மூன்றாம் பாகம் 7. தெய்வம் கருணை மறக்குமா? மலை முகடுகளை விழுங்கி விடுத்து விளையாடும் கார்முகிலோன் மலையன்னையிடம் விடைபெற்றுச் சென்று விட்டான். வெறிக்காற்றும் சாரலும் அவன் சென்ற திசையிலே மடங்கி விட்டான். மலையன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் முன் “அதற்குள்ளாயிற்றா?” என்று கேட்பவன் போல், கொடுந் தண் கிரணங்கள் கொண்டு பனியோன் வந்துவிட்டான். இரக்கமற்ற அவன் தன்மை சொல்லத் தரமாமோ? ஒரே இரவிலே பசுமை மாயக் கருக்கி விடுவான். ஈரம் பாய்ந்த மண்ணுக்குள்ளிருந்து தலைநீட்டும் மென் முளையை நீட்டிய கணமே பொசுக்கிவிடுவான். மரங்களெல்லாம் அவன் கொடுமையிலே தளிரிழந்து, இலை உதிர்ந்துப் பரிதவித்து நிற்கும். கால்நடைச் செல்வங்கள் காய்ந்த புல்லைக் கடித்திழுத்து ஏமாற்றத்துடன் சோர்ந்து பெருமூச்செறியும் கொடுமையைக் காணச் சகிக்குமோ?
“உன் கர்வத்தைக் குலைக்கிறேன், பார்!” என்று ஒளியோன் வெங்கிரணங்களால் அவனை ஒரு கணத்திலே ஆவியாக்கி வென்று விட்டு, மலையன்னையை நோக்கி இங்கிதமாகப் புன்னகை செய்வான். செம்பொற் பரிதியின் கிரணங்கள் வந்து விழும் இடமாகப் பார்த்து, மாதி ஓடி வந்து நின்றாள். பள்ளம், சரிவு, கூரை முதலிய எல்லா இடங்களும் கற்கண்டைப் பொடி செய்து தூவி வைத்தாற் போல் இருந்தன. மாதி கால்களில் முரட்டுச் செருப்பை மாட்டிக் கொண்டிருந்தாள் என்றாலும் விரல் நுனிகள் சந்துகளெல்லாம் அந்தக் கொடும் பனியின் துளிகள் பட்டு, கந்தகத் திராவகம் பட்டாற் போன்ற எரிச்சலைத் தந்தன. தேய்ந்து சுருங்கிய கைகளைத் தேய்த்துப் போர்வைக்குள் மூடிக் கொண்டாள். இளஞ்சூரியனின் கிரணங்கள் உறைத்தன. நாளாக ஆக, அவளுக்கு ஏனோ குளிரே தாங்க முடியவில்லை. கணவன் மறைந்து ஒன்றரை ஆண்டுக் காலத்தில் அவள் ஒன்பது ஆண்டுகள் மூத்து விட்டாற் போல் சுருங்கி ஒடுங்கி விட்டாள். கோயிலின் பக்கமுள்ள மரம், இலைகளை எல்லாம் உதிரித்து மொட்டையாக நின்றது. கோயிலைச் சுற்றி, ஜோகி தீ காத்த நாட்களில், பச்சென்ற விளை நிலமும் பூச்செடிகளும் விளங்கியது. அந்தப் பணியில் அவனைப் போல் உள்ளும் புறமும் ஒன்றாக இருந்து ஆற்றியவர் முன்னுமில்லை; பின்னுமில்லை. ஜோகி மாட்டுக் கொட்டிலில் சூரியனுக்கு வணக்கம் கூறியபடியே மாடுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தான். கிரிஜை சாணம் சுமந்து எருக்குழிக்குச் சென்றாள். வீட்டு அடுப்பில் அவள் வைத்திருந்த சுள்ளி படபடவென்று எரிந்து நீலநிறமான புகையை வெளியே வரச் செய்தது. மற்றப்படி வீட்டிலே சத்தமில்லை; சந்தடி இல்லை. பனி கரைந்து விட்டது. மாதி அந்த வெயிலில் குந்திக் கொண்டு உட்கார்ந்தாள். அவள் கணவரும் அவளும் அதே போல் உதயத்தில் வேலைகளில் ஈடுபட்டிருக்கையில் கண் மங்கலான கிழவி, குளிரைத் தாங்காமல் அதே இடத்தில் தான் உட்கார்ந்து கொள்வாள். எத்தனை ஆண்டுகள் ஆயின! அதே இடத்தில் அதே காலத்தில், அதே நேரத்தில் வெயில் விழுகிறது; அதே போல் முதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஒரு புறம்; கீழ்க்கிளைகள் ஒரு புறம். கழுக்கு மொழுக்கென்று ஜோகி அவள் மடியில் அடங்காமல் படுத்து உதைப்பான். அடிக்கொருமுறை மடியிலே அதட்டி அவனை இருத்திக் கொண்டு, நன்றாகத் தரியாத விழிகளைச் சூனியத்தில் லயிக்க விட்டபடி, ஒளியோனின் வெம்மையிலே தன்னை மறந்து மூழ்கியிருப்பாள். பெண்ணொருத்தி வாழ்ந்து வாழ்வின் பூரணத்தை அடைந்துவிட்ட வெற்றியின் ரேகைகள் போல் அந்த முகச் சுருக்கங்கள் தோன்றும். மடியிலே அந்த எதிர்கால நம்பிக்கையின் உருவமாக, உயிராக இதமாகச் சூடு தரும் குழந்தை. கையையும், காலையும் உதைத்துக் கொண்டு அது மூட்டும் இன்பத்திலே, “தே, சும்மா இரு” என்று அவள் அதட்டுவதும் செல்லக் கொஞ்சலாகத் தானே இருக்கும்? அந்தப் பேறு மாதம்மைக்கு என்று கிடைக்கப் போகிறது! அவளுடைய கனவனின் சொற்களிலே அவளுக்கு நம்பிக்கை இருந்தது. வருவதை முன்பே கனவிலோ, ஓர் அதீத உணர்விலோ அறிந்து சொல்லும் சக்தி அவருக்கு இருந்ததாக அவள் நம்பிக்கை வைத்திருந்தாள். நோயாய் அவர் விழுந்த காலத்திலேயே, “இந்தப் பிறவி எடுத்து நானே இவ்வீட்டில் வருவேன்” என்று கூறியிருந்த விஷயத்தை அவள் உள்ளம் ஒரு மூலையில் வைத்துக் காப்பாற்றி நம்பிக்கை என்னும் நீர் வார்த்துக் கொண்டிருந்தது. ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அதற்கு அறிகுறியையே காணோமே! ஒருவேளை, பாரு ஜோகிக்கு மனைவியாக அந்த வீட்டில் வந்திருந்தால் புதல்வன் பிறந்திருப்பானோ? “அத்தை!” என்று கிரிஜை அருகில் வந்து அழைத்தாள். மெல்லிய இதழ்கள், பனிக்கும் வெயிலுக்கும் சிவந்து கறுத்திருந்தன. காது மடல்கள் உணர்ச்சிவசப்படுகையில் சிவப்போடுபவை. உடல் கொடி போல் சிறுவாகு. நம்பிக்கையை அறவே ஒழிக்க நியாயமில்லை. அத்தை தன்னை ஏற இறங்கப் பார்ப்பதை உணர்ந்த கிரிஜை புது பெண்ணைப் போல் நாணிப் புன்னகை செய்தாள். “பல் விளக்கச் சுடுநீர் வைத்திருக்கிறேன், அத்தை. காபி காய்ச்சி வைத்திருக்கிறேன்” என்றாள். இதற்குள் கை முள்ளும் கொத்தும் கூடையுமாகப் பாரு வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள். “நல்லாயிருக்கிறீர்களா அத்தை? என்ன பனி, என்ன பனி! பயிர் தாளாத பனி” என்று புன்னகை செய்தாள். மாதி தலையை ஆட்டினாள். அசட்டுப் பெண்! மண் மீதும் பயிர் மீதும் உயிரை வைத்துத் தன்னை ஏமாற்றிக் கொள்கிறாளே! ஒரு கரித்துண்டினால் பல்லைத் துலக்கிவிட்டுச் சுடுநீர் ஊற்றி வாயை அவள் கொப்புளிக்கையிலேயே, பித்தளைக் கிண்ணத்திலே காபித் தூளும் வெல்லமும் வெந்நீரும் ஊற்றிக் காபி தயாரித்து வந்து விட்டாள் மருமகள். கூடவே ஜோகியும் வந்து அமர்ந்தான். மாதி குளிருக்கு இதமாக அந்தக் காபியை ருசித்துப் பருகினாள். “நேற்று இரவு ரங்கண்ணன் வீடே வரவில்லை. அருவிக்கப்பால் காடு அழித்துப் பற்றி எரிந்தது” என்றான் ஜோகி. அம்மை விரிந்த விழிகளுடன் நோக்கினாள். “தேயிலை போடவா?” “ஆமாம். சீமை உரம் போடு, இம்மலைக் காட்டைத் தேயிலைத் தோட்டமாக்கிப் பணம் தருகிறேன் என்று பெரிய காலாக எடுத்து வைத்திருக்கிறான்.” “இல்லை அம்மா, இல்லை. நீங்கள் நினைப்பது போல ரங்கண்ணா நிசமாக நல்லவராக மாறவில்லை; வழக்கு அவர்கள் பக்கம் தோற்கவுமில்லை. இங்கு ஜயிக்கவுமில்லை, தள்ளுபடியாகிவிட்டது. பகையை வளர்க்கப் போட்டி போடுவதனால் நல்லவனாக முடியுமா? நான் தான் அம்மா, இதற்கு விதை ஊன்றினேன். போதாத காலம் என் நாவில் தொடர்ந்தது.” “நீங்கள் உங்களைப் பற்றியே சொல்கிறீர்களே! பெரியவர்களாக அவர்கள் ராஜிக்கு வரக்கூடாதா?” என்றாள், பாத்திரத்தை எடுத்துப் போக வந்த கிரிஜை. அவள் அதுவரையில் அப்படிப் பேசியதில்லை. “அவர்களுக்கு ஏன் அப்படியேனும் ராஜிக்கு வரவேண்டும்? ஊரில் முக்காலும் அவர்கள் பக்கம்; போதாதற்கு வெளியூரிலும் செல்வாக்கு” என்றான் ஜோகி. அப்பொழுது வாயிலில் கார் ஓசை அவர்கள் மூவருடைய கவனத்தையும் திருப்பியது. அவ்வளவு காலையில், கிருஷ்ணன் காரில் வருகிறானா? என்ன விசேஷம்? வாயிலில் எட்டிப் பார்த்த மாதி, ஜோகி, கிரிஜை மூவருக்கும் ஒரு கணம் பகீரென்றது. நான்கு தினங்களுக்கு முன், நான்கு வீடுகள் தள்ளி போஜன் மனைவிக்குக் காய்ச்சல் அடித்தது. காய்ச்சல் மிக அதிகமாகி இருந்த காரணத்தாலோ என்னவோ, அவளை மெல்லக் குதிரையின் மீது ஏற்றி வைத்து, எஸ்டேட் பக்க ஆஸ்பத்திரிக்கு இட்டுச் சென்றதை அவர்கள் கண்டனர். முன்பெல்லாம் துக்கமோ, சுகமோ, எந்தச் சிறு செய்தியானாலும் ஒரு குடும்பத்தவர் போல் கூடிக் கலந்து செய்வார்கள். அதுதான் இல்லையே! தொடர்ந்து போஜனும் அவன் அம்மையுங் கூட ஆஸ்பத்திரிக்குச் சென்று மூன்று நாட்களாயின என்பதை மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர். என்ன ஆயிற்று? கிருஷ்ணனின் வண்டியிலிருந்து, கிழவியும் போஜனும் மட்டுமே அழுது கொண்டு, ஊர் கூட இறங்கிச் சென்றனர். மற்ற வீடுகளில் இருந்தவர்கள் அவசரமாக விரைந்தார்கள். ரங்கம்மையின் மகன் சற்றைக்கெல்லாம் வந்து, “இறந்து விட்டாள்” என்று கைக்காட்டினான். எல்லாருடைய முகங்களிலும் இருளும் கிலியும் படர்ந்திருந்தன. கிருஷ்ணன் உடனே திரும்பி விட்டான். அவ்வளவு தூரம் வந்த சுருக்கில் அவன் திரும்பியதில்லை. நான்கு குழந்தைகளின் தாய் எப்படி இறந்தாள்? ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கோத்தர் வேண்டாம் என்ற தீர்மானத்துடன் குறும்பரையும் தொடர்புகளிலிருந்து நீக்கி விட்டனர் ஊரார். அவனுக்கு அப்போதைக்கப்போது, கொடுப்பதை நிறுத்தி விட்டனர். மூன்று நாள் காய்ச்சலில் எப்படி இறந்து போனான். ஜோகியின் பெரிய தந்தை அப்போதுதான் செய்தியைக் கொணர்ந்தார். “உடலை அங்கேயே எரித்து விட்டார்களாம். பிளேகாம்.” “ஐயோ!” ரங்கம்மை தன்னையும் அறியாமல் இந்த ஒலியை எழுப்பினாள். முன்பு எப்போதோ வந்த அந்தக் கொடிய மாமாரியில் தான் அவள் புருஷனின் குடும்பம் முழுவதும் அழிந்ததாகச் சொல்லியிருக்கிறாள். “தெய்வங்களுக்குப் பூசை போட வேண்டும். மாரியம்மன் பூசை நடக்கவே இல்லை. பணம் வந்தால் தெய்வம் மறந்து போகிறது” என்றாள் மீண்டும் மாதம்மை. கரியமல்லர் தாம் வர வேண்டுமா? பூசைச் சாமான்கள் சகிதம், அண்ணன் தம்பி இரு குடும்பத்தினரும் காலையிலேயே கோயில் பக்கம் சென்று விட்டனர். மாதி ஒருத்தியே இரு வீடுகளுக்கும் இடையே வாயிலில் உட்கார்ந்திருந்தாள். அப்பொழுது ஹட்டிக்குள் ‘பிளேக்’ மாரியை எதிர்க்க, கிராமத்தைப் பாதுகாக்க, கிருஷ்ணன் சுகாதார அதிகாரிகள், தடுப்பு ஊசிபோடும் மருத்துவர்கள் சகிதம் வந்திருந்தான். அதிகாரிகள் வந்தார்கள். வீடு வீடாக, ஒருவர் மீதமின்றி ஊசி போட்டார்கள். இரு வீடுகளுக்கும் இடையே மாதம்மை உட்கார்ந்திருந்தாள். எல்லோரும் ஊசி போட்டுக் கொண்டார்களா என்று கண்காணித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், அவர்கள் வீட்டையும் மாதம்மையையும் பார்த்த வண்ணம் குறுக்கும் நெடுக்கும் நெஞ்சு குறுகுறுக்க நடந்தான். பாருவுக்கு இரு குழந்தைகள்; ரங்கம்மையும் குழந்தைகளை உடைய தாய். ஊசி போட வேண்டாமா? பெரியவர்கள் வினைக்குக் குழந்தைகள் என்ன செய்வார்கள்? ஆனால் முன் கூட்டியே அவன் முயற்சி தெரிந்து கொண்டே அவர்கள் எல்லாரும் எங்கோ போயிருக்கின்றனரே! கிருஷ்ணன் பார்த்துவிட்டுப் பேசாமல் சென்றது மாதம்மைக்கு அளவில்லாத வருத்தத்தை ஊட்டியது. ஒவ்வொரு வீடாகப் போய்ப் போய் அழைத்தவன், வெயில் காயும் கிழவியிடம் ஒரு பேச்சுக் கேட்கக் கூடாதா? அவள் கூடவா விரோதம்? தெய்வத்துக்குச் செய்வதை மறந்து, எவரையோ அழைத்து வந்து ஊசி போட்டால் சரியாகுமா? இந்த அலங்கோலம், தெய்வ நம்பிக்கையிலும் சீலத்திலும் வழி பிறழாத அவள் கணவனின் மறைவிலா தொடங்க வேண்டும். மாதியின் முகத்தில் கண்ட கீற்றுக்களெல்லாம் நீரில் முழுகின. தொடர்ந்து அந்த வாரத்துக்குள் ஹட்டியில் தொரியர் குடிலில் இருவர் பிளேக்குக்குப் பலியானார்கள். வியாழனன்று மாலை ரங்கியின் கைக்குழந்தைக்கு உடல் கதகதத்தது. வெள்ளி, சனி, ஞாயிறுக்குள் மளமளவென்று நோய் அவளுடைய மூன்று குழந்தைகளை விழுங்கி விட்டு, பாருவின் இரு மக்களையும் தொற்றியது. ஊர் மக்கள் பீதியடைந்தார்கள். வேற்று ஊர்களுக்கு ஓடியவர்கள் சிலர்; வீட்டுச் சாமான்களை எரித்தவர்கள் சிலர். கரியமல்லர் குடும்பம் ஒத்தைக்கு நகர்ந்து விட்டது. மகா மாரி அடுத்தடுத்த அந்தப் பக்கத்து ஹட்டிகளை எல்லாம் பீடித்தது. மூக்கு மலை மாமன் வீட்டில் மாமனையும் மகனையும் தவிர, எல்லோரும் நோய்க்கு இரையாயினர். இறையவர் தீ காக்கும் பையன் பலியானான். தீயை அவித்துக் கோயிலை இழுத்து மூடிவிட்டார்கள். சிவந்த முகங்களுடன் படுத்திருந்த செல்வங்களைக் கண்டதும் பாருவின் வயிறு பற்றிக் கொண்டது. “லட்சு என்றும், ஜயா என்றும் ஆசையாகப் பெயரிட்டேனே, அருமை மக்களே, உங்கள் வாழ்விலே தானே நான் மறைந்திருக்க எண்ணினேன்?” என்று துடித்தாள். மூன்று குழந்தைகளை அடுக்கடுக்காகப் பறிகொடுத்த ரங்கம்மை, வீட்டில் புகை கூடப் போட விரும்பாதவள் போல் உறங்கிக் கிடந்தாள். “அம்மா, அம்மா!” என்று குழந்தைகள் முனகினார்கள். பாரு என்ன செய்வாள்? தெய்வத்துக்குப் பூஜை போட்டும் பயனில்லையா? பாழும் நோய் பூவான மேனியிலா பற்ற வேண்டும்? இனி அவளுக்கு என்ன இருக்கிறது? நுனி மரத்துத் தளிரையும் பாழான பனி கருகிச் செல்ல விழுந்து விட்டதே! “புலியையும் சிறுத்தையையும் விடக் கொடியதாயிற்றே; வருமுன் தடுக்க வேண்டும். பார்க்கிறேன்” என்று தான் மருத்துவர் மருந்து தந்தார். “என் குழந்தையைத் துடைத்து எடுத்துக் கொண்டு என்னை மட்டும் ஏனம்மா விடுகிறாய்? என்னையும் கொண்டு போ! எனக்கும் வரட்டும்!” என்று தன் குழந்தைகளை அணைத்தவளாகப் பாரு இரவைக் கழித்தாள். ஆனால், மாரியம்மை, அந்தப் பிஞ்சுக் குழந்தைகளை அடக்கிக் கொண்டதும் அந்த வீட்டில் வேலையில்லை என்று போய்விட்டாள். பாரு, தன் வாழ்வில் அதை விடக் கொடிய நிகழ்ச்சி நேர்ந்திராத அதிர்ச்சியில் துடிதுடித்துக் கதறினாள். ஆறுதல் கூற மாதிக்கு நாவேது? ஒரு வேளை, அந்த ஊசியைப் போட்டிருந்தால் குழந்தைகள் பிழைத்திருப்பார்களோ? ஒரு பிள்ளைக்காக ஏங்கி விழித்து அவள் காத்திருக்கையில் தெய்வம் இருந்த பூக்களைத் திருகிக் கொண்டு போகுமோ? இரு வீடுகளும் திடலாகப் போக வேண்டுமா? தேன் போல் பாய்ந்த வெயிலை, கருணையின்றிக் கொளுத்தும் வெயிலாக வெறுத்து மறுத்தாள். நீலவானை நோக்கி அவளுடைய எரிந்த உள்ளம் சாபமிட்டது. “என் பிள்லை என் பிள்ளை என்று கொக்கரிக்கிறாயோ? இந்தச் சூரியன் போய் நீயும் பரிதவிப்பாய், வானமகளே!” என்று கதவைச் சாத்திக் கொண்டு, நாளெல்லாம் பாருவை அணைத்துக் கொண்டு மாதம்மை கதறினாள். ரங்கம்மை மிஞ்சிய குழந்தைகளுடனும் கணவனுடனும், கோத்தைப் பக்கம் உயிர் பிழைக்கப் போய்விட்டாள். ஹட்டியே பூட்டப்பட்ட வீடுகளுடன் வெறிச்சோடிப் போயிற்று. வெளிச்சிட்ட கிராமத்திலே, கடமையைக் கருதி, முதியவனையும் தமக்கையையும் தேற்றுபவளாக, இரு குடும்பத்து ஆண்மக்களுக்கும் உணவு வட்டிப்பவளாக, அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்குமாக ஓடி உயிர் கொடுத்துக் கொண்டிருந்தவள், கிரிஜை ஒருத்திதான். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
ஸ்ரீமத் பாகவதம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 275.00 தள்ளுபடி விலை: ரூ. 250.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: கடவுளைத் தேடும் ஆன்ம யாத்திரையை எளிமைப்படுத்தவே இந்திய இதிகாசங்களும் தத்துவங்களும் புராணங்களும் விதவிதமாக முயற்சிக்கின்றன. பேரொளி வடிவான பரம் பொருளின் ஓசை வடிவான வேதம், ஜீவன்களின் மீது கொண்ட கருணையால் அவதாரமெடுத்தது; அதுவே கண்ணன். தேவகியின் மணிவயிற்றில் குடியேறிய கணம் முதல், ஒரு வேடனின் அம்பு தைத்து வைகுந்தம் ஏகும் வரையிலான கண்ணனின் வாழ்க்கை ஒரு போராளிக்கானது. பிறக்கும் முன்பே எதிரியான கம்சனை எதிர் கொண்டார். பிருந்தாவனவாசிகளுக்காக இந்திரனின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முழங்கினார். மகாபாரத யுத்தத்தை வழிநடத்தினார். சொந்த இனமே இடம் தெரியாமல் அழிந்ததை கொஞ்சமும் சலனமில்லாது கண்டார். இதற்கிடையே காதலும் கனிவும் வேதமும் வேதாந்தமும் கலந்த ரசமான வாழ்க்கை அவருடையது. எத்தனை இடர் வந்தபோதிலும் கண்ணனின் புன்னகை தவழும் முகத்தில் வாட்டம் எட்டிப் பார்த்ததில்லை. அவரது வாழ்க்கையே கொண்டாட்டமாக இருந்ததால், அவர் இன்றும் நம் உள்ளம் கவர் கள்வனாய் வளைய வருகிறார். அதனாலேயே அவரது சரிதம் ஜீவன்களின் பாதையாக சமைந்தது. பரீட்சித்தின் வாயிலாக சுகப்பிரம்ம ரிஷி மனித குலத்திற்கு வழங்கிய பாகவதம் என்கிற மதுரமான தத்துவம், கண்ணன் என்கிற வசீகர விஷயத்தால் எளிமையாக்கப்பட்டு மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது. ரிஷிகளின் இந்த வித்தைக்கு சற்றும் குறைவில்லாது ‘தினகரன் ஆன்மிக மலரில்’ பாகவதத்தை தொடராகத் தந்தபோது நமது வாசக அன்பர்கள் பாகவதக் கடலில் மூழ்கித் திளைத்தார்கள். பாகவதம், தேன் என எத்தனை விதமாய் எத்தனை வசீகரமான வார்த்தைகளால் சொன்னாலும் நிறைவாகாது. ஒரு துளி நாவில் பட்டுவிட்டால் வார்த்தைகளே தேவை இல்லை. நேரடியாக வாங்க : +91-94440-86888
|