28. முருகேசனின் யோசனை பஸ்ஸில் பிரயாணம் செய்கிறபோது தான் தாய் நாட்டுக்குத் திரும்ப நேர்ந்த காரணங்களை முருகேசனுக்கு விவரித்துச் சொல்லிவிட்டான் அழகியநம்பி. தன்னுடைய எதிர்கால நோக்கங்களையும், இலட்சியங்களையும் கூட முடிந்தமட்டில் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் அவனிடம் தெரிவித்தான். முருகேசன் அவற்றைக் கேட்டுச் சிரித்தான்.
முருகேசன் அழுத்தந்திருத்தமாகத் தன் கருத்தை அழகியநம்பிக்கு எடுத்துரைத்தான். ஆனால், இவனுடைய மறுப்புக்களைக் கேட்டு அழகியநம்பி தன் இலட்சியத்திலோ, நோக்கத்திலோ சிறிதும் சோர்ந்து போய்விடவில்லை. "நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு முருகேசா! எனக்கென்று நான் கடைசியாகத் தீர்மானித்துக் கொண்ட இலட்சியம் ஒன்று தான். இதை நான் எப்படியும் நிறைவேற்றிக் கொண்டே தீருவேன். என் உயிரே போவதாக இருந்தாலும் கிராமத்தை விட்டுப் பிழைப்பதற்கென்று வேறெங்கும் வெளியேறிச் செல்ல மாட்டேன். இன்று இந்த நிமிஷத்தில் உன் கையிலடித்து சத்தியம் வேண்டுமானாலும் செய்து தருகிறேன்." - அழகியநம்பி உணர்ச்சி வசப்பட்டுச் சிறிது இரைந்தே பேசிவிட்டான். பஸ்ஸிலிருந்த சகபிரயாணிகளின் கவனத்தைக் கவர்ந்து அவன் பக்கமாகத் திரும்பிப் பார்க்கச் செய்துவிட்டது அந்தப் பேச்சு. "போதும் அப்பா! வாயை மூடிக்கொள். உன் ஆவேசப் பேச்சைக் கேட்டுப் பஸ்ஸில் வருகிறவர்களெல்லோரும் நாமிருவரும் சண்டை போட்டுக் கொண்டு இரைவதாக நினைத்துக் கொள்ளப் போகிறார்கள். ஊருக்குப் போய் விவரமாகப் பேசி முடித்துக் கொள்வோம்!" - என்று கூறி அழகியநம்பியின் வாயைப் பொத்தினான் முருகேசன். அதன் பின் பஸ் குறிஞ்சியூரை அடைகிறவரை அவர்கள் இருவரும். பேச்சிலோ, விவாதத்திலோ அதிகம் ஈடுபடவில்லை. மங்கிய நிலவொளியில் ஓசையடங்கிப் போய் நீண்டு கிடக்கும் தெருக்கள், பெருமாள் கோவில் கோபுரம், தெப்பக் குளம், நாற்புறமும் நிலவொளியும் தமது இயற்கை நீல நிறமும் கலந்து தெரியும் மலைகள், மரக் கூட்டங்கள், ஆறுகள், - எல்லாவற்றையும் பார்த்தபோது இழந்து போன குபேர சம்பத்துத் திரும்பக் கிடைத்துவிட்டது போலிருந்தது அழகியநம்பிக்கு. பஸ் ஸ்டாண்டிற்கும் கிராமத்திற்கும் ஒரு பர்லாங் தூரத்திற்குக் குறையாது. ஊரைவிட ஐம்பது அறுபது அடி மேடான இடத்தில் பஸ் ஸ்டாண்டு அமைந்திருந்ததனால் அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் நடந்து கொண்டே பள்ளத்தில் ஊரின் மொத்தமான தோற்றம் முழுவதையும் பார்க்க முடியும். ஊரில் எங்கோ குரைக்கும் தெரு நாயின் ஓசை, மாட்டுக் கொட்டகைகளில் வைக்கோல் தின்று கொண்டிருக்கும் மாடுகளின் கழுத்து மணிகள் ஆடும் ஒலி, தெருத் திண்ணைகளிலும், கட்டில்களிலும் படுத்து உறங்குவோரின் குறட்டை ஒலி, சிள்வண்டுகளின் சப்தம், வயலோரத்து வாய்க்கால் மதகுகளில் தண்ணீர் பாயும் 'கள கள' சப்தம், - ஜீவன் துடிக்கும் குறிஞ்சியூரின் அந்த ஒலிகள் அழகியநம்பிக்குக் காரணமில்லாமல் இறுமாப்பு அளித்தன. கர்வம் உண்டாக்கின. களிப்பு உண்டாக்கின. மேற்கே மலைச்சிகரங்களில் குங்குமப் புள்ளிகள் போல் அங்கங்கே நெருப்பு எரிவது தெரிந்தது. "இதெல்லாம் காட்டிலாகாவில் ஒன்றும் கேள்வி முறை இல்லையோ? மலையின் அழகை இப்படித் தீ மூட்டம் போட்டுப் பாழாக்குகிறார்களே?" - என்று முருகேசன் அழகியநம்பியிடம் கேட்டான். "ஓ! மலையில் நெருப்பு எரிவதைக் கேட்கிறாயா? இந்த ஊரில் ஒரு பெரிய மனிதர் இருக்கிறார். பன்னீர்ச்செல்வம் என்று பெயர். சர்க்காருக்குப் பணம் கட்டி லைசென்ஸ் வாங்கி மரங்களை எரித்துக் கரி மூட்டை வியாபாரம் செய்கிறார். 'பட்ட மரங்களை மட்டும் எரித்துக் கொள்ளலாம்' என்று தான் அவருக்கு லைசென்ஸ். மனிதர், பட்டவை, பசுமையானவை, என்ற வேறுபாடி இல்லாமல் எல்லாவற்றையும் கரியாக்கிக் கரியைக் காசாக்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார். இது போதாதற்கு வட்டிக் கடை, லேவா தேவித் தொழில் வேறு." "அவர் பிழைக்கத் தெரிந்தவர்! விவரந் தெரிந்து வகையாகப் பிழைக்கிறார். இல்லையானால் உன்னைப் போலவா 'நிலத்தைக் குத்தகைக்குப் பிடித்து உழப்போகிறேன்' - என்று பைத்தியக்காரத்தனமாகத் திட்டம் போட்டுக் கொண்டு திரிவார்கள்?" - என்று அவன் கூறியதை வைத்துக் கொண்டு அவனையே மடக்கிக் கேலி செய்தான் முருகேசன். "இப்போது இப்படித்தான் சொல்லுவாய்! போகப் போகத் தெரியும் என் திட்டங்களின் வெற்றி. நான் என்னுடைய இலட்சியத்தில் சித்தியடைந்து நிற்கிறதை நீயும் ஒரு நாள் பார்க்கத்தான் போகிறாய்!" "அழகியநம்பீ! நீ சரத்சந்திரரின் 'கிராம சமாஜம்' - என்ற நாவல் படித்திருக்கிறாய் அல்லவா?" "ஏன்? எப்போதோ கல்லூரி நூல் நிலையத்தில் எடுத்துப் படித்திருப்பதாக நினைவிருக்கிறது. அதற்கும் நான் இப்போது பேசிக் கொண்டிருக்கிற விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்?" "சம்பந்தம் இருக்கிறது! இல்லாவிட்டால் வேலையற்றுப் போய்க் கூறுவேனா? படித்துப் பட்டம் பெற்ற ஒருவன் கிராமத்தில் வாழ்ந்து பரந்த நோக்கங்களையும், உண்மை உழைப்பின் சக்தியையும் கிராம சமூகத்துக்குக் காட்டி விளக்கி முன்னேற்றுவிப்பதற்கு பாடுபடுகிறான். அவனுடைய ஒவ்வொரு நல்ல தொண்டும், ஒவ்வொரு உழைப்பும், கிராமத்தினரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அவனுக்கே துன்பங்கள் நேர்கின்றன. அவன் மனம் வெறுத்துக் கிராமத்தை விட்டே வெளியேறி விடலாமா? என்றெண்ணுகிற அளவுக்கு வளர்ந்து விடுகிறது வெறுப்பு." "கதையில் நடந்திருக்கலாம் அப்படி! அதையே நீ எனக்கும் உதாரணமாக்குவது பொருந்தாது" "பார்த்துக் கொண்டே இரேன். நடக்க நடக்கத் தெரிந்து கொள்கிறாய்! நான் இப்போது என்ன சொன்னாலும் உனக்கு நம்பத் தோன்றாது." பேசிக்கொண்டே வீட்டு வாசலை அடைந்துவிட்டார்கள். சாமான்களை திண்ணையில் வைத்துவிட்டுத் தானும் உட்கார்ந்து கொண்டான் முருகேசன். அழகியநம்பி, "அம்மா! அம்மா! கதவைத் திற," என்று இரைந்து கூப்பிட்டுக் கொண்டே கதவைத் தட்டினான். உள்ளே சிம்னி விளக்கு பெரிதாக்கப்படுவது சாவித் துவாரத்தின் வழியே அவனுக்குத் தெரிந்தது. மறுபடியும் கதவைத் தட்டினான். "யார் அது?" - உள்ளிருந்து அம்மாவின் குரல் வினாவிற்று. "நான் தான் அம்மா! அழகியநம்பி வந்திருக்கிறேன். கதவைத் திற!" - என்றான் அவன். அம்மா எழுந்திருந்து வந்து கதவைத் திறந்தாள். "ஏண்டா! இதென்னடாது? திடுதிப்பென்று; வரப்போகிறேன் என்று ஒரு கடிதம் கூட எழுதக் கூடாதா? போய் ஒரு மாதம் கூட முடியவில்லை" - அம்மாவிற்கு ஆச்சர்யமாயிருந்தது. "எல்லா விவரமும் அப்புறம் சொல்கிறேன் அம்மா? இந்தச் சாமான்களை எல்லாம் உள்ளே எடுத்து வை. மாடிக் கதவுச் சாவியைக் கொண்டு வந்து திறந்துவிடு. நானும், முருகேசனும் மாடியில் தான் போய்ப் படுத்துக் கொள்ளப் போகிறோம்." "நீங்கள் இரண்டு பேரும் சாப்பிட வேண்டாமோ? அடுப்பை மூட்டி ஏதாவது செய்கிறேனே?" "ஆமாம்! எழுப்பட்டுமா?" "வேண்டாம்! இப்போதென்ன அவசரம்? காலையில் பார்த்துக் கொள்ளலாம்." அம்மா மாடியைத் திறந்து தூசிபோகப் பெருக்கிவிட்டாள். அவன் ஊருக்குப் போனபின் அதைத் திறக்க வேண்டிய அவசியமே அம்மாவுக்கோ, வள்ளியம்மைக்கோ ஏற்பட்டிருக்காது! அழகியநம்பியும் முருகேசனும் படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டார்கள். பிரயாண அலுப்பினால் சிறிது நேரத்தில் இருவருமே நன்றாகத் தூங்கிவிட்டார்கள். விடியற்காலையில் அவர்கள் எழுந்திருக்கும் போது மணி ஏழுக்கு மேலிருக்கும். மாடி வராந்தாவில் சுள்ளென்று வெயில் பட்டு உறைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் போக்கில் தூங்கவிட்டிருந்தால் பத்துப் பதினோரு மணிவரை கூடத் தூங்கிக் கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. அம்மா வந்து எழுப்பிவிட்டாள். "நாலைந்து நாட்களுக்கு முன்னால் மேற்கே மலையில் நல்ல மழை. குறிஞ்சி அருவியில் தண்ணீர் நிறைய வருகிறது. போய்ப் பல் தேய்த்துக் குளித்து விட்டு வாருங்கள். அதற்குள் இங்கே காப்பி பலகாரம் தயாராகிவிடும்." என்றாள் அம்மா. அழகியநம்பி முருகேசனை வாசலில் நிறுத்திவிட்டுப் பல் தேய்க்க 'உமிக்கரி' எடுத்துக் கொண்டு வருவதற்காகப் பின் கட்டுக்குப் போனான். கிணற்றடியில் பற்றுப் பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்த வள்ளியம்மையைப் பார்த்ததும், "என்ன வள்ளியம்மை! சௌக்கியம் தானா?" என்று சிரித்துக் கொண்டே விசாரித்தான். அவள் "சௌக்கியந்தான் அண்ணா!" என்று சொல்லிக் கொண்டே கையைக் கழுவிவிட்டு அவனருகில் வந்து பாதங்களைத் தொட்டு வணங்கினாள். "நன்றாயிருக்க வேண்டும்." - என்று கைகளை உயர்த்தி வாழ்த்துக் கூறினான். கும்பிட்டு எழுந்திருந்த வள்ளியம்மையின் கண்களில் அவனுடைய கையிலிருந்த மோதிரம், கடிகாரம், எல்லாம் தெரிந்தன. "அடேடே! இது ஏதண்ணா மோதிரம், கடிகாரம் எல்லாம்?" - அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல், "நாங்கள் அருவிக்குக் குளிக்கப் போகிறோம். இவையெல்லாம் இங்கேயே இருக்கட்டும். இந்தா; உள்ளே வாங்கிவை!" - என்று மோதிரங்களையும், கடிகாரத்தையும் கழற்றிக் கொடுத்தான் அவன். பின் உமிக்கரியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்து முருகேசனையும் அழைத்துக் கொண்டு அருவிக்கரைக்குக் கிளம்பினான். போகிறவழியில் அவனைச் சந்தித்த ஒவ்வொருவரும் "தம்பி கொழும்பிலிருந்து எப்போது வந்தது?" என்று தொடங்கி ஒரு பத்து நிமிஷங்களாவது நிறுத்தி வைத்து விசாரிக்காமல் விடவில்லை. அந்த விசாரிப்பு, அந்தப் பரிவு, அந்த மரியாதை, எல்லாம் தனக்கா, தான் போய்விட்டு வந்த கொழும்புக்கா; - என்பதுதான் அழகியநம்பிக்குப் புரியவில்லை. "நீ தொடர்ந்து கிராமத்திலேயே இருப்பதாயிருந்தால் இந்த மாதிரி விசாரிப்பும், மரியாதையும் உனக்குக் கிடைக்காது. தங்களுக்குள் ஒருவனாக, - சாதாரணமானவனாக இவர்கள் உன்னையும் கருதத் தொடங்கிவிடுவார்கள். இவர்களையும் போல நீயும் நிலத்தை ஏர்பூட்டி உழுது உழைத்துப் பாடுபட விரும்புகிறாய் என்று தெரிந்தால் அதைப் பரந்த நோக்குடன் எண்ணி வரவேற்கக்கூட இவர்களுக்குத் தெரியாது. தங்களுக்குப் போட்டியாக முளைத்து விட்டாயென்று உன் மேல் வெறுப்பும் அசூயையும் கொள்வார்கள்" என்று எச்சரிப்பது போல் கூறினான் முருகேசன். "யார் என்ன எண்ணிக் கொண்டால் என்ன? என் எண்ணத்தை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. என் உழைப்புக்கு மக்கள் மரியாதை செய்ய வேண்டாம். எந்த மண்ணில் உழைக்கிறோனோ; அந்த மண் மரியாதை செய்தால் போதும். அதை நான் நம்புகிறேன்." - என்றான் அழகியநம்பி. திடமான குரலில் பேசினான் அவன். அவர்கள் இருவரும் அப்போது குறிஞ்சியூர் மேற்கு மலைத் தொடரை ஒட்டினாற் போல ஓடும் ஆற்றின் கரையில் நடந்து கொண்டிருந்தனர். அந்த ஆறு மலையிலிருந்து சம தரைக்கு இறங்குகிற இடம்தான் குறிஞ்சி அருவி. அதை அடைவதற்கு இன்னும் இரண்டு பர்லாங் நடக்க வேண்டும். ஆற்றோரமாக மலையடிவாரத்தை ஒட்டி ஒரு கால் மைல் அரைமைல் சுற்றளவுக்கு வண்டல் நிலம் புறம்போக்காகக் கிடந்தது. ஆற்றைக் காட்டிலும் மேட்டுப் பாங்கிலும், மலைச்சாரலைக் காட்டிலும் பள்ளமான இடத்திலும், அந்த வண்டல் நிலம் அமைந்திருந்தது. அந்த இடத்திற்கு வந்ததும் முருகேசன் தயங்கி நின்றான். சுற்றிலும் ஏறிட்டுப் பார்த்தான். "அழகியநம்பி எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது! இந்தப் படுகை யாருக்காவது சொந்தமா? அல்லது சர்க்காரின் புறம்போக்குத் தரிசு நிலமா?" "ஏன்? இது ஆற்றுப்படுகை! யாருக்கும் சொந்தமில்லை. சர்க்கார் புறம்போக்குத் தரிசுதான்." "நான் உனக்கு ஒரு அருமையான யோசனை சொல்கிறேன். ஊரார் நிலத்தைக் குத்தகைக்கும், வாரத்துக்கும் பேசினால் பேசினபடி, வாரமும், குத்தகையும் கொடுக்க உன்னால் முடியாது. உன்னை நம்பி நிலத்தை அடைக்க மாட்டார்கள். இதுதான் உன் இலட்சியம் என்று நீ உறுதியாகத் தீர்மானித்திருக்கும் பட்சத்தில் கிராம முன்சீப்பையும் கலந்து கொண்டு சர்க்காருக்கு ஒரு மனு எழுதிப் போடு; சொல்கிறேன்." - என்றான் முருகேசன். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
மனசு போல வாழ்க்கை 2.0 மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2020 பக்கங்கள்: 96 எடை: 120 கிராம் வகைப்பாடு : உளவியல் ISBN: 978-81-944489-7-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், மென்பொருள் பொறியாளர்கள், குடும்பத் தலைவிகள், இளம் பெண்கள், முதியோர் என வெவ்வேறு வாழ்க்கைச் சூழலை வயது வரம்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் மனம் அவர்களுக்கு விடும் சவால்களை, கேள்விக் கணைகளாக மாற்றி அனுப்பி வைத்தனர். ஒவ்வொன்றுக்கும் தனக்கே அனுபவ அறிவோடு டாக்டர் ஆர்.கார்த்திகேயன் பதிலளித்தார். மனம் குறித்த அலசல் கட்டுரைகள் மற்றும் கேள்வி-பதில் பகுதி ஆகியவற்றின் தொகுப்பே இப்புத்தகம். இதனை படிக்கிற வாசகருக்கு தன்னுடைய பயம், பதற்றம், மன அழுத்தம், கோபம், வருத்தம், ஏமாற்றம், குற்றவுணர்வு போன்ற மனம் செய்யும் ஆர்ப்பாட்டங்களை ஆற்றுப்படுத்தும் பக்குவம் வாய்க்கும். தன்னுடைய மனத்தை ஆளத் தெரிந்த எவருக்கும், உலகில் எதிர்கொள்ளௌம் எந்தவொரு சவாலையும் எளிதாக ஆள முடியும். அதற்கு இந்நூல் அழகாக உதவும்! நேரடியாக வாங்க : +91-94440-86888
|