முதற் பாகம் 7. புலியோ? வினையோ? அன்று திங்கட்கிழமை. ரங்கன் பால்மனையில் புகுவதற்கான உரிமைச் சடங்கு அன்று தான் நடைபெற இருந்தது. அதிகாலையிலேயே வீடு மெழுகி சுத்தம் செய்து சுடுநீர் வைத்து அனைவரும் நீராடினர். அண்ணன் தம்பி இருவரின் குடும்பமும் ஒன்று கூடின. கிழங்கும் கீரையும் மொச்சையும் சாமையும் தினையும் அரிசியும் வெல்லமும் அந்தச் சிறிய சமையற்கட்டில் நூறு பேர் விருந்துக்குக் குவிந்தன. முதல் ஈற்றுக் கன்றுடன் மொழு மொழுவென்று நின்ற காரி எருமையைக் குளிப்பாட்டி, மணிகள் கட்டி அலங்கரிப்பதில் ரங்கனின் தந்தை ஈடுபட்டிருந்தான். ஜோகியும் ரங்கம்மையும் ஹட்டிப் பையன்களுடன் குறுக்கும் நெடுக்கும் போவதும், வெல்லமும் பொரியும் வாங்கித் தின்பதும், சிரிப்பதும், விளையாடுவதுமாகக் களித்துக் கொண்டிருந்தனர்.
பல வண்ண மக்கள் குழுமும் இடம், குதிரைகளும் வண்டிகளும் வீதிகளில் ஓடும் பட்டணம். கடைகளில் என்னவெல்லாம் பொருள்கள் இருக்குமோ? வெள்ளிக் காசுகளுக்கு அவர்களிடம் பஞ்சமே கிடையாதாம். மேற்கே, ஜான்ஸன் துரையின் எஸ்டேட்டில் தேயிலைச் செடிகளையும், காபிச் செடிகளையும் அவன் ஒரு நாள் போய்ப் பார்த்ததில்லையா? லப்பையின் காசுக்கடை, முறுக்கு, சுண்டல் விற்கும் கிழவி கடை எல்லாம் அங்கே தான் இருக்கின்றன. ஒரு துரையின் தோட்டத்திலேயே எத்தனையோ மனிதர்கள், எத்தனை எத்தனையோ துரைகளும் துரைசானிகளும் உள்ள ஒத்தை நகரில், என்ன என்ன விந்தைகள் உண்டோ? அந்த அற்புத அதிசய நகரத்துக்கு அவன் ஓடியே தீருவான். ஆம், ஹட்டியை விட்டு அவன் போயே தீருவான்! ஒவ்வொரு நிமிஷமும் நெருங்க நெருங்க அவன் பரபரப்பு அதிகமாயிற்று. அடுத்த வாரம், ஹெத்தப்பர் கோயில் புனித நெருப்பை அணைத்து விடுவார்கள். மறுவாரம் வன்னி கடைந்து, புதுத் தீ மூட்டி, அவனைக் கோயில் எல்லையைக் காக்கச் சிறைப் புகுத்தி விடுவார்கள். மூக்கு மலையிலிருந்தும், மணிக்கல் ஹட்டியிலிருந்தும் மாமன் மாமிகள், அத்தை முதலிய உறவினர் வந்து கூடினார்கள். “நல்லா இருக்கிறீர்களா? நல்லா இருக்கிறீர்களா?” என்ற க்ஷேம விசாரணைகளும், “வாருங்கள், வாருங்கள்” என்ற வரவேற்புக் குரல்களுமாக வீட்டில் கலகலப்பு நிறைந்தது. மண்டை வெடிக்கும் வெயிலோ, பனியோ அன்று இல்லை. குளிர்காற்று மெல்லத் தவழ்ந்து சென்று உடலைச் சிலிர்க்கச் செய்து கொண்டிருந்தது. லிங்கையா காலையே நீராடி மடியுடுத்து, பால் மனையைச் சுத்தம் செய்தான். பெண் மக்கள் ஒதுங்கி நிற்க அவன் பாற்கலங்களைத் துலக்கி, சுடுநீரூற்றிக் கழுவி வைத்தான். தனியாக ஒரு மூங்கிற் பாற்குழாய் உண்டு. அது வழி வழி உபயோகித்த பாற்குழாய். சுத்தம் செய்து அந்தப் பாற்குழாயை அம்மையென நின்ற எருமையின் அருகில், ரங்கனைக் கையைப் பிடித்து, லிங்கையா அழைத்து வந்தான். அருகில் நின்ற அண்ணனிடம் பாற்குழாயைத் தந்து, “அண்ணா, நீங்கள் முதலில் பாலைக் கறந்து, பையனிடன் பாற்குழாயைத் தாருங்கள்” என்றான். தம்பி குழுமியிருக்கும் பெரியவர்களைப் பார்த்தான்; நிசப்தம் நிலவியது. அண்ணன் பக்கம் மீண்டும் பார்வையைத் திருப்பினான் தம்பி. “நீங்கள் மூத்தவர், அண்ணா, நீங்கள் தருவது சம்பிரதாயம்” என்றான், தொண்டைக் கரகரக்க. “இருக்கும். மாமா, பெரியவராக நீங்கள் சொல்லுங்கள். மல்லண்ணா நீங்கள் சொல்லுங்கள். குடும்பத்தில் நான் மூத்தவன் என்பது பேருக்குத்தான். என் தலையில் பொறுப்பைச் சுமத்தாதீர்கள். நான் கட்டுக்களில் அகப்பட விரும்பவில்லை. வீட்டுப் ‘பலப்பெட்டி’யை எவன் நிரப்பப் பாடுபடுகிறானோ, இளம் பிள்ளைகளுக்கு வழிவழியான பண்பாட்டையும் உழைப்பையும் எவன் தன்னுடைய நடத்தையால் கற்றுக் கொடுக்கிறானோ, அவனே மூத்தவன், அவனே உரியவன். என் கையால் என் கொட்டில் பெருகவில்லை; நீயே கொடு; தட்டாதே” என்றான் அண்ணன். மூக்குமலை மாமனும், கரியமல்லரும், “ஆமாம், அதுவே சரி; நீயே அதைச் செய், லிங்கா. பாற்குழாயை வாங்கிக் கொள்!” என்றனர். லிங்கையா தட்டமுடியாமல் ‘ஹோணே’ என்ற அந்தப் பாற்குழாயை இரு கைகளையும் நீட்டிப் பெற்றுக் கொண்டான். கிழக்கு முகமாக அவன் அமர்ந்து, அந்தப் புனிதமான சடங்கை ஆரம்பித்தான். ஜோகிக்கு, தந்தை மாடுகளைக் கறக்கப் பார்க்கையில் கைகளும் விரல்களும் துடிக்கும். மந்திர மாயம் போல் அவன் தந்தை கை வைக்கையிலேயே பாற்குழாயில் வெண்ணுரை எழும்பிப் பால் பொங்கி வருவதைப் போல் நிரம்பி வரும். வரம்பை மீறி அது பொங்கி நிற்கும் சமயம், ஆடாமல் அசையாமல் அவன் பாற்கலத்தில் மெள்ளச் சேர்ப்பான். இன்றும் ஜோகி, கண்களில் ஆவல் ஒளிரப் பார்த்துக் கொண்டிருந்தான். கன்றுமுட்டி, எருமை மடி சுரந்ததும், பாற்குழாயை இடுக்கிக் கொண்டு, பால் கறக்கும் விதம் காட்டி, முக்காலும் நிரம்பிய பாத்திரத்தை லிங்கையா ரங்கனிடம் தந்தான். ரங்கன் அதை ஏந்திக் கொண்டு, சிறிய தந்தை காட்டியபடி, படபடக்கும் நெஞ்சும் நடுங்கும் விரல்களுமாய், பாலைக் கறக்க முயன்றான். பேருக்கு இரண்டு பீர் தான் கிடைத்தது. கறந்த பாலை எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்குள் நுழைகையில், அனைவரும் வழி விட்டு ஒதுங்கி நின்றனர். மாதி, தலைவனுக்கு உரிய உண்கலமாகிய பெரிய வெண்கல வட்டிலையும், வேறு கலங்களையும் கொண்டு வைத்து ஒதுங்கி நின்றாள். “முதலில் பெரிய வட்டிலில் பாலை விடு. இன்று முதல் இந்த வீட்டுப் பொறுப்பில் நீ பங்கு கொள்கிறாய். குடும்பத்துக்கு வேண்டுமென்ற பாலைக் கறந்து தா. எனக்கு எல்லாவித நலன்களும் கூடட்டும் என்று நம் ஐயனை, இரிய உடையாரை வேண்டி விடு, ரங்கா!” என்றான் சிற்றப்பன். ரங்கனுக்கு எண்ணங்களும் சொற்களும் எழும் கலகலப்பு உள்ளத்தில் இருந்தால் தானே? மாடு கறந்து கொண்டு, மண்ணை வெட்டித் தானியம் விதைத்துக் கொண்டு ஹட்டிக்குள் அழுந்திக் கிடப்பதுதானா முடிவு? இல்லை, இல்லவே இல்லை. இல்லை, இல்லை என்று மனசு தாளம் போட, அவன் உண்கலத்தில் பாலை ஊற்றிய போது, அவன் கை நடுங்கியது. அவன் கை நடுங்குவதைக் கண்ட ஜோகியின் தந்தை உதவியாகக் கைநீட்டிப் பிடித்துக் கொள்ளுமுன், பாற்குழாய் ஆடிப் பால் கீழே சிந்திவிட்டது. லிங்கையாவுக்கு, நேரக்கூடாதது நேர்ந்து விட்டாற் போல் நெஞ்சு திடுக்கிட்டது. குழுமியிருந்தவர்களின் கசமுச ஒலிகள் எழும்பின. லிங்கையா சட்டென்று அவன் கையைப் பிடித்து மற்றக் கலங்களில் பாலை ஊற்றினான். இது நிகழ்கையிலேயே பெண்டிர் பக்கம் கசமுசவென்ற ஒலி வலுக்கத் தொடங்கியது. புனிதமான சடங்கு நிகழ்கையிலே பெண்களின் பேச்சு எழுவதா? மூக்குமலை மாமன் கோப முகத்தினராய் பெண்கள் பக்கம் நோக்கினார். அந்தக் கசமுசப்புக்குக் காரணமும் இதுதான். நஞ்சம்மைக்குச் சடங்கு மைத்துனன் வீட்டில் வைத்துச் செய்வதிலேயே இஷ்டமில்லை. அந்த வீட்டில் பால்மனை இல்லையா, உண்கலம் இல்லையா? அதை அல்லவா முதலில் வைத்துப்பாலை ஊற்றச் செய்ய வேண்டும்? அவனுக்குத் தன்மனைக்கு எதையும் தேடி வரும் பொறுப்புக் கிடையாதா? முதலில் அண்ணன், தம்பியையே செய் என்று கூறியது போல், தம்பி மனைவி தன்னிடமே அந்த உரிமையை விடுவாள் என்று அவள் பெரிதும் எதிர்ப்பார்த்திருந்தாள். மரியாதைக்குக் கூட அல்லவா அவள் அதை மொழியவில்லை? அவர்கள் செய்வன எல்லாம் சூழ்ச்சிகள் இல்லையா? பையனையுங் கூட குடும்பத்துக்குப் பிடுங்கிக் கொள்கிறார்களா? மூக்குமலை மாமி முன் வந்து சமாதானமாக, “அந்த மனைக்குச் சென்று அங்கேயும் பால் ஊற்றட்டும்” என்றான். “இருக்கட்டும், இருக்கட்டும்” என்று கையமர்த்திய ஜோகியின் தந்தை, சமையற் பகுதிக்கு வந்து, எல்லாப் பாண்டங்களிலும் பாலைத் தெளிக்கச் செய்தான். பின்னர், எதிர் மனைக்கும் சென்றான். முன்னதாக நஞ்சம்மை சென்று அங்கு உண்கலம் எடுத்து வைக்கவில்லை. மாமியே எடுத்து வைக்க, பாலைத் தெளிக்கச் செய்தான். பிறகு, குழுமியிருந்தவர்களில் தந்தை மீதும், தாயார் மீதும், பெரியவர்கள் மீதும் பாலைத் தெளிக்கச் செய்தான். “வற்றாத பால் வழங்க வளம் பெறுவாய்; எருமைகளும் பசுவினங்களும் செழிக்கட்டும்” என்று ஒவ்வொருவரும் ஆசிகள் வழங்கினர். பின்னர் மீதியுள்ள பாலுடன் சிற்றப்பன் அழைத்துச் செல்ல, ரங்கன் பால்மனைக்குச் சென்றான். கைப்பாலை வைத்தான். சடங்குகள் இத்துடன் நிறைவேறியதும், “நாளையிலிருந்து நீதான் இந்த எருமையைக் கறக்க வேண்டும், ரங்கா!” என்றார் தந்தை. ரங்கனின் முகம் கார்கால வானை ஒத்திருந்தது. “பசி பையனுக்கு, முதலில் அவனுக்கு உணவு வையுங்கள்” என்றார் கரியமல்லர். பாலும் வெல்லமும் நெய்யும் சேர்ந்த பொங்கலை மணக்க மணக்கத் தையல் இலையில் (மினிகே இலைகள்) முதியவளான பாட்டி ரங்கனுக்குப் படைத்தாள். ரங்கனின் விரல்கள் இனிய உணவில் அளைந்தன; சோறு ருசிக்கவில்லை. நெஞ்சு அடைத்தது. “ஏண்டா தம்பி, சாப்பிடு, பசி இல்லையா?” என்றாள் பாட்டி. “தனியாகச் சாப்பிடக் கஷ்டமாக இருக்கும். இல்லையா ரங்கா!” என்று லிங்கையா அருகில் வந்தான். இதற்குள் பெரிய உண்கலங்களையும், தையல் இலைகளையும் கொண்டு வந்து மாதி எல்லோருக்கும் வைத்து அமுது படைக்கலானாள். நாலைந்து பேர்களாய் ஒரு குடும்பமாய்ப் பழகியவர்களாய், ஒவ்வொரு கலத்தைச் சுற்றி அமர்ந்தனர். இனிய களியும் சோறும் குழம்பும் மோருமாய்ப் பெண்டிர் பரிமாற அண்ணன் தம்பி ஒற்றுமையைப் புகழ்ந்த வண்ணம் எல்லோரும் உணவருந்தலாயினர். “எருமை நடந்துவிடுமா லிங்கையா?” என்று ஒருவர் சட்டென்று கேட்டார். இச்சமயம் இதை ஏன் நினைவுபடுத்துகிறான் என்று நினைத்த லிங்கையா சட்டென்று முந்திக் கொண்டு, “கால் கூடினால் நடந்து விடும். நாலைந்து நாளில் மெள்ளக் கொட்டிலுக்குத் தூக்கி வந்துவிடலாம்” என்றான். முதல் நாள் முறைகாவல் இருந்த ராமன், “நேற்று நாய் விடாமல் குரைத்தது. அருவிக்கரைக்கு அப்பால் கொள்ளி போல் கண்கள் தெரிந்தன. எனக்கு என்னவோ சந்தேகமாக இருந்தது. காட்டிலிருந்து ஏதோ மோப்பம் அறிந்து வந்திருக்கிறது. நான் ஈட்டி கொண்டு போகவில்லை. பயமாக இருந்தது” என்று விவரித்தான். ஜோகியின் தந்தை திடுக்கிடுகையிலே, “வேட்டைஇருக்கிறதா? இல்லை, நரி ஆட்டுக்கடா எதையானும் பார்த்து விட்டுப் புலி என்கிறாயா?” என்றான் நான்காம் வீட்டு போஜன். “அட, அத்தனைக் குருடா நான்? தொரியனைக் கேட்டுப் பார்!” என்றான் ராமன் ரோஷத்துடன். லிங்கையாவுக்குக் கவலை மேலிட்டது. “அப்படியானால் சுற்றுக் கிராமங்களில் தெரிவித்து வேட்டைக்காரர்களை உஷார்படுத்தி அழைத்து வர வேண்டாமா? அருவிக்கரை வரையிலும் வந்ததென்றால் நம் ஆடுமாடுகளுக்கு அபாயமில்லையா?” என்றான். “சொல்லி அனுப்புவோம்” என்று கூறியபடியே கரியமல்லர் எழுந்து கை கழுவப் போனார். அனைவரும் உண்டு முடித்துத் தாம்பூலம் தரிப்பதும் புகைபிடிப்பதுமாக வெளிப் புல் திட்டுக்கு வந்து விட்டனர். இளைஞராக இருந்தவர்கள், ஹெத்தப்பா கோயில் முன், மைதான மூலையில் இருந்த உருண்டைக் கல்லைத் தூக்குவது பற்றிய பேச்சுக்களில் உற்சாகமடைந்தவராய் அங்கே சென்றனர். ஜோகியின் தந்தை, உண்டு முடித்ததும் ஏதோ ஓர் உந்தலால் எருமை மேயும் குன்றின் பக்கம் நடந்தான். அவன் முதல் நாள் மாலையில் அதைப் பார்த்ததுதான். ஜோகி தினமும் காலையில் புல்லரிந்து கொண்டு செல்வான். அன்றைக் கோலாகலத்தில் அவன் போட்டானோ இல்லையோ? “புலி புலி! அதா எருமையைக் கடிச்சு, இழுத்திட்டுப் போச்சு!” லிங்கையாவுக்கு அவனுள் ஏதோ ஒரு மாளிகை குலுங்கி விழுந்தாற் போல் அதிர்ச்சி உண்டாயிற்று. உண்ட உணவு குலுங்க, உணர்வு இருள, அவன் ஓடினான். புல்லின் சரிவிலே அவன் அமைத்திருந்த சாக்குக் கூடாரத்திலே அவன் கண்ட காட்சியை எப்படிச் சகிப்பான்! எருமையின் தலை தனியாகப் பிடுங்கப்பட்டு, பாதி சிதைந்து இரத்தமும் களரியுமாக இருந்தது. உடலில் பாதி காணப்படவில்லை. அது வந்து இழுத்துப் போன தடமாக அருவிக்கரை வரையிலும் அப்பாலும் இரத்தம் சொட்டிப் பெருகியிருந்தது. மண்ணிலும் மந்தையிலும் உயிரை வைத்திருந்த அந்தப் பெருமகனின் கண்களிலே நீர் கோர்த்தது. இது எதைக் குறிக்கிறது? புனிதச் சடங்கை நிறைவேற்றும் நாளிலே, இந்த அவலம் எந்தத் தீமையைக் குறிக்கிறது? ஐயனே! அவன் அந்த மண்ணில் பிறந்து, நினைவு தெரிந்து, இப்படி ஒரு படுகளரியைத் தன் கண்களால் கண்டதில்லையே! புலி, புலி என்பார்கள். அஞ்சிக் காபந்துகள் செய்வார்கள். ஒரே ஒரு முறை எப்போதோ மூன்றாம் வீட்டு மல்லனின் தாத்தா, சிறுத்தை ஒன்றை ஈட்டி எறிந்து கொண்டு வந்ததுண்டு. அது தவிர, ஜான்ஸன் எஸ்டேட் துரை கூட, இந்தப் பக்கம் புலி இல்லை என்று சொல்லிக் கொண்டு காடையையும் கவுதாரியையும் முயலையும் அல்லவோ சுட்டுக் கொண்டு போகும் செய்தி கேட்டிருக்கிறான்? அப்படியிருக்க பட்டப்பகலில், புலி தோன்றி இப்படி ஒரு கோரத்தை நிகழ்த்திப் போயிருக்கிறதே! இது புலிதானா? அல்லது மந்திரமா, மாயமா! ஒரு நினைவு அவனுள் தோன்றி, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையிலும் சிலிர்ப்பை ஓட்டியது. ரங்கன் - ரங்கன் இரிய உடையாருக்கு உகந்தவன் அல்லனோ? ‘மகனே, ஜோகியல்லவா, நான் தேர்ந்தெடுத்த பையன்? நீ ஏமாற்றுகிறாயே! என்று ஐயன் கேட்கும் கேள்வியா? ஈசுவரா, இதென்ன சோதனை?’ கண்கள் ஆறாய்ப் பெருக, அவன் அந்த இடத்திலேயே நின்றான். சற்று நேரத்தில் ஆண், பெண், குஞ்சு குழந்தைகள், ஹட்டி அடங்கலும் அங்கே ஓடி வந்தன. அப்படி வராதவன், மன ஆறுதலும் மகிழ்ச்சியும் பரபரப்பும் அந்தச் சமயத்தில் உடையவன் ஒருவன் இருந்தான், ரங்கன்! குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
குறள் இனிது மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2019 பக்கங்கள்: 272 எடை: 300 கிராம் வகைப்பாடு : வர்த்தகம் ISBN: 978-81-937667-9-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 225.00 தள்ளுபடி விலை: ரூ. 200.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தமிழின் மகத்தான நூலான திருக்குறள் காட்டும் வழியைப் பலரும் பலவிதங்களில் எழுதினாலும் இன்னும் பல வாசல்களை அது திறந்துகொண்டே இருக்கும். திருக்குறளில் பொதிந்துள்ள மேலாண்மை தத்துவத்தை அகழ்ந்தெடுத்திருக்கிறார் சோம வீரப்பன். ‘இந்து தமிழ்’ நாளிதழின் வணிக வீதி இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|