அரும்பு 11. மதுரை கடலுக்கடியிலிருந்து கதிரவன் பரிந்தான். ஆரல் போன்றிருந்த சிறு மீன்கள் கூட்டம் கூட்டமாய்த் துள்ளி விளையாடின. கடல் அலை அலையாய் நெளிந்து குழிந்து வழுவி ஓடிற்று. கீழ்க்கோடியில் சாம்பல் மங்கலாயிருந்த வானம் செஞ்சுடர்ப் பரிதியின் ஒளி பெற்று ஆரஞ்சு வண்ணத் தீ நிறமாய் மாறியது. நீரும் ஞாயிறும் தழுவி நின்ற இடத்தில் உண்டாகி மின்னிய ஒளிப் பிழம்பு பார்வையைக் குழப்பிற்று. பாண்டியன் கண்ணை மூடினான். போர் முடிந்ததும் முதல் கப்பலில் ஊர். இந்தத் தடவை சென்னை வேண்டாம், நாகப்பட்டினம். சுங்க அலுவலகத்தில் ஆடை மடிப்புகளைக் கலைத்தும் தலையணைகளைக் கசக்கியும் பார்ப்பார்கள். நேரே திருச்சி. அங்கிருந்தே ஊர் போய்விடலாம். இல்லை, மதுரை வழியாகப் போக வேண்டும். மதுரை ரெயிலடியிலிருந்து கிளம்பினால் எதிரே மங்கம்மாள் சத்திரம். அங்கேயே தங்கலாம். ஒரு நாள் இருந்து நண்பர்களைப் பார்க்க வேண்டும். மாலையில் ஒரு சுற்று. டவுன் ஹால் ரோடு, பீமவிலாஸ் - மதுரையில் முதன்முதலாக, மேசையில் வைத்துப் பலகாரம் தின்னும் பழக்கத்தைப் புகுத்திய கிளப்புக் கடை. மெஜுரா காலேஜ் ஹைஸ்கூல். பெருமாள் கோயில் தெப்பக்குளம் ஒரே நாற்றம். எச்சிலை குப்பை கூளம் - பாசி. மாசி வீதியைக் கடந்ததும் மேலக் கோபுரத் தெரு. விக்டோரியா லாட்ஜ், மில்ட்டேரி ஹோட்டல், முன் திண்ணைச் சுவரோரம் பாய்விரித்த, வட்டக் குடுமி - சந்தனப் பொட்டு - சிவப்புக்கல் கடுக்கன் - சாய வேட்டியராய் முதலாளி சாமிநாத பிள்ளை உட்கார்ந்திருக்கிறார். சிவந்த சிறு கண்கள். ஓயாத வெறுப்புப் புன்னகை, உண்டு வெளியேறுவோர் கொடுக்கும் பணத்தை ஏதோ முனகியவாறே வலக்கையில் வாங்கி, இடக்கையால் பாயைத் தூக்கி அதன் கீழே வீசுகிறார். இப்பால் உடுப்பி ரெஸ்டாரன்ட். அஜீஸ் அத்தர்க் கடை, அனுமந்தராயன் கோயில் தெருக்கள் பிரிகின்றன. டாப்பர் மாமாக்கள் மறுகுவர்; ஏப்பை சாப்பைகளை எதிர்பார்த்துச் சண்டியர்கள் வட்டமிடுவர். ‘மூணு சீட்டு’க்காரர்கள். பித்தளைச் சங்கிலிகளைத் ‘தங்க நகை’யாக்கி ‘அவசரத் தேவைக்காக குறைந்த விலைக்கு விற்கும்’ எத்தர்கள். பண்டாபீஸ், கோபுர வாசல், மார்வாடியின் வியாபார முழக்கம். சித்திரை வீதிகள், பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில், பெரிய பயில்வான் படத்தைச் சுவரோரம் சாத்தி வைத்துக் கொண்டு சாலாமிசிரி ஹல்வா விற்பவர்கள்; ‘பொம்பளை சீக்கு’ மாத்திரை விற்பவர்கள்; நோய்க்கும் பேய்க்கும் மந்திரித்த தாயத்து விற்பவர்கள்; 64 லீலைப் படங்கள் அடங்கிய அசல் கொக்கோக சாஸ்திரம் விற்பவர்கள்; தேள்கடி மருந்து விற்பவர்கள்... கோயில் கூட்டம், பனியாவின் கூக்குரல்: “ஏன் பனியன் தோ அணா! ஏன் பனியன் தோ அணா!” புதுமண்டபம், வாசல் அருகே ஆத்தூர் சாயபு பல்பொடி விற்கிறார். முன்னே, நகைச்சுவைப் பரவசமாய் வாய்பிளந்து நிற்கும் கூட்டம். சாயபு பேசுகிறார்: “என்னடா அது இதுன்னி வித்தியாசம்? பாப்பார வீட்டுச்சாமி சிவப்பாயிருக்குமா, பறைய வீட்டுச்சாமி கறுப்பாயிருக்குமா? துலுக்க வீட்டுச்சாமி தொப்பி போட்டிருக்குமா, வேதக்காரச் சாமி சிலுவை போட்டிருக்குமா? எல்லாம் சாமிதான். எல்லாரும் மனிசன்தான்டா... ஆனாக்காப் பல்லுப் பொடி அப்படி இல்லையப்பா - பல்லுப்பொடியின்னால் பல்லை உடைச்சு நொறுக்கித் தூளாக்கின பொடியில்லை. பல்லுக்குத் தேய்க்கிற பொடி. ஹிஹ்ஹிஹ்... பல்லுப் பொடியில நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. இது சித்தர்கள் வகுத்த முறைப்படி புடம் போட்டுச் செய்தது. இதுல ஒரு பொட்ணம் வாங்கிக்கிட்டுப்போ தினசரி தேயி. கடையில விக்கிற டப்பியில் ஜிகினாக் காகிதம் சுத்தி மொட்டைக் குண்டி லேடி, ஜல்சா லேடி படமெல்லாம் போட்ருப்பான். உடலைக் கண்டு மயங்காதே. இது காமாலை - உடைச்சுப் பார்த்தால், ‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளேயிருக்குமாம் ஈரும் பேனும்’னி தெருப்புழுதிக்குச் சாயம்போட்டு அடைச்சிருப்பான். ஆமா, நான் சொல்றதைக் கேளு. இதுல ஒரு பொட்ணம் வாங்கிக்கிட்டுப் போ. தினசரி காலையில காலையில தேயி. பல் அரணை, ரத்தக் கசிவு, வாய் நாத்தமெல்லாம் பஞ்சாய்ப் பறக்கும். இந்தா, ஆளுக்கு ஒரு பொட்ணம் வாங்கு. நான் சொல்றதைக் கேளு... பல்லுப் போனால் சொல்லுப் போச்சு. வாய் நாறினால் பெண்டாட்டி அங்கிட்டுத் திரும்பிப் படுத்துக்கிடுவாள். அப்புறம் நீ விடிய விடிய ஒட்டா வீட்டு நாய்போலக் கொட்டாவி விட்டபடி...” நகரங்கள் எவ்வளவு விரைவாய் மாறுகின்றன! 1941-இல் திரும்பிய போது பார்த்த மதுரைக்கும், உயர்நிலைப் பள்ளியில் சேரப் போனபோது பார்த்த மதுரைக்கும் எவ்வளவு வேற்றுமை! லாஸ்ரடோ ஷெனாய் நகராட்சி கமிஷனராக வருவதற்கு முந்திய காலம் அது. தெருவில் பாதியை, கட்டடங்களுக்கு முன்னே நீட்டிய ‘கவர்னர் தட்டி’ மறைத்திருக்கும். கழிகளை ஊன்றிப் பலகை அடைத்துச் சாய்ப்புத் தட்டி - கவர்னர் தட்டி - இறக்கியிருப்பார்கள். மேலே ஓட்டுக் கடைகள். பலகைக்குக் கீழே, எச்சில் தொட்டி உரிமையாளர்கள் குடும்பம் நடத்துவர். பிறப்பு - இணைப்பு - இறப்பு எல்லாம் அங்கேயே நடைபெறும். பஸ் நிலையம் இருக்கும் இடம் வியாழக்கிழமைச் சந்தைத் திடலாயிருந்தது. செம்மண் உருண்டையிலிருந்து மோட்டார் எந்திரங்கள் வரை, தும்பைச் செடியிலிருந்து புலிப்பல் வரை அங்கே வாங்கலாம். எந்த ஊருக்குப் போகும் ‘கார்’ எங்கிருந்து எப்போது புறப்படும் என்று யாருக்கும் தெரியாது. நகரத் தெருக்களில் எல்லாம் கார்கள் பவனி வரும். பக்கத்துக் கம்பிகளைப் பிடித்துத் தொங்கியவாறு தெருவுக்குத் தெரு வெவ்வேறு ஊர்ப் பெயரைக் கூவிப் பிரயாணிகளை ஏற்றுவார் கார் ஏசண்டுகள். குறித்த ஊருக்குச் செல்லும் பிரயாணிகள் ஐந்தாறு பேர் ஏறியதும், மற்றவர்களை மூட்டை முடிச்சுகளுடன் எங்காவது ஓரிடத்தில் இறக்கி விடுவார்கள். முணுமுணுத்தால் அடி விழும். அது லாஸ்ரடோ ஷெனாய் மதுரை நகராட்சி கமிஷனராக வந்து, சென்ட்ரல் பஸ் நிலையம் அமைத்து, எல்லாக் ‘கார்’களும் அங்கிருந்தே - இன்னின்ன ஊர்களுக்குச் செல்லும் வண்டிகள் இன்னின்ன இடங்களிலிருந்தே இன்னின்ன நேரங்களில் புறப்பட வேண்டுமென்று ஏற்பாடு செய்வதற்கு முந்திய காலம். ஒரே சமயத்தில் ஒரே ஊருக்கு மூன்று நான்கு கார்கள் புறப்பட்டு ஆறு, கண்மாய் வயலில் எல்லாம் இறங்கி ஏறி ஒன்றையொன்று விரட்டிப் பற்றி முந்தும், சின்ன மங்கலம் போன ‘கிருஷ்ண ஜெயம்’ கார் டிரைவர் ‘டாலர்’ ராஜாமணி அய்யர், முன்னே சென்ற ‘சிதம்பர விலாஸ்’ டிரைவர் ராமுண்ணி மேனனைப் பீட் அடிப்பதற்காக, கண்மாய்த் தண்ணீரின் குறுக்கே காரை விட்டுக் கரையேறி முந்தியது மோட்டார் உலகத்தில் பிரபலமானதொரு நிகழ்ச்சி.
* இப்போதைய பெயர் மீனாட்சி கோயில் தெரு மேற்கத்திப் பார வண்டிக்காரர்கள் வயிறு புடைக்கத் தின்றபின், ஓசி வெற்றிலையும் வாங்கிப் போட்டுக் கொண்டு ஏப்ப முழக்கத்துடன் வெளியேறுவார்கள். “சுண்ணாம்பு சேத்திருக்கானப்பா, சோறு எடுக்கலை.” “இதெல்லாம் என்ன கிளப்பு... கிளப்புன்னிச் சொல்றதுக்கு குண்டத்தூர் நாய்க்கர் ஒருத்தர் திண்டுக்கல்லுல நடத்துறாரு, அதுதான். சாப்பாடுன்னாச் சாப்பாடு, இப்படி அப்பிடியினு சொல்ல முடியாது! தினசரி குடல் கறி, இல்லாட்டி தலைகறி, விசாலனுக்கு விசாலன் ராத்திரியில பிரண்டைக் குழம்பு வைப்பார், பாருங்க. அசல் கெளுத்தி மீன் குழம்புதான்!” இம்பீரியல் சினிமாவுக்கு ஓர் அணா டிக்கெட். மாடியில் இருக்கும் ‘சேர்’ ஆட்கள் இடையிடையே, கீழே, தரையர்கள் மீது வெற்றிலை எச்சிலைத் துப்புவர். தரைப் பிரபுக்கள் சதைச் சொற்களால் ஏசிக் கண்டனம் தெரிவிப்பார்கள்: “டேய்...!” திரையில் எடிபோலோ, டக்ளஸ் பேர்பாங்க்ஸ் படங்கள் - “ஏய்! திரும்பிப் பார்ரா, எதிரி வர்றான்டா...! விடாதே, பிடி, குத்து, நல்லாக் குத்து...! டேய் உதவிக்காரா! ஓடியாடா, ஆக்கிட்காரியை எதிரி தூக்குறான்டா! இந்தா ஆக்கிட்காரன் வந்துட்டான்! குத்து, அப்படிக் குத்து, கும்மாங்குத்துக் குத்து!” விலாத் தெறிக்கச் சிரிக்க வைக்கும் அரை மீசை சார்லி சாப்ளின், கண்ணாடிக்கார ஹெரால்ட் லாயட்... குரலில்லா உருவங்கள் திரையில் கூத்தாடுகின்றன. குதிரைகள் தாவி ஓடுகின்றன. துப்பாக்கிகள் நெருப்புக் கக்குகின்றன - “காணத் தவறாதீர்கள், கத்திச் சண்டைகள், ஜம்பிங்குகள், மாஜிக் வேலைகள், காதல் சீன்கள் நிறைந்த மகத்தான படம். ‘உதை மாஸ்டர்’ எடிபோ லோவின் சவுக்கடி சீன் பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும்...” சின்னத் தகரக் கொட்டகை, பெரிய தகரக் கொட்டகை - கந்தர்வ கான கிட்டப்பா: ‘நாற்பது வேலி நிலம் இன்னும் நட்டாகவில்லை’. இசையரசி சுந்தராம்பாள்: ‘வெட்டுண்ட கரங்கள் வேதனையாக.’ தேச பக்தர் விசுவநாத தாஸ்: ‘கதர்க் கொடிக் கப்பல் தோணுதே.’ ராஜலட்சுமி, வேலாம்பாள், ருக்மணிபாய், ‘ஹார்மோனியச் சக்கரவர்த்தி’ காதர் பாட்சா, ‘ஸ்திரீ பார்ட்’ அனந்தநாராயண அய்யர், ‘ஹிந்துஸ்தான் கவாய்’ நடராஜ பிள்ளை, ‘பபூன்’ சண்முகம், ‘காமிக்’ சாமண்ணா, ‘ஜோக்கர்’ ராமுடு. ராஜாம்பாளே ராஜாம்பாளாய் நடிக்கும் ‘ராஜாம்பாள்’ ஸ்பெஷல் நாடகம். கன்னையா கம்பெனி ‘தசாவதாரம்’, ‘ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’களின் ‘சவுக்கடி சந்திரகாந்தா ‘பம்பாய் மெயில்’, ‘ராஜபக்தி’... பெரிய பாலம் கட்டுவதற்கு வெள்ளைக்கார என்ஜினீயர் கொடுத்த நரபலி; தலைச் சூலியான பிராமணப் பெண்ணைத் தத்தனேரி சுடுகாட்டில் பலி கொடுப்பதற்காக, நள்ளிரவில் அந்தர விளக்காய்த் தொங்கி அழைத்துச் சென்ற மலையாள மந்திரவாதியை சட்டைக்கார சார்ஜண்ட் பின் தொடர்ந்து போய் அக்கரை இறக்கத்தில் சுட்டுக் கொன்றது; பெரிய சண்டியர் கேருசாகிபை சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் அடித்துக் கட்டி கரகரவென்று தெருப்புழுதியில் இழுத்துச் சென்றது. இவையெல்லாம் மாணவர்கள் அச்ச வியப்புடன் பேசிக் கொண்ட மர்ம நிகழ்வுகள். மதுரையில்தான் எத்தனை திருவிழாக்கள். சித்திரைத் திருவிழா, பிட்டுத் திருவிழா, தெப்பத் திருவிழா... ஆ, மாரியம்மன் தெப்பத் திருவிழா... வண்டியூர்த் தெப்பக் குளத்துக்கும் வைகை ஆற்றுக்கும் இடையே உள்ள தோப்புகளில் விரிப்புகளைப் பரத்தி அமர்ந்து குடும்பம் குடும்பமாய்க் கண்டுணா உண்பார்கள். சிறுவர்கள் துள்ளி ஓடுவர்; பெண்கள் வெற்றிலைச் சிவப்பு வாயால் அதட்டுவார்கள்... மாலையில் குளக்கரை உள்தட்டு நெடுகிலும் நெருக்கமாய் அகல் விளக்குகள் எரிய, எண்ணற்ற தங்க வேல்களால் குத்துண்டது போல் தண்ணீர் குழம்பி மின்னும். மலர்ந்த பால் நிலவு தென்னை மரக் கொண்டைகளுக்கு மேலேறிக் குளிரொளித் தென்றல் பொழிந்து நிலத்தையும் மானிடரையும் மோகன மயக்கத்தில் ஆழ்த்தும் வேளையில் ‘தெப்பம்’ புறப்படும்... தெப்பத் திருவிழா அன்றொரு நாள் தமிழ்நாட்டு மதுரையில் பார்த்தது. காலமும் இடமும் மாறிவிட்டன. இது மலாக்கா கடலில் மிதந்து செல்லும் தொங்கான். இதில், இரண்டாவது உலகப் போரின் விளைவாகச் சுமத்ராவிலிருந்து மலேயாவுக்குச் செல்லும் வணிகப் பிரயாணிகள். அலை அலையாய், ஒன்றன்பின் ஒன்றாய், ஒன்றன் காரணமாய் உதித்த மற்றொன்றாய் வந்த அலைகள் தொங்கானில் மொத்துமொத்தென்று மோதிச் சீறி உருட்ட முயன்றன; முடியாமல் புலம்பின. காற்று விசையால் செலுத்தப்பட்ட தொங்கான் பினாங் துறைமுகத்தைத் தேடிச் சென்று கொண்டிருந்தது. “பாவன்னா! என்ன காலையிலேயே யோசனை பலமாயிருக்கு?” கட்டிப்பால், காப்பித்தூள் டப்பிகளைக் கூடையிலிருந்து வெளியேற்றிக் கொண்டிருந்த ஆவன்னா கத்தினார். “கொஞ்சம் காற்று வாங்கினேன்.” எதிர்க்கோடியில் நல்லகண்ணுக் கோனார் வெந்நீர் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் உறங்கினர். புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |