இரண்டாம் பதிப்பின் முன்னுரை ‘புயலிலே ஒரு தோணி' புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு இது. இந்தக் கதை 2ஆம் உலகப்போரையொட்டி மலேசியா இந்தொனேசியா பிரதேசத்தில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு; கதையில் வரும் வரலாற்று நிகழ்ச்சிகள் - ஆட்களைத் தவிர, சம்பவங்களும் மாந்தரும் எதையும் யாரையும் குறிக்கவில்லை. இப்போது கதை சம்பந்தமான சில விளக்கங்கள்: முன்னர் ‘டச்சு கிழக்கிந்தியத் தீவுகள்’ என்று அறியப்பட்ட இந்தொனேசியா, பல தீவுகள், இனங்கள், மொழிகளைக் கொண்ட நாடு. அதன் ஓர் அங்கமான சுமத்ரா தீவு, இலங்கையைப் போல் ஏழு மடங்கு பெரியது. சுமத்ராவின் வடகிழக்குக் கரையையொட்டி மைடான் என்ற மெடான் நகரும், அதன் அருகே பிலவான் துறைமுகமும் இருக்கின்றன. அந்தப் பகுதியில் பேசப்படும் பாஷை மலாய். டச்சு ஆட்சியின்போது புழங்கிய நாணயம் கில்டர். அதன் அப்போதைய மதிப்பு ஏறத்தாழ ரூ.1.50. கில்டரைத் தமிழர்கள் ரூபாய் என்றும், இந்தொனேசியா ருப்பியா என்றும் கூறுவர். மலேசியா என்று பெயர் மாறியிருக்கும் மலேயாவின் மேற்குக் கரையையொட்டி உள்ள பினாங் தீவில் பினாங் நகரம் இருக்கிறது. மலேயா டாலரின் அப்போதைய மதிப்பு சுமார் ரூ.1.50. அதைத் தமிழர்கள் வெள்ளி என்பர். அக்கரைச் சீமை லேவாதேவித் தொழிலில் ஈடுபட்டவர்களில் செட்டியார்களைத் தவிர, மற்றவர்களை ‘பிள்ளை’களாக மாற்றி விடுவது அன்றைய வழக்கம். இன்னொன்று; வட்டித் தொழிலில் சம்பந்தப்பட்ட தமிழர்கள் அனைவரும் ‘செட்டி’கள் என்பது மலாயர், சீனர்களின் நம்பிக்கை. ‘செட்டி வீட்டு ஆள்’ என்பது (அக்கரை நாடுகளில்) தொழிலையே குறிக்கும்; ஜாதியை அல்ல. வட்டிக் கடைகள் (‘பெட்டி’யடிகள்) உள்ள கட்டடம் ‘கிட்டங்கி’, வட்டிக்கடை ஊழியர்கள்: மேலாள் (ஏசண்டு), அடுத்தாள். பெட்டியடிப் பையன். சமையலாள். அயலூர் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் தங்குவதற்கான கட்டடம் ‘நகர விடுதி’. (உலாந்தா வங்கி - நெதர்லாண்ட்ஸ் ஹண்டல் மாட்ஸ்கப்பை; உங்கஞ் சங்காய் வங்கி - ஹாங்காங் அண்ட் ஷங்காய் பேங்க்; வராகன் ரூ3.50 (கும்பினியான் காலத்துப் ‘பகோடா’ நாணயம் இதுவே); வத்தாவியா - பட்டேவியா (இப்போதைய பெயர் ஜாகர்த்தா); ஒரு கணக்கு - ஒருவர் கொண்டு விற்கும் காலம்; கோரங்கிக்காரி - ஆத்திர தேசப் பெண்; வெண்ணிலைக் கடன் - ஈடு காட்டப்படாத கடன்). கதை நாயகன் பாண்டியன் தமிழ்நாட்டில் கண்டிருந்த ‘கார் ஸ்டாண்டு’ காட்சிகளை இப்போது காண்பதற்கில்லை. ஒரு கையில் பீடிக் கட்டு - தீப்பெட்டியும், மறு கையில் ட்ரிப் ஷிட் - நாடக நோட்டீஸும், காதில் பென்சிலும், வாயில் அட விகட அடாதுடிப் பேச்சுமாய் நடமாடும் ‘கார் ஏசண்டு’கள் காலம் மறைந்து விட்டது. பஸ்கள் ‘கார்’ என்றும், கார்கள் ‘பிளஷர்’ என்றும், 1 - டன் பஸ்களே மிகப் பெரியவையாகவும் அறியப்பட்ட காலம் அது. மதுரை 1-ஆம் நம்பர் சந்து, பள்ளத் தெரு வர்ணனைகள் அன்றைய நிலவரத்தைக் குறிப்பவை. இப்போது அவை குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டன். (விம்லட்டு லெமலேட்) - சீசாவில் அடைத்த ‘கலர்’ பானங்களுக்கு வழங்கிய பெயர்) மேஜர் ஜெனரல் ஒருவர் தலைமையில் இயங்குவது ஒரு ராணுவ டிவிஷன். பல டிவிஷன்களைக் கொண்டது ஒரு சேனை (ஆர்மி). பல சேனைகளைக் கொண்டது ஒரு சேனைத் தொகுதி (ஆர்மி குரூப்). சேனைகளின் ஆள் - ஆயுதத் தளவாட பலம் தேசத்திற்குத் தேசமும் தேவைக்கு ஏற்பவும் மாறுபடும். (உதாரணம்): மலேயாவை வென்ற ஜப்பானிய 25-வது சேனை - 60 ஆயிரம் ஆட்கள்; ஸ்டாலின்கிராடில் ஜெர்மன் 6வது சேனை - 350 ஆயிரம் ஆட்கள்). (வெர்மாக்ட் - ஜெர்மன் ராணுவம்; பான்சர்- டாங்கிகள், கவச வண்டிகள், மோட்டார் - துருப்புகள் அடங்கிய ஜெர்மன் ‘மின்னல் படை’; டாஸ்க் அணி- விமானந்தாங்கிக் கப்பல்களைப் பிரதான பலமாகக் கொண்ட கடற்படை அணி; B24 - பறக்கும் கோட்டை என்று அறியப்பட்ட அமெரிக்கக் குண்டு வீச்சு விமானம்; கெம்பித் தாய் - ஜப்பானிய செக்யூரிட்டி செர்வீஸ்) கதைக் காலத்தில் ரூபாய்க்கு 5-6 படி அரிசி என்பதையும், இப்போது ரூ.20000 ஊதியம் உள்ள பதவிகளுக்கு அப்போது மொத்தச் சம்பளம் ரூ.40-50தான் என்பதையும் வாசகர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அன்றைய ரூ.1000 இன்றைய மதிப்புப்படி குறைந்தது ரூ.50,000 ஆகும். (முக்கால் துட்டு (காலணா) - சுமார் 12 காசு. இந்தக் காலணாவுக்கு 3 சல்லிக் காசுகள் உண்டு. ஒரு சல்லிக் காசுக்கு வாங்கக் கூடிய பொருள்களும் இருந்தன) ப.சிங்காரம் ஆகஸ்ட், 1985 புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |