உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மலர் 33. மெடான் செவ்வாய்க்கிழமை காலையில் பிலவான் துறைமுகத்தை அடைந்தது கிரியான். எங்கும் கப்பல் மயம் - துருப்புக் கப்பல்கள், சரக்குக் கப்பல்கள், எண்ணெய்க் கப்பல்கள், யுத்தக் கப்பல்கள். மெடான் சாலையில் டாக்சி பறந்தது. பாடங்குக்கார டிரைவர் ஓயாமல் வெள்ளையரை ஏசிக் கொண்டே வண்டியைச் செலுத்தினான். லபுவான், பூலுபிரையான், குளுகூர், தானா லாப்பாங், ஹாரிசன் கிராஸ்ஃபீல்ட், மொஸ்கி ஸ்ட்ராட். செட்டித் தெருவினர் திரண்டு வந்து நலம் விசாரித்தார்கள். அன்னெமர் அயலூர் போயிருந்தார். ரத்தினம்? இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து போனவன் என்ன ஆனானோ, தெரியாது. 13ஆம் நம்பர் காளிமுத்து? தடம் புரண்டு போனார். கடையிலிருந்து விலகி உள்ளூர்க்காரி ஒருத்தியைக் கட்டிக் கொண்டார். இப்பொழுது ரெம்ப லேடுபாடு. தெபிங்திங்கியில் கீரைத் தோட்டம் போட்டிருக்கிறாராம். “ஆவன்னாவைக் காணோமே, இங்கு தானே இருக்கிறார்?“ “அவருக்கு மயிண்டு கொஞ்சம் சரியில்லை. புத்தி பேதலிச்சாப்புல இருக்கு - அதுதான், சியாந்தார்ல போயி மச்சினன் கூட இருக்காரு.” “ஏன், என்ன திடீரென்று அப்படி?” “ஊர்ல இருந்து கடதாசி வந்துச்சு. அவர் சின்ன மகள் அமிர்தமுங்கிற பிள்ளை அம்மையில செத்துப் போச்சாம். அதுலயிருந்து மெனாப் பிடிச்சவராட்டம் தரையைப் பார்த்துக்கிணே இருக்காரு. யார்ட்டயும் என்னமும் பேசுறதில்லை... கண்ராவியாயிருக்கு.” “பாவம், மகள் மீது உயிராயிருந்தார்.” “அதுக்கு என்ன செய்யிறது, பாவன்னா... அதது தலையெழுத்துப்படி நடக்குது. இதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு... பிராப்தமில்லையினு விட்ர வேண்டியதுதான். போனதை நினைச்சு மனசை வாட்டிக்கிறதுனா என்ன ஆகப் போகுது... இந்தா, எங்க அக்கா மகன் - இருபது லெச்ச ரூபாய் சொத்துக்குப் பிறந்த ஒத்தைக்கொரு மகன் - திருச்சியில பீயே படிச்சுக்கிணு இருந்தான். மூணு நாள் காய்ச்சல்ல எமன் கொண்டு போய்ட்டான்னு ஓலை வந்திருக்கு... அதது பிராப்தப்படி நடக்குது. நாமள் என்ன செய்ய முடியும்...” புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|