரம் பொதுவான செய்திகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பின்பு தான் வந்த காரியத்தைப் பிரஸ்தாபித்தாள். "அழகியநம்பியிடமிருந்து இன்றைக்கு எனக்கும் ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில் கூடப் பொதுவாக ஏதோ எழுதியிருந்தான். 'அம்மாவும் தங்கையும் ஊரில் தனியாக இருக்கிறார்கள். நீங்கள் அடிக்கடி உதவிகள் செய்து பார்த்துக் கொள்ளவேண்டும்' - என்று போகும்போது சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். நமக்குள் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்துவிடவா போகிறோம்?" - என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ஆச்சி. "ஆச்சி உங்களுக்குத் தங்கமான மனசு! எனக்குத் தெரியாதா என்ன? அந்தக் காந்திமதி அம்மனை எல்லோரும் தெய்வமாகக் கும்பிடுவது போல் நான் உங்களையும் கும்பிடவேண்டும். இந்த இக்கட்டான சமயத்தில் என்னைக் கைவிட்டு விடாதீர்கள். அந்தப் படுபாவி பன்னீர்ச்செல்வம் வீட்டையும் பிடுங்கிக் கொண்டு என்னையும் என் பெண்ணையும் நடுத்தெருவில் நிறுத்திவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்." - முத்தம்மாளண்ணியின் சொற்கள் துக்கமும், கவலையும் தோய்ந்து வெளிவந்தன. காந்திமதி ஆச்சியின் வார்த்தைகள் அழகியநம்பியின் தாய்க்குச் சிறிது தைரியத்தை உண்டாக்கின. "வட்டியை மட்டும் தானே இப்போது கொடுக்க வேண்டும்? அசலுக்கு இன்னும் நாள் இருக்கிறதோ; இல்லையோ?" ஆச்சி கேட்டாள். "ஆமாம்! வட்டிதான்; இரண்டு வருஷத்துப் பாக்கி நிற்கிறது. ஐநூறு ரூபாய் வரை சேர்ந்து விட்டது. அதைக் கொடுத்து ஒழித்து விட்டால் இன்னும் ஒரு வருஷத்துக்கு அசலைப் பற்றிப் பேச முடியாது." "ஐநூறு ஆகுமா?..." "ஏன் ஆச்சி? உங்கள் கைவசம் இப்போது அவ்வளவு இருக்காதா?" "இல்லாமல் என்ன? இரண்டு நாளில் புரட்டிவிடலாம். எதற்கும் நாளை அல்லது நாளன்றைக்குக் கோமுவிடம் சொல்லி அனுப்புகிறேன். நீங்கள் இங்கே வாருங்கள். பன்னீர்ச்செல்வத்தையும் இங்கேயே வரச்சொல்லிக் கூப்பிட்டு அனுப்புகிறேன். மணியக்கார நாராயண பிள்ளையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பத்திரத்தில் வட்டியை வரவுவைத்து விட்டுப் பணத்தைக் கொடுத்துவிடுவோம். நாமாகவே பணத்தைக் கொடுத்து வரவு வைத்துவிடலாம். இருந்தாலும் ஒரு ஆண்பிள்ளை பக்கத்திலிருந்தால் நல்லதுதானே?" - என்று காந்திமதி ஆச்சி கூறியபோது கவலைப்பட்டுக் கொண்டிருந்த முத்தளம்மாளண்ணியின் மனம் குளிர்ந்தது. "நல்ல சமயத்தில் கஷ்டமறிந்து உதவி செய்கிறீர்கள். இதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்." - தன் உள்ளத்தில் பெருகும் நன்றியுணர்ச்சியை இந்தச் சில சொற்களால் காந்திமதி ஆச்சிக்குத் தெரிவிக்க முயன்றாள் முத்தம்மாளண்ணி. "எனக்குக் கூடவா நீங்கள் இந்த உபசார வார்த்தைகள் எல்லாம் சொல்ல வேண்டும்?" - என்று தன்னடக்கமாகப் பணிவோடு கூறிக் கொண்டாள் காந்திமதி ஆச்சி. வந்த காரியம் சாதகமாக முடிந்த பெருமையில் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள் அழகியநம்பியின் தாய். ***** இரண்டு நாள் கழித்து இப்படி தாம் முற்றிலும் எதிர்பாராத நிகழ்ச்சி நடைபெறுமென்று பன்னீர்ச்செல்வம் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். காந்திமதி ஆச்சியின் பெண் கோமு அவருடைய வீடு தேடி வந்து அவரைக் கூப்பிட்டபோது அவரால் நம்பவே முடியவில்லை. "என்ன காரியமாக ஆச்சி என்னைக் கூப்பிடுகிறார்?" "எங்கள் இட்டிலிக் கடையில் அழகியநம்பியின் தாயாரும், மணியக்கார நாராயண பிள்ளையும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த அம்மாள் உங்களுக்கு ஏதோ வட்டிப் பணம் தரவேண்டுமாம். இப்போது அதைக் கொடுத்துவிடலாம் என்று தான் உங்களைக் கூப்பிட்டுக் கொண்டு வரச் சொன்னார்கள். வரும்போது கடன்பத்திரத்தை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார்கள்." - என்று சிறுமி கோமு மூச்சு விடாமல் சொல்லி முடித்த போது பன்னீர்ச்செல்வத்திற்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இவ்வளவு விரைவில் முத்தம்மாள் அண்ணிக்குப் பணம் எப்படிக் கிடைத்ததென்று வியந்தார் அவர். 'சரிதான்! இந்தக் காந்திமதி ஆச்சியும், பெருமாள் கோவில் மணியக்காரப் பிள்ளையும் சேர்ந்து கொண்டு இவளுக்குப் பண உதவி செய்திருக்க வேண்டும். இல்லையானால் ஐநூறு ரூபாயை இரண்டே இரண்டு நாளில் இவளால் எப்படிச் சேர்க்க முடியும்? அடாடா! நல்ல சமயத்தில் கெடுத்து விட்டார்களே. இன்னும் இரண்டு வாரத்தில் அந்த வீட்டைக் கைப்பற்றியிருப்பேனே. இப்போது அது முடியாமல் செய்து விடுவார்கள் போலிருக்கிறதே' - என்றெண்ணி வருந்தியது திருவாளர் பன்னீர்ச்செல்வத்தின் உள்ளம். கடன் பத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு காந்திமதி ஆச்சியின் இட்டிலிக் கடையை நோக்கி நடந்தார் அவர். சிறுமி கோமு அவருக்கு முன்னால் நடந்தாள். "வாருங்கள், உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். கடன் பத்திரம் கொண்டு வந்திருக்கிறீர்களோ?" - என்று பன்னீர்ச்செல்வத்தை வரவேற்று இட்டிலிக்கடைக்குள் அழைத்துக் கொண்டு போனார் மணியக்காரப் பிள்ளை. கடைக்குள் காந்திமதி ஆச்சியும் முத்தம்மாளண்ணியும் பணத்தோடு தயாராகக் காத்துக் கொண்டு இருந்தனர். பத்தே நிமிஷங்களில் காரியம் முடிந்து விட்டது. வட்டிப் பணத்தை எண்ணிக் கொடுத்துக் கடன் பத்திரத்தில் வரவு வைத்தபின் பன்னீர்ச்செல்வத்தை அனுப்பிவிட்டனர். மணியக்கார நாராயண பிள்ளை அருகிலிருந்ததனால் காரியம் துரிதமாக முடிந்து விட்டது. 'பாவம்' பன்னீர்ச்செல்வம்! நன்றாக ஏமாந்து விட்டார். அன்று குறிஞ்சியூரிலிருந்து வெளியேறிய தபால் கட்டுக்கள் அடங்கிய பையில் இலங்கைக்கு இரண்டே இரண்டு கடிதங்கள் இருந்தன. அந்த இரண்டும் அழகியநம்பியின் பெயருக்குச் சென்றன என்பதை இங்கே தனியாகக் கூறவும் வேண்டுமோ? |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
குறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்! மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : இலக்கணம் ISBN: 978-81-94008-41-5 இருப்பு உள்ளது விலை: ரூ. 300.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: உலகின் மூத்த மொழி என்றதும்... வாக்கிங் ஸ்டிக் பிடித்து வருகிற சீனியர் சிட்டிஸன் லிஸ்ட்டில் தமிழைச் சேர்த்துவிடக்கூடாது. டாலடிக்கிற இளமை கொஞ்சமும் குன்றாமல், பார்ப்பவர்களைக் கிறங்கடிக்கிற, ஈர்த்து இழுக்கிற செம்ம யூத் செம்மொழி, நம் தமிழ்மொழி. அதனால்தான், நம்மொழியின் சீரிளமையைக் கண்டு பிரமித்துப்போய், திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்தியிருக்கிறார் மனோன்மணியம் பெ. சுந்தரனார். இப்படி ஒரு மூத்த, இளம்மொழியை இன்றைய இளைய / இணைய தலைமுறைக்கு எப்படி அறிமுகப்படுத்துகிறோம்? பாடப்புத்தகங்களில் இருக்கிற இலக்கணக் குறிப்புகளை படிக்கும்போதே, ஸ்லீப்பிங் டோஸ் எஃபெக்ட் ஏற்படுகிறதில்லையா?இலக்கணம் படிப்பதை தண்டனையாக நினைக்கிற நவீனயுக இளைஞர்கள் மனதுக்குள், நம் தமிழை ஆழமாக அமர்த்த வேண்டுமென்றால்... அவர்களுக்கே உரித்தான அல்ட்ரா மாடர்ன் டிரெண்டி ஸ்டைலில் சொல்வது தானே சரியாக இருக்கும்? அப்படி ஒரு முயற்சியே... ‘குறிஞ்சி to பாலை... குட்டியாக ஒரு டிரிப்’.இது, தமிழ் கற்றறிந்த ஆசான்களுக்கான புத்தகம் அல்ல. தமிழை, அதன் மரபான பொக்கிஷங்களை, பெருமைகளை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான துவக்கநிலைக் கையேடு.. நேரடியாக வாங்க : +91-94440-86888
|