நுனை 2. கொள்ளை தானா லாப்பாங் பூங்காவைச் சுற்றிலும் தென்பட்ட காட்சி மனதை மருட்டிற்று. கனவா, நனவுதானா... எல்லாரும் ஓட்டமும் நடையுமாய் விரைந்து கொண்டிருந்தனர். தலையிலும் கையிலும் துணிச்சுருள், சிகரெட் பொதி, சைக்கிள் உறுப்புகள், ரேடியோ பெட்டிகள்... எங்கிலும் புத்தகம், புதிய பேனாக்கள், பொத்தான் அட்டைகள், சொக்கொலெட் பெட்டிகள் இறைந்து கிடந்தன. களத்துக்குப் புதிதாக வந்தவர்கள் கீழே கிடந்த சாமான்களை வாரி அள்ளினர்; ஓடின உடல்களிலிருந்து சிதறியவற்றை எட்டிப் பற்றினர். பூங்காவின் வடக்கிலும் கிழக்கிலும் மானிடமந்தை இரைச்சல் நசுங்கலாய்க் கலங்கலாய் ஒலித்துக்கொண்டிருந்தது. டிபூர் ஹோட்டலிலிருந்து வெள்ளிக்கலங்களும் கண்ணாடிப் பண்டங்களும், மேசைகளும் இருக்கைகளும், லினன் விரிப்புகளும் வெல்வெட் திரைகளும் வெளியேறுகின்றன. சந்தியில் நிற்கும் கிரேமரின் கரும்பச்சை வெண்கலச்சிலையின் கழுத்தில் புதிதாகக் கட்டியிருக்கும் மெர்டேக்கா கொடி காற்றில் சரசரக்கிறது. மனிதக் கூட்டம் அகப்பட்டதை அள்ளிச் சேர்த்துச் சுமக்க முடியாமல் சுமந்து செல்கிறது. கண்களில் ஒரே நோக்கான வெறி - கொள்ளை! கொள்ளை! கொள்ளை! ஏனென்று கேட்பாரில்லை; எதிர்த்து நின்று தடுப்பாரில்லை. முடிந்தால் எடுத்துக் கொள்ளலாம். இயன்றால் வைத்துக் கொள்ளலாம். கொள்ளை! கொள்ளை! கொள்ளை! ரெயிலடிப் பக்கத்திலிருந்து சைக்கிள் கும்பல் வருகிறது. தோல் உறைகளில் இட்ட கிரிஸ் கத்தி துலக்கமாய்த் தெரிகிறது. சைக்கிள் பவனி வந்தவர்களும், அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டிருப்போருமாகச் சேர்ந்து முழங்குகிறார்கள். “மெர்டேக்கா! மெர்டேக்கா! மொடேக்கா!” “போகலாம்” பாண்டியன், தரையில் ஊன்றி மிதித்திருந்த காலைத் தூக்கிப் பெடலை அழுத்தினான். பின்ஜெய் வேயில் திரும்பினார்கள். ஆற்றுப்பாலம். புல்லும் நாணலும் அடர்ந்த பசுங்கரைகளுக்கிடையே முத்துநீர் கடலை நோக்கி வடக்கே சென்று கொண்டிருக்கிறது. மைனா உருவச் செந்நிறப் பறவைகள் தாவிக் குதிக்கின்றன. பெந்தெங்* பகுதியிலிருந்து ஆரவாரமும் ஓலமும் கலந்த இரைச்சல் வந்தது. * கோட்டை மெடனா நகரில் துருப்புகளின் இருப்பிடம். சைக்கிள்கள் இடப்புறம் திரும்பின. மந்தைக்கூட்டம் பிளந்த வாயும் வெறித்த கண்ணுமாய்ச் சுழிந்து வளைந்து கத்திக் கூத்தாடுகிறது. “யா அலி! யா அலி!” பானை, சட்டி, தட்டு முட்டுச் சாமான்கள் சிதறிக் கிடந்தன. மேசை நாற்காலிகளும் மெத்தை தலையணைகளும் எரிந்தன. மெடானில் சிக்கிக் கொண்ட அம்பொனிய சிப்பாய்கள் - உடல் நலிவு காரணமாய் வெளியேற முடியாத நிலையிலிருந்தவர்கள் - அடி மிதி தாங்க முடியாமல் அலறினர். மண்டைகள் உடைந்து ரத்தம் கொட்டுகிறது. “யா அலி! யா அலி!” பெந்தெங் மறைவிடங்களிலிருந்து பெண்களை இழுத்து வந்தனர். ஆடையை இழந்து அம்மணமாயிருந்த அபலைகள் கையால் முகத்தை மூடிக்கொண்டு அலறினார்கள். “ஆயயயோவ்! ஓ மரியா! ஆயயயோவ்!” கொண்டைப் பிடியாய்க் கைப்பிடியாய்க் கால்பிடியாய் இழுத்துச் சென்றனர், முன்னாலிருந்த புல்விரிப்புக்கு. “ஆயயயோவ்! ஓ மரியா! ஆயயயோவ்!” புல்லாந்தரையில் பிறந்தமேனிக் கோலத்தில், மல்லாந்த உருவங்கள், சுற்றிலும் வேற்றுமானிடர். சூரியனின் பட்டப் பகலில் ஊரறிய உலகறியக் காதறியக் கண்ணறியக் கட்டாய உடலாட்டு... “ஆயயயோவ்! ஓ மரியா! ஆயயயோவ்!” பகலவன் பார்த்திருந்தான். நிலநங்கை சுமந்திருந்தாள்; ஊரார் உற்று நோக்கிக் களித்து நின்றனர். பாண்டியன் முகத்தைத் திருப்பினான். ஆ... ‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால்...” “பாண்டி!” தங்கையா இடக்கையால் முதுகைத் தொட்டான். “இப்படிக் காட்சியை இங்கு பார்ப்போம் என்று கனவிலாவது நினைத்திருக்க முடியுமா?” “எல்லாம் இடங்கால வாய்ப்புகளின் விளைவு. கிளம்பலாம்.” “உடனே. அம்மண வீரர்களுக்கு மூடி மறைப்பவர்களைக் கண்டால் பிடிக்காது." பூங்காவைச் சுற்றிலும் பழைய காட்சி அப்படியே இருந்தது. வடக்கே பிலவான் சாலையிலும் தெற்கே கெசாவனிலும் ஆட்கள் ஓடுகின்றனர்; மோதி விழுகின்றனர். “பண்டைய இலக்கியங்களின் பெருமை இப்படிச் சமயத்தில்தான் தெற்றென விளங்குகிறது.” பாண்டியன் கை பின்னே - பெந்தெங் பக்கம் சுட்டியது. “கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு!” “இம்மாதிரிக் காட்சியைப் பார்த்தே கூலவாணிகன் சாத்தன் எழுதியிருக்கிறான். ‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால்’ என்று” தங்கையா குறிப்பிட்டான். “எங்கள் ஆங்கில ஆசிரியர் அம்பலவாணர் இந்த வரிகளை அடிக்கடி கூறுவார்.” “நானும் இதே வரிகள் பற்றி நினைத்தேன்.” எதிரே, டாவ்ரோஸ் நாற்சந்தியில் கூட்டம் தெரிந்தது. பொலோனியா திக்கில் செல்லும் ராணுவ லாரி - மேற்கூடுகள் மனிதத் தலைமட்டத்துக்கு மேல் தென்பட்டன. அவுடு மார்க்கெட் தெருவில் திரும்பினார்கள். தைசீன் கடை அருகே சீக்கிய உப்பாஸ்கள் கூட்டம் கண்ணுருட்டிக் கையாட்டி உரையாடிக் கொண்டிருந்தது. மாமரத் தெரு வழியாகத் தெற்கு நோக்கிச் சென்றனர். டச்சுக்காரரின் பங்களாக்கள் அடைத்துக் கிடந்தன. பச்சைக் கம்பளப் புல் விரிப்புகள். சுவரை மறைத்துப் படர்ந்து குலுங்கும் பூங்கொடிகள். சிவப்பு மலர்கள் மண்டிய அசீலியா பாத்திகள். போதை மணம்கமழ் வெண்மலர்கள் மிதக்கும் மெக்னோலியா மரங்கள்... இந்தத் தெருவில் இதுவரை எவ்விதக் கலவரமும் இல்லை. ஜூலியானாவேயில் கடுமையான சூறைக்கொள்ளை. ஜன்னல் சட்டம், சாம்பல் கிண்ணம், துணிமணி மற்றும் கிடைத்ததை எல்லாம் சைக்கிளிலும் சாடோவிலும் ஏற்றிச் செல்கிறார்கள். சிலர் தெருவில் கைலிகளை விரித்துச் சிப்பம் போடுகின்றனர். ரேடியோ, பிரிஜிடேர், மேசை நாற்காலிகளை எல்லாம் முந்தியவர்கள் வாரிச் சென்றுவிட்டனர் போலும். பியட்ரிஸ் லான் ஒரே மனிதக்கடலாய்த் தோன்றியது. இங்குதான் ராணுவக் கிடங்குகள் இருக்கின்றன. போர்க்களத்தில் பாய்ந்து செல்வதற்கென்று பெட்ரோல் அடைத்துச் சித்தமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, கார் - மோட்டார் - பைக்குகள் ஒவ்வொன்றாய் வெளியேறி வந்து காற்று வேகமாய் விரைந்து மறைந்தன. கிடங்கு வாசல்களில் உனக்கு உனக்கென்று கூச்சல் குழப்பமாயிருந்தது. துணிச்சல்காரர்கள் மற்றவர்களை மடக்கிவிட்டு வண்டிகளை ஒட்டிச் செல்கின்றனர். திடுமெனத் தோட்டாக்கள் முழங்கின. “டும்... டுடும்... டுடுடும்...” எதிரே, இன்ஸ்பெக்டியூர் விங்கெல்மான் தலைமையில் போலீஸ்காரர்கள் தலைமட்டத்துக்குமேல் சுட்டுக்கொண்டே ஓடி வந்தனர். “அவாஸ்! அவாஸ்!” போலீஸ் எச்சரிக்கைக் குரல் குண்டோசையைத் தொடர்ந்து வந்தது. பாண்டியன் மின்னல் வேகத்தில் சைக்கிளைத் திருப்பி முடுக்கினான். போலீசார் எங்கோ கிடந்து கிளம்பி வந்திருக்கிறார்கள்... கொள்ளையை ஒடுக்கும்படி ஜப்பானியர் உத்தரவிட்டிருக்கலாம்... முன்னே கண்ணுக்குத் தெரியும் தொலைவரையில் உடலைக் குனித்துச் சைக்கிள் ஓட்டும் உருவங்கள். இருபுறமும் ஓடிவந்தோரின் காலொலி தாளம் போடுகிறது... தில்லைமுத்து பின்னாலிருந்து வந்து முந்தினான். “டட்டட் டர்ர்ர்ர்... டட்டடர்ர்ர்ர்.” டாமி துப்பாக்கி, ஜப்பானியர் சைக்கிள்கள் பறக்கின்றன. காலோட்டக்காரர்களின் மிதியோசை வீடுகளில் எதிரொலிக்கிறது. “டடட்டர்ர்ர்... டட்டட்டர்ர்ர்.” தோட்டா முழக்கம் தொடர்கின்றது. மேலே இரண்டு விமானங்கள் தாழப்பறந்து எதிரும் புதிருமாய்ச் சுற்றுகின்றன. பாண்டியனும் தில்லைமுத்துவும் ஒருமித்து மொஸ்கி ஸ்ட்ராட்டில் நுழைந்தார்கள். சில நிமிஷங்கள் கழித்துத் தங்கையா வந்து சேர்ந்தான். பொதுக்கை கடையில் போய்ப் பசியாறிவிட்டு, அவரவர் இருப்பிடத்திற்குக் கிளம்பினார்கள். புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |