(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 24

     சோழச் சக்கரவர்த்தியின் கை நாடியைப் பிடித்துப் பார்த்த இரத்தினாதேவி புன்முறுவலுடனே, “இப்போது எப்படியிருக்கு?” என்று வினவினாள் மாமன்னரைப் பார்த்து.

     வீரராசேந்திரர் படுக்கையிலிருந்து எழுந்து தெம்புடனே சிரித்துக் கொண்டார். “இப்போது எனக்கு ஒன்றும் இல்லை!” என்று பஞ்சணையிலிருந்து இறங்கி, சிறிது தூரம் மெல்ல நடந்தார்.


கரிப்பு மணிகள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

கூழாங்கற்கள் பாடுகின்றன
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

இந்தியா 1948
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

1975
இருப்பு உள்ளது
ரூ.405.00
Buy

கதைகள் செல்லும் பாதை
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

அன்னை தெரசா
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

இன்னொரு பறத்தல்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

க்ளிக்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

சேரமான் காதலி
இருப்பு உள்ளது
ரூ.300.00
Buy

மன இறுக்கத்தை வெல்லுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

சிறையில் விரிந்த மடல்கள்
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

எளிய தமிழில் எக்ஸெல்
இருப்பு இல்லை
ரூ.100.00
Buy

வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

கடலுக்கு அப்பால்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

ஆயிரம் சந்தோஷ இலைகள்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

மறைக்கபட்ட இந்தியா
இருப்பு உள்ளது
ரூ.340.00
Buy

கால் முளைத்த கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

உடல் எனும் இயந்திரம்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy
     அதைக் கவனித்த இரத்தினாதேவி, மனதிலேயே ஒரு திட்டம் ஒன்றைத் தீட்டிக் கொண்டு, “சக்கரவர்த்தி!” என்று மென்மையான குரலில் மனம் கனியும்விதத்தில் அவரை அழைத்தாள்.

     “என்ன இளவரசி?” என்று அவர் அருகில் வர...

     “ஒரு மூலிகை மட்டும் கிடைத்துவிட்டால், நீங்கள் இருபது வயதுக் காளை போல் ஆகிவிடுவீர்கள்!” என்றாள் புன்முறுவலுடனே.

     மாமன்னருக்குச் சந்தோஷம் மிகுந்தது. ஒவ்வொரு மனிதனும் இளமையாகவே இருக்க ஆசைப்படுவான் அல்லவா? அதுவும் வயது முதிர்ந்துவிட்ட வயோதிகரைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. நோயினால் அவதியுறும் சோழ வேந்தருக்கு ‘இருபது வயதுக் காளை’ என்ற அவ்வார்த்தை அமுதமென செவிகளில் விழுந்துவிட்டதால், மனம்விட்டு உரக்கச் சிரித்தார். “அந்த மூலிகை எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா?” என்று பரபரப்போடு வினவினார்.

     “நான் போகுமிடமெல்லாம் தேடிவிட்டேன் மன்னரே! அநேகமாக மலைப்பகுதியில்தான் அது வளரும், மிக அபூர்வ மூலிகையான அது, மதுரையொட்டியிருக்கும் காடுகளில் இருக்கலாம் என்று எனக்குப்படுகிறது” என்றாள்.

     “அப்படியென்றால் நம் நாட்டு வில்லியர்களை அங்கே அனுப்பி தேடச் சொன்னால் என்ன?”

     “இல்லை, சக்கரவர்த்தி! எனக்குத்தான் அதைப் பற்றி நன்றாய்த் தெரியும். நான் போய்த் தேடுவதுதான் நல்லது!” என்றாள்.

     “சரி; அப்படியென்றால் மதுரையிலிருக்கும் இராசேந்திரனுக்கு ஒரு கடிதம் தருகின்றேன். அங்கே நீ நமது விருந்தாளியாக தங்கி, மூலிகையைத் தேடிக் கொண்டு வந்துவிடு. துணைக்கு...?” என்று அரசர் வினவ, “தென்னனையும், சாமந்தனையும் அனுப்பினால் போதும்” என்றாள்.

     “நல்லது இன்றே நீ புறப்படு!” என்று சக்கரவர்த்தி கூறிக் கொண்டிருக்கும் போதே முதலமைச்சர் பிரமாதிராசர் உள்ளே நுழைந்தார். அவரைப் பார்த்த வேந்தர், “நல்ல நேரத்தில் வந்தாய் பிரமாதிராசா! கடார இளவரசி உடனே மதுரை புறப்பட விரும்புகின்றாள். அதற்கான ஏற்பாட்டைச் செய். துணைக்குச் சாமந்தனையும் தென்னனையும் அனுப்பி வை!” என்று உத்தரவிட்டார்.

     முதன்மந்திரிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

     இந்தச் சிறு பெண் இவ்வளவு விரைவில் சோழச் சக்கரவர்த்தியை மயக்கிவிட்டாளே! என்று மனதிற்குள் வியந்து, மதுரைக்கு இவள் எதற்காகப் போகின்றாள்? என்று அவளைப் பார்த்தார். ஒரு விஷயம் புலப்பட்டது. அது...

     இராசேந்திரனைக் கொல்லவே அவள் மதுரைப் பயணத்தை மேற்கொண்டிருக்கலாம்! என்று ஊகித்து, அதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், “குழப்பமான இந்நேரத்தில் பெண்கள் அங்கே போவது அவ்வளவு நல்லதாகப்படவில்லை” என்றார்.

     இவள் விஷயத்தில் பிரமாதிராசன் எதற்கு எடுத்தாலும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கின்றான்! அத்துடன் கடார நாட்டிற்கு அனுப்பிவிட வேண்டும் என்று அடிக்கடி என்னிடம் சொல்லி வருகின்றான். எதற்காக இவனுக்கு இந்தப் புத்தி? என்று சோழச் சக்கரவர்த்தி சற்றே முனிவுடன், “நான் சொன்னதைச் செய் பிரமாதிராசா!” என்றார் உரத்த குரலில்.

     சக்கரவர்த்தி இவ்விதம் பேசி, முதன்மந்திரி கேட்டதில்லையாதலால் வேறு வழியின்றி, “சரி!” என ஒப்புக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக, வேண்டா வெறுப்புடன் காவலனை அழைத்து விடையில் அதிகாரியை வரச் சொன்னார்.

     இவள் போய்ச் சேருவதற்கு முன்பே, மதுரை வரும் விஷயத்தை இராசேந்திரனுக்குத் தெரிவித்து, எச்சரிக்கையுடன் இருக்கச் சொல்ல வேண்டும். அதற்கு என்ன வழி? என்றும் யோசிக்கலானார்.

     பல்லக்கில் அவளை மதுரைக்கு அனுப்ப வேண்டும்! பல்லக்குத் தூக்கிகளிடம் சுற்றுவழியில் செல்லும்படி சொல்லி வைப்போம். அதற்குள் உயர்சாதிப் புரவியில் ஒரு வீரனை அனுப்பிச் செய்தியைத் தெரிவித்துவிடலாம் என்று திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள விடையில் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

     ஆனால்...

     புரவியில்தான் செல்லப் போகிறேன் என்று கடார இளவரசி இரத்தினாதேவி கூறிவிட்டதால், ஆண்டவன்விட்ட வழி என்று தென்னனுக்கும், சாமந்தனுக்கும், அவளுக்குமாக புரவியைத் தயார் செய்து வைக்கும்படி கட்டளையிட்டார்.

     காவிரிக் கரையின் வடக்குப் பக்கமாகச் சென்ற பெரு வழியின் மூலம், உறையூரை அடைந்து, அங்கிருந்து காவிரியாற்றைக் கடந்து, தென்கரைப் பக்கம் வழியாக, நெடுங்குளம் சென்று மதுரையை அடைய வேண்டும். அந்த வழியில்தான் மூன்று புரவிகளும் சென்று கொண்டிருந்தன. தூய்மையான வெள்ளை நிறத்திலிருந்த குதிரையில் இரத்தினாதேவி இருந்தாள். சாம்பல் நிறப் புரவியில் சாமந்தன் அமர்ந்திருந்தான். கருப்பும், பழுப்பும் கலந்த நிறக் குதிரையில் தென்னன் இருந்தான்.

     மதுரையின் பாதுகாப்புப் பொறுப்பேற்றிருக்கும் இராசேந்திரனுக்குச் சோழச் சக்கரவர்த்தி தந்த ஓலை, இரத்தினாதேவியிடம் இருந்தது. பகலவன் செந்நிறக் கதிர்கள் கடுமையாய் மூவரையும் வறுத்த புரவியை ஓரிடத்தில் நிறுத்தி ஓய்வெடுத்துச் செல்லலாம் என்று தென்னன் இடம் தேடினான். தூரத்தில் பாழ் மண்டபம் ஒன்றும் அதையொட்டி ஆலமரமும் அதனருகே சிதலமுற்ற ஒரு குளமும் தென்பட்டன. அங்கே இளைப்பாறிச் செல்வோம் என்று அவன் கூற, மூவரும் அதை நோக்கிப் புரவியைச் செலுத்தினர்.

     மண்டபம், இன்றோ நாளையோ என்பது போல ஒரு பக்கமாய் சாய்ந்து கீழே விழுந்துவிடுவது போல இருந்தது. குளத்தின் படிக்கட்டுகள் ஒழுங்காக இல்லை. ஆங்காங்கே இடிந்து கால் வைத்து இறங்குவதற்கு வசதியற்று இருந்தது. நீரில் அல்லிமலர்கள் நிறைய இருந்தன. கெண்டைகள் துள்ளிக் கொண்டிருந்தன.

     ஆலமரத்திலிருந்து உதிர்ந்த இலைகள் தரையை முழுவதும் மூடியிருந்தன. மூன்று குதிரைகளும் ஒன்றாய் அங்கே வர அதனால் ஏற்பட்ட சலசலப்புச் சப்தத்தில் மரங்களிலிருந்து பறவைகள் இப்படியும் அப்படியும் பறந்து சென்றன.

     “இந்தக் குளத்து நீரைக் குடிக்க முடியுமா?” என்று சுற்றுக்சூழலை நோட்டம்விட்டபடி கேட்டாள் இரத்தினாதேவி.

     “அல்லி இருப்பதால் தண்ணீர் அசுத்தமாவதற்கு வழியில்லை!” என்று புரவியிலிருந்து குதித்தான் சாமந்தன்.

     கடார இளவரசிக்கு அந்தச் சுற்றுச் சூழல் சற்றும் பிடிக்காததால் அரை மனதுடனே புரவியிலிருந்து இறங்கினாள்.

     அதைக் கவனித்த தென்னன், “பிரயாணம் என்று வந்துவிட்டால் இதையெல்லாம் பார்ப்பதற்கு இல்லை” என்று குதிரையிலிருந்து குதித்தான்.

     இரத்தினாதேவி குளற்றங்கரையிலே நின்று கொண்டாள். தென்னனும், சாமந்தனும் எச்சரிக்கையுடனே குளத்தில் இறங்கி கை, கால், முகம் இவற்றைக் கழுவிக் கொண்டு கையினால் சிறிது நீர் அள்ளிக் குடித்தனர். வெய்யிலுக்கு அது மிகவும் குளிர்ச்சியாயிருந்ததால் இன்னும் கொஞ்சம் அள்ளிப் பருகலாயினர்.

     அதைக் கவனித்து இரத்தினாதேவியும் குளத்தில் இறங்கினாள் ‘அப்பா! இந்த வெய்யிலுக்குக் குளத்து நீர் எத்தனை இதமாக இருக்கின்றது. ஆண்கள் இல்லையென்றால் நீரில் இறங்கிக் குளிக்கலாம்’ என்று தண்ணீரை அள்ளி, அள்ளி உடல் முழுவதும் நனைத்துக் கொண்டாள். தாகத்தைத் தணிக்க மென்விரல்களால் நீரை அள்ளிக் குடித்துவிட்டுக் கரையேறினாள்.

     மூவரும் ஆலமர நிழலில் அமர்ந்தனர்.

     “மதுரைக்கு இன்னும் எத்தனை தூரம்?” என்று சாமந்தன் வினவினான்.

     “உறையூரை எட்ட இன்னும் ஐந்து கல் இருக்கிறது. அதை அடைந்து ஆற்றைக் கடந்துவிட்டால் அப்புறம் மதுரைக்குப் போவது சுலபம்!” என்ற தென்னன், “எனக்கு ஒரு யோசனை...” என்று நிறுத்தினான்.

     “என்ன யோசனை?” என்றாள் இரத்தினாதேவி ஆர்வமுடன்.

     “மதுரைக்கு நீங்கள் இருவரும் போங்கள். நான் தூமகேதுவுடன் பின்னால் வருகின்றேன்!” என்றான்.

     “தூமகேது வருவது நமக்கு நல்லதுதான். அதற்குள் பகைவன் எச்சரிக்கை பெற்றுவிட்டால்?” என்ற இரத்தினாதேவி இருவரையும் கவனித்து, “எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் ஒருத்தியே அவனைக் கொன்றுவிட முடியும்!” என்றாள்.

     “இந்த இடத்தில் உங்களின் விவேகத்தோடு இளமையும் சேர்ந்து கொண்டால் அவனை வீழ்த்துவது சுலபம்” என்றான் தென்னன்.

     “அவ்வளவு சீக்கிரம் அவன் இளமைக்கு அடிமைப்படுபவன் அல்லவே!” என்றாள் கடார இளவரசி குறுக்கிட்டு.

     “உங்கள் இளமை காமனையும் கிறங்க வைக்கும்!” என்று உறுதியோடு தென்னன் கூற...

     இரத்தினாதேவிக்கு அவ்வார்த்தைகளால் மகிழ்வே ஏற்பட்டது.

     ‘தான் அழகு’ என்ற வார்த்தையைக் கேட்பதில் ஒவ்வொரு பெண்களும் ஆனந்தம் கொள்ளவே செய்வர். அதற்கு இரத்தினாதேவி மட்டும் விலக்காக முடியுமா? எனவே உள்ளத்தில் எழுந்த அச்சந்தோஷத்தால் ஏற்கனவே தனிச் சோபையுடனிருந்த அவள் இளமை முகத்தில், இன்னும் கவர்ச்சி கூடவே செய்தது.

     “நான் சொல்வதை நீங்கள் இருவரும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் பகைவன் வீழ்வதில் முதலில் சந்தோஷப்படுவது நானாகத்தான் இருக்க முடியும். நீங்கள் அவசரப்பட்டு எதையாவது செய்ய முற்படமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இருந்தாலும் என் மன ஆறுதலுக்காக நான் கூறுகின்றேன். நீங்கள் சோழ அரசின் கௌரவ விருந்தினராக மதுரை செல்கின்றீர்கள். அதனால் உங்களுக்கு அங்கே சகல மரியாதையும் கிடைக்கும். இதைப் பயன்படுத்தி இராசேந்திரனை நீங்கள் நிச்சயம் கவரத்தான் செய்வீர்கள். அந்தக் கவர்ச்சியால் அவன் மயங்கி நிற்கும் சமயத்தில் நீங்கள் பகைவனைச் சந்திப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்! இந்தச் சந்தர்ப்பத்தில் அவனே உங்களைத் தேடி வருவான். அப்படி வரும்போது பாண்டிய இலச்சினைக் கொண்ட இந்தக் குறுவாளால் அவனைக் கொன்றுவிடுங்கள். பழி பாண்டியர் தலையில் விழ, உங்கள் மேல் யாரும் சந்தேகம் கொள்ளமாட்டார்கள்” என்றான் தென்னன்.

     “சரி!” என்று ஒப்புக் கொண்டாள் கடார இளவரசி.

     “நேரமாகிவிட்டது புறப்படலாம்” என்று சாமந்தன் எழுந்து புரவியை நோக்கிச் செல்ல, இருவரும் அவனைத் தொடர்ந்து நடந்தனர்.

     மூன்று புரவிகளும் மதுரை நகருக்கு வாயு வேகத்தில் பறந்தன. ஆனால் புரவி ஏறுமுன், கடார இளவரசியின் கையிலிருந்த பொருள் ஒன்று கீழே விழுந்துவிட்டதே! அது என்ன?

     போகும் வேகத்தில் அவள் அதைக் கவனிக்கவில்லையென்றாலும் பின்னால் அதற்காக நிச்சயம் வருத்தப்படத்தான் போகிறாள்.

     இவர்கள் புறப்பட்ட அரை நாழிகை கழித்து அம்மையப்பன் குதிரையில் அங்கே வந்து சேர்ந்தான். உடம்பெல்லாம் ஒரே வியர்வை. நெற்றியிலும் உடம்பின் பல பகுதிகளிலும் அணிந்திருந்த திருநீற்றுச் சின்னம் கலைந்து போயிருந்தது. அதை அணிந்து கொள்வதற்காக வேண்டி அம்மையப்பன் புரவியை அங்கே நிறுத்தினான்.

     குதிரைக்கு வாயில் நுரை தள்ளியது. அதைப் பார்த்து மிகவும் வேகமாகவே செலுத்திவிட்டேன் போலிருக்கிறது! என்று அருகில் சென்று செல்லமாய் தட்டிக் கொடுத்தான். குதிரையும் அதை ஏற்றுக் கொண்டது போல் தன் முகத்தை அம்மையப்பன் கைகளில் மெல்ல உராயலாயிற்று. சிறிது நேரம் புரவியைத் தடவிக் கொடுத்துவிட்டு, “சிவாய நம!” என்று முணுமுணுத்தபடி குளத்தில் இறங்கினான் குளிக்க.

     ‘அட, இது என்ன! காய்ந்த சருகுகளுக்கு இடையில் மினுக்.. மினுக் என்று ஒரு மோதிரம்.’ சிவபக்தருக்கு பொன்னாசை வந்துவிடவே ஓடிப் போய் அதை எடுத்தான்.

     அடடே! இதன் முத்திரை கடார நாட்டிற்கு உரியவை போலிருக்கிறதே! அப்படியென்றால் இம்மோதிரம் இளவரசி இரத்தினாதேவிக்குச் சொந்தமானது. இது எப்படி இங்கே வந்திருக்க முடியும்? என்று சுற்று முற்றும் பார்த்த அம்மையப்பனுக்குக் குதிரையின் காலடிகள் புலப்பட்டன.

     குளத்தில் இறங்குவதை நிறுத்திவிட்டு அருகே சென்று பார்த்தான். ஏறக்குறைய நிறைய குதிரைகள் இங்கே வந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. அப்படியென்றால்...

     சிவ பக்தனாகிய அம்மையப்பனுக்கு ஒரு விஷயம் விளங்கியது. மதுரையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் அவர்கள் தன்னைப் போலவே இளைப்பாறுவதற்காக இங்கே இறங்கியிருக்க வேண்டும்! அச்சமயத்தில் இந்த மோதிரம் கடார இளவரசியின் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்திருக்கலாம். “சிவாய நம!” என்று சந்தோஷத்துடன் உச்சரித்துக் கொண்டே, மோதிரத்தைக் குதிரையின் கழுத்திலிருந்த தோல் பையில் பத்திரப்படுத்திவிட்டு, ஆனந்தமாய் நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தான்.

     சீக்கிரம் புறப்பட வேண்டும் என்பதற்காக நீரிலிருந்து மனமில்லாமல் கரைக்கு வந்தான். திருநீற்றை நெற்றி, மார்பு என்று அணிந்து, புதிய ஆடையை இடுப்பில் தரித்துக் கொண்டு பழையதை நனைத்துப் பிழிந்து கொண்டான். காற்றில் அதைச் சிறிது நேரம் உலரவிட்டான். புரவி இப்போது தெம்பு பெற்றுவிடவே அதைத் தட்டிக் கொடுத்துவிட்டு, ஈர ஆடையைக் குதிரையின் கழுத்தில் சுற்றிவிட்டு அதன் மேல் அமர்ந்தான் அம்மையப்பன்.

     அவர்களுக்கு முன்பு நான் மதுரை போய்ச் சேர வேண்டும். நேரான வழியில் சென்றால் என்னால் போக முடியாது. குறுக்கு வழியில் காட்டுப் பாதையில் செல்ல வேண்டும். கள்ளர் பயம் இருக்கத்தான் செய்யும். எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு போக வேண்டும். முதன்மந்திரி என்னிடம் ஒப்படைத்த இந்தக் காரியத்தை எந்தத் தடங்கலும் இன்றி நிறைவேற்ற வேண்டும்.

     அவர்களுக்கு முன்பு மதுரை போய்விட்டால் நல்லது. இல்லையென்றாலும் கிடைத்த நேரத்தை வீணாக்காமல் எப்படியாவது இராசேந்திரனைச் சந்தித்து இரத்தினாதேவி எந்த நோக்கத்துடன் அங்கே வந்திருக்கின்றாள் என்பதைத் தெரிவித்துவிட வேண்டும் என்று புரவியைத் தட்டிவிட்டான்.

     அது வாயு வேகத்தில் பறந்தது.

     பெருவழிப்பாதையிலிருந்து அதைத் திருப்பிய அம்மையப்பன் தன் அரைக்கச்சையைத் தடவிப் பார்த்துக் கொண்டு குதிரையின் வேகத்தைக் கூட்டினான்.

     நிசப்தமான காட்டுப் பகுதியில் புரவியின் குளம்பொலி அப்பகுதியை அதிரடித்தது.

     மிக வேகமாய்ச் சென்ற அம்மையப்பன் கண்களுக்கு வழியின் குறுக்கே பெரும் பள்ளம் வந்துவிடவே கடிவாளத்தை இழுத்தான்.

     புரவி ஆக்ரோஷமாக கனைத்துக் கொண்டே பள்ளத்தைத் தாண்ட முயற்சித்தது.

     ஆனால் அம்மையப்பன் வேறுவிதமாய் அல்லவா நினைத்திருந்தான். கடிவாளத்தை இன்னும் பலமாய் இழுத்துப் புரவியை நிறுத்தி வந்த வழியே திரும்பினான்.

     இந்த முயற்சியினால் புரவி கனைத்தபடி இப்படியும் அப்படியும் ஓட முயற்சிக்க “ஈசுவரா! இது என்ன குழப்பம்!” என்று அதைத் தட்டித் திருப்பினான்.

     அது அவனுக்குத் கட்டுப்படாமல் முரண்டு பிடிக்க எரிச்சலுற்ற அம்மையப்பன், கடிவாள வாரினால், அதை ஓங்கிப் பலமாக அடித்தான்.

     ஆனால் புரவி திரும்பத் திரும்ப ஓடத்தான் முயற்சித்தது.

     அதற்குள், பக்கத்திலிருந்த புதரிலிருந்து பத்துப் பேருக்கு மேல் புரவியையும், அவனையும் சூழ்ந்து கொண்டனர்.

     ஒவ்வொருவர் கையிலும் வெட்டிரிவாள் இருந்தது. கரிய மதயானை போன்று ஒவ்வொருவரும் கருத்த மேனியராய் திடகாத்திரமாயிருந்தனர்.

     அவர்கள் விழித்த விழியிலிருந்து யாரென்று புரிந்துவிட்டது.

     வழிப்பறி செய்யும் கள்ளர்கள் அவர்கள் என்பதையறித்து “ஐயா, நான் அவசரமாக மதுரை போக வேண்டும். சிவ பக்தனான என்னிடம் என்ன இருக்கும் என்று நீங்கள் மடக்கினீர்கள்?” என்று கேட்டான்.

     “சாதாரண சிவபக்தனாய் இருந்தால் விட்டுவிட்டிருப்போம். புரவியோட்டும் சிவபக்தன் என்பதால் வழி மறித்துவிட்டோம்” என்றான் அவர்களில் ஒருவன்.

     அனேகமாக அவன் தலைவனாய் இருக்க வேண்டும் என்று யூகித்த அம்மையப்பன், இடுப்பிலிருந்து சில பொற்காசுகளை எடுத்து அவனிடம் கொடுத்து, “வழிச் செலவுக்காக வைத்திருந்தேன்! நீங்கள் குறுக்கிட்டுவிட்டதால் உங்களிடம் தந்துவிட்டேன்! எனக்கு வழிவிட்டுவிடுங்கள்” என்றான்.

     “ஆஹா! சிவபக்தருக்கு என்ன தாராளம். இப்படிப்பட்டவர் இன்று கிடைத்தது நாம் செய்த அதிர்ஷ்டம்தான்” என்றான் அவர்களில் ஒருவன்.

     “பூசணி போல் எத்தனை தளதளவென்று இருக்கின்றார் பார்த்தாயடா!” என்றான் இன்னொருவன்.

     “அவர் குதிரை மட்டும் என்னவாம்! அதுவும் அவரைப் போலவே கொழு கொழு என்றிருக்கிறது!” என்றான் மற்றொருவன்.

     “சிவபக்தருக்குப் புடவை கட்டி மேலே முக்காடு போட்டால் அசல் பெண் போல் இருப்பார்!” என்று சொன்னவன் பக்கத்திலிருந்தவனிடம், “நீ கல்யாணத்திற்குப் பெண் தேடிக் கொண்டிருந்தாயே; பட்டுப் புடவை கட்டி இவரைத் தாலிக் கட்டிக் கொள்வேன்!” என்றான் கேலியுடன்.

     “நன்று சொன்னாய் அப்பனே. பெண் பிள்ளை கூட இத்தனை மினுமினுப்பாய் இருக்கமாட்டாள்!” என்று அவன் அம்மையப்பனைப் பார்த்து, “கொஞ்சம் கீழே இறங்கப்பா!” என்றான்.

     அம்மையப்பன் சினத்தின் கடைக்கோட்டுக்கே சென்றுவிட்டான். இது ஒரு அபாய வழி என்று தெரிந்திருந்தும் சீக்கிரம் போக வேண்டும் என்ற காரணத்தால் இப்பக்கம் மூடத்தனமாக வந்துவிட்டேன்! என்ன செய்வது என்று யோசிக்கலானான்.

     அனைவர் கையிலும் ஆயுதம் இருக்கிறது. என் வாள் கடிவாளத்தையொட்டி இருக்கும் உறையில் வைத்துவிட்டேன்! என்ன செய்யலாம்? தனி ஒருவனாய் இவர்களுடன் முரண்டு பிடிப்பதைக் காட்டிலும் தற்போதைக்கு குதிரையிலிருந்து இறங்கிவிடுவதே உத்தமம் என்று கீழே இறங்கினான்.

     அவனின் மொட்டைத் தலையை ஒருவன் தடவி “இத்தனை வழுவழுப்பான மண்டையை என் ஆயுளில் இதுவரை பார்த்ததில்லை” என்றான் கேலியுடன்.

     “குதிரை பிரமாதம்! எத்தனைப் பொன்னுக்கு இதை நீர் வாங்கினீர்?” என்று கேட்டான் ஒரு திருடன்.

     “நான் சோழ அரசைச் சேர்ந்தவன். மதுரைக்கு அரசாங்க விஷயமாக அவசரமாய்ச் சென்று கொண்டிருக்கிறேன்! அதனால் பொற்காசுகளை எடுத்துக் கொண்டு வழியை விட்டுவிடுங்கள்” என்றான் சிறிது கோபத்தோடு.

     “ஓ! தாங்கள் சோழ நாட்டினரா? அப்படியென்றால் நிச்சயம் மேல் உலகத்துக்கு உங்களை வழி அனுப்பி வைக்க வேண்டியதுதான்!” என்றான் கள்வர்களில் ஒருவன்.

     “இருங்கடா! முதலில் குதிரை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். பிறகு சிவபக்தரைக் கைலாயத்திற்கு அனுப்பலாம்!” என்று ஒருவன் புரவியில் ஏறி உட்கார்ந்தான். இதுவரை அமைதியுடனிருந்த அசுவம் மேலேயிருப்பது தன் எசமானர் அல்ல என்பதையுணர்ந்து அங்கே நிலவிய சூழ்நிலையையும் புரிந்து கொண்டு முன் காலைத் தூக்கி ஆக்ரோஷத்துடன் கனைத்து அப்படியே அவனைத் தரையில் தள்ளியது. அதே வேகத்தில் பின் கால்களால் அருகிலிருந்த இருவரை மிக வலிமையுடன் உதைக்கவும் செய்தது. அந்த உதையில்...

     ஒருவன் கையிலிருந்த வெட்டரிவாள் நழுவி அம்மையப்பன் அருகில் விழுந்தது. சட்டென்று அவன் எடுத்துக் கொண்டான்.

     எடுத்த வேகத்தில் தன் பக்கத்திலிருந்த இருவரைப் பலமாய்த் தாக்கி அவர்களைக் கீழே வீழ்த்தினான்.

     இதைக் கவனித்த மற்றவர்கள், “பிடியுங்கள் அந்த மொட்டைத் தலையனை!” என்று அம்மையப்பனை நோக்கி ஓடி வந்தனர்.

     ஓடிவந்த அந்த ஐந்து பேரையும் அம்மையப்பன் மூர்க்கத்தனமாகத் தாக்கிப் புரவி பக்கமாக தள்ளினான். தன் பக்கமாக வந்த இருவரை முன் போலவே அது பின்னங்கால்களால் உதைத்தது. மற்ற மூவரில் இருவரையும் அம்மையப்பன் வாளுக்கு இரையாக, எஞ்சி நின்ற ஒருவன் ‘விட்டால் போதும்’ என்று ஓட்டம் பிடித்தான்.

     அவனைப் பார்த்துக் கீழே விழுந்த மற்றவர்களும் எழுந்து ஓடலாயினர். பலமான அடியினால் எழுந்திருக்க முடியாமல் இருந்தவர்கள் கையிலிருந்த வெட்டரிவாளைத் தரையில் போட்டுவிட்டு அம்மையப்பனைக் கையெடுத்துக் கும்பிட்டனர்.

     ஏறக் குறைய இருவர் குற்றுயிராய் மரணத்துடன் போராடிக் கொண்டிருக்க இன்னும் இருவர் இடுப்பொடிந்து எழ முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

     இவர்களால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து ஓடிப் போனவர்கள் இன்னும் அதிகம் பேருடன் வரலாம் என்பதால் அங்கேயிருப்பது நல்லது அல்ல என்று அருகில் வந்த அசுவத்தில் ஏறிக் கொண்டு தக்க நேரத்தில் உதவிய அதை நன்றியுடன் தட்டிக் கொடுத்தான்.

     சற்று கழிந்து...

     காட்டுப்பாதையிலிருந்து திரும்பி வழக்கமான பெருவழியில் அம்மையப்பன் குதிரை உறையூரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - Unicode - PDF
     கள்வனின் காதலி - Unicode - PDF
     சிவகாமியின் சபதம் - Unicode - PDF
     தியாக பூமி - Unicode - PDF
     பார்த்திபன் கனவு - Unicode - PDF
     பொய்மான் கரடு - Unicode - PDF
     பொன்னியின் செல்வன் - Unicode - PDF
     சோலைமலை இளவரசி - Unicode - PDF
     மோகினித் தீவு - Unicode - PDF
     மகுடபதி - Unicode - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
     கபாடபுரம் - Unicode - PDF
     குறிஞ்சி மலர் - Unicode - PDF
     நெஞ்சக்கனல் - Unicode - PDF
     நெற்றிக் கண் - Unicode - PDF
     பாண்டிமாதேவி - Unicode - PDF
     பிறந்த மண் - Unicode - PDF
     பொன் விலங்கு - Unicode - PDF
     ராணி மங்கம்மாள் - Unicode - PDF
     சமுதாய வீதி - Unicode - PDF
     சத்திய வெள்ளம் - Unicode - PDF
     சாயங்கால மேகங்கள் - Unicode - PDF
     துளசி மாடம் - Unicode - PDF
     வஞ்சிமா நகரம் - Unicode - PDF
     வெற்றி முழக்கம் - Unicode - PDF
     அநுக்கிரகா - Unicode - PDF
     மணிபல்லவம் - Unicode - PDF
     நிசப்த சங்கீதம் - Unicode - PDF
     நித்திலவல்லி - Unicode - PDF
     பட்டுப்பூச்சி - Unicode - PDF
     கற்சுவர்கள் - Unicode - PDF
     சுலபா - Unicode - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
     அனிச்ச மலர் - Unicode - PDF
     மூலக் கனல் - Unicode - PDF
     பொய்ம் முகங்கள் - Unicode - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - Unicode - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
     வேருக்கு நீர் - Unicode - PDF
     கூட்டுக் குஞ்சுகள் - Unicode
     சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
     புதிய சிறகுகள் - Unicode
     பெண் குரல் - Unicode - PDF
     உத்தர காண்டம் - Unicode - PDF
     அலைவாய்க் கரையில் - Unicode
     மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF
     கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
     மாணிக்கக் கங்கை - Unicode
     குறிஞ்சித் தேன் - Unicode - PDF
     ரோஜா இதழ்கள் - Unicode
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
     வாடா மல்லி - Unicode - PDF
     வளர்ப்பு மகள் - Unicode - PDF
     வேரில் பழுத்த பலா - Unicode - PDF
     சாமியாடிகள் - Unicode
     மூட்டம் - Unicode - PDF
     புதிய திரிபுரங்கள் - Unicode - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108) - Unicode
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - Unicode - PDF
     பார்வதி, பி.ஏ. - Unicode
     வெள்ளை மாளிகையில் - Unicode
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode
பாரதியார்
     குயில் பாட்டு - Unicode
     கண்ணன் பாட்டு - Unicode
     தேசிய கீதங்கள் - Unicode
பாரதிதாசன்
     இருண்ட வீடு - Unicode
     இளைஞர் இலக்கியம் - Unicode
     அழகின் சிரிப்பு - Unicode
     தமிழியக்கம் - Unicode
     எதிர்பாராத முத்தம் - Unicode
மு.வரதராசனார்
     அகல் விளக்கு - Unicode
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - Unicode - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
     பஞ்சும் பசியும் - Unicode - PDF
விந்தன்
     காதலும் கல்யாணமும் - Unicode - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - Unicode - PDF
     பனித்துளி - Unicode - PDF
     பூவும் பிஞ்சும் - Unicode - PDF
     தனி வழி - Unicode - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - Unicode - PDF
     வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு - Unicode
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதன - Unicode
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி - Unicode
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - Unicode - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல் - Unicode
கௌரிராஜன்
     அரசு கட்டில் - Unicode - PDF
     மாமல்ல நாயகன் - Unicode
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - Unicode - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை - Unicode
     பதிற்றுப் பத்து - Unicode
     பரிபாடல் - Unicode
     கலித்தொகை - Unicode
     அகநானூறு - Unicode
     ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை - Unicode
     பொருநர் ஆற்றுப்படை - Unicode
     சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
     பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
     முல்லைப்பாட்டு - Unicode
     மதுரைக் காஞ்சி - Unicode
     நெடுநல்வாடை - Unicode
     குறிஞ்சிப் பாட்டு - Unicode
     பட்டினப்பாலை - Unicode
     மலைபடுகடாம் - Unicode
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
     திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
     திருக்குறள் (உரையுடன்) - Unicode
     நாலடியார் (உரையுடன்) - Unicode
     நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
     ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
     பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode
     ஏலாதி (உரையுடன்) - Unicode
     திரிகடுகம் (உரையுடன்) - Unicode
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம் - Unicode
     மணிமேகலை - Unicode
     வளையாபதி - Unicode
     குண்டலகேசி - Unicode
     சீவக சிந்தாமணி - Unicode
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம் - Unicode
     நாககுமார காவியம் - Unicode
     யசோதர காவியம் - Unicode
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை - Unicode
     திருவிசைப்பா - Unicode
     திருமந்திரம் - Unicode
     திருவாசகம் - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார் - Unicode
     திருவுந்தியார் - Unicode
     உண்மை விளக்கம் - Unicode
     திருவருட்பயன் - Unicode
     வினா வெண்பா - Unicode
கம்பர்
     கம்பராமாயணம் - Unicode
     ஏரெழுபது - Unicode
     சடகோபர் அந்தாதி - Unicode
     சரஸ்வதி அந்தாதி - Unicode
     சிலையெழுபது - Unicode
     திருக்கை வழக்கம் - Unicode
ஔவையார்
     ஆத்திசூடி - Unicode
     கொன்றை வேந்தன் - Unicode
     மூதுரை - Unicode
     நல்வழி - Unicode
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம் - Unicode
     கந்தர் கலிவெண்பா - Unicode
     சகலகலாவல்லிமாலை - Unicode
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம் - Unicode
     திருக்குறும்பலாப்பதிகம் - Unicode
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
     திருக்குற்றால மாலை - Unicode
     திருக்குற்றால ஊடல் - Unicode
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி - Unicode
     கந்தர் அலங்காரம் - Unicode
     கந்தர் அனுபூதி - Unicode
     சண்முக கவசம் - Unicode
     திருப்புகழ் - Unicode
     பகை கடிதல் - Unicode
நீதி நூல்கள்
     நன்னெறி - Unicode
     உலக நீதி - Unicode
     வெற்றி வேற்கை - Unicode
     அறநெறிச்சாரம் - Unicode
     இரங்கேச வெண்பா - Unicode
     சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை - Unicode
உலா நூல்கள்
     மருத வரை உலா - Unicode
     மூவருலா - Unicode
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
     நெஞ்சு விடு தூது - Unicode - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை - Unicode
     சிதம்பர மும்மணிக்கோவை - Unicode
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம் - Unicode
     மதுரைக் கலம்பகம் - Unicode
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை - Unicode
     திருவெம்பாவை - Unicode
     திருப்பள்ளியெழுச்சி - Unicode
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
     முத்தொள்ளாயிரம் - Unicode
     காவடிச் சிந்து - Unicode
     நளவெண்பா - Unicode
ஆன்மீகம்
     தினசரி தியானம் - Unicode
விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

கதம்ப மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)