![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
முடிவுரை மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. மாசி அழல்மிதி விழா நடைபெற்ற மறுநாளான அன்று, மரகத மலைப்பகுதி, மாமலை காணாத பெரு விழாக் கோலம் கொண்டிருந்தது. நீல மலையின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் சாரிசாரியான வண்ணக் கோலங்களாகப் புறப்பட்ட மக்கள் பெருமகிழ்வின் ஒலியை எழுப்பும் கடலாக மரகத மலைப்பகுதியெல்லாம் கூடிக் கொண்டிருந்தனர். ஐந்து குறிஞ்சிகளைக் கண்ட ஜோகிக் கிழவர், புல்மேட்டில் அமர்ந்து கோலாகலங்களைப் பார்த்த வண்ணம் இருந்தார். முழு வாழ்வின் நிறைவைக் கண்டுவிட்ட அவருடைய குடும்பத்தில், அவருடைய தலைமுறையைச் சேர்ந்த யாருமே அப்போது இல்லை. பிஞ்சுப் பருவ ஏமாற்றத்தில் விளைந்த பகையும் வெறியுமே வெற்றி கொண்ட அண்ணன் ரங்கன் அந்த ஹட்டி மண்ணோடு மண்ணான பிறகு பாரு அதிக காலம் உயிருடன் இருக்கவில்லை. ஆனால், அவள் வாழ்விலே ஒரு குறையும் நிரம்பப் பெறாதவளாக மறையவில்லை. நஞ்சனும் விஜயாவும் அவளுடைய செல்வ மக்களாக இணைந்து, இனிதே வாழக் கண்டாள். பெரிய வீட்டின் மருமகளாக, ஏழைப் பெண் தேவகி, கிருஷ்ணனின் தம்பி மகனுக்கு வாழ்க்கைப்பட்ட வைபவம் கண்டாள். லிங்கனும் தருமனும், தந்தையின் மரணத்துக்குப் பின் விசாரணைகள் நடத்தவும் வேறு கிளர்ச்சிகளுக்கு முயலவும் முனைந்ததும், ஏதும் பெரிதாகக் கலவரம் அவர்களுக்கிடையே விளையவில்லை. அன்பின் கைக்கொண்டு, கிருஷ்ணன், இரு குடும்பங்களும் எப்படியும் பிரிய முடியாத வகையில், அவர்களையும் திருமணப் பந்தங்களால் இணைத்து விட்டார். பாரு எல்லாவற்றையும் வாழ்நாளில் கண்டாள். கிருஷ்ணனுக்குச் சொந்தமாக இருந்த கறுப்பு மண்ணில் கிழங்குப் பயிருக்குக் களை எடுத்துக் கொண்டிருக்கையிலேதான் அவள் சுவாசம் நிறைவுடன் அடங்கியது. மண்ணின் பெருமகளான அவளை, பூமித்தாய், பெருங் கருணையுடன், எந்த ஒரு வேதனையுமின்றித் தன் மடியில் இருத்திக் கொண்டாள். ஜோகி, தன் நினைவு தெரிந்து இப்படி ஒரு விழாக் கூட்டம் மலையில் கூடக் கண்டிருக்கவில்லையே! இனி இருள் இல்லை என்ற பெருங்களிப்பா? மருள் அகன்றது என்ற பெருமகிழ்வா? புது விழிப்பெய்தி முன்னேற்றப் பாதையில் நடைபோடும் நவயௌவன சமுதாயத்தில் செயல் வெற்றியில் எழும் கோஷங்களா? நவபாரதத்தில், இனி விழிப்படையாத சமுதாயம் இல்லை என்ற வகையிலே புதுமலர்ச்சி பெற்றதை நிரூபித்துவிட்ட மலைமக்களின் வெற்றிக் கொண்டாட்டமா? இனி மலையின் மடியில் பிறக்கும் மக்களின் மகத்தான ஓர் எதிர்காலத்தை வரையறுத்துவிட்ட செயல் வீரர்களைப் பாராட்டக் கூடியுள்ள பெருவிழாவா? ஜயஸ்தம்பத்தின் மேலே, பட்டொளி வீசி மூவர்ணக் கொடி பறந்தது. மாலை குறுகி வந்த அந்தப் புனித வேளையில், மக்கள் அனைவரும் கண்டுகளிக்க, குமரியாற்றின் அணை திறக்கப் பெற்றது. கணகணவென்று மணிகள் ஒலிக்க, மடை திறந்து நீர் பாய்ந்து யந்திரங்கள் சுழலும் நல்லோசை செவிகளில் தேனைப் பாய்ச்ச மலை முழுவதும் மின்னொளியின் சுடர் திகழும் மணி விளக்குகள் குப்பென்று பூத்தன. ஜோகியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது. உள்ளம் எம்பிரானின் புகழை இசைத்தது; ஹரஹர சிவசிவ பரமேசா! ஹரஹர சிவசிவ பஸவேசா! முற்றும். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|