![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
14. அரசி கலங்கினாள்!
முறிமேனி முத்தம்முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்ந்தோள் அவட்கு. - திருக்குறள் (இன்பம் - களவியல்) (மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரேமேனி; முத்தேபல்; இயற்கை மணமே மணம்; வேலே மை உண்ட கண்.) தூய வெண்ணிறப் பட்டில் தங்க ஜரிகைக் கரையிட்டுப் புடவையாக உடுத்திக் கொண்டு, கழுத்தில் முத்துப்பதக்கமும், தலையில் கூந்தலிலிருந்து இருபுறமும் காது வரையில் தொங்கும் மணிமாலையுமாகத் தோற்றம் அளித்த சித்திரசேனாவை சிவாஜி கண்கொட்டாமல் பார்த்தான். கேரளத்தில் அவள் மேடையின் மேல் புள்ளிமானைப் போலத் துள்ளித் துள்ளி ஆடிய ஞாபகம் வந்தது; நீரில் விரையும் மீனைப் போல அவளுடைய விழிகள் தீப ஒளியுடன் அசைந்த நினைவு வந்தது. பம்பரமாகச் சுழன்றாடி, மின்னல் ஒளியென விரைந்து, முகபாவங்களைக் காட்டி ஆடிய நடனத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டான். அந்த சித்திரசேனாவா தஞ்சாவூருக்கு வந்திருக்கிறாள்? எதற்காகவோ? மரியாதைக்காக அவளை அவன் தமிழ் நாட்டுக்கு வரும்படி அழைத்தது என்னவோ உண்மைதான். ஆனால், அது உபசாரத்துக்காகச் சொன்ன அழைப்பு மட்டுமே! அப்படியே வருவதென்றாலும் கலெக்டர் துரையுடன், மகள் புவனமோகினியையும் அழைத்துக் கொண்டு வருவானேன்? அந்தப் பெண்ணை அவன் கேரளத்தில் நடன நிகழ்ச்சியில் கூடப் பார்த்ததாக ஞாபகமில்லை. கலெக்டர் மக்லோட் துரை மன்னருடன் பேசிக் கொண்டே நகர்ந்து விட்டார். இளையராணிக்கு அந்த நடன மாதுடன் பேச விருப்பமில்லை. ஆகையால், மெதுவாக இசைக் கருவிகள் நாத மழை பொழியும் இடத்தை நோக்கி பிரபுக்கள் சிலரின் மனைவியருடன் போய்விட்டார். தனியே விடப்பட்ட சிவாஜியும், சுலக்ஷணாவும், சித்திரசேனாவையும், புவனமோகினியையும் அழைத்துக் கொண்டு போனார்கள். நடந்து செல்லும்போதே சிவாஜி புவனாவைக் கவனித்தான். இன்னும் மலராத புது மொட்டைப் போன்ற அழகு அது. அந்தப் பார்வையில் இன்னும் கள்ளம் புகவில்லை. அவளுக்குச் சுமார் பதின்மூன்று வயதிருக்கலாம். ஆனால், வயதுக்கு மீறிய கட்டழகோ அவளுடைய முற்றிலும் மலராத இளமையை இன்னும் அதிகப்படுத்தியே காட்டியது. ஜரிகைப் பாவாடையின் ஜிலுஜிலுப்பில், அவள் பாதங்கள் வெளிவந்த போது மெட்டி அசைந்தது; மோக ஒளி சிந்திற்று, மெல்லுடல் நலுங்கிற்று. சுலக்ஷணாவும் புவனமோகினியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். பின்னி முடியாத கருங்கூந்தலை அவள் அலை அலையாகப் பின்பிறம் தொங்கவிட்டுக் கொண்டிருந்தாள். அது பின்புறம் அவள் நடந்த அழகுக்குத் திரையாக அசைந்தாடிற்று. மல்லிகைச் சரம் ஒன்றைக் கூந்தலில் வில்லாகப் பதித்திருந்தாள். காதுகளில் போட்டிருந்த முத்துத் தோட்டில் தங்க மணிகள் ஊஞ்சலாடின; அவை கன்னங்களில் விளையாடின. ‘அவளுக்குத்தான் எத்தனை அழகு? எவ்வளவு நீளமான கூந்தல்? பட்டுப் போன்ற மேனி? இப்படி ஏக இளமையும் வாளிப்பும் எனக்கு ஏன் இல்லை? அம்மா பார்த்து பார்த்துக் கனியும், தேனும், பாலுமாகச் சேர்த்தும் நீங்கா வளமை எனக்குக் கிடைக்கவில்லையே!’ என்று மனத்துள் எண்ணிக் கொண்டாள் சுலக்ஷணா. “இளவரசே! நான் வந்தது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?” என்று கேட்டாள் சித்திரசேனா. புன்னகை அவள் இதழ்களில் குறும்பாக மிளிர்ந்தது மறைந்தது. “ஆமாம்! ஆச்சரியம் தான். ஆனால் மகிழ்ச்சித் தரும் ஆச்சரியம் என்றே சொல்வேன். மேலும் உங்கள் மகளை நான் எதிர்பார்க்கவே இல்லை!” “இளவரசே! என்னுடைய நாட்டியத்தை நீங்கள் அரசரின் கொலு மண்டபத்தில் கண்களில் வியப்பு தெரியப் பார்த்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது! ‘இப்படி ஒரு நாட்டியத்தை நான் பார்த்ததில்லை. என்னுடைய தந்தையார் பார்த்தால் மகிழ்ந்து போவார். அவருடைய கலாரசனையே தனி’ என்று நீங்கள் சுவாதித் திருநாள் மகாராஜாவுக்குச் செய்தி சொல்லி அனுப்பினீர்களாம். அதனால் மன்னரே எங்களை கலெக்டர் துரையுடன் அனுப்பி வைத்தார். ‘சரபோஜி மன்னர் காசியாத்திரை புறப்படப் போகிறாராம். அதற்குள் அவரைச் சந்திக்க கலெக்டர் மக்லோட் துரை அவசரமாகப் போகிறார். சித்திரசேனாவுக்குச் சௌகரியப்பட்டால் உடன் போய் வரலாம்’ என்று மகாராஜா செய்தி சொல்லி அனுப்பினார், நான் இந்த சந்தர்ப்பத்தை இழக்க விரும்பவில்லை. புவனாவிற்கும் என்னுடன் வர ஆசை. இதில் உங்களுக்குச் சங்கடம் ஏதும் இல்லையே?” என்று கண்களைச் சுழற்றி ஒருமுறை பார்த்து விட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள் சித்திரசேனா. தாயின் முகத்தை ஒரு முறை நிமிர்ந்து பார்த்து விட்டு, மான் குட்டி முகத்தை உயர்த்துவது போல இளவரசரை ஒரு முறை நிமிர்ந்து நேர் பார்வையுடன் கவனித்தாள் புவன மோகினி. சிவாஜி தன்னையே கண்கொட்டாமல் பார்ப்பதை உணர்ந்ததும் மருண்டு, பார்வையைத் திருப்பிக் கொண்டாள். இன்னதெனப் புரியாத ஓர் உணர்ச்சி, நாணமென்றும் சொல்ல முடியாமல், திகைப்பென்றும் கூற முடியாமல் முகத்தில் பரவி நின்றது. அவளுடைய சங்கடத்தை உணர்ந்து கொண்டவளைப் போல், சுலக்ஷணா புன்சிரிப்புடன் அவள் கரத்தைப் பற்றி, “புவனா! உனக்கும் உன் தாயைப் போல நன்றாக நடனம் ஆடத் தெரியுமா?” என்று கேட்டாள். அதற்குப் பதில் கூற முடியாமல் இதழ்களை மடக்கி, காதின் குழை ஊசலாட ஒரு முறை வேகமாக ‘இல்லை’ என்பது போலத் தலையை அசைத்தாள் புவனமோகினி. “இளவரசியாரே! அவளுக்கு இன்னும் நடனப் பயிற்சி அளிக்கப்படவில்லை. ஆனால், இயல்பாகவே அவளுக்கு நல்ல குரல் உண்டு. இனிய பாடல்களை அவளால் அழகாகப் பாட முடியும்” என்று கொஞ்சம் பெருமையுடன் சொல்லிக் கொண்டாள் சித்திரசேனா. “அப்படியா? இன்று சுலக்ஷணாவின் பிறந்த நாளாயிற்றே! அதையொட்டி இசை நிகழ்ச்சிகள் நடைபெறப் போகின்றன. அதில் முதலில் உங்களுடைய மகள் ஒரு பாட்டைப் பாடலாமே?” என்று கேட்டான் சிவாஜி. அதைச் சற்றும் எதிர்பாராத புவன மோகினி ஆச்சரியம் தெரிய ஒரு முறை விழித்துப் பார்த்துவிட்டு, பொங்கி வந்த சிரிப்பைக் கையால் வாயை மூடி அடக்கிக் கொண்டாள். “ஏன் சிரிக்கிறாய்! உண்மையாகவே நீ பாடி நாங்கள் கேட்கக் கூடாதா? அதுவும் என் பிறந்த நாளன்று?” என்று அவளுடைய தோளைப் பற்றி உலுக்கினாள் சுலக்ஷணா. “அரசகுமாரி ஆசைப்படும்போது நீ மறுப்பது நியாயம் இல்லை. ஆனால், நீ பாட இங்கே ஏற்பாடு செய்தவர்கள் அனுமதிக்க வேண்டும். அரசரே அனுமதி கொடுத்தால் ஒரு வேளை மற்றவர்கள் சம்மதிக்கலாம்!” என்று சிறிய யோசனையுடன் கூறினாள் சித்திரசேனா. மேலே ஏதும் பேசக் காத்திராமல், தந்தையிடம் கேட்க விரைந்து ஓடினாள் சுலக்ஷணா. எதிர்பாராமல் வந்து சேர்ந்துவிட்ட இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்கும் வகையறியாது திகைத்து நின்றாள் புவன மோகினி. அவளுடைய நெற்றியில் வியர்வை முத்து முத்தாகப் பூத்தது. கன்னங்களில் இன்னும் கனியாத சிவப்பாகச் சங்கம் திட்டுப் போல, எழுந்தது. கால்விரலால் மண்ணைக் கிளறியபடி தாயிடம், “அம்மா! இங்கே வரும் போது இதற்காக நீ என்னைத் தயார் செய்யவே இல்லையே? நீ அப்படிக் கூறி இருந்தால் நான் வந்திருக்கவே மாட்டேன்!” என்று மூச்சிலும் தாழ்ந்த குரலில் கூறினாள் புவனா. “அம்மாவின் வேண்டுகோளை நீ மறுக்கலாம், நான் கேட்க ஆசைப்படுவதாகக் கூறினால்?” என்று எதிர்பாராத விதமாக, சிவாஜி அவளையே நேரிடையாகக் கேட்டு விட்டான். இதைச் சற்றும் எதிர்பாராத அந்தப் பெண் பிரமித்துப் போனாள். இளவரசன் பேச்சின் ஆர்வமும் பார்வையின் தாகமும் தன்னைத் தாக்கிய கணப்பொழுதில் அதைச் சமாளிக்க இயலாதவளாகத் தத்தளித்தாள். மகளின் சங்கடத்தை உணர்ந்த சித்திரசேனா, “மகளே! சரபோஜி மன்னர் கலை உலகில் சக்கரவர்த்தி. அவர் முன்னிலையில் பாடக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவர் அனுமதி கொடுத்தால் ஒரே ஒரு பாட்டுப் பாடேன். இளவரசரும் உன் குரலைக் கேட்க ஆவலாக இருப்பது போலத் தோன்றுகிறது!” என்று சொல்லி அவளை மெல்ல அணைத்துக் கொண்டாள். தாயின் இடையைச் சுற்றிப் பின்னிய கைகளுடன் தன்னைத் திரும்பிப் பார்த்த புவனாவைக் கவனித்தான் சிவாஜி. சிறகடிக்கும் பறவையைப் போல அவளுடைய உடல் விதிர்விதிர்த்தது. மருண்டு நின்ற அவளுடைய விழிகள் சுழலுவதே பார்க்கத் தனி அழகாக இருந்தது. நேர்ப் பார்வையாக அவனைச் சந்தித்த அந்த முகத்தில் ஒரு பருவப் பெண்ணின் நாணத்தின் சாயல் தெரிவதற்கே அவளுக்கு இன்னும் வயதாகவில்லை. இன்னும் கனியாத அந்த உணர்ச்சியில், விடிவெள்ளியின் கீற்றுப் போல ஒரு தனிக் கவர்ச்சி இருந்தது. சுலக்ஷணா ஓடி வந்து நின்றாள். “உன்னை கலெக்டர் துரை அழைத்து வரச் சொன்னார் புவனா. உன்னிடம் பேச அரசர் விரும்புகிறாராம்?” என்று கூறியவாறு அவளுடைய கையைப் பற்றி இழுத்தாள். முற்றிலும் இணங்காமல், தாய் தன்னைத் தள்ளிவிட, அரை மனத்துடன் அவளைத் தொடர்ந்து சென்றாள் புவனா. புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|