(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 26 சோழேந்திரன் என்ற பட்டப் பெயருடன் தொண்டை மண்டலப் பிரதிநிதியாக ஆட்சி புரியும் சோழச் சக்கரவர்த்தியின் இரண்டாவது மகனான மதுராந்தகன் காஞ்சி அரண்மனையில் முக்கிய வேலையாயிருந்தான். அவனுக்கு முக்கிய வேலையென்பது... இளம் மகளிர்களுடன் உல்லாசமாய்ப் பொழுது போக்குவது. அந்த முறையில் பதினாறு வயது கூட நிரம்பாத அழகிய இளம் பெண்ணான அவளை அருகில் அழைத்தான். சிறு வயதுப் பெண் என்றாலும் அக்குலத்தைச் சேர்ந்தவள் என்பதால் மதுராந்தகன் எதிர்பார்த்ததுக்கு மேலாக சரச விளையாட்டில் தேர்ச்சி பெற்றவள் போல் அவனை மார்புற அணைத்தாள். கூரிய இரு முட்கள் சோழப்பிரதிநிதியின் மார்பைத் தைத்தது போல் அவனுக்கு உணர்வு தோன்றியது. அதன் விளைவாய் தன்னையே மறந்த மதுராந்தகன் அவனுடைய கைகளை வழுவழுத்த அவளின் பின்னழகின் மென்மையில் மிக நளினமாகப் படரவிட்டான். அந்தப் படர்தலுக்கு ஏற்றவாறு அவ்விளம் பெண்ணும் தன் பின்னழகைப் பக்குவமாய்த் திருப்பினாள். மதுராந்தகனும் அந்த அழகிய பூங்கொடி போலிருந்த இளம் பெண்ணும் ஒருகணம் தன்னை மறந்தனர். அந்தச் சமயம் பார்த்து மூடப்பட்டிருந்த அறையின் கதவை அவளின் மெய்க்காப்பாளனான மாயசேகரன் ‘தட தட’வென்று தட்ட... “இந்த நேரத்தில் யார்?” என்று கோபமுடன் மதுராந்தகன் வினவி ஆடையைச் சரி செய்து கொண்டான். இளம்பெண் கதவைத் திறந்தாள். “குந்தள நாட்டுச் சக்கரவர்த்தியும், சோழச் சக்கரவர்த்தியின் மருமகனுமான விக்கிரமாதித்தர் வந்திருக்கின்றார்” என்றான் மாயசேகரன். செய்தியை அறிந்து சோழேந்திரன் ‘இப்போதுதானா வந்து கழுத்தறுக்க வேண்டும்!’ என்று எரிச்சலுடன் முணுமுணுத்தவாறு ஆடையைத் திருத்திக் கொண்டே அவரிடம் வருவதாகத் தெரிவிக்கும்படி மெய்க்காப்பாளனிடம் கூறினான். அவன் போனதும் இளம் பெண்ணின் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம் என்று குந்தள சக்கரவர்த்தியை வரவேற்பதற்காக வேகமாய் அங்கிருந்து வெளியேறினான். பகல் உணவு முடிந்தது. வீரசோழ வேளான், குந்தள நாட்டு மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தன், சோழேந்திரன் என்ற பட்டப்பெயருடைய மதுராந்தகன் ஆகிய மூவரும் சிறிது ஓய்வெடுத்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் இறங்கினார்கள். ஏற்கனவே காஞ்சி மாநகர நடவடிக்கைகளை மறைமுகமாகக் கண்காணிக்க சக்கரவர்த்தி வீரராசேந்திரன் அனுமதியோடு, முதலமைச்சர் பிரமாதிராசரால் அமர்த்தப்பட்டிருந்த சோழர் ஒற்றர்படையைச் சேர்ந்தவனும், திருவரங்கனின் பெரியப்பா முறையுமான இளம்சிங்கன் மூவரும் ஆலோசிக்க எண்ணியதை எப்படியோ அறிந்து, அவர்களுக்கு முன்பாக அவ்வாலோசனை அறைக்குள் நுழைந்து ஆயுதங்கள் வைக்கப்படும் பெரிய பேழையின் பின் சென்று ஒளிந்து கொண்டான். ஓய்வெடுத்துவிட்டு உள்ளே வந்த மூவரும் வாயிற் காவலனிடம் யாரையும் அனுமதிக்க வேண்டாமென்று உத்தரவிட்டு, உட்பக்கம் கதவைத் தாளிட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டனர். குந்தள நாட்டுச் சக்கரவர்த்தி சுற்றுமுற்றும் நோட்டம்விட்டு, “நம்மைத் தவிர இங்கே வேறு யாரும் இல்லையே?” என்று வினவினான் மதுராந்தகனிடம். “நம் ஒற்றன் இளம்சிங்கனைவிட்டு இந்த அறையைப் பார்க்கச் சொல்லிவிட்டேன்! அப்படி ஏதாவது இருந்தால் என்னிடம் தெரிவித்திருப்பான்” என்றான். “என்னப்பா இது... அவன் முதலமைச்சர் ஆளா? இல்லை நம் ஆளா? அவனைவிட்டு எப்படி இந்த அறையைப் பார்க்கச் சொன்னாய்?” என்றான் விக்கிரமாதித்தன். “சோழ ஒற்றர் பிரிவைச் சேர்ந்தவர்கள் அரசுக்கு விசுவாசமானவர்கள். அவர்கள் மேல் நாம் சந்தேகப்படக் கூடாது” என்றான் சோழேந்திரன். “நீ பொதுவாகச் சொல்கின்றாய்! நான் கேட்பது தனிப்பட்ட முறையில் அவனைப் பற்றி!” என்ற விக்கிரமாதித்தன், “இப்போது அவன் எங்கே?” என்றான். “இங்கேதான் இருப்பான். வேண்டுமென்றால் கூப்பிடட்டுமா?” என்று கேட்டான் சோழேந்திரன். “இம்மாதிரி முக்கிய நபர்கள் எங்கேயிருப்பார்கள் என்பதைப் பற்றிய விபரங்கள் உன்னிடம் எப்போதும் இருக்க வேண்டும்!” என்று குந்தள மன்னன் கூறவும், வீரசோழ வேளான் இருக்கையிலிருந்து எழுந்து, “அவனைக் கூப்பிடட்டுமா?” என்றான். “வேண்டாம். இப்போது எதற்கு அவன்? நம் சோழேந்திரன் நிர்வாகத்தில் எப்படியிருக்க வேண்டும் என்று சொன்னேன். சரி. ஆலோசனையைத் தொடங்குங்கள்!” என்றான். “கங்காபுரியென்னும் கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலமைச்சர் வைத்ததுதான் சட்டமாயிருக்கிறது. அரசர் நோய்வாய்ப்பட்டு இன்றோ நாளையோ என்றிருப்பதால் அவரைக் கைக்குள் போட்டுக் கொண்டு இவர் விருப்பம் போல் செயல்படுகிறார். நம் சோழ இளவரசர் அதிராசேந்திரருக்கு அடுத்து இராசேந்திரனை இளவரசனாக்க அரசரின் சம்மதத்தை வாங்கிவிட்டார் என்று தெரிகிறது. எனவே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தங்களை அழைத்து வரவே, குந்தள நாட்டிற்கு இளவரசர் அதிராசேந்திரர் என்னை அனுப்பினார்!” என்று வீரசோழன் மேலைச்சாளுக்கிய வேந்தனைப் பார்த்துக் கூறினான். மதுராந்தகனுக்கு முகம் மாறியது. “என்ன திமிர் இருக்கும் இவர்களுக்கு?” என்று சாளுக்கிய வேந்தன் கோபத்துடன் பற்களைக் கடித்து, “இரந்து தின்னும் நாய்களுக்கு அரசுப்பட்டமா வேண்டும்?” என்றான் உரக்க. “ஆரம்பத்திலிருந்தே முதலமைச்சர் என் பேரில் ஒரு கண்ணாக இருக்கின்றார். அவரை முதலில் அப்பதவியிலிருந்து விலக்க வேண்டும்” என்றான் மதுராந்தகன் கோபத்தோடு. “என்னை இளித்தவன் என்றா நினைத்துவிட்டார்கள்? சோழ அரசுக்கு நான் மருமகப்பிள்ளை என்ற முறையில் அதிராசேந்திரனுக்கு பிறகு, சோழேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டாவிட்டால் என் பெயர் விக்கிரமாதித்தனல்ல!” என்றான் அந்த அறையே அதிரும்படி. “கங்காபுரிக் கோட்டையின் நிர்வாகமும் நம் கைக்கு வரவேண்டும். சோணாட்டுத் தளபதி தன்மபாலர் முதல்மந்திரி சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகின்றார். அவர் தம்பி சிறிய தன்மபாலர் செய்யும் அட்டகாசத்துக்கு அளவேயில்லை. இதற்கு எல்லாம் முடிவு கட்டினால்தான் நம் கை ஓங்கும்!” என்றான் வீரசோழன். “ஆமாம், நீ சொல்வது போல உடனே புறப்படுவதுதான் உத்தமம்” என்று மதுராந்தகன் பக்கம் திரும்பிய சாளுக்கிய மன்னன், “சோழேந்திரா, நீயும் என்னுடன் வா. அங்கேயே அதிராசேந்திரனுக்கு பிறகு உனக்கு இளவரசுப் பட்டம் கட்ட அரசரிடம் உறுதிமொழி வாங்கிவிடுகின்றேன்! எவன் என்னைத் தடுப்பது என்று பார்த்துவிடலாம்” என்றான் உறுதியான குரலில். “உங்களுக்கு எவன் தடை சொல்வது? நீங்கள்தான் சோழ நாட்டின் மருமகனாயிற்றே!” என்று வீரசோழ வேளான் கூற மூவரும் எழுந்து கொண்டனர். அவர்கள் போன சில நொடிகள் கழித்து இளம்சிங்கன் பேழையிலிருந்து வெளிவந்தான். “அப்படியே ஆகட்டும்! உங்களால் நான் வேலைக்கு அமர்த்தப்பட்டவனாயிற்றே! இதைக் கூடவா செய்யாமல் இருப்பேன்?” என்றான் வாயிற்காவலன். அங்கு நடந்த உரையாடல்களை மிகச் சுருக்கமாக ஓலைக் கீற்றில் வரைந்து, அதைப் புறாவின் காலில் கட்டிப் பறக்கவிட்டான் இளஞ்சிங்கன். அடுத்து சில நொடிகளில் வான் மண்டலத்தில் சிறகடித்துப் பறந்தது புறா. அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|