(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 42 இரவு நேரம்... அரச உத்தரவைப் பெற்றுக் கொண்ட இராசேந்திரன் மெல்லச் சிரித்துக் கொண்டான். அரசரைப் பார்க்க வேண்டும் என்று செய்தி அனுப்பினால் அவர்கள் எனக்கு இங்கிருந்து வேங்கி எல்லைக்குப் போ என்று உத்தரவு அனுப்புகிறார்கள். இதிலிருந்து எனக்கு எவ்வளவு மதிப்பு தரப்படுகின்றது என்று புரிகிறது. மொத்தத்தில் தற்போதைய சோழ அரசருக்கு என்னைப் பிடிக்கவில்லை. அதனால் கண்மறைவாக கொஞ்ச நாளைக் இருந்துவிடுவதே தேவலை என்று தோன்றியது. “என்ன செய்யலாம்?” - காரனை விழுப்பரையனுடன் ஆலோசித்தான் இராசேந்திரன்.
“இங்கிருந்தால் அரச கட்டளையை மீறிய குற்றத்திற்கு ஆளாக வேண்டி வருமே?” “அதுவும் உண்மை. ஆனால் தற்போது நிலவும் சூழலைப் பார்த்தால் வெகு சீக்கிரமே இங்கு ஒரு மாற்றம் ஏற்படும் போல் தெரிகிறது.” “எப்படிச் சொல்கிறாய் விழுப்பரையா?” “வலங்கை, இடங்கைப் பிரிவு மறுபடியும் சோழப்படையில் தலைதூக்கும் போல் தெரிகிறது!” “அப்படித் தலைதூக்கினால் கடுமையான நடவடிக்கை மூலம் அடக்கிவிடலாமே!” “அடக்கிவிடலாம். ஆனால் அடக்குவது யார் என்பதுதான் கேள்வி! தற்போதைய அரசருக்கு ஆலோசனை கூற நிறைய பேர். கும்பல் பெருத்தால் கூச்சல் பெருகும் என்பார்கள்! அது போல...” என்று அவன் கூறும்போதே, யாரோ நடந்து வரும் காலடியோசை கேட்டது. “யார் அது?” “நான்தான் வீரசோழ இளங்கோ வேளான்.” “ஓ! அரசரின் மெய்க்காப்பாளரோ?” என்று காரனை விழுப்பரையன் கேலியுடன் கூற, “இல்லை, சோழ நாட்டின் தளபதி” என்றான் பெருமிதத்தோடு. “எப்போதிலிருந்து?” என்ற கேள்விக்குறியுடன் இராசேந்திரன் அவனை உற்று நோக்கினான். “முந்தின தளபதி இருக்கும் இடம் தெரியவில்லை. அதனால் எனக்கு அந்தப் பதவியைத் தந்திருக்கின்றார்கள்.” அவன் குரலில் அழுத்தமும் அத்துடன் கர்வமும் தலைதூக்கியது. “அதிரசம்தானே! இதோ தருகின்றேன்” என்று ஓலை நறுக்கை நீட்டினான் வேளான். அதில் காரனை விழுப்பரையனைக் கைது செய்யும் அரச உத்தரவு இருந்தது. “எதற்காக என்னைக் கைது செய்ய வேண்டும்? நான் என்ன குற்றம் செய்தேன்?”- ஆவேசத்துடன் கத்தினான் காரனை விழுப்பரையன். அதற்குள் உருவிய வாட்களுடன் பத்து வீரர்கள் அறைக்குள் நுழைந்து ஓரமாக நின்று கொண்டனர். இராசேந்திரன் அவர்களைப் பார்த்தபடி... “காரணம் இல்லாமல் காரனை விழுப்பரையனைக் கைது செய்வது வெட்கக்கேடான விஷயம்” என்றான். “காரணம் இருக்கின்றது. இடங்கைப் பிரிவைச் சேர்ந்த விழுப்பரையன் சோழர் படையில் பிளவை உண்டு பண்ண முயற்சி செய்தார்!” “உன்னால் நிரூபிக்க முடியுமா?” “சோழ ஒற்றர்களிடமிருந்து வந்த செய்தியைவிட வேறு சான்று வேண்டுமா?” என்று கேட்டபடி அவர்களை நெருங்கினான் வீரசோழ இளங்கோ வேளான். “சரியான கோமாளித்தனமாக இருக்கின்றது!” ஆத்திரத்துடன் காரனை விழுப்பரையன் உரத்த குரலில் கூற.. வீரர்கள் பக்கம் திரும்பிய வீரசோழ இளங்கோ வேளான், “ஏன் நிற்கின்றீர்கள். விழுப்பரையன் கையில் விலங்கிடுங்கள்!” என்றான் அதிகாரக் குரலில். வீரர்கள் அவனை நெருங்கவும், இராசேந்திரன் வாளை உருவிக் கொண்டு விழுப்பரையன் முன் நின்று கொண்டான். “யாரும் அவனைக் கைது செய்யக் கூடாது. அப்படி கைது செய்வதாயிருந்தால் முதலில் என்னுடன் போரிடுங்கள்” என்றான் ஆவேசமாக. முன்னால் சென்ற வீரர்கள் திகைத்து நின்றுவிட்டனர். “இது அரச உத்தரவு. அதை நீங்கள் தடுத்தால் இராஜத்துரோகக் குற்றத்திற்கு உள்ளாவீர்கள்” என்றான் இளங்கோ வேளான் கடுமையாய். “எனக்கும் தெரியும். ஆனால் நீதிக்காக அரச உத்தரவை மீறுவதில் தவறில்லை!” என்றான் பதிலுக்கு. “தாங்கள் கலகம் செய்யும் நோக்கில் இருந்தால், பின்னால் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் தங்களைத்தான் என்னால் பொறுப்பாக்க முடியும்” என்று கூறியபடி வீரஇளங்கோ வேளானும் வாளை உருவிக் கொண்டான். அந்தச் சிறிய அறையில் பெரும் குழப்பம் நிகழ இருந்த அந்த நேரத்தில்... “இராசேந்திரா!” என்ற குரல் கேட்டது. அனைவரும் திரும்பினர். சோழச் சக்கரவர்த்தி அதிராசேந்திரர் வாயிற்புரத்தில் நின்று கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் சோழ இளங்கோ வேளான் ஒதுங்கிக் கொண்டான். அறைக்குள் நுழைந்த அதிராசேந்திரர் “இம்மாதிரி ஏதாவது நடக்கும் என்று தெரிந்துதான் நானே இங்கு வந்தேன்” என்று புன்முறுவலோடு இராசேந்திரனை நோக்கி நடந்து வந்தார். நிசப்தமாக இருந்த அந்த நேரத்தில், அவரின் காலடி ஓசை அறையெங்கும் ஒலித்தது. “காரனை விழுப்பரையனக் கைது செய்வதில் உனக்கென்ன ஆட்சேபம்?” “அக்கிரமமான முறையில் இவர் கைது செய்யப்படுவதைத்தான் எதிர்க்கின்றேன்.” “இரகசியங்கள் இரகசியமாகவே இருக்க வேண்டும். காரனை விழுப்பரையனைப் பற்றி நிறைய குற்றச்சாட்டுக்கள் நம் பார்வைக்கு வந்துள்ளன. எந்நிலையில் நீ இருந்தால், இந்நேரம் அவன் சிரத்தையறுப்பதற்கு உத்தரவிட்டிருப்பாய்.” “ஆமாம். அவர் இருந்த போது நாட்டின் நிலை வேறு! இப்போது இருக்கும் நிலை வேறு. உன் உடம்பில் சோழ இரத்தம் ஓடுகிறது. அதனால் சோழ ஆட்சிக்கு எதிராக நீ குழப்பம் செய்யமாட்டாய் என்று நம்புகிறேன்! உண்மையான சோழ வம்சத்தைச் சேர்ந்த ஒவ்வொருவனும் இந்த நாட்டிற்காக உயிரைத் துறக்கத் துணிவானே தவிர, அதற்கு எதிராக வாளை உருவிடமாட்டான்!” “இல்லை என்று நான் மறுக்கவில்லை...” -மேற்கொண்டு பேச முயன்ற இராசேந்திரனை சக்கரவர்த்தி இடைமறித்து, “இப்போது ஏற்பட்டிருக்கும் ஆபத்தான நிலையைக் கருதித்தான் வேங்கி நாட்டு எல்லையில் உள்ள நம் சோழப்படைக்குப் பொறுப்பேற்க உன்னை அனுப்பியுள்ளேன். அதை நிறைவேற்ற உடனே புறப்படும்படி உனக்கு அன்புக் கட்டளை இடுகின்றேன்” என்றார். “புறப்பட எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால் காரனை விழுப்பரையனை அநீதியாகச் சிறையில் தள்ளுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.” “அவன் புரிந்த குற்றம் அப்படி!” “இல்லை, இது வீண் பழி என்று நான் கருதுகின்றேன்!” சோழச் சக்கரவர்த்தி மெல்ல சிரித்துக் கொண்டார். “உன்னால் கங்கைகொண்ட சோழபுரத்தில் வீண் கலகம் ஏற்பட்டதென்று அவப்பெயர் வேண்டுமா? அதற்காகத்தான் நீ இந்தச் சோழக் குருதியில் தோன்றினாயா?” “கலகத்துக்கு நான் காரணமாகமாட்டேன்! இதை உறுதியாக நீங்கள் நம்பலாம். ஆனால் காரனை விழுப்பரையனை உங்கள் கரங்களில் அநியாயமாக ஒப்படைத்துவிட்டு வெறும் கையோடு என்னால் வேங்கி எல்லைக்குப் போக முடியாது!” “அதற்காக என்னை என்ன செய்யத் சொல்கிறாய்?” என்றார் சக்கரவர்த்தி சீற்றம் மிகுந்த குரலில். “வேண்டுமானால் காரனை விழுப்பரையனை என்னுடன் அனுப்பிவிடுங்கள்; எனக்குத் துணையாக இருக்கும்!” “குற்றம் புரிந்தவனை உன் கூட அனுப்புவது எந்த நீதியில் இருக்கிறது?” “அவன் என்ன குற்றம் புரிந்தான் என்று எனக்குத் தெரிய வேண்டும்!” “சோழப்படையிலுள்ள இடங்கைப் பிரிவினரை எனக்கு எதிராகக் கலகம் புரியும்படி தூண்டினான். இதைவிட வேறு சான்று என்ன வேண்டும்?” அதைக் கேட்ட இராசேந்திரன் காரனை விழுப்பரையன் பக்கம் திரும்பி, “என்ன சொல்கிறாய் சக்கரவர்த்தி குற்றச்சாட்டிற்கு!” என்று கேட்டான். “இதை நான் மறுக்கிறேன். என்னைப் பிடிக்காதவர்கள் எனக்கு எதிராகப் பொய்யாய்த் திரிக்கப்பட்ட கதை.” “இல்லை. பொய் சொல்கிறான்!” - ஆவேசத்துடன் இளங்கோ வேளான் இடைமறிக்க... சோழச் சக்கரவர்த்தி குறுக்கிட்டு “இரவு நேரத்தில் ஏன் வீண் குழப்பம்? காரனை விழுப்பரையனை உன்னுடன் அனுப்ப வேண்டும். அவ்வளவுதானே?” என்று இராசேந்திரனைப் பார்க்க, “ஆமாம்!” என்றான் அவன். “வழிவிடுங்கள்! இருவரும் வேங்கி எல்லைக்குப் போகட்டும்!” என்று அதிராசேந்திரர் உரத்த குரலில் கூறினார். சற்று நேரம் கழித்து இராசேந்திரனும் காரனை விழுப்பரையனும் கங்காபுரிக் கோட்டையைவிட்டு வேங்கி எல்லை நோக்கிப் பயணமாயினர். அவ்விதம் பயணமாகும் போது... தான் வளர்ந்த கங்காபுரியை அவன் திரும்பிப் பார்த்தான். இருளில் கங்கைகொண்ட சோழேச்சுவரத்தின் கோபுரம் தெரிந்தது. தான் பிறந்து வளர்ந்து ஆளாகிய அந்த மண்விட்டுப் பிரியும் நிலை வந்துவிட்டதை எண்ணிப் பார்க்கின்றான். அதைத் துடைத்தபடி குதிரையை வேகமாகச் செலுத்தலானான் இராசேந்திரன். புரவிகள் இரண்டும் சோழகங்கம் ஏரிக்கரையின் மீது சென்று கொண்டிருந்தன. இராசேந்திரனுக்குத் தாங்க முடியாத மனத்துன்பம் மிகுந்துவிடவே, குதிரையை மிக வேகமாகச் செலுத்தாமல் அதன் போக்கின்படி போகவிட்டான். பக்கத்தில் வந்து கொண்டிருந்த காரனை விழுப்பரையன் கங்கைகொண்ட சோழபுரத்தைவிட்டு இராசேந்திரனைப் போகச் சொல்லிவிட்டதால் ஏற்பட்ட மனக்குழப்பத்தின் காரணமாகவே குதிரையை மெல்ல செலுத்துகின்றான் என்பதையுணர்ந்து அதற்கேற்றார் போல் அவனும் குதிரையின் வேகத்தை அடக்கிக் கொண்டான். இரு புரவிகளும் கலங்கல் செல்லும் பெரிய மேடையின் பக்கம் வரும்போது, வானத்திலிருந்த நட்சத்திரங்கள் மறைந்து, கரிய மேகங்கள் ஒன்று திரள ஆரம்பித்தன. இலேசான குமுறலோடு மின்னலும் பளிச் பளிச் சென்று தெரிந்தது. “மழை வரும் போலிருக்கிறதே!” -காரனை விழுப்பரையன் ஆகாயத்தைப் பார்த்தவாறு கூறினான். அவன் சொல்வதற்கு ஏற்றபடி வானிலிருந்து ‘பொட் பொட்’ என்று மழைத்துளிகள் அவர்கள் மீது விழுந்தன. “வெறும் தூறல்கள்தான். அதற்குள் நாம் பழையாறையை நெருங்கிவிடலாம்!” என்று புரவியை வாரினால் அடித்தான் இராசேந்திரன். அது நான்கு கால் பாய்ச்சலில் அங்கிருந்து கிளம்பத் தயாராகவும் அவர்கள் மீது விழுந்த மழைத்தூறல்கள் பலத்து வேகமாய் விழி ஆரம்பித்தன. “பலமாக வருகிறதே! சற்று ஒதுங்கிச் செல்வோமே!” காரனை விழுப்பரையன் அவசரப்பட்டான். அதற்கு ஏற்றார் போன்று இடியும், மின்னலுமாக பெருமழையாய்ப் பெய்ய ஆரம்பித்தது. ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், கலங்கல் மடைப்பக்கமிருந்த மண்டபத்தில் புரவியுடன் இருவரும் ஒதுங்கி நின்றனர். மழை இன்னும் வேகமாகப் பெய்யத் தொடங்கியது. “சீக்கிரம் போய்விடலாமென நினைத்தால் மழை வந்துவிட்டதே!” -இராசேந்திரன் ஆகாயத்தை நோக்கினான். அது இரண்டு பிரிவாய்ப் பிரிவது போல மின்னல் ஒன்று அடிவானம் வரை வேகமாய்ப் பெரிய ஒளிக்கோடு போட்டபடி நெளிந்து மறைந்தது. அதன் ஒளி கண்ணைக் கூச வைக்க, வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டான். அப்போது... பளீரென பளிச்சிட்ட மின்னலில் இவர்களிருந்த மண்டத்தை நோக்கி குதிரையில் ஒருவன் வேகமாய் வந்து கொண்டிருந்தான். அவன் யார் என்று கவனிப்பதற்குள் மின்னல் மறைந்து அப்பகுதியெங்கும் இருட்டில் மூழ்கியது. காரனை விழுப்பரையன் பக்கம் திரும்பிய இராசேந்திரன், “நாம் இருக்கும் இடத்தை நோக்கி குதிரையில் ஒருவன் வருவதைப் பார்த்தேன்!” என்றான். “உண்மையாகவா?” “ஆமாம்! இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே வரப் போகின்றான் பார்!” - இராசேந்திரன் கூறிக் கொண்டிருக்கும் போது, இருவர் செவிகளிலும் குதிரையின் குளம்பொலி சப்தம் விழுந்தது. “யாராக இருக்கும்? ஒருவேளை நம்மைக் கைது செய்வதற்காக வீரர்கள் அனுப்பப்படுகின்றார்களா?” - சற்றுக் கோபத்துடன் கேட்டவாறு, காரனை விழுப்பரையன் வாளின் மீது கை வைத்தான். மழையில் முழுவதும் நனைந்து போய், குதிரையுடன் மண்டபத்திற்குள் நுழைந்த அந்த உருவத்தைக் கண்டு, விழுப்பரையனின் கை வாளின் மீதிருந்து அகன்றது. “நீங்களா?” - என்றான் இராசேந்திரன். “ஆம்! நான்தான்!” -முகத்தில் வழிந்த மழை நீரைத் துடைத்துக் கொண்டே மேலாடையைக் கழற்றிப் பிழிந்த சோழ நாட்டின் துணைத்தளபதியாயிருந்த சிறிய தன்மபாலர், “நீங்கள் எப்படி இந்த நேரத்தில் இங்கே வந்தீர்கள்?” என்றார். “இந்தக் கடுமையான மழையிலா?” “அரசர் எங்களுக்கு உத்தரவிடும்போது மழையில்லை; கோட்டையைவிட்டு நாங்கள் வெளியேறும் போதுதான் மழை பிடித்துக் கொண்டது.” “என்ன இருந்தாலும் இரவு நேரத்திலா உங்களை கோட்டையிலிருந்து போகச் சொன்னார்?” “ஆமாம்! நீங்கள் எப்படி மழை நேரம் பார்த்து இங்கு வந்தீர்கள்?” “என்னைச் சிறையில் வைத்திருந்தார்கள். தப்பிக்க இது நல்ல தருணமாக இருந்ததால் பயன்படுத்திக் கொண்டேன்” என்ற சிறிய தன்மபாலர் “வெகு சீக்கிரம் நாம் இங்கிருந்து போய்விட வேண்டும். இல்லையென்றால் என்னைத் தேடிவரும் வீரரின் பார்வையில் நாம் அகப்பட்டுக் கொள்ள வேண்டி வரும்” என்று பிழிந்த ஆடையை மேலே போர்த்திக் கொண்டு குதிரையின் அருகில் சென்று தட்டிக் கொடுத்தார். அந்தச் சமயத்தில் தீப்பந்தத்தின் ஒளி ஒன்று தெரிந்தது. விழுப்பரையன் பதற்றத்துடன் “தீப்பந்த ஒளி தெரிகிறது. அநேகமாய் நம்மைத் தேடும் வீரர்களாயிருக்கலாம்” என்றான். குதிரையைத் தட்டிக் கொடுத்தபடியிருந்த சிறிய தன்மபாலர் திரும்பி அந்த ஒளியை உற்றுக் கவனிக்கலானார். கொஞ்ச நேரம் அவர் கண்கள் அசையாமல் நின்றன. பிறகு மூச்சுவிட்டபடி “நீங்கள் நினைப்பது போல் இல்லை!” என்றார். “இல்லையா?” “ஆமாம். அந்தத் தீப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டு வருவது நம்முடைய நண்பர். இன்னும் கொஞ்ச நேரத்தில் தெளிவாகப் போகிறது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த தீப்பந்த ஒளி மண்டபத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அடிக்கடி மின்னியபடியிருந்த மின்னல் வெளிச்சத்தில் தீப்பந்தத்தைப் பிடித்திருந்த உருவம் இராசேந்திரன் கண்களுக்குப் புலனாகவே செய்தது. இது என்ன விசித்திரம். தலையில் வெள்ளை முக்காடு. கையில் தீப்பந்தம். யாராக இருக்கும்? என்று அவன் உருவத்தைக் கூர்ந்து கவனிப்பதற்குள், மின்னல் வெளிச்சம் மறைந்துவிடவே, ‘அடடே! நல்ல நேரத்தில் இருள் சூழ்ந்துவிட்டதே!’ என்ற ஆதங்கத்துடன் மங்கலாகத் தெரிந்த பந்த ஒளியில் உருவத்தை உற்றுக் கவனித்தான். வேகமாய் நடந்து வந்த உருவம் சடக்கென்று மண்டபத்தின் இடப்பக்கத்திலிருந்த பெரிய ஆலமரத்தின் பின்பு மாயமாமாய் மறைந்து கொண்டது. சிறிய தன்மபாலர், “நீங்கள் இருவரும் இங்கேயேயிருங்கள்! நான் பார்த்துவிட்டு வந்துவிடுகின்றேன்” என்று ஆலமரத்தை நோக்கி ஓடினார். வெள்ளை முக்காடு உருவம் தன் இயல்பான கரகரப்புக் குரலில், “மண்டபத்தில் இருவர் இருக்கிறார்களே?” என்று கேட்க, “இராசேந்திரனும், காரனை விழுப்பரையுனும்தான்” என்றார் சிறிய தன்மபாலர். “நல்லது. என்ன விஷயமாக அவர்கள் இங்கே வந்தார்களாம்?” “இருவரையும் வேங்கி எல்லையில் உள்ள நம் சோழ படைக்குத் தலைமை தாங்க அரசர் அனுப்பியிருக்கின்றாராம்.” வெள்ளை முக்காடிட்ட உருவம் பரபரப்படைந்தது. “நான் நினைத்தது சரியாகப் போய்விட்டது. இராசேந்திரனை இங்கிருந்து அனுப்ப அவர்கள் திட்டம் போட்டுவிட்டார்கள். அத்திட்டத்தை நடத்த நாம் விடக்கூடாது!” சிறிய தன்மபாலருக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன்?” என்று வினவினார். “கூடிய சீக்கிரம் மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்ட தீர்மானித்துவிட்டார்கள். அத்துடன் வலங்கை இடங்கை என்று சோழர் படையில் பிரிவெண்ணம் தூக்கியிருக்கிறது. இடங்கைப் பிரிவினர் மறைந்த சோழச் சக்கரவர்த்தியின் கருத்துப்படி இராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்ட வேண்டுமென்று வெளிப்படையாகக் கூறி வருகின்றனராம். அதனால் இந்நேரத்தில் இராசேந்திரன் கோட்டைக்குள் இருந்தால் ஏதாவது கலகம் நிகழ்த்தி இளவரசனாக்கி விடப் போகிறார்கள் என்று பயந்து அப்புரப்படுத்தும் எண்ணத்தில் வேங்கிக்கு அனுப்புகின்றார்கள்.” “இப்பொழுதே போய் இராசேந்திரனிடம் வேங்கிக்குப் போக வேண்டாம் என்று தெரிவித்து வருகின்றேன்” என்றார் சிறிய தன்மபாலர் அவசரமாக. “நான் சீக்கிரம் திரும்பிவிட வேண்டும். பழையாறைக்குப் போவதற்கு இராசேந்திரன் சம்மதிக்கின்றாரா? என்பதைத் தெரிந்து கொண்டு வா!” என்று அவசரப்பட்டது உருவம். சிறிய தன்மபாலர் மண்டபத்தை நோக்கித் திரும்பினார். விஷயத்தை இராசேந்திரனிடம் அவர் சொன்னதும், “அரச உத்தரவை மீறுவதற்கு இல்லை. வேங்கிக்குப் போய்த்தான் தீர வேண்டும்!” என்றான் உறுதியாக. ‘இது என்ன வம்பு?’ என்று திகைத்த சிறிய தன்மபாலர், “நாட்டில் நிலவும் குழப்பத்தை அனுசரித்து நாங்கள் எடுக்கும் முடிவுக்கு நீங்கள் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்!” என்றார் அழுத்தமான குரலில். இராசேந்திரனுக்கு என்ன செய்வதேன்றே புரியவில்லை. சற்றுச் சிந்தனை வயப்பட்டு சிறிய தன்மபாலர் பக்கம் திரும்பினான். “என் உடம்பில் சோழ இரத்தம் ஓடுகிறது. என்னால் இங்கே கலவரமும், அதன் விளைவாய்ப் பெரும் குழப்பமும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அதனால் வேங்கிக்குப் போய்விடுவதே நல்லதாகப்படுகிறது!” சிறிய தன்மபாலருக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. ஆலமரத்தை நோக்கி ஓடினார். “என்ன ஆயிற்று?” என்று உருவம் வினவ... “இராசேந்திரர் அரச உத்தரவை மீறுவதற்கு இல்லை என்று திட்டமாய்க் கூறிவிட்டார்.” “அவரை வேங்கிக்குப் போகவிடக் கூடாது. அதனால் இராசேந்திரரை மட்டும் இங்கு அழைத்து வா! பேசி பார்க்கிறேன்!” என்றது. அதற்குத் தலையசைத்து சிறிய தன்மபாலர் மண்டபத்திற்கு ஓடிச் சென்று இராசேந்திரனிடம் தெரிவித்தார். காரனை விழுப்பரையனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு சிறிய தன்மபாலருடன் ஆலமரத்தை நோக்கி நடந்தான். தீப்பந்த ஒளியில் வெள்ளை முக்காட்டிற்குள் அந்த உருவம் அவனது கண்களுக்குப் புலனாகியது. உற்றுப் பார்த்தான். மார்பில் அரைமுழ அளவிற்கு வெட்டுக் காயமிருந்த வடு. ஆகா! இந்த வடு... இந்த வடு... என்று அவன் தலையைச் சொறிந்து யோசனை செய்யும் போது, பலமாய் வீசிய பெருங்காற்றால் உருவத்தின் முக்காடு விலகிவிட உருவத்துக்கு உரியவர் யாரென்று அவனுக்கு விளங்கிவிட்டது. ‘இவரா? சோழ நாட்டிற்காகப் பல தியாகங்கள் செய்த இவரா? இவர் ஏன் இந்த உருவில் உலவ வேண்டும்?’ அந்தக் கேள்வியோடு அவன் அவரை நெருங்கவும், “வா இராசேந்திரா! நான் யாரென்று தெரிந்துவிட்டதல்லவா?” என்று கேட்டது அந்த உருவம். சிந்தனையுடனும், உணர்ச்சிப் பெருக்குடனும் தத்தளித்த அவன் கைகளைக் குவித்து, “நீங்கள் ஏன் இந்த உருவில் நடமாட வேண்டும்?” என்று வினவினான். “எல்லாம் நாட்டிற்காகத்தானப்பா! இந்த உருவின் மூலம்தான் நான் பல காரியங்களை வெற்றிகரமாக முடித்துவிட்டேன். சோழ நாட்டை வீழ்த்த சதி செய்த சதிகாரர்களின் சதிகளையெல்லாம் இதன் மூலம்தான் அறிய முடிந்தது. ராஜத்துரோகம் என்று வீண்பழி சுமத்தி, அநியாயமாய்ச் சிறையில் தள்ளிய சிறிய தன்மபாலரை என்னால் இந்த உருவின் மூலம்தான் விடுவிக்க முடிந்தது. பட்டத்தரசிக்கு நஞ்சிடத் திட்டமிட்ட நயவஞ்சகர்களின் எண்ணத்தை இதன் மூலம்தான் அறிந்து அவருக்கு எச்சரிக்கையும் தர முடிந்தது!” “ஆமாம் இராசேந்திரா. அரசர் இறந்த துக்கம் தாளாமல் நஞ்சுண்டு இறந்துவிட்டேன்! என்று அரசியார் கைப்பட எழுதியது போல், ஒரு போலி லிகிதத்தைத் தயார் செய்துவிட்டிருந்தார்கள். அப்படி அவர்கள் லிகிதம் தயாரிக்கும் போதுதான் அதை நான் மறைந்திருந்து கவனித்தேன்.” இராசேந்திரனுக்கு ஆத்திரம் மிக, “பட்டத்தரசிக்கு விஷம் வைக்கும் அளவிற்குத் துணிந்த அந்தச் சதிகாரர்கள் யார்?” என்றான் கோபத்தோடு. “மேலைச்சாளுக்கிய வேந்தன் விக்கிரமாதித்தன். அவர் மனைவி இராஜசுந்தரி, பட்டத்தரசி இளையராணி, கொடும்பாளூர்க் குறுநில மன்னர்.” இராசேந்திரன் பற்களைக் கடித்தான். “மேலைச்சாளுக்கிய அரசன் சோழருக்கும், தனக்கும் உள்ள பழைய பகையை இப்போது தீர்த்துக் கொள்ள முடிவு செய்துவிட்டான் போலிருக்கிறது.” “ஆமாம் போரினால் சோழரை வெற்றி காண முடியாதென்று, வஞ்சக வழிக்குத் திரும்பி விட்டிருக்கின்றான். இது புரியாத சக்கரவர்த்தி, அவன் சொற்படியெல்லாம் நடக்கத் துவங்கியிருக்கின்றார்!” “அதற்குக் காரணம்?” “இரு பெண்கள். ஒன்று அவர் மனைவியான இளையராணி. இன்னொன்று அவரின் தங்கையான இராஜசுந்தரி.” “வேங்கிக்கு உன்னை அனுப்பி, அங்கே விக்கிரமாதித்தனால் உன்னைத் தீர்த்துக்கட்ட சதித் திட்டமும் தீட்டப்பட்டிருக்கிறது!” “என்னது?” “மேலைச்சாளுக்கிய மன்னனுக்கு நீ பங்காளி அல்லவா? அத்துடன் நீ சோழ அரசின் எதிர்கால இளவரசன். உனக்கு ஒரு முடிவுகட்டிவிட்டால், வஞ்சகர்களின் வழி எளிதாகிவிடும். சுலபமாய் மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிடலாம்.” “இளவரசுப் பட்டம் ஏற்க எனக்கு விருப்பமில்லை.” உருவம் வருத்தம் கலந்த குரலில் சிரித்தது. “உனக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் மறைந்த சக்கரவர்த்தி அம்மாதிரி நினைக்கவில்லையே. சோழ சாம்ராஜ்யத்திற்கு ஏற்படப் போகும் சரிவைத் தாங்கி நிலை நிறுத்தும் மன உறுதி படைத்த சோழ அரசகுல இளைஞர்களில், உன்னைத்தான் தலை சிறந்தவன் என்று முடிவு செய்து வைத்திருந்தார். அதைத்தான் என்னிடமும், முதன்மந்திரியிடமும், பட்டத்தரசியிடமும் சொல்லியிருக்கின்றார். மறைந்த அவரின் ஆன்மா சாந்திபெறவாவது நீ அந்தப் பட்டத்தை ஏற்கத்தான் வேண்டும்!” இராசேந்திரன் மௌனம் சாதிக்கலானான். “இந்த நாட்டிற்காக நாங்கள் செய்த தியாகங்கள் எத்தனை? அந்தத் தியாகங்கள் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிடக் கூடாது என்பதுதான் எங்களின் கோரிக்கை. இராசேந்திரா, பட்டத்தரசியார் கூட இந்த இக்கட்டான நேரத்தில் உன்னைத்தானப்பா மலைபோல் நம்பியிருக்கின்றார். அதனால் நீ வேங்கி செல்வதைத் தவிர்க்க வேண்டும்!” “மன்னிக்கவும்! அரச உத்தரவை நான் மீற முடியாத நிலையில் இருக்கிறேன்!” “அப்படியென்றால் உன் விருப்பப்படி நடக்க நான் குறுக்கே நிற்கமாட்டேன்! ஆனால் ஒன்று. என் கண் முன்னே இந்தச் சோழநாடு அழிந்து போவதையும், கொழுந்துவிட்டு எரியும் தீயில் பட்டத்தரசி தன்னை அர்ப்பணித்துக் கொள்வதையும், சதிகாரர்களால் முதன்மந்திரி பதவி நீக்கம் செய்யப்படுவதையும் காண என் மனதிற்கு வலிமை இல்லை. அதைவிட இந்த உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிவிருக்கிறது”- இடையில் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து இராசேந்திரனிடம் நீட்டி, “இதை மார்பில் பாய்ச்சிவிட்டு என் பிணத்தின் மீது வேண்டுமானால் வேங்கிக்குப் போ!” என்றது ஆக்ரோஷத்துடன். தூறல் நின்று வானம் வெளுத்துக் கொண்டிருக்க மண்டபத்திலிருந்து மூன்று புரவிகள் பழையாறை நோக்கிப் பயணமாயின. போகும் மூன்று புரவிகளை பார்த்துக் கொண்டிருந்த உருவம், அணைந்து கொண்டிருந்த தீப்பந்தத்தைத் தூர எறிந்துவிட்டு, “இனி எனக்கு வெற்றி கிடைத்துவிட்டது!” என்று கூறியபடி இருளில் நடந்து மறைந்தது. அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
வெல்லுவதோ இளமை மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 130.00 தள்ளுபடி விலை: ரூ. 115.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: எல்லா வயதிலும் திருப்புமுனைகள் வரலாம் ஆனால் இளமைக் காலத்தில் வரும் திருப்புமுனைக்கு தனி மதிப்புண்டு. லட்சிய வேட்கையையும் ஜெயிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையும் விதைக்கும் வயது அதுதான். இன்று ஒவ்வொரு துறையிலும் மிளிரும் ஆளுமைமிக்கவர்களின் இளமைக் காலத்தைத் திருப்பி பார்த்தால், அவர்கள் சந்தித்த தோல்விகள், தடைகள், தடுமாற்றங்களை நீளமாக பட்டியலிடலாம். அந்த அனுபவங்களை அவர்கள் எப்படி திறமையாகக் கையாண்டு வென்றார்கள்; வாழ்க்கையில் அவர்களுக்கு எந்த விதத்தில் திருப்புமுனை ஏற்பட்டது போன்ற காரணிகள்தாம் அவர்களை வெற்றியின் பக்கம் நிறுத்தியது. அதனால் தான் அவர்கள் இன்று எல்லோருக்கும் பாடமாகியிருக்கிறார்கள். அந்த வாழ்க்கைப் பாடங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய நூல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|