இரண்டாம் பாகம் 8. குறும்பன் தந்த வேர் குறும்பப் பூசாரியை, அவன் குடியிருப்புக்குச் செல்லும் முன்னரே வழியில் சந்தித்து விட்டான் ஜோகி. “அப்பாடா! ஐயன் கோயிலை விட்டு இன்றைக்குத் தானே வந்தீர்கள்? வாருங்கள் வாருங்கள்” என்று அவன் ஜோகியை வரவேற்றான். “உங்களைப் பார்க்கலாமென்று தான் வருகிறேன்” என்று ஜோகி, அங்கேயே ஒரு மரத்தடியில் அமர்ந்தான். “சொல்லியனுப்பினால் நான் வரமாட்டேனா? என்ன விசேஷம்?” “பரவாயில்லை; நீங்களும் உட்காருங்கள். ஐயனின் காய்ச்சலுக்குப் பரிகாரம் நாடியே வந்தேன். கிட்டத்தட்ட ஒரு குறிஞ்சியாகிறதே!” என்றான் ஜோகி. “அது முறைக் காய்ச்சல்.”
“ஐயோ! நீங்கள் என்ன, இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? ஜடசாமிக் கொப்ப நான் சொல்கிறேன். எங்களில் யாரும் அதெல்லாம் ஒன்றும் செய்யவில்லை. அவர் மேல் வினை செய்ய எங்களுக்குப் பைத்தியமா? அப்படியெல்லாம் நினைக்காதீர்கள்.” “அப்படியானால் இந்த உருக்கும் காய்ச்சல் போவதெப்படி?” “அம்மை சொன்னார்களென்று அப்போதே உங்கள் சுகத்துக்குத் தனியாகப் பூசைகள் போட்டோம். முறைக் காய்ச்சல்; அப்படித்தான் இருக்கும்.” “அதென்னவோ, அந்த முறைக்காய்ச்சலுக்கு உங்களிடம் வழி இருக்கிறது. உங்களுக்கு இந்தக் காய்ச்சல் வந்தால் ஏதோ மருந்து செய்யும் முறை தெரியுமாமே; அதையாவது சொல்லுங்கள்.” பூசாரி குழைந்தான். ஜோகி ஊகமறிந்து வெள்ளிப் பணம் கொடுத்தான். “இருங்கள்; வருகிறேன்” என்று கூறி அவன் கானகத்தில் புகுந்து சென்றான். மந்திரத்திலும் தந்திரத்திலும் நம்பிக்கை வைக்காத இளைஞர் சகாப்தம் அப்போது தோன்றியிருக்கவில்லையே! ஜோகியின் உள்ளத்தில் பல எண்ணங்கள் அலையோடின. நினைத்ததை நிறைவேற்றும் மந்திரமும் தந்திரமும் உடையவர்கள் காட்டுக் குறும்பர்கள் என்பது எத்தனை காலமாக நம்பப்பட்டு வருகிறது? விதைப்பிலும், விளைவின் பலனை எடுப்பதிலும் அவர்களுக்கு முதல் மரியாதையை, அவனுடைய முன்னோர் தெரியாமலா வழங்கியிருப்பர்? அவர்கள் முட்டாள்களா? எனவே, குறும்பரிடம் ஓரளவு சக்தி இருப்பது உண்மையாகவே இருக்க வேண்டும். இதைப் பரீட்சித்தால் என்ன? பளிச்சென்று அவன் தீர்மானம் உருவாகத் தொடங்கியது. பூசாரி சற்றைக்கெல்லாம் துணியில் எதையோ மறைத்துக் கொண்டு வந்தான். ஏதோ வேர்கள் அவை. சிறு கட்டாகக் கட்டிக் கொண்டு வந்தான். பச்சையாகத் தான் பிடுங்கியிருந்தான். ஆனால் அதை இனம் சொல்லுவானா? “அதெல்லாம் கேட்காதீர்கள். மந்திரித்துக் கொண்டு வந்தேன். இதைத் தினம் தினம் கஷாயம் வைத்துக் கொடுங்கள். நாளடைவில் காய்ச்சல் நின்றுவிடும்.” ஜோகி வேரைப் பத்திரமாக ஆடைக்குள் மறைத்துக் கொண்டான். பிறகு யோசனையுடன் ஆரம்பித்தான். “உங்கள் காதில் பட்டிருக்குமோ என்னவோ? அடுத்த பத்து நாளில் இங்கு ஒரு பலப்போட்டி நடக்கப் போகிறது, தெரியுமா? மரகதமலை ஹெத்தப்பா கோயில் முன் உள்ள உருண்டைக் கல்லை எடுப்பதிலே பந்தயம்” என்று நிறுத்தினான். ஜோகி விஷயத்தை விவரிக்கு முன் பூசாரி ஊகித்து விட்டான். “ஆமாம், இப்போதுதான் காலையிலே கேள்விப்பட்டேன். நம் மணிக்கல்லட்டிப் பெண்ணைக் கட்டப் போட்டி என்று சொன்னார்கள். நீங்கள் கூட... சொல்லுங்கள்.” “உங்களிடம் இன்னும் ஒரு கோரிக்கை வேண்டி நான் நிற்கிறேன்” என்கிறான் ஜோகி. போட்டியில் நிற்பவன் எதை வேண்டுவான்? போட்டியில் வென்று காத்திருக்கும் கன்னியை அடைய வேண்டும் என்று தானே வேண்டுவான்? “அதற்கென்ன, நான் உங்களுக்கென்று மந்திரித்த வேரொன்று தருகிறேன். அதைக் கட்டிக் கொள்ளுங்கள் கல் உருண்டை காற்றுக்குடம் போல் கையில் வரும். ஜடசாமி துணையுண்டு” என்றான் குறும்பன். ஜோகியின் சங்கடம் அதிகமாயிற்று. தனக்கு இல்லை என்று கூறினால் அவன் என்ன நினைப்பானோ? கிருஷ்ணனே வெல்லும்படி பிரார்த்தனை செய்யச் சொல்லலாமா? “நீங்கள்... நான் என்ன சொல்கிறேனென்றால், பெண் யாரை விரும்புகிறாளோ...” அவன் முடிக்கு முன் குறும்பன் குறுக்கிட்டு, “அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். பெண் தானாக உங்களை நாடி வருவாள். பூவிருக்கும் இடம் தேடி வரும் தேனீப்போல் உங்கள் பக்கம் மனசு திரும்பும்” என்றான். “நான் அப்படி ஆசைப்படவில்லை. உங்களிடம் இதுதான் வேண்டுகிறேன். பாரு யாரை இஷ்டப் படுகிறதோ மனப்பூர்வமாக, அந்த ஆண்மகனுக்கே அந்தக் கல் எடுக்க வரும்படி நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டும். ஒருவனை விரும்பி, ஒருவன் வலிமை வென்றால் கஷ்டம் அல்லவா?” என்றான் ஜோகி. குறும்பப் பூசாரி ஒரு கணம் அதிசயித்தான். இப்படியும் ஒரு மனிதன் இருக்க முடியுமா? “ஏன் பேசாமல் நிற்கிறீர்கள்?” “இல்லை; நீங்கள் இஷ்டப்பட்டால், நான் ஒரு வேர் மந்திரித்துத் தருகிறேன். அதைப் பெண் கையில் வைத்திருந்தால், மனசுக்கேற்ற மாப்பிள்ளை வருவான்.” “இப்போது தருகிறீர்களா? நீங்கள் நாளை ஹட்டிப் பக்கம் வந்தால் அதற்கும் ஒரு வெள்ளி தருகிறேன்.” “இப்போதா? அதெப்படி முடியும்?” “பின் நாளை வருகிறேன். விஷயம் ஒருவருக்கும் தெரிய வேண்டாம்” என்று ஜோகி விடை பெற்றுக் கொண்டான். அவன் வீட்டுக்குத் திரும்புகையிலே பிறை நிலவு வானில் பவனி வந்து கொண்டிருந்தது. மடியுடுத்து, மாடுகள் கறந்து பிரார்த்தனை முடித்துவிட்டு, அவனாகவே அடுப்படியில் அமர்ந்து கஷாயம் தயாரித்துத் தந்தைக்குக் கொண்டு வந்தான். “நம் பூமியைப் பார்த்தாயா ஜோகி? வலப்பக்கம் செம்மண்ணடித்துச் சீரழிந்து போய்விட்டதல்லவா?” என்றார் தந்தை. “கறுப்ப் மண்ணாக மாற்றி விடலாம், அப்பா. நீங்கள் நோயிலிருந்து மீள்வது ஒன்றே இப்போது என் குறி” என்றான் மகன். மறுநாள் சற்று முன்னதாகவே மகன் கோயிலிருந்து கொண்டு வந்த தானியத்தை அளந்து ஒரு சிறிய சுமை கட்டிக் கொண்டு வெளியே கிளம்பியதைக் கண்ட மாதி, “மணிக்கல்லட்டி போகிறாயா மகனே?” என்று கேட்டாள். “இல்லையம்மா, குறும்பர் குடியிருப்புக்குப் போகிறேன். இன்னொரு கால் ரூபாய் இருந்தாலும் தாருங்கள்” என்று கேட்டு வாங்கிக் கொண்டான். தானியங்களையும் பணத்தையும் முதல் நாள் சந்தித்த இடத்திலேயே குறும்பப் பூசாரியைச் சந்தித்துக் கொடுத்ததும் அவன் இரண்டங்குல நீளமுள்ள ஒரு வேலைத் தந்தான். விறகு சேகரிக்கும் சாக்கில் வீட்டை விட்டுக் கிளம்பி அங்கே அவனுக்காகக் காத்திருக்கிறாளோ? தோழிகளை விட்டுப் பிரிந்து அந்நேரத்தில் தனியே அவள் அங்கு நிற்கக் காரணமென்ன? ஒருவேளை எட்டியிருந்தே கண்டுவிட்டாளோ அவனை அவள்? அவன் வருகிறான் என்று அறிந்த பின், அவள் விறகு சேர்த்துக் கட்டுவது போல் வெகு நேரம் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள். ஜோகி அங்கேயே நின்றான். எத்தனையோ ஆண்டுகளாகக் காணாதிருந்த முறைக்காரன்; காதலனின் எதிரி. அவள் அவனிடம் என்ன சொல்ல விரும்புகிறாள்? வியந்து நோக்கிவிட்டுக் கனிவுடன் எதற்கு நோக்குகிறாள்? ஒரு விநாடிதான். பிறகு அந்தக் கருவண்டு விழிகளுக்கு அவனை நிமிர்ந்து நோக்கவும் துணிவில்லை. பாரு! ஜோகி குரல் கரகரக்க, ‘மினிகே’ இலையில் சுற்றி வைத்திருந்த அந்தப் பொக்கிஷத்தை எடுத்தான். “நீ இதை வாங்கிக் கழுத்திலோ, இடுப்பிலோ அணிந்து கொள். உன் மனசுக்கேற்ற மணாளன் வருவான், பாரு.” தொண்டை தழுதழுக்க அவன் மொழிகள் அவள் செவிகளில் விழுந்ததும் அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். கிருஷ்ணனைப் போல் செல்வச் செழிப்பில் பளபளக்கும் முகமில்லை; பூரித்த கன்னங்களில்லை. ஆனால் இந்த முகத்திலுள்ள ஒளிபோல் அவள் இதுவரையில் எவரிடமும் கண்டதில்லையே? திடுமென்று வந்து அவளைத் திக்குமுக்காடச் செய்யும் இந்த ஒளியுடன் என்ன பேசுகிறான்? அவள் வியந்து நிற்கையிலே, ஜோதி சலனமற்ற குரலில், “இதை குறும்பரிடம் கேட்டுப் பிரத்தியேகமாக வாங்கி வந்தேன். பாரு நீ என் தங்கை. என் அம்மைக்காக நான் போட்டியில் ஈடுபட்டாலும், என் வலுவை நழுவ விடுவேன். உன் மனம் எவரிடம் இருக்கிறதென்பதை அறிவேன். இதை வாங்கிக் கொள். உன் அன்பனே போட்டியில் வெல்லுவான்.” அவள் கயல்விழிகள் கசிய, இரு கைகளையும் நீட்டி அதைப் பெற்றுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். நெஞ்சுக்கனம் ஆவியாக மாறி அடி வயிற்றுக்குள் இறங்கி விட்டாற் போல் இருந்தது. ஜோகி அதுவரை கண்டறியா வண்ணம் லேசான உள்ளமும் உவகையும் கூடியவனாய், மரகத மலையை நோக்கி நடந்தான். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 136 எடை: 150 கிராம் வகைப்பாடு : கட்டுரை ISBN: 978-93-8673-763-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 190.00 தள்ளுபடி விலை: ரூ. 175.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நம் சமகால அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளை நல்ல நகைச்சுவையுணர்வுடன் விமர்சிக்கும் கட்டுரைகள் இவை. அதுமட்டுமன்றி, ஆழ்ந்த சங்க இலக்கிய மற்றும் பழந்தமிழிலக்கிய வாசிப்புள்ள தோழர் சோ.முத்துமாணிக்கம், இன்றைய நிகழ்வுகளை அன்றைய இலக்கிய வரிகளுடன் இணைத்துப் பேசும் பாங்கு சுவைமிக்கது. நல்ல மொழி வளத்துடனும் சமூக அக்கறையுடனும் நகைச்சுவை உணர்வுடனும் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகளை வாசகர்கள் விரும்பிப் படிப்பார்கள். - ச. தமிழ்ச்செல்வன் தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளிவந்து பலருடைய பாராட்டுகளைப் பெற்ற சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு. நேரடியாக வாங்க : +91-94440-86888
|