13. பொன்மகள் பிறந்தநாள் விழா

     மையறு மலரின் நீங்கி
          யான் செய் மாதவத்தின் வந்து
     செய்யவள் இருந்தாள் என்று
          செழுமணிக் கொடிகள் என்னும்
     கைகளை நீட்டி அந்தக்
          கடிநகர் கமலச் செங்கண்
     ஐயனை ‘ஒல்லைவா’ என்று
          அழைப்பது போன்று அம்மா!

               - கம்பன் கவிமலர்

     “நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?” என்று ஆரம்பித்தார் மன்னர் சரபோஜி. சுலக்‌ஷணாவுக்கு கதை கேட்பது மிகவும் பிடிக்கும். அதுவும் தந்தை சொல்லக் கேட்பது இன்னும் நன்றாகப் பிடிக்கும். ஆயினும் இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் கதை சொல்லத் தொடங்கிய காரணம் புரியவில்லை.

     சுலக்‌ஷணா, “அப்பா! நான் ஒன்று கேட்க, நீங்கள் பாட்டுக்கு...” என்று குறிப்பிட்டாள். “குழந்தாய்! நான் சொல்வதைக் கேள். அப்புறம் உனக்கு அதில் பதிலும் கிடைக்கும்!” என்றார் சரபோஜி, ஓர் அடக்கமான புன்னகையுடன்.

     “நல்ல புதிர் போங்கள்!” என்று கதையைக் கேட்கத் தயாரானாள் சுலக்‌ஷணா.

     “துக்காராம் சுவாமிகளைப் பற்றி உனக்குத் தெரியும் அல்லவா?”


நளபாகம்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

வானம் வசப்படும்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

சுந்தர் பிச்சை
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

கள்ளம்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

Shades of Truth: A Journey Derailed
Stock Available
ரூ.535.00
Buy

மாநில சுயாட்சி
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

பகத் சிங்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

நூல் பதிப்பித்தல்
இருப்பு உள்ளது
ரூ.5000.00
Buy

நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

ரத்தம் ஒரே நிறம்
இருப்பு இல்லை
ரூ.315.00
Buy

ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

அதிர்ந்த இந்தியா
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

ஆயிரம் வண்ணங்கள்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

பேசும் பொம்மைகள்
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

மனசு போல வாழ்க்கை 2.0
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

தண்ணீர்
இருப்பு உள்ளது
ரூ.81.00
Buy

காகித மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.280.00
Buy

தீட்டும் புனிதமும்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

45 நொடி பிரசன்டேஷன்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy
     “என்ன அப்பா இப்படிக் கேட்கிறீர்கள்? அவருடைய கீர்த்தனைகளை நான் அம்மாவிடம் கற்றுக் கொண்டிருக்கிறேனே? பாண்டுரங்கனைப் பற்றிய எவ்வளவு அழகான, அற்புதமான பாடல்கள் அவை? அதே போல தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளையும் கேட்க வேண்டும் என்று தானே நான் ஆசைப்பட்டேன்?”

     “இருக்கட்டும் சுலக்‌ஷணா? இந்தக் கதையைக் கேள்! துக்காராம் சிறந்த பக்தர். ஆனால், விட்டலனிடமே ஈடுபட்டிருந்த அவருடைய மனம் குடும்பத்தின் சாதாரண தேவைகளைக் கூடக் கவனிக்கத் தவறிவிட்டன. அதனால் அவருடைய மனைவி அயோலியும் குழந்தைகள் இருவரும் சாப்பிட உணவு இல்லாமல், கட்டத் துணி கூட இன்றி சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் மகாராஜா சத்ரபதி சிவாஜி துக்காராமின் பக்திப் பாடல்களைக் கேட்டார். அவரைப் பார்க்கவும், அவற்றை அவரே பாடிக் கேட்கவும் ஆசைப்பட்டார். அதற்காக நான்கு குதிரை வீரர்களை தெஹு கிராமத்திற்கு அனுப்பி வைத்தார்!”

     “வேடிக்கையாக இருக்கிறதே? நம்மைப் போலவே சத்ரபதிக்கும் ஓர் ஆசையா?” என்று சிரித்தாள் சுலக்‌ஷணா.

     “மேலே கேள்! அன்று காலை அயோலி தனது குடிசையின் வாசலில் எருமுட்டை தயாரிக்க சாணியை மிதித்துக் கொண்டிருந்தாள். துக்காராம் கடைத் தெருவுக்குப் போயிருந்தார். மகன் மகாதேவன் விளையாடப் போய் விட்டான் குதிரை வீரன் வரும் சத்தம் கேட்டது. அந்த நாளில் குதிரை வீரர்கள் அப்படி வருவதும், மக்கள் அவர்களைக் கண்டு பயப்படுவதும் சகஜம். அதனால் காசி ஓடி வந்து தாயைக் கட்டிக் கொண்டான். வறுமையினால் வாடி இருந்த அயோலி பொறுமை இழுந்து, அவனைப் பிடித்துத் தள்ள சாணியை எடுத்திருந்த கையை ஓங்கினாள். அந்தக் குதிரை வீரன் அவள் அருகே வந்து நின்றான். சாணி ஏந்திய கையை உயர்த்திய அந்தப் பெண்மணியைக் கண்டு திகைத்துப் போனான்...”

     சுலக்‌ஷணா கையைக் கொட்டிக் கலகலவென்று சிரித்தாள். “அப்புறம்?” என்று மடிமேல் ஊன்றி, கையைக் கன்னத்தில் வைத்துக் கொண்டு சுவாரசியத்துடன் கேட்டாள்.

     “குதிரை வீரன் என்ன செய்து விடுவானோ என்ற பயம் குழந்தை காசிக்கு வந்து விட்டது. முன்னாலே ஓடி வந்து கீழே தரையில் மண்டியிட்டு, ‘ஐயா! அம்மா தெரியாமல் செய்து விட்டாள். தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். எங்களைத் துன்புறுத்தாதீர்கள்!’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். மகன் மகாதேவன் இதையெல்லாம் பார்த்து விட்டு தந்தையை அழைத்து வரக் கடைக்கு ஓடினான். குதிரை வீரன் கீழே இறங்கி புன்னகையுடன், ‘அம்மணி! எனது வணக்கங்கள். என்னையும் இன்னும் மூன்று குதிரை வீரர்களையும் சத்ரபதி சிவாஜி அவர்கள் அனுப்பி இருக்கிறார்கள். துக்காராம் சுவாமிக்கு அளித்து வர பரிசுப் பொருட்களையும் அனுப்பி உள்ளார்கள்!’ என்றான். அவன் அப்படிச் சொல்லும் போதே மற்ற மூவரும் பரிசுப் பொருட்களை மூட்டையாக இறக்கிப் பிரித்து வைத்தார்கள். பட்டுப் புடவைகள் நகைகள், தங்கக் காசுகள் எல்லாம் அவற்றில் நிறைய இருந்தன. குழந்தை காசிக்கு ஒரே மகிழ்ச்சி. பட்டுத் துணியை எடுத்து மேலே வைத்துக் கொண்டான். நகையைப் போட்டு அழகு பார்த்துக் கொண்டான்.

     “சிவாஜி மகாராஜா ரொம்ப நல்லவர் அப்பா! எவ்வளவு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார்!” என்று ஆச்சரியத்துடன் கண்கள் விரியச் சொன்னாள் சுலக்‌ஷணா.

     “மேலே கேள் குழந்தாய்! தாய் அயோலியும் கைகளைக் கழுவிவிட்டு ஒரு பட்டுப் புடவையை எடுத்து உடுத்திக் கொண்டாள். இவற்றையெல்லாம் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு பார்த்திருந்த சிவாஜி மகாராஜா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அப்போது மகன் பின் தொடர துக்காராம் சுவாமி அங்கே வந்துவிட்டார். அங்கே கண்ட காட்சியைப் பார்த்து அவருடைய முகம் வாடிற்று. அயோலி வீட்டுக் கதவை ஒட்டி மறைந்து நின்று கொண்டாள். ‘அயோலி! இதெல்லாம் என்ன? நமக்கு எதற்கு இந்த ஆடம்பரப் பரிசுகள் எல்லாம்? பாண்டுரங்க விட்டலனின் அருள் இருந்தால் நமக்குப் போதாதா?’ என்று சத்தம் போட்டார். மனைவியும் குழந்தைகளும் பிரமித்துப் போய் நின்று விட்டார்கள்...”

     “சிவாஜி மகாராஜா குறுக்கிடவில்லையா அப்பா?”

     “அவர் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தார். துக்காராம் எல்லாவற்றையும் திரும்பக் கொண்டு வந்து போட்டு மூட்டைகளைக் கட்டினார். குதிரை வீரர்களிடம், ‘ஐயா! இவற்றை யார் அனுப்பி வைத்தார்களோ எனக்குத் தெரியாது. இவற்றை நான் கேட்கவில்லை. இவற்றுக்காக ஆசைப்படவும் இல்லை. தயவு செய்து இவற்றை எடுத்துக் கொண்டு போய் விடுங்கள். எனக்கு பக்தி தான் முக்கியம். அது இருந்தால் போதும். இவை தேவை இல்லை!’ என்று சொன்னார்.”

     “ஐயையோ! பாவம் அப்பா அந்தக் குழந்தைகள்...”

     “அப்படி சொல்லாதேயம்மா! பாவம் அந்த சத்ரபதி சிவாஜி மறைவிடத்திலிருந்து ஓடி வந்தார். துக்காராம் சுவாமிகளின் காலில் விழுந்தார். ‘சுவாமி! தாங்கள் மிகப் பெரியவர். இந்தச் சிறியவன் ஆசைப்பட்டுக் கொடுத்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும். தங்களை அழைத்துச் செல்ல பல்லக்குக் கொண்டு வந்திருக்கிறேன். அதில் என்னுடைய அரச சபைக்கு வந்து என்னைக் கௌரவிக்க வேண்டும்!’ என்று சிவாஜி கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்...”

     “துக்காராம் சுவாமி என்ன சொன்னார்?”

     “மகாராஜா! என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் மிக உயர்ந்த பண்புகள் கொண்டவர். தங்களிடம் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், தயவு செய்து பரிசுகளையும் பணத்தையும் கொடுத்து என்னைப் பக்தி மார்க்கத்திலிருந்து வெளியே இழுக்காதீர்கள். பாண்டுரங்கனின் ஆலத்தைத் தவிர, வேறு எதையும் சென்று பார்க்கவோ - அங்கே பாடவோ நான் விரும்பவில்லை. என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள். என்னுடைய பக்தியும் சேவையும் விட்டலனுக்கு மட்டுமே உரியவை!’ என்று என்று பதில் சொல்லி விட்டார் துக்காராம்.

     ‘ஒரு முறையேனும் என்னுடன் வந்து என்னைக் கௌரவிக்க வேண்டும். என்னுடைய மகள் தங்களைப் பார்க்க விரும்புகிறாள் சுவாமி! அவளுக்காகவாவது வரவேண்டும்’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார் சிவாஜி.”

     “அவருக்கு, தங்களுக்கு நான் இருப்பதைப் போல ஒரு மகள் இருந்தாளா அப்பா?”

     “ஆமாம் மகளே! ஆனால் அப்படிக் கேட்டும் துக்காராம் ஒப்புக் கொள்ளவில்லை. ‘மகாராஜா! இதற்காக என்னை அரண்மனைக்கு அழைக்காதீர்கள். நான் பண்டரிநாதனின் ஆலயத்தில் மனம் உருகிக் கீர்த்தனைகளைப் பாடுகிறேன். அவற்றை நான் பாடவில்லை. இறைவனே இதயத்தின் நாதனாக என்னுள்ளே இருந்து இயக்குகிறான். தங்களுடைய மகள் ஆசைப்பட்டாள் மற்ற பக்தர்களுடன் அந்த பஜனையில் கலந்து கொள்ளலாமே? ஆண்டவனின் சந்நிதியில் அனைவரும் சமம் அல்லவா?’ என்று பதில் சொல்லிவிட்டார். சிவாஜியும் மற்ற வீரர்களும் திரும்ப வேண்டியதாயிற்று. பரிசுப் பொருட்களும் திரும்ப வந்துவிட்டன...”

     “கதை முடிந்து விட்டதா அப்பா?”

     “ஆமாம் மகளே! கதை முடிந்து விட்டது. உனக்காக நான் எடுத்த முயற்சியும் அப்படித்தான் முடிந்துவிட்டது!” என்றார் சரபோஜி சற்றே கலங்கிய குரலில்.

     “என்னப்பா சொல்லுகிறீர்கள்? கதை சொல்கிறீர்கள் என்று பார்த்தால் வேறு எதையோ சொல்லி என்னை ஏமாற்றுகிறீர்களே?” என்றாள் சுலக்‌ஷணா.

     “நான் ஏமாற்றவில்லை, மகளே! உன்னைப் போல நானும் எதிர்பார்த்து ஏமாந்து போனேன். அவ்வளவுதான்! சத்ரபதி சிவாஜி எவ்வளவு பெரியவர்? அவருக்கே கிடைக்காதது எனக்கு மட்டும் கிடைத்துவிடுமா அம்மா? துக்காராம் இந்திராயணி நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டு பாண்டுரங்கனைப் பற்றி பாடினால் போதும் என்று நினைத்துப் பொருளை உதறிவிட்டார் அல்லவா? அதே போல காவேரிக் கரையில் அமர்ந்து கொண்டு ராமச்சந்திர மூர்த்தியைப் பற்றிப் பாடினாலே போதும் என்று நினைத்து, தியாகராஜ சுவாமிகளும் நான் அனுப்பிய பரிசுப் பொருட்களைத் திருப்பி அனுப்பி விட்டார். சிவாஜி மகாராஜாவே வந்து அழைத்த போதும் துக்காராம் அரண்மனைக்கு வரவில்லை. நான் பிரதிநிதிகளை அனுப்பிக் கூப்பிட்டால் தியாகராஜர் வருவாரா? அவர் வரமுடியாது என்று சொல்லி விட்டார் அம்மா!” என்றார் சரபோஜி.

     “என்னப்பா இது? நான் அவரைப் பார்க்க முடியாதா? அவர் பாடிக் கேட்கவே முடியாதா?” என்று லேசான விசிப்புடன் தந்தையின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் சுலக்‌ஷணா.

     “அப்படி இல்லை மகளே! உனக்கு அந்தப் பெரியவர் தனது ஆசிகளை அனுப்பி இருக்கிறார். துக்காராம் சொன்னதைப் போல, நீயும் திருவையாற்றுக்குப் போய் பஞ்சநதீசுவரர் சந்நிதியில் அவர் பாடுவதைக் கேட்கலாம் என்று சொல்லி இருக்கிறார். அரண்மனைக்குத்தான் வர மறுத்து விட்டார். பொன்னையும் அணிகலன்களையும் பட்டுத் துணியையும் ஏறெடுத்தும் பார்க்க மறுத்து விட்டார். ‘நிதி சால சுகமா? ராமுடு சந்நிதி சேவா சுகமா?’ என்று சொல்லி மறுத்து விட்டார். எனக்கு அவர் மீது கோபம் இல்லை மகளே! உன்னைத் திருப்தி செய்ய முடியவில்லையே என்று ஓர் ஏக்கம்தான்!” என்று கூறிப் பெருமூச்சு விட்டார் சரபோஜி மன்னர்.

     “பரவாயில்லை அப்பா! அண்ணனுடன் நானே, நீங்கள் ஊரில் இல்லாத போது போய் அவரை ஆலயத்தில் தரிசித்து விட்டு வந்து விடுகிறேன். இதற்காக நீங்கள் வருத்தப் படாதீர்கள்!” என்று விசும்பினாள் சுலக்‌ஷணா.

     இவற்றையெல்லாம் மனக்கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அகல்யாபாய். ஒருபுறம் மகளின் வேதனை அவள் மனத்தை உறுத்த, மற்றொருபுறம் தாங்கள் காசி யாத்திரை போயிருக்கும் வேளையில் சுலக்‌ஷணா தனது அண்ணனுடன் வெளியூர் செல்வதை அவள் மனம் ஒப்புக் கொள்ள மறுத்தது. ஏதோ சொல்ல வந்தவள் மன்னர் கையை உயர்த்தி அடக்கியதும் வாயை திறவாமல் ஒதுங்கி விட்டாள். மகளின் தலையை மெல்ல வருடிக் கொடுத்து சமாதானம் செய்தபடி பிறந்த நாள் விழாவைப் பற்றிப் பேசத் தொடங்கினார் மன்னர் சரபோஜி.

     காலை நேரத்திலேயே காசியில் உள்ள திருப்பனந்தாள் மடத்திலிருந்து வந்து சேர்ந்த கங்கா தீர்த்தமும், கங்கோத்ரியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித கங்கை நீரும் கொண்டு, சுலக்‌ஷணாவுக்கு நீராடுதல் செய்விக்கப்பட்டது. கும்பகோணம் மடத்திலிருந்து *சந்திரசேகரேந்திர சரசுவதி சங்கராச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன் அனுப்பி இருந்த பிரசாதங்கள் தரப்பட்டு நெற்றியில் குங்குமமும் இடப்பட்டது. அரண்மனையில் சுமங்கலிகளாக வாழ்ந்து வந்த அரசியர்களின் பெயர்களைக் கூறி ஆசி வழங்கினார் ‘நலவித்யா கலாநிதி சாலா’விலிருந்து வந்திருந்த பண்டிதர்.

     (* ஐந்தாம் சந்திரசேகரேந்திர சரசுவதி (1814-1851) ‘சங்கர குருபரம்பரை’ - ஆத்ரேய கிருஷ்ண சாஸ்திரி.)

     வசந்த மஹாலுக்கு சுலக்‌ஷணாவை அழைத்து வந்தார்கள். அவளை மன்னர் உடன் அழைத்து வந்தது இளைய ராணி அகல்யாவிற்கும், சுலக்‌ஷணாவிற்கும் மிகுந்த பெருமையாக இருந்தது. அங்கே வரகரிசி மாலையும், நெட்டிப் பூமாலையும், மணிமாலையும் கொண்டு அலங்காரம் செய்யப் பட்டிருந்தது. முத்துக்கள் பதித்த தாம்பாளம் ஒன்றில் பழங்கள் கொண்டு வந்து, கோட்டைக்கு வெளியே இருந்த மசூதியிலிருந்து வந்த பக்கீர் ஆசி வழங்கினார்.

     சுலக்‌ஷணாவுக்குக் கல்வி கற்றுத் தரும் அரசாங்க ஆசிரியர் பாளம்பட்டு பட்கோ சுவாமிக்கு வணக்கம் சொல்லி குருதட்சணையும் வழங்கினாள் சுலக்‌ஷணா. அவர் அன்று அவளுக்குப் புதிதாக ஒரு பாடப் பகுதியையும் கற்றுக் கொடுத்தார். பிளாக்பர்ன் துரை அரசகுமாரிக்கு சிறப்புப் பரிசு ஒன்று அனுப்பி இருந்தார். அது நகைகள் வைக்கக் கூடிய தந்தப் பேழை. அதற்குள்ளே வாசனையைப் பரப்பும் பிரஞ்சு ‘சென்ட்’ பாட்டில் ஒன்றும் இருந்தது.

     துரையிடமிருந்து பரிசைக் கொண்டு வந்து கொடுத்த உதவியாளர், “இன்று மாலை அரசிளங்குமரியைப் பார்க்க, மலையாளத்திலிருந்து வந்துள்ள கலெக்டர் மக்லோட் துரை வர விரும்புகிறார். அத்துடன் திருவாங்கூரிலிருந்து அவர் அழைத்து வந்துள்ளவர்களையும், அரசரிடம் அழைத்து வந்து வணக்கம் கூற வைக்க விரும்புகிறார்!” என்று சொன்னார்.

     “இன்று மாலை வந்து பார்க்கலாம் என்று சொல்லுங்கள். அரண்மனையை ஒட்டிய பூங்காவில் ஒரு தேநீர் விருந்தும் கொடுப்பதாக இருக்கிறேன். அதில் ஊரில் உள்ள கனவான்கள், நிலப்பிரபுக்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். சுலக்‌ஷணாவும் இளவரசரும் அங்கே வருவார்கள். கலெக்டர் மக்லோட் துரை அங்கே வந்து சந்திக்கலாம்!” என்று கூறி அனுப்பினார் மன்னர்.

     தேநீர் விருந்தை ஒட்டி, அரண்மனைக்கு வரும் சாலை நெடுகிலும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. வண்ணச் செடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. நாதசுர இசை ஒலித்தது. மக்கள் சாலையின் இருபுறமும் நின்று, சாரட்டில் மன்னரும் அரசகுமாரியும் வருவதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

     அவர்களுடைய எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. மன்னரும் இளவரசரும் மட்டுமின்றி, சுலக்‌ஷணாதேவியும், இளையராணி அகல்யாபாயும் கூடவே ஊர்வலமாகவே சாரட்டில் வந்தார்கள். அரண்மனைப் பூங்காவிற்கு வந்து இறங்கினார்கள்.

     அவர்கள் வந்து இறங்கியதும், அங்கே இருந்த பிரமுகர்களுடன் கலந்து பழகிப் பேச ஆரம்பித்தார் சரபோஜி. உயர்குல மகளிர் இளையராணிக்கு வணக்கம் தெரிவித்தார்கள். அப்போது அவர்களை நோக்கி மலையாளக் கலெக்டர் மக்லோட் துரையும் வருவது தெரிந்தது. மன்னர் அவரை நோக்கிக் கைகுவித்து வரவேற்றார். பதிலுக்கு வணக்கம் சொல்லியபடி கைகுலுக்க முன்வந்த கலெக்டர் தனியே வரவில்லை. உடன் வந்த இருவரும் புன்னகையே அழகு செய்ய, நடையே நளினத்தைக் காட்ட, உடையே வனப்பைக் காட்டும் கவிதையாக மிளிர, அருகே வந்து கரம் குவித்தார்கள்!

     “மகாராஜா! இந்தப் பெண்மணி திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற நடனமாது சித்ரசேனா. தங்கள் குமாரர் அங்கே வந்த போது இவரது நடனத்தைக் கண்டு களித்திருக்கிறார். உடன் இருப்பது அவளுடைய புதல்வி புவனமோகினி” என்று அறிமுகம் செய்து வைத்தார் மக்லோட். அவர்களைப் பார்த்ததும், இளவரசர் சிவாஜியின் முகம் சட்டென்று மலர்ந்தது. இளையராணி அகல்யாதேவியின் முகமோ சட்டென்று சுருங்கிற்று!


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - PDF
     கள்வனின் காதலி - PDF
     சிவகாமியின் சபதம் - PDF
     தியாக பூமி - PDF
     பார்த்திபன் கனவு - PDF
     பொய்மான் கரடு - PDF
     பொன்னியின் செல்வன் - PDF
     சோலைமலை இளவரசி - PDF
     மோகினித் தீவு - PDF
     மகுடபதி - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - PDF
     கபாடபுரம் - PDF
     குறிஞ்சி மலர் - PDF
     நெஞ்சக்கனல் - PDF
     நெற்றிக் கண் - PDF
     பாண்டிமாதேவி - PDF
     பிறந்த மண் - PDF
     பொன் விலங்கு - PDF
     ராணி மங்கம்மாள் - PDF
     சமுதாய வீதி - PDF
     சத்திய வெள்ளம் - PDF
     சாயங்கால மேகங்கள் - PDF
     துளசி மாடம் - PDF
     வஞ்சிமா நகரம் - PDF
     வெற்றி முழக்கம் - PDF
     அநுக்கிரகா - PDF
     மணிபல்லவம் - PDF
     நிசப்த சங்கீதம் - PDF
     நித்திலவல்லி - PDF
     பட்டுப்பூச்சி
     கற்சுவர்கள் - PDF
     சுலபா - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - PDF
     அனிச்ச மலர் - PDF
     மூலக் கனல் - PDF
     பொய்ம் முகங்கள் - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - PDF
     வேருக்கு நீர் - PDF
     கூட்டுக் குஞ்சுகள்
     சேற்றில் மனிதர்கள் - PDF
     புதிய சிறகுகள்
     பெண் குரல் - PDF
     உத்தர காண்டம் - PDF
     அலைவாய்க் கரையில்
     மாறி மாறிப் பின்னும்
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF
     கோடுகளும் கோலங்களும் - PDF
     மாணிக்கக் கங்கை
     குறிஞ்சித் தேன் - PDF
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - PDF
     வாடா மல்லி - PDF
     வளர்ப்பு மகள் - PDF
     வேரில் பழுத்த பலா - PDF
     சாமியாடிகள்
     மூட்டம் - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108)
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - PDF
     வெள்ளை மாளிகையில்
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார்
     குயில் பாட்டு
     கண்ணன் பாட்டு
     தேசிய கீதங்கள்
பாரதிதாசன்
     இருண்ட வீடு
     இளைஞர் இலக்கியம்
     அழகின் சிரிப்பு
     தமிழியக்கம்
     எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார்
     அகல் விளக்கு
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - PDF
     பனித்துளி
     பூவும் பிஞ்சும் - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - PDF
     வாஷிங்டனில் திருமணம் - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல்
கௌரிராஜன்
     அரசு கட்டில் - PDF
     மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை
     பதிற்றுப் பத்து
     பரிபாடல்
     கலித்தொகை
     அகநானூறு
     ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை
     பொருநர் ஆற்றுப்படை
     சிறுபாண் ஆற்றுப்படை
     பெரும்பாண் ஆற்றுப்படை
     முல்லைப்பாட்டு
     மதுரைக் காஞ்சி
     நெடுநல்வாடை
     குறிஞ்சிப் பாட்டு
     பட்டினப்பாலை
     மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்)
     திணைமொழி ஐம்பது (உரையுடன்)
     கைந்நிலை (உரையுடன்)
     திருக்குறள் (உரையுடன்)
     நாலடியார் (உரையுடன்)
     நான்மணிக்கடிகை (உரையுடன்)
     ஆசாரக்கோவை (உரையுடன்)
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
     பழமொழி நானூறு (உரையுடன்)
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்)
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்)
     ஏலாதி (உரையுடன்)
     திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம்
     மணிமேகலை
     வளையாபதி
     குண்டலகேசி
     சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம்
     நாககுமார காவியம்
     யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை
     திருவிசைப்பா
     திருமந்திரம்
     திருவாசகம்
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார்
     திருவுந்தியார்
     உண்மை விளக்கம்
     திருவருட்பயன்
     வினா வெண்பா
கம்பர்
     கம்பராமாயணம்
     ஏரெழுபது
     சடகோபர் அந்தாதி
     சரஸ்வதி அந்தாதி
     சிலையெழுபது
     திருக்கை வழக்கம்
ஔவையார்
     ஆத்திசூடி
     கொன்றை வேந்தன்
     மூதுரை
     நல்வழி
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம்
     கந்தர் கலிவெண்பா
     சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம்
     திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி
     திருக்குற்றால மாலை
     திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி
     கந்தர் அலங்காரம்
     கந்தர் அனுபூதி
     சண்முக கவசம்
     திருப்புகழ்
     பகை கடிதல்
நீதி நூல்கள்
     நன்னெறி
     உலக நீதி
     வெற்றி வேற்கை
     அறநெறிச்சாரம்
     இரங்கேச வெண்பா
     சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள்
     மருத வரை உலா
     மூவருலா
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - PDF
     நெஞ்சு விடு தூது - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை
     சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம்
     மதுரைக் கலம்பகம்
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை
     திருவெம்பாவை
     திருப்பள்ளியெழுச்சி
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு
     முத்தொள்ளாயிரம்
     காவடிச் சிந்து
     நளவெண்பா
ஆன்மீகம்
     தினசரி தியானம்