Chennai Library - சென்னை நூலகம் - Works of S.Lakshmi Subramanian - Bhuvana Mohini
http://www.chennailibrary.com
இணைய தமிழ் நூலகம்
பதினொரு ஆண்டு சேவையில்
25.09.2006 - 25.09.2017

twitter facebook
9176888688 
admin@chennailibrary.com +91-9176888688
சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 491  
புதிய உறுப்பினர்:
M.Lakshmanan
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
செய்திகள்
காவிரி தீர்ப்பு: தமிழகத்துக்கு ஏமாற்றம்
6வது போட்டி: கோலி சதம்-இந்தியா வெற்றி
மணிசங்கர் ஐயர் மீது தேசத் துரோக வழக்கு
டி.என்.சேஷனுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
மெக்சிகோவில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்
சினிமா செய்திகள்
காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது:கமல்
மணிரத்னம் படத்தில் அப்பாணி சரத்
ஏப்ரல் 13-ல் வெளியாகிறது மெர்க்குரி
ஜிப்ஸி படத்திற்கு பூஜை போட்ட ஜீவா
தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
எமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக!

அன்புடையீர்! நீங்கள் எழுதியுள்ள தமிழ் நூல்களை எமது சென்னைநூலகம்.காம் தளத்தில் மின்னூல் வடிவிலும் (யூனிகோட் மற்றும் பிடிஎப்), எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் மூலம் நூல் வடிவிலும் வெளியிட விரும்பினால் உடனடியாக எம்மை தொடர்பு கொள்ளவும். (பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: admin@chennailibrary.com)

புதிய வெளியீடு6. தியாகராஜ தரிசனம்

     ஸ்ரீஹரி! உன்னைத் தவிர வேறு எங்கும் என் மனம் நிலை பெறாது.
     உன் பேரழகைக் காணும் தோறும் என் கண்கள் நிறைகின்றன!
     உன் காவியத்தைக் கேட்டு என் செவிகள் நிறைகின்றன.
     குறைவற்ற செல்வமே! உன் திருப்பெயரைச் சொல்லும்
     போதெல்லாம் என்னுடைய நாவு விளக்கம் பெறுகிறது!
     எங்கு பார்த்தாலும் என் கண்களில் உனது உருவமே
     நிறைகிறது. சூரியகுல திலகமே! நான் உன் பக்தன்
     என்று பெயர் பெற்றவன் அல்லவா?
     உன் கபடமான சொற்களும் கூட எனக்கு இதம்
     தருகின்றன. நான் செய்த தவத்தின் பயனல்லவா நீ!
     தியாகராஜனால் வணங்கப்படுபவனே! உன்னைத் தவிர
     வேறு எதைப் பற்றினாலும் என் மனத்துக்கு நிம்மதி கிடைக்காது!

               ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ‘நினுவினா நாமெதெந்து’ என்ற கீர்த்தனையின் தமிழ் வடிவம்.

     நகரம் மெதுவாக உறங்க ஆரம்பித்துவிட்ட நேரம் அது. கோவிலில் கூடிய விழாக்கால கூட்டம் கலைந்து வீடு திரும்பி விட்டது. பால்நிலவு தெருக்களுக்கு வெள்ளி பூசி இருந்தது. பெரிய கலங்களில் எண்ணெய் வார்த்து ஏற்றிய தீபங்கள் கம்பங்களில் ஆங்காங்கே மினுக்கின. இரவுகால அங்காடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் திறந்திருந்தன.

     மன்னர் சரபோஜி தனது மகன் சிவாஜியை நிலாமுற்றத்துக்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கிருந்து நகரத்தைப் பார்த்தபடியே ஒரு கணம் பேசாமல் நின்றார். இரவு ஜாம பூஜை மணி அடித்தது. கண்களை மூடிக் கரம் குவித்து நின்றார். பிறகு சிவாஜியின் அருகில் வந்து, “குழந்தாய்! என்னவோ கேட்டாயே? அதை மீண்டும் சொல் பார்க்கலாம்!” என்றார்.

     “தந்தையே! நாளை விடியற்காலையில் இருள் பிரியுமுன்னர், நான் திருமஞ்சன வீதிக்கு மாறுவேடத்தில் போய், தியாகராஜ சுவாமிகளை ஒரு முறை தரிசித்துவிட்டுத் திரும்ப விரும்புகிறேன். அதற்கு தங்கள் அனுமதியை நாடினேன். அவ்வளவுதான்!” என்று வினயத்துடன் சொன்னான் சிவாஜி.

     “மகனே! நீ சொல்லுவதன் முழுப் பொருளையும் உணர்ந்து கொண்டு தான் பேசுகிறாயா? இங்கே நீ யாருடன் எதற்காக வந்திருக்கிறாய் என்பதைப் புரிந்து கொண்ட பின் தான் இப்படிச் சொல்கிறாயா?” என்று சற்று அழுத்தமாகவே கேட்டார் மன்னர்.

     “தெரியும் தந்தையே! தாங்கள் இங்கே வந்திருப்பது ஒரு கலைவிழாவில் கலந்து கொள்ளத்தான். கலைக்கு மதிப்புக் கொடுக்கும் மன்னர்களில் தங்களுக்கு நிகர் இல்லை. தங்களுடன் இளவரசனாக இங்கே வந்த என்னையும் தங்களுடைய ஆர்வம் பற்றிக் கொண்டிருக்கிறது. வரும் வழியில் தியாகராஜ சுவாமிகளைப் பற்றி தாங்கள் தாம் சொல்லிக் கொண்டு வந்தீர்கள். அப்போதே நான் இதைத் தீர்மானித்து விட்டேன். ஆனால் அதற்கு முன்பே சுவாமிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...”

     “எங்கே? எப்போது?”

     “திருவாங்கூர் மகாராஜா சுவாதித் திருநாள், தியாகராஜரிடம் பேரன்பு கொண்டவர். தங்களைப் போலவே கலையார்வம் மிகுந்தவர். அவரே கீர்த்தனைகளை இயற்றிப் பாட வல்லவர். அவருக்கு தியாகராஜ சுவாமிகளின் கிருதிகள் என்றால் மிகவும் பிடிக்கும். சுவாமிகளைத் தனது ஆஸ்தான வித்துவானாக வைத்துக் கொண்டு மரியாதை செய்ய விரும்பினார். அதற்குத் தனது ஆஸ்தான வித்துவானாகிய வடிவேல் என்பவரைத் திருவையாற்றுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், சுவாமிகள் அந்தக் கலைஞனை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். மன்னரின் மரியாதையை ஏற்க இயலாது என்று பதில் சொல்லியும் அனுப்பி விட்டார்.

     “இதை உனக்குச் சொன்னவர் யார் சிவாஜி?”

     “தியாகராஜ சுவாமிகளை சமீபத்தில் அவரது இல்லத்தில் தரிசித்துத் திரும்பிய, திருவாங்கூர் அரண்மனை வித்துவான் கோவிந்தமாரார் என்பவர் தாம் சொன்னார். சுவாமிகளிடம் தனது இசைத் திறமையைக் காட்ட, நுட்ப மிகுந்த ‘சத்கலாபல்லவி’யைப் பாடிக் காட்டினாராம்...”

     “சுவாமி என்ன செய்தாராம்?”

     “கண் மூடிக் கேட்டிருந்துவிட்டுக் கைகள் இரண்டையும் கூப்பி வணங்கி, ராக ஸ்ரீராகத்தில் ‘எந்தரோ மகானு பாவுலு’ என்ற கீர்த்தனையைப் பாடினாராம். அதைச் சொல்லும் போது மாராரின் கண்களும் கலங்கின; கண்டமும் கலங்கிற்று. ‘தியாகராஜர் என்ற பெயரே ‘உலக இச்சை எல்லாம் விட்டு விட்டவர்’ என்ற பொருள்படும். பகவானில் உட்கலந்து வாழ்கிறார் அவர். முப்பத்தெட்டு வயது நிறைவதற்குள் ஸ்ரீராம சடாட்சரி மந்திரத்தைத் தொண்ணூற்று ஆறு கோடி தடவை உச்சரித்தவர். மனம் நிறைந்த அந்தக் கணத்தில் இராமலட்சுமணர்களைக் கண்ணால் கண்டு ‘ஏலநிதய ராது’ என்று பாடியவர். அப்படிப் பட்ட பெரியவர் என்னை மதித்து வணங்கினார். என்ன பேறு செய்துவிட்டேன் நான்!’ என்று சொல்லிச் சொல்லி உருகிப் போய்விட்டார்!”

     சரபோஜி மன்னருக்கு அதைக் கேட்க மெய்சிலிர்த்தது.

     “மெய்தான் குழந்தாய்! அந்த மகானைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கும் இருக்கிறது. அதற்காக நாம் அவரை மரியாதை தந்து அழைக்கலாமே தவிர, அவருடைய இல்லத்துக்குப் போக முடியுமா? வழியில் உன் தாய் சொல்லிக் கொண்டு வந்ததைக் கேட்டாய் அல்லவா? நீ வருங்காலத்தில் தஞ்சைத் தரணியை ஆளப்போகும் மன்னன். நீ ஒரு குடிமகனின் வீட்டுக்கு மறைந்து ஒளிந்து செல்வது நியாயம் ஆகுமா? விஷயம் வெளியே தெரிந்தால் உன்னுடைய மதிப்பும் மரியாதையும் என்ன ஆவது?”

     “இதில் தவறு என்ன தந்தையே? நான் கேரளத்துக்குப் போன போது இரவு வேளைகளில் கலாமண்டபத்தில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளைப் பார்க்கப் போயிருக்கிறேன். குருவாயூரப்பன் சந்நிதியில் புண்ணிய கதைகளைச் சொல்லிப் பாடும் போது அதைக் கேட்டு மெய்ம்மறக்க நானும் சென்றிருக்கிறேன். அரண்மனையில் பாராட்டுப் பெற்ற சித்ரசேனாவின் மோகினி ஆட்டத்தைக் கோவிலில் கண்டு களித்திருக்கிறேன்.”

     “உண்மைதான் சிவாஜி. ஆனால், அவை நடந்தது இன்னொரு சமஸ்தானத்தில் என்பதையும் மறந்துவிடாதே. அதுமட்டுமல்ல! அந்தக் கலை நிகழ்ச்சிகளுக்கும், கோவில்களுக்கும், நீ தஞ்சையிலிருந்து வந்த இளவரசன் என்ற முறையில் தகுந்த மரியாதைகளுடன், உரிய பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறாய்! ஆனால் இங்கேயோ, நீ மாறுவேடத்தில் ஒரு தெலுங்குப் பிராமணச் சிறுவனைப் போல ஆடையணிந்து, மறைந்திருந்து சுவாமிகளைத் தரிசிக்க விரும்புகிறாய். அவருக்கு நீ வருவது தெரியுமா? அவர் உன்னை அழைத்தாரா? நீதான் அவரிடம் சொல்லி அனுமதி பெற்றுப் போகிறாயா? எந்த விதத்தில் இது நியாயம்? சற்று யோசித்துப் பார்!”

     சிவாஜி பதில் சொல்லவில்லை. ஒரு கணம் புன்னகை செய்தபடியே பேசாமல் இருந்தான். பிறகு மன்னரை நோக்கி, “தந்தையே! எனக்கு எந்த மாவீரரின் பெயரை வைத்திருக்கிறீர்கள்? அந்த மகானுபாவன் - மாமன்னர் - சத்ரபதி சிவாஜி, சந்த் துக்காராமின் நாம சங்கீர்த்தனையைக் கேட்க, சிப்பாயைப் போல உடையணிந்து செல்லவில்லையா? மாதா மீராவின் பஜனையைக் கேட்க, சக்ரவர்த்தி அக்பர் மாறுவேடத்தில் கண்ணன் கோயிலுக்கு வரவில்லையா? எல்லோருக்கும் வாழ்க்கையில் இதைப் போல மகான்களை தரிசிக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. தவம் செய்த ஒரு சிலருக்குத் தான் கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு தெய்வ அருள் எனக்கும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள் தந்தையே!” என்று வணங்கினான் சிவாஜி.

     மன்னர் சரபோஜியால் அதை மறுக்க முடியவில்லை. மகனை அன்புடன் அணைத்துக் கொண்டார். முதுகில் மெல்ல தட்டிக் கொடுத்தார். அன்பு கனிந்த குரலில், “போய் வா மகனே! உன் விருப்பப்படியே போய் வா! ராம பக்தி சாம்ராஜ்யத்தை நிறுவிய மகாபுருஷர் அவர். தியாகத்தின் ராஜனான திருவாரூர் எம்பெருமானின் பெயரைத் தாங்கிய நாதயோகி அவர். அந்தப் பக்திமானின் இல்லத்திலேயே அவரைக் காணும் பெரும் வாய்ப்பு உனக்குக் கிடைக்கட்டும். இந்த தரிசனத்தால் உன்னுடைய எண்ணங்கள் மேன்மை அடைந்து, தூய்மை பெறவேண்டும் என்பது, பஞ்சநதீசுவரின் அருளாசியாக இருக்குமானால் அதைத் தடுக்க நான் யார்? ஆயினும் உன்னை ஒன்று வேண்டிக் கொள்கிறேன். விடியற் காலையில் வெள்ளிக் கீற்றும் தோன்றாத வேளையில், யாரும் அறியாமல் நீ மாறுவேடம் அணிந்து போய்வா! யாரிடமும் இதைப் பற்றிப் பேச வேண்டாம். குறிப்பாக உனது அன்னைக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்!” என்றார் அவர்.

     சிவாஜியால் இரவு தூங்கவே முடியவில்லை. அலங்காரக் கட்டிலும் மென்மையான மெத்தையும், லேசாக அலையும் கொசுவலையும் தூங்க வைக்க முயன்றன. ஆனால் தூங்க மறுத்தது. ஒரு பெரிய சோலைக்கு நடுவில் இருப்பது போல மனம் அந்த லயிப்பில் ஊறிக் கிடந்தது. காவேரியின் சலசலப்பு கேட்பது போல இருந்தது. தூங்காத பட்சிகள் ஒன்றிரண்டின் கூவல்கள், தூங்கும் குழந்தையின் சிரிப்பொலியைப் போல இடையிடையே இருளில் கேட்டன.

     விடியற்காலை மூன்று மணி இருக்கலாம். சுற்றிலும் தண்ணென்று இருள் பரவிக் கிடந்தது. சிவாஜி விழித்துக் கொண்டான். சத்தம் செய்யாமல் மெல்ல அடி வைத்து ஸ்நான அறைக்கு நழுவிச் சென்றான். நீராடிவிட்டு இடையில் வேட்டியும் மேலே வெண்ணிறத் துண்டும் போட்டுக் கொண்டு நீறணிந்த நெற்றியுடன் வெளிவந்தான். பாதரட்சையை அணிந்து கொண்டு தலையைக் குனிந்தவாறு புறப்பட்டான்.

     அரண்மனைச் சத்திரத்தை விட்டு வெளியே வந்ததும், வெண்ணிறத் துண்டை எடுத்துத் தலையும் முகமும் மறைய உடல் முழுவதும் போர்த்துக் கொண்டான். நெல் மூட்டையை ஏற்றிச் செல்லும் வண்டி ஒன்றின் அடியில் தொங்கிய விளக்கொளியைப் பிடித்துக் கொண்டு, மெதுவாக திருமஞ்சன வீதியை எட்டிவிட்டான்.

     அந்த வீடாகத்தான் இருக்க வேண்டும். ஆமாம். அதோ! சுவாமிகளின் சீடர்கள் முன்னால் வெளியே வந்து நிற்க, நிழலாட்டமாகத் தெரியும் அவர்களுடைய உருவங்களுக்கு நடுவில், தியாகராஜ சுவாமிகள் படியிலிருந்து இறங்குவது தெரிகிறதே! கையில் செம்பும், கழுத்தில் துளசிமணி மாலையுமாக, மெல்ல நடந்து அவர் முன்னே வருகிறார். அவருக்குப் பின்னால் அடியொற்றி, வாயில் கையை வைத்து மூடியவண்ணம், பவ்வியமாகச் சீடர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

     ஆயிற்று... காவேரியில் நீராடப் புறப்பட்டு விட்டார்கள். அருகே வந்த போது சுவாமிகளின் பக்தியில் தோய்ந்து நின்ற முகத்தை, ஒரு கணம் தெருவின் எண்ணெய் விளக்கின் ஒளியில் பார்த்தான் சிவாஜி. கருணை ததும்பும் கண்களைக் கண்டான். தம்பியுடன் யாகம் காக்க விசுவாமித்திரருடன் ஏகிய இராமச்சந்திர மூர்த்தியைக் கண்ணாரத் தரிசித்த மகானைக் கண்குளிரப் பார்த்துக் கொண்டே இருந்தான். மனித வடிவில் வந்த தெய்வமாக நினைத்துக் கொண்டு வணங்கினான்.

     அவர்கள் முன்னால் போனார்கள். பின் தொடர்ந்து போனான் சிவாஜி. அவனது காலடிச் சத்தம் அவர்கள் காதில் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக மெல்ல அடியெடுத்து வைத்துப் போனான். தெருக்களை மெல்ல கடந்து, ஆலய கோபுரத்தைத் தாண்டி, புஷ்ப மண்டபப் படித்துறையை நோக்கி நடந்தார் ஸ்வாமிகள். வெள்ளிக் கீற்றாய் விடியத் தொடங்கிய வானத்தின் ஒளி நடனத்தை அண்ணாந்து பார்த்தபடியே நடந்தார்.

     அந்த வளைந்த ஒளிக்கீற்றில் இராமபிரானின் வில்லைக் கண்டாரோ? லேசாகப் படர்ந்த செவ்வொளியில் ஒப்பிலா அழகிய சீதையின் செம்பஞ்சுக் குழம்பு படிந்த பாதத்தைக் கண்டாரோ? தோரணம் கட்டியது போன்ற சோலைகளின் சிங்காரிப்புக்கு நடுவே, பெருமித நடைபோடும் காவேரியையும், கூவிச் சிலம்பிய பறவைகளையும் கண்டு, பார்ப்பதற்கு ரம்மியமான பெருமானின் தோற்றத்தை உணர்ந்தாரோ? எப்பேர்ப்பட்ட கலைஞனின் இதயம் அது?

     அவர் நடக்க நடக்க, பின்னால் சென்ற சிவாஜிக்கு ஏதோ புதிய மனிதனாக மாறிவிட்டது போல இருந்தது. உடல், மனம் எல்லாம் லேசாகி மண்ணின் மட்டத்திலிருந்து உயர்ந்து விட்டது போலத் தோன்றிற்று. பொறுப்புகளும் கவலைகளும் நீங்கிவிட்டது போன்றதோர் உவகையில் மனமும், புலன்களும், புத்தியும் மிதந்தன.

     படித்துறையில் யாரும் இல்லை. விடியாத அந்த வேளையில் காவேரியின் புடைத்தெழுந்த நீர்ப்பரப்பு, இரவு படுக்கை விரித்தது போல இருந்தது. இராமரின் திருநாமத்தைச் சொல்லியபடியே நீரில் இறங்கினார் சுவாமிகள். சீடர்கள் ஒதுங்கிப் படிமேல் நின்று, அவரையே பயபக்தியுடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

     சுவாமிகள் நீரில் மேலும் இறங்கி மார்பளவு நீர் வரும்படி நின்று கொண்டார். கரங்களை உயரே தூக்கிக் குவித்து வணங்கினார். அந்தத் தெய்விகத் தோற்றத்தில் மயங்கி அரசமரம் அசைவற்று நின்றது. மெல்லிய காற்று கூட வீசப் பயந்து ஒற்றி எடுத்தாற் போல படர்ந்து நழுவிற்று. புள்ளினங்களில் கூவல் கூட எங்கோ தொலைவில் கேட்கும் சிற்றொலிகளாகவே ஒலித்தன.

     இப்போது சீடர்களும் மார்பளவு நீரில் நின்று கொண்டார்கள். நாதம் அலைஅலையாக எழுந்தது. அது செவியையும் உள்ளத்தையும் நிரப்பிற்று. பரிபூரணமாகச் சேர்ந்த சுருதியில், நெருப்பும் கொதிப்பும் போல, இரவும் இருளும் போல, நிலவும் குளிர்ச்சியும் போல, வைகறையும் தூய்மையும் போல சேர்ந்து இழைந்தது.

     அந்த வைகறை மௌனத்தைக் கலைத்துக் கொண்டு எழுந்தது அந்த தெய்விகமான இசை. வைகறையில் துயிலெழும்பும் உலகத்தையே மெல்ல மெல்லத் தட்டி விழிக்கச் செய்வது போன்ற மெத்தென்ற குரல்...

     “ராமா நிவே கானி நன்னு -”

     ‘இராமா! உன்னைத் தவிர என்னைக் காப்பவர் யார்? சந்திரனையும் சூரியனையும் கண்களாகக் கொண்டவனே! அழகிய முகத்தை உடையவனே! ஸ்ரீ ராமா! உன்னைத் தவிர என்னைக் காப்பவர் யார்?”

     நாராயணி ராகத்தில் கசிந்துருகப் பாடினார் சுவாமிகள். அடியவனைக் காக்க மெல்லடி வைத்து நடந்து வரும் ரகுவீரனை அழைத்துக் கசிந்து கசிந்து உருகினார். அந்த விடியற்காலை அமைதியில் அந்தக் குரல் புறத்தின் நினைவை அகற்றி, உள்ளத்தை மீறி விடாமல் கலவிச் சென்றது. திக்கும் எல்லையும் அற்ற பெருவெளியில் திரிந்து உலாவியது அந்த நாதயோகியின் குரல்.

     திருவையாற்றில் வீதிகளில் ஸ்வாமிகள் விடிந்த பிறகு மீண்டும் பாடுவார். தந்தி ஒலிக்க, வாய் பாடச் செம்பை ஏந்தி பிட்சை ஏற்றபடி நடந்து பாடுவார். சீடர்கள் உடன் பாடியபடி வருவார்கள். திக்கை நிறைத்து பரவிய நாதத்தில் திளைத்தபடி அவர் செம்பை ஏந்தியது அரிசிக்காகவா? அல்லது பக்தர்களுக்கு நாத வெள்ளத்தை மொண்டு கொடுக்கவா என்று வியந்து மக்கள் வலம் வந்து தரையில் உடல்பட வணங்குவார்கள்...

     சுவாமிகள் கரையேறினார். அந்த முகத்தில் ஓர் எல்லை காணாத அமைதி. தியானத்தில் நிலைத்து, பிற உலகின் நினைவையே மறந்து தன்னை மறந்த லயிப்பில் இராமபிரானிடம் தன்னை இழந்துவிட்ட தோற்றம், சிவாஜியைக் கவர்ந்தது. ஒரே மலர்ச்சியாக மலர்ந்து அந்த முகத்தில் மனமும் வாக்கும் ஒன்றையே நினைக்கும் களங்கமில்லாத குழந்தைத்தனம் தான் தெரிந்தது.

     சிவாஜி இளம் காலைக் கதிர் ஒளியில் சுடர்போலத் தோன்றிய முகத்தைப் பார்த்தான். புடம் போட்ட பவுன் போன்ற நிறம் மின்னும் மேனியில் அழுக்கும் பழுதும் இல்லாமல் கட்டிய வேட்டி சுற்றி இருந்தது. நெற்றியிலும் மார்பிலும் புஜத்திலும் சந்தனக்கீற்று படிந்திருந்தது. எங்கும் இராமநாமமே நிறைந்தது போலத் தோன்றியது.

     சுவாமிகள் மெல்ல இறைவன் திருநாமத்தைச் சொன்னபடி நடந்தார். சீடர்கள் பின்னேயே நடந்து சென்றார்கள். சிவாஜி அங்கேயே மண்டபத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டான். நிறைவில் மூழ்கி முக்குளித்த உள்ளம் இன்னும் கரை ஏறவில்லை. மனம் பொருளற்ற மாயச் சொற்களை முனகிக் கொண்டிருந்தது.

     விடியத் தொடங்கியது. நதியில் நீராட மக்கள் வந்து விடுவார்கள். அவர்கள் கண்ணிற் படுவதற்கு முன், அரண்மனைச் சத்திரத்துக்குத் திரும்பி விட வேண்டும். அன்னையும் தங்கையும் விழித்தெழு முன் சயன அறைக்குப் போய்ச் சேர்ந்து விட வேண்டும். மற்றவர்கள் எதையும் ஊகிக்க முடியாதபடி முகத்தின் உணர்வுகளை மறைத்துக் கொள்ள வேண்டும். எழுந்து நடக்கத் தொடங்கினான்.

     அவசரமாகத் திரும்பி வந்து அறைக்குள் புகுந்து கொண்டான் சிவாஜி. வாசலில் காவலுக்கு இருந்த ஆட்களைத் தவிர வேறு யாரும் கவனிக்கவில்லை. அவர்களும் அரசிளங்குமரன் இயற்கை அழகை ரசிக்க நதிக்கரைக்குச் சென்று திரும்பியதாக எண்ணிக் கொள்ளக்கூடும். அவ்வளவுதான்...

     கோவில் மணி ஓசை காற்றில் கலந்து மிதந்து வந்தது. சிவாஜி திறந்த வெளியில் முற்றத்தில் வந்து நின்று கொண்டான். சிவாஜிக்கு இன்னதென்று புரியவில்லை. சொல்லுக்கெட்டாத அமைதியும், உவகையும் உடல் முழுவதையும் நிறைத்து, மயிர்க்காம்பில் கூடப் படர்ந்து விட்டது போலத் தோன்றிற்று. பரம்பொருளின் காற்று மேலே பட்டுவிட்டது போல, அதன் நிழல் மேலே கவிந்ததைப் போல, அதன் கருணைத் திவலைகள் மேலே உதிர்ந்தது போல ஓர் உணர்வு நெஞ்சைப் பேரின்பமாக அடைக்க அப்படியே நின்றான்.

     கண்களை மூடிக் கொண்டான். அவனுடைய இதயத் தாமரையில் நீண்ட அழகிய திருவடிகள், மலர் இதழ்களைப் போல குவியும் விரல்கள், அடியெடுத்து வைத்தன. அவை இராமபிரானின் திருவடிகள். சுவாமிகளின் குரல் கூடவே கேட்டது. “மெய்யடியார்களின் பாக்கியமே! தூயவனே! தியாகராஜனால் துதிக்கப் பெறுபவனே! உன்னைத் தவிர என்னைக் காப்பாற்றுபவர் யார்?”

     எண்ணி எண்ணி நெஞ்சு புலம்பிற்று. பக்திப் பெருக்கில் உள்ளம் நனைந்தது. தன்னை யாரோ மெல்லத் தொடுவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தான் சிவாஜி.

     சரபோஜி மன்னர் அங்கே நின்று கொண்டிருந்தார். மகனின் முகத்தையே உற்றுப் பார்த்தார். அந்த முகத்தில் தனியாக ஒரு களை தெரிந்தது. வரப்போகும் யௌவனத்தின் பொலிவு தெரியும் உடலிலும் முகத்திலும், அதுவரை அவர்கள் கண்டிராத புதுமலர்ச்சி ஒன்று மினுமினுத்தது.

     உணர்ச்சி ததும்பும் குரலில், “மகனே! நீ பெரிய பாக்கியசாலி!” என்றார் சரபோஜி.


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38

அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
அரசு கட்டில்
அருணாசல அக்ஷரமணமாலை
அலை ஓசை
அலைவாய்க் கரையில்
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
அனிச்ச மலர்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இரங்கேச வெண்பா
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உத்தர காண்டம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐங்குறு நூறு (உரையுடன்)
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
கற்சுவர்கள்
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சித் தேன்
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோடுகளும் கோலங்களும்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சண்முக கவசம்
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாமியாடிகள்
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிதம்பர செய்யுட்கோவை
சிதம்பர மும்மணிக்கோவை
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சுலபா
சுழலில் மிதக்கும் தீபங்கள்
சேற்றில் மனிதர்கள்
சோமேசர் முதுமொழி வெண்பா
சோலைமலை இளவரசி
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
நாககுமார காவியம்
நால்வர் நான்மணி மாலை
நாலாயிர திவ்விய பிரபந்தம்
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெஞ்சு விடு தூது
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பகை கடிதல்
பட்டினப்பாலை
பட்டுப்பூச்சி
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்கவி லாபம் தருகிறாள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
புவன மோகினி
பெண் குரல்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்த்தேவு
பொய்ம் முகங்கள்
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மண்ணாசை
மணிபல்லவம்
மணிமேகலை
மதுராந்தகியின் காதல்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
மருத வரை உலா
மலைபடுகடாம்
மாணிக்கக் கங்கை
மாறி மாறிப் பின்னும்
முத்தொள்ளாயிரம்
மூட்டம்
மாலவல்லியின் தியாகம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மூலக் கனல்
மூவருலா
மோகினித் தீவு
யசோதர காவியம்
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேரில் பழுத்த பலா
வேருக்கு நீர்
ஜகம் புகழும் ஜகத்குரு

உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன்
2. பார்த்திபன் கனவு
3. சிவகாமியின் சபதம்
4. அலை ஓசை
5. தியாக பூமி
6. கள்வனின் காதலி
7. பொய்மான்கரடு
8. மோகினித் தீவு
9. சோலைமலை இளவரசி
10. மகுடபதி
11. பொன் விலங்கு
12. குறிஞ்சி மலர்
13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
14. சமுதாய வீதி
15. சாயங்கால மேகங்கள்
16. ஆத்மாவின் ராகங்கள்
17. நெஞ்சக்கனல்
18. துளசி மாடம்
19. ராணி மங்கம்மாள்
20. பிறந்த மண்
21. கபாடபுரம்
22. வஞ்சிமா நகரம்
23. நெற்றிக் கண்
24. பாண்டிமாதேவி
25. சத்திய வெள்ளம்
26. ரங்கோன் ராதா
27. ஊருக்குள் ஒரு புரட்சி
28. ஒரு கோட்டுக்கு வெளியே
29. வேருக்கு நீர்
30. ஆப்பிள் பசி
31. வனதேவியின் மைந்தர்கள்
32. கரிப்பு மணிகள்
33. வாஷிங்டனில் திருமணம்
34. நாகம்மாள்
35.பூவும் பிஞ்சும்
36. பாதையில் பதிந்த அடிகள்
37. மாலவல்லியின் தியாகம்
38. வளர்ப்பு மகள்
39. அபிதா
40. அநுக்கிரகா
41. பெண் குரல்
42. குறிஞ்சித் தேன்
43. நிசப்த சங்கீதம்
44. உத்தர காண்டம்
45. மூலக் கனல்
46. கோடுகளும் கோலங்களும்
47. நித்திலவல்லி
48. அனிச்ச மலர்
49. கற்சுவர்கள்
50. சுலபா
51. பார்கவி லாபம் தருகிறாள்
52. மணிபல்லவம்
53. பொய்ம் முகங்கள்
54. சுழலில் மிதக்கும் தீபங்கள்
55. சேற்றில் மனிதர்கள்
56. வாடா மல்லி
57. வேரில் பழுத்த பலா
58. சிலையும் நீயே சிற்பியும் நீயே
59. புவன மோகினி
60. பொன்னகர்ச் செல்வி
61. மூட்டம்
62. மண்ணாசைபுதிது
சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 491  
புதிய உறுப்பினர்:
M.Lakshmanan
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
உங்கள் கருத்துக்கள்

வாசர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
அன்புடையீர்! எனது சென்னைநூலகம்.காம் அரசு நூலகமோ அல்லது அரசு உதவி பெறும் நூலகமோ அல்ல. இது எனது தனிப்பட்ட ஈடுபாடு மற்றும் உழைப்பினால் உருவானதாகும். ஆகவே எனது நூலகம் தொடர்பாக என்னை நேரடியாக தொடர்பு கொள்ளவும். இந்தியாவில் உள்ளவர்கள் எனது சென்னைநூலகம்.காம் இணையதளத்திற்கு நன்கொடை அளிக்க கீழே உள்ள பேயூ மணி (PayU Money) பட்டனை சொடுக்கி பணம் அனுப்பலாம். வெளிநாடு வாழ் அன்பர்கள் நேரடியாக எமது ஆக்ஸில் வங்கிக்கு இணையம் வழி பணம் அனுப்பலாம். (வங்கி விவரம்: G.Chandrasekaran, SB A/c No.: 168010100311793 Axis Bank, Anna Salai, Chennai. IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168). (ரூ.2000/- அல்லது அதற்கு மேல் நிதி அளிப்பவர்கள் எமது தளத்தில் “வாழ்நாள்” உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.) அன்புடன் கோ.சந்திரசேகரன் (பேசி: +91-94440-86888, 91768-88688 மின்னஞ்சல்: admin@chennailibrary.com)மேலும் விவரங்களுக்கு
  நன்கொடையாளர்கள் 

கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


gowthampathippagam.in
ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
gowthampathippagam.in
விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
gowthampathippagam.in
எந்த மொழி காதல் மொழி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
gowthampathippagam.in
புதிய பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
gowthampathippagam.in
எந்த மொழி காதல் மொழி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
gowthampathippagam.in
புதிய பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
gowthampathippagam.in
தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)