நுனை 4. நீதகா யாமா நோபுரே* ஜெனரல் தொமயூக்கி யாமஷித்தாவின் படைகல் தென்சுமத்ராவில் கரையிறங்கி வடக்கு முகமாய் முன்னேறி மெடான் நகரை அடைந்தன. அதற்கு முன் *நீதகா யாமா நோபுரே, அதற்கும் முன்பு - * நீதகா யாமா தோபுரே - நீதகா மலைமீது ஏறலாம் (போர்த் திட்டத்தை நிறைவேற்றத் தயாராகவும்) இது ஜப்பானியக் கடற்படையின் கூகமொழி (Code Language)
ஜப்பான் என்ன செய்யவேண்டும்? மஞ்சூரிய எல்லையைத் தாண்டி ரஷியா மீது பாய்வதா? அல்லது மேலை நாடுகளுடன் பொருதுவதா? தொல்லைக் குறைவான - பயன் மிகுந்த நடவடிக்கை எது? டாய் நிப்பன் உன்னதப் போரவைத் தலைவர்கள் துருவித் துருவி ஆராய்ந்தனர். ஜெர்மன் படைகள் தொடர்ந்து ரஷியாவுக்குள் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். தென் அரங்கில் ஃபீல்ட் மார்ஷல் ருண்ட்ஸ்டெட்டின் சம்மட்டி அடிகளைத் தாங்கி நிற்க முடியாமல் செஞ்சேனை அணிகள் நொறுங்கிச் சின்னா பின்னமாகிவிட்டன. வட அரங்கிலோ, மார்ஷல் ஓராஷிலால்வின் எஞ்சிய படைகள் லெனின்கிராட் வட்டகைக்குள் அடைபட்டுத் தொடர்பிழந்து தத்தளிக்கின்றன. நடு அரங்கில் - மாஸ்கோ முகப்பில், மார்ஷல் திமாஷெங்க்கோவின் சேனைகள் அளவிறந்த சேதத்துடன் பின்னேறிக் கொண்டிருக்கின்றன. இந்த அரங்கில் மட்டுமே 11 லட்சம் ரஷியத் துருப்புகள் சிறைப் பிடிக்கப் பட்டிருக்கின்றனர். இவ்வளவு பெரிய சேதத்தை ஈடுசெய்ய முடியுமா? புதிய சேனைகளை அமைப்பதாயிருந்தாலும், தகுதியுள்ள சேனாபதிகள்? துக்காஷெவ்ஸ்கிகளும், புளுக்கர்களும் உருண்டு போனார்கள். ரஷ்யாவின் இப்போதைய நிலையை மிக மிக மோசம் என்று கருதலாம். ஃபீல்ட் மார்ஷல் ‘பெடோர் வான் போக்’கின் சேனைகள் தொடர்ந்து மாஸ்கோவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தன. மாஸ்கோ உள்ளிட்ட ரஷியா வடபோர் மண்டலத்தின் தலைமைச் சேனாதிபதியாக *ஜுக்காவ் நியமிக்கப்பட்டார். * மார்ஷல் ஜியார்ஜி ஜுக்காய் - ரஷிய சேனாபதிகளில் தலை சிறந்தவர். 5 முறை சோவியத் சூரன் (ஹீரோ ஆஃப் த சோவியத் யூனியன்) பட்டம் பெற்ற ஒரே ஆள். உரிய காலத்துக்கு முன்னதாகவே ரஷியாவில் பனிமாரி பெய்யத் தொடங்கியது. டாய் நிப்பன் போரவையின் தெற்காசியப் பாய்ச்சல் திட்டம் பற்றி ‘டோக்கியோ சிவப்பு வளையம்’ செஞ்சேனை உளவுத் துறைத் தலைவருக்குத் தகவல் அனுப்பியது. அதன் விளைவாக சைபீரியப் படைகள் மாஸ்கோ அரங்குக்கு மாறலாயின; ஜப்பானின் இறுதி முடிவும் பிறந்தது. ஜப்பானியக் கடற்படைகளின் தலைவர் இசரோக்கு யாமமோத்தோ, ஏற்கெனவே கடலில் லாந்திக் கொண்டிருந்த அட்மிரல் சியுச்சி நகுமோவின் அதிரடி அணிக்குக் கூகமொழிக் கட்டளை ஒன்றை விடுத்தார்; ‘நீதகா யாமா நோபுரே’*
* நீதகா மலை மீது ஏறலாம். நகுமோ தனது போர்க் கப்பல்களை ஹவாய்த் தீவை நோக்கிச் செலுத்தலானார். யாம்மோத்தோவின் இரண்டாவது கட்டளை பிறந்தது. “போருக்குச் சித்தமாகுங்கள்.” அன்று டோக்கியோ ரேடியோவின் நள்ளிரவு வானிலை அறிக்கை: “கீழ்க்காற்று... மழை” - அதுவே டாய் நிப்பன் உன்னதப் போரவையின் இறுதியறுதியான மாற்றத் தவிர்க்கக் கூடாத போர்க் கட்டளை. விமானந்தாங்கிக் கப்பல்களில் எல்லாம் அட்மிரல் நகுமோவின் பாய்ச்சல் உத்தரவு முழங்கிற்று. விமானங்கள் புறப்பட்டன, அமெரிக்கக் கடற்படையினர் பெர்ள்ஹார்பர் தளத்தை நோக்கி. ஜப்பானிய விமானங்களின் மின்னல் அடியில் பெர்ள் ஹார்பர் தளம் கிடு கலங்கியது. துறைமுகத்தில் நின்ற கப்பல்கள் எல்லாம் மூழ்கியும் கவிழ்ந்தும் போயின. திடல்களில் நின்ற விமானங்கள் நின்ற நிலையிலேயே அழிந்துவிட்டன. அதே சமயத்தில் யாமமோத்தோவின் வேறு விமான அணிகள் குவாம், மிட்வே, வேக் முதலான அமெரிக்கத் தளங்களை நையப் புடைத்துக் கொண்டிருந்தன. துருப்புக் கப்பல்கள் மலேயாவின் கிழக்குக் கரையில் படையிறக்கம் செய்தன. டாய் நிப்பன் படைகள் அணை போட முடியாத வெள்ளமெனத் தெற்கே விரைந்தன - சிங்கப்பூரைக் கைக் கொள்ள. மலைகளைத் தாவியும் காடுகளை ஊடுருவியும் ஆறுகளை நீந்தியும் சென்றது ஜெனரல் யாமஷித்தாவின் சேனை. அலோர் ஸ்டார், பினாங், கோலாலம்பூர். ஜப்பானியப் படைகள் ஓய்வு ஒழிச்சலின்றித் தொடர்ந்து தென்முகமாகச் சென்று கொண்டிருந்தன. “சிங்கப்புரா! சிங்கப்புரா! சிங்கப்புரா!” சிங்கப்பூர் தளத்துக்கான கடும் போர் தொடங்கியது. 8-ஆம் நாள் நள்ளிரவில், ஆஸ்திரேலியத் துருப்புகளால் குளுரை ஆரவாரத்துடன் காக்கப்பட்டு வந்த மேற்குக் கரையில், படகுகளில் வந்த ஜப்பானியச் சூறாவளித் துருப்புகள் தாவிக் குதித்தன. டாய் நிப்பன் ராணுவத் தேர் கடுவிரைவாய் முன்னேறுகிறது. பிரிட்டிஷ் காப்பரண்கள் தகர்ந்து போரணிகள் கண்ட கண்ட திசைகளில் கால் கிளப்பி மிரண்டோடும் மந்தைக் கூட்டங்களாகிவிட்டன. புக்கித்தீமா ஃபோர்டு மோட்டார் தொழிற்சாலையில் தென்பட்ட காட்சி நாடகம் போலிருந்தது. வாகை குடிய யாமஷித்தா, டாய் நிப்பன் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் கோலத்தில், மடித்த கைகளை மேசைமீது ஊன்றி அமர்ந்திருந்தார். ஆலிவ் நிறக் கம்பளிச் சட்டையில் வரிசை வரிசையாய் வீரப் பதக்கங்கள் தொங்கின; பம்மிப் புடைத்த மஞ்சள் முகத்தில் சின்னஞ்சிறு கீற்றுக் கண்கள் மின்னின. எதிரே குச்சுடலும் சோர்ந்த முகமுமாய், முழங்கைச் சட்டை - அரைச் சராய் பிரிட்டிஷ் தளபதி உட்கார்ந்திருந்தார். ஜப்பானிய சேனாதிபதி உறுமினார்; பிரிட்டிஷ் தளபதி முனகினார்; கிருதா மீசைக் கர்னல் சுகாத்தா மொழி பெயர்த்தார். யாம: பதில்கள் சுருக்கமாக இருக்க வேண்டும். நிபந்தனையற்ற அடிபணிவை மட்டுமே ஏற்பேன். பெர்: சரி. யாம: ஜப்பானிய சிப்பாய்கள் யாராவது பிடிபட்டனரா? பெர்: இல்லை. யாம: ஜப்பானியப் பிரஜைகள்? பெர்: காவலில் வைக்கப்பட்ட ஜப்பானியர் அனைவரும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். யாம: நிபந்தனையின்றி அடிபணிய விருப்பமா என்பதைக் கேட்க விரும்புகிறேன். பெர்: நாளைவரை தவணை தர முடியுமா? யாம: அப்படியானால் அதுவரை தாக்குதல் நீடிக்கும். பெரி: .... யாம: திட்டமான பதிலைக் கேட்க விரும்புகிறேன். நிபந்தனையற்ற அடிபணிவை மட்டுமே ஏற்பேன். என்ன சொல்கிறீர்கள்? பெரி: சரி. யாம: நல்லது. இன்றிரவு 10 மணிக்குப் போர் ஓய்வுக்கட்டளை பிறப்பிக்கப்படும். புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |