(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 25 உறையூரில் காவிரியைக் கடந்து நெடுங்குளம் பெருவழி மூலம் மதுரையை அடைந்த மூன்று புரவிகளும், அகழிப் பாலம் தூக்கப்பட்டிருந்ததால் கோட்டையில் புகமுடியாமல் அங்கேயே நின்றனர். தென்னன் புரவியிலிருந்து குதித்து முன்னே வந்தான். கோட்டையைக் காவல் செய்யும் வீரர்களில் ஒருவனைப் பார்த்து, “நாங்கள் சோழச் சக்கரவர்த்தியின் விசேஷ தூதுவர்கள்! எங்களை உள்ளேவிட வேண்டும்” என்றான். யாரையும் உள்ளேவிடக் கூடாது என்பதற்காகவே மதுராபுரிக் கோட்டையின் மாபெரும் கதவு மூடப்பட்டிருந்ததால் தென்னனை அங்கேயே இருக்கும்படிக் கூறிவிட்டுக் கோட்டைத் தலைவனிடம் அதைத் தெரிவித்தான். “சோழ மன்னரிடமிருந்து நாங்கள் ஓலை கொண்டு வந்திருக்கின்றோம்” என்றான் தென்னன் கோபத்தோடு. அவன் விறைப்பாய்ச் சொன்ன முறையிலிருந்தும் மற்ற இரண்டு பேரில் ஒருத்தி அரசகுடும்பத்தைச் சேர்ந்த வெளிநாட்டினள் போன்று இருந்ததாலும் மூவரும் உள்ளே நுழைந்துவிடுவதால் கோட்டையே பறிபோய்விடாது என்பதாலும் கோட்டைக் காவலன் அரச உத்திரவுக்கு அடிபணியாத குற்றத்துக்கு ஆளாகி தண்டனை பெற வேண்டாமென்று எண்ணி அகழிப் பாலத்தை இறக்கி அவர்களை உள்ளே அனுமதிக்கும்படி உத்தரவிட்டான். மரப்பாலத்தைக் கடந்த மூவரையும் வரவேற்ற கோட்டைத் தலைவன் நேராக அவர்களை இராசேந்திரனிடம் அழைத்துச் சென்றான். முக்கிய அலுவல் வேலையாயிருந்த இராசேந்திரன் வந்துவிடுவதாகக் கூறி கூடத்தில் உட்கார வைக்கும்படிக் கோட்டைத் தலைவனுக்குப் பணித்தான். எதற்காக அரசர் இந்தச் சமயத்தில் இரத்தினாதேவியிடம் ஓலை கொடுத்து அனுப்புகின்றார்? ஏற்கனவே என் மனதில் சோழ நாட்டிற்கு ஏன் அவள் வரவேண்டும் என்ற கேள்வி எழுந்துவிட்டது. தற்போது அவள் இங்கேயும் வந்திருக்கின்றாள் என்ற சிந்தனையுடனே இராசேந்திரன் அவர்களிருந்த கூடத்தை அடைந்தான். இவனைக் கண்டதும் தென்னன் எழுந்து வணங்கி நின்றான். கடார இளவரசியும் சாமந்தனும் புன்முறுவலுடன் கைகூப்பினர். பதிலுக்கு மரியாதை செய்துவிட்டு ஓலை வந்திருக்கிறது என்று கோட்டைத் தலைவனால் தனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியை மனதில் வைத்துக் கொண்டு இரத்தினாதேவியைப் பார்த்து மெல்ல முறுவலித்தான். கடார இளவரசியின் அகன்ற இரு பெரும் விழிகளும் இவனைச் சுட்டெரிப்பது போல ஒருகணம் பார்த்தன. மறுகணம் அந்தச் சுட்டெரிப்பு மறைந்து அங்கே இராசேந்திரனை ஈர்க்கக்கூடிய காந்த சக்தி ஒன்று தோன்றியது. அதை அவன் மேல் படரவிட்டபடி செவ்வல்லி இதழ்களைப் போல் இருந்த அவளின் சிவந்த இளம் உதடுகளில் முறுவல் ஒன்றைத் தவழவிட்டாள். சில நொடிகள் செல்ல அம்முறுவல் பெரிதாகி முத்தென்ற வெண்ணிறப் பற்கள் தெரியும்படி மெல்ல சிரிக்கலானாள். அந்தச் சிரிப்பினால் நிலைகுலைந்து போன இராசேந்திரன் பார்வையை அவளிடமிருந்து விலக்கி, “நீங்கள்...!” என்றான் தடுமாற்றத்துடன். “நாங்கள் சோழச் சக்கரவர்த்தியின் விருந்தாளிகள்!” என்றாள் கடார இளவரசி. அதற்கு அடையாளமான ஓலையன்றையும் அவனிடம் நீட்டினாள். அந்தப் படுதலினால் தன் மனத்தையிழந்த அவன் இன்னும் கொஞ்ச நேரம் என்பது போல வேண்டுமென்றே கடார இளவரசியின் விரல்களைத் தொட்டபடியிருந்தான். அதையே இரத்தினாதேவியும் எதிர்பார்த்ததால் விரல்களை இன்னும் கொஞ்சம் முன்னே தள்ளி அவன் கரங்களில் நன்றாய்ப் படச் செய்து மெல்ல இராசேந்திரனைப் பார்த்து முறுவலித்தாள். ‘விரல்கள் எத்தனை மென்மையாய் இருக்கின்றன!’ என்று அந்தத் தொடுதல் சுகத்தில் திளைத்த இராசேந்திரன் தன்னை நோக்கி முறுவலித்த அவளுக்கு உம்மென்று முகத்தைக் காட்டுதல் ஆண்மகனுக்கு அழகல்ல என்று எண்ணி பதிலுக்குப் புன்முறுவல் செய்தான். நான் நினைத்தபடி ஆள் முதல் கட்டத்திலேயே விழுந்துவிட்டான் என்று மகிழ்ச்சியுற்ற இரத்தினாதேவி, “என் கையிலிருப்பது அரசரின் ஓலை” என்றாள். இராசேந்திரனுக்கு சுய உணர்வு வந்தது. “ஆமாம்!” என்று அசடு வழியச் சிரித்து அதை வாங்கிப் படித்தான். ‘இரத்தினாதேவி நம் விருந்தாளி. நான் இருந்தால் என்ன வசதிகள் செய்வாயோ அதைப் போன்று இவளுக்கும் செய்ய வேண்டும்!’ -என்று அதில் குறிப்பிட்டிருந்தது. “மன்னிக்க வேண்டும்! உங்களை நீண்ட நேரம் உட்கார வைத்துவிட்டேன்! வாருங்கள் உள்ளே செல்லலாம்!” என்று மூவரையும் அழைத்துச் சென்றான் இராசேந்திரன். சில நொடிப் பொழுதில் மூவருக்கும் தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கென்று காவல் வீரர்கள் போடப்பட்டனர். இரத்தினாதேவிக்கு கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்று கேட்க இரு பணிப்பெண்களை அமர்த்தினான். ‘எப்போதும் என்னைக் கூப்பிடலாம்’ என்று அவளிடம் தெரிவித்துவிட்டு மூவருக்கும் சரியான முறையில் வசதிகள் செய்யப்பட்டதா? இன்னும் ஏதாவது விட்டுப் போய்விட்டதா? என்று யோசித்தபடி தன்னுடைய அறைக்குள் நுழைந்தான் இராசேந்திரன். “குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்!” என்ற கோட்டைத் தலைவன் குரலால் சிந்தனை கலையப் பெற்று, “என்ன?” என்றான். “யாரோ ஒரு சிவபக்தன்... மொட்டைத் தலையுடன் இருக்கின்றான். தங்களுக்கு முதலமைச்சரிடமிருந்து ஓலை கொண்டு வந்திருப்பதாகக் கூறுகின்றான். அவனை உள்ளே விடலாமா?” என்றான். மொட்டைத் தலையனா... என்று சிந்தித்த இராசேந்திரன், அவனைப் பற்றி நினைவு வந்தவன் போல, “முதலமைச்சரிடமிருந்தா?” என்று கேட்டான். “ஆமாம்!” என்று கோட்டைத் தலைவன் கூற, “அழைத்து வா!” என்று ஆணையிட்டுவிட்டு அறைக்குள் சென்றான். கோட்டைத் தலைவன் அவனை வணங்கிவிட்டு அகன்றதும், ‘இது என்ன! ஓலை மேல் ஓலை! சக்கரவர்த்தி ஒரு பக்கம்; முதலமைச்சர் ஒரு பக்கம். நம்மை ஒரு மாதிரி ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறதே!’ என்று எண்ணியபடி கடார இளவரசியின் நினைவோடு இருக்கையில் அமர்ந்தான். ஆகா! பொன்னிற மேனி என்றால் அவளுக்குத்தான் தகும். உயர்ஜாதிப் புரவி போல் அவளின் பின்னழகு எத்தனை மிடுக்குடன் இருக்கிறது! அவளின் நடைக்கு இந்த உலகத்தையும் அதற்கு அப்பால் இருக்கின்ற வான மண்டலத்தையும் கொடுத்தால் கூட ஈடாகாது போலிருக்கிறதே. துருதுருவென்று அசையும் அவளின் அகன்ற கண்களில்தான் எத்தனை வசீகரம். இரத்தத்தைத் தோற்கடிப்பது போல் செக்கச் சிவந்த அந்த இதழ்களைக் கண்டிப்பாய்... நான்... அதற்கு மேல் அவன் மனசாட்சி இரத்தினாதேவியைப் பற்றிச் சிந்திக்கவிடவில்லை. கங்காபுரிக் கோட்டையில் உன் வரவை எதிர்பார்த்து நாளும் உண்ணாமலும், உறங்காமலும் இருக்கும் மதுராந்தகியை மறந்துவிட்டாயா அரசகுமாரனே! என்று கேலியாகக் கேட்டது. அந்தக் கேள்விக்குப் பதில் கூற முடியாமல் கைகளை மடக்கியபடி அறையைச் சுற்றிச் சுற்றி வந்த இராசேந்திரன் இவள் ஏன் இப்போது இங்கே வர வேண்டும்? மதுராந்தகி எப்படி இருக்கின்றாளோ என்று தன்னையே கேட்டுக் கொண்டான். இதெல்லாம் கொஞ்ச நேரம் என்கிற மாதிரி மறுபடியும் கடார இளவரசியின் நினைவு அவன் மனதில் தலைதூக்கியது. இவ்விதம் இரு பெண்களைப் பற்றி மாறி மாறி நினைத்து, அதனால் அவன் குழம்பிக் கொண்டிருக்கும் போது... “வருங்கால சோழ இளவரசன் வாழ்க. மதுரையின் தற்காலிகப் பிரதிநிதியான உங்களுக்கு என் வணக்கங்கள்!” என்று கூறியபடி கோட்டைத் தலைவனுடன் உள்ளே நுழைந்தான் அம்மையப்பன். அவனை எதிரேயிருந்த ஆசனத்தில் உட்காரும்படிக் கூறினான் இராசேந்திரன். “சிவாய நம!” என்று முணுமுணுத்தபடி அமர்ந்தான் அம்மையப்பன். “நிறைய உண்டு!” என்று தன் இடுப்பிலிருந்த ஓலைச் சுருளை அவனிடம் தந்தான். அதைப் பார்த்த இராசேந்திரனுக்கு முகம் மாறியது. கோட்டைத் தலைவன் அதைப் புரிந்து கொண்டு அறையிலிருந்து வெளியேறினான். “அப்படி என்ன எனக்கு அபாயம் வந்துவிட்டது?” என்று அம்மையப்பனைப் பார்த்து வினவினான் இராசேந்திரன். “ஒரு பெண்ணுருவில் வந்திருக்கிறது. அதுவும் கடார தேசத்திலிருந்து வந்திருக்கிறது!” “என்னது?” புருவங்கள் நெரித்து நிமிர்ந்து இராசேந்திரன் உட்கார... “ஆம், உங்களைக் கொல்லவே அவள் கடாரத்திலிருந்து வந்திருக்கிறாள். கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து நீங்கள் மதுரை வந்துவிட்டதால் சக்கரவர்த்தியிடம், அவருடைய நோய்க்கு மூலிகை கொண்டு வருவதாகக் கூறிவிட்டு இங்கே வந்திருக்கிறாள். பழி பாண்டியர் தலையில் விழ அவள் உங்களை...” என்று நிறுத்தி அவனைப் பார்த்தான் அம்மையப்பன். இராசேந்திரனுக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. “முதலமைச்சர் அவளை இங்கு வராமல் தடுக்க எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் சக்கரவர்த்தியிடம் அவளுக்கு இருக்கும் நன்மதிப்பைப் பயன்படுத்தி இங்கு வர அனுமதி வாங்கிக் கொண்டாள். அதனால் உங்களுக்கு எச்சரிக்கை செய்யவே என்னை அனுப்பினார்!” என்றான். அழகிய பெண் கூற்றுவனுக்குச் சமம் என்ற கருத்து கொண்ட பாடலின் வரிகள் அவன் நினைவுக்கு வந்தன. “வஞ்சகி!” என்று பற்களைக் கடித்தான். “என்ன அம்மையப்பா, அதற்குள் புறப்பட்டுவிட்டாய்?” என்ற இராசேந்திரனிடம், “இந்தக் கட்டைக்கு ஓய்வு என்பதே கிடையாது. சோழ அரசுக்குத் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை நினைக்கும் போது, என் மனம் எப்படி ஓய்வை நாடும்? அதுமட்டுமல்லாமல் இங்கே மற்றுமொரு முக்கிய வேலை இருக்கிறது. சமயம் வரும் போது மறுபடியும் உங்களைச் சந்திக்கின்றேன்!” என்று அவனிடம் விடைபெற்றுக் கொண்டு கோட்டையிலிருந்து வெளிவந்தான். ‘எப்படியும் தூமகேதுவின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அதன் மூலம் தீவில் ஒளிந்து வாழும் பாண்டியனை அறிய வேண்டும். அதுவரை எனக்கு ஊணும் கிடையாது; உறக்கமும் இல்லை’ என்று பிரதிக்கினை செய்து புரவியை வேகமாகச் செலுத்தினான் அம்மையப்பன். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |