இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
15 வருடம்
ரூ.1180/-
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது

  புதிய வெளியீடு!19

     முற்போக்காகப் பேசுவதற்கும் செயலாற்றுவதற்கும் மனிதர்கள் கிடைக்காத குறையை விட முற்போக்காக நினைப்பதற்கே மனிதர்கள் கிடைக்காத குறைதான் பெரிய வறுமை. செயலாற்றுவதற்குச் சோம்பல் படுகிற மனிதர்களை விட நினைப்பதற்கே சோம்பல் படுகிற மனிதர்கள் தாம் அதிகம் இருக்கிறார்கள்.

     மல்லிகைப் பந்தல் கல்லூரியின் சூழ்நிலைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எல்லாக் கல்லூரிகளிலும் உள்ள உறவு நிலை இப்படித்தான் இருக்கும் போலும் என்று தோன்றியது அவனுக்கு.

     'மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பட்டப்பெயர் வைத்துக் கேலி செய்கிறார்கள். ஆசிரியர்கள் தங்களுக்கு மேலே உள்ளவர்களுக்குப் பட்டப்பெயர் வைத்துக் கேலி செய்து திருப்திப்படுகிறார்கள். இதற்கு ஒரு முடிவேயில்லையா?' என்று மனம் நொந்த அவன் இவற்றுக்கெல்லாம் ஒரு விதிவிலக்குப் போலத்தான் ஓர் முழுமையான தீவிர இலட்சிய ஆசிரியனாக அந்தக் கல்லூரியில் விளங்க வேண்டுமென்று வைராக்கியம் கொண்டான். அன்று அவனை வகுப்புகளுக்குப் போகச் சொல்லவில்லை. முதல் நாளாகையால் வகுப்புகளும் அதிகமாக நடைபெறவில்லை. பேருக்கு இரண்டு மூன்று பீரியடுகளை நடத்தி விட்டு விட்டார்கள். கல்லூரி ஊழியனை அனுப்பித் தபாலாபீசிலிருந்து கடித உறைகள் வாங்கி வரச் செய்து ஊருக்குக் கடிதங்கள் எழுதினான் சத்தியமூர்த்தி. தந்தைக்கும், குமரப்பனுக்கும், இன்னொரு நண்பனுக்கும் கடிதங்களை எழுதி முடித்த பின் கடைசிக் கடிதத்தை மோகினிக்கு எழுதலாமா என்று தோன்றியது. தபாலை மோகினியின் தாய் வாங்கிவிட்டால் என்ன செய்வது என்ற தயக்கமும் கூடவே உடனெழுந்து முந்திய எண்ணத்தைச் செயலாக்கவிடாமல் தடுத்துவிட்டது. கண்ணீர் பெருகும் விழிகளோடு அழுகின்ற இதயமும் ஏதோ ஒரு முறைக்காகச் சிரிக்கின்ற வாயுமாக அவள் தனக்கு விடை கொடுத்த அந்தக் காட்சியை நினைத்தான் அவன். 'நாமிருவரும் பிரியும் போது கண்ணீரும் அமைதியுமே இருந்தன' என்ற கவிதை வரி நினைவு வந்தது. கல்லூரியின் சாயங்காலப் பாட வேளைகளும் முடிவதற்கு அறிகுறியாக மணி அடித்தது. விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் ஒவ்வொருவராக எழுந்து புறப்படத் தொடங்கிவிட்டார்கள். சிலர் கல்லூரியிலிருந்தபடியே மாலையில் பூபதியின் வீட்டுத் தோட்டத்தில் நடைபெற இருந்த தேநீர் விருந்துக்குப் போகலாம் என்ற நோக்கத்தோடு அங்கே தங்கியிருந்தார்கள். சத்தியமூர்த்தி கடிதங்களைத் தபாலில் போட்டுவிட்டு 'லேக் சர்க்கிளில்' அறைக்குப் போய் விட்டுத் திரும்பலாம் என்று புறப்பட்டிருந்தான். பாடனி விரிவுரையாளரும் தற்செயலாக உடன் வந்தார். ஆனால் நெருங்கி வந்து பேசவோ, பழகவோ பயப்படுகிறவர் போல் விலகி விலகி முன்னால் நடந்து போனார் அவர். 'கேட்' அருகே கல்லூரி விட்டுக் காரில் போய்க் கொண்டிருந்த பாரதி சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் காரை நிறுத்திக் கொண்டு பதற்றத்தோடு கீழே இறங்கினாள். ஆனால் அதைக் கவனிக்காதது போல் வேகமாக முன்னால் நடந்து போய்ப் பாடனி விரிவுரையாளரோடு சேர்ந்து கொண்டு விட்டான் சத்தியமூர்த்தி. பொன் தூவினாற் போன்றிருந்த சாயங்கால வெயிலில் நூலிழை நூலிழையாய்ப் பன்னீர் தெளிப்பதெனச் சாரல் பெய்யத் தொடங்கியிருந்தது. பாடனி விரிவுரையாளரின் கூச்சத்தை நீங்கச் செய்து அவரோடு பேசிக் கொண்டே நடந்தான் சத்தியமூர்த்தி. அந்தச் சாயங்கால வேளையில் மல்லிகைப் பந்தல் ஊரும் கருநீலங் கன்றிய மலைமுடிகளும் சொல்லி மாளாத கொள்ளை அழகுடையதாகத் தோன்றிக் கொண்டிருந்தன. சாரலும் பொன் வெயிலும் அந்த அழகை மேலும் அலங்கரித்தன.

     கடிதங்களைத் தபாலில் சேர்த்துவிட்டுச் சத்தியமூர்த்தி பாடனி விரிவுரையாளரோடு 'லேக் சர்க்கி'ளில் இருந்த தன் அறைக்குப் போய்க் கொண்டிருந்தான். சுபாவத்துக்கு அதிகமாகக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்த பாடனி விரிவுரையாளருடன் தான் பழகிய முறையினாலும் பேசிய விதத்தினாலும் சத்தியமூர்த்தி சிறிது மாறுதலை உண்டாக்கியிருந்தான். அந்த இளைஞரும் தங்கி வசிப்பதற்கு அறை தேடிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.

     "இந்த அறையில் என்னோடு இன்னும் இரண்டு பேரை உடன் வைத்துக் கொள்வதாக இருக்கிறேன். நீங்கள் விரும்பினால் இங்கே இருக்கலாம்" என்று சத்தியமூர்த்தி அவரிடம் தெரிவித்திருந்தான். ஒருவேளை சத்தியமூர்த்தி அதைத் தனக்கு மட்டும் தனி அறையாக வைத்துக் கொள்ள விரும்பலாமோ என்று எண்ணித்தான் கேட்கத் தயங்கியதாகவும் மற்ற இருவரை உடன் தங்க வைத்துக் கொள்கிற பட்சத்தில் முதல் ஆளாக உடனே தன்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், பாடனி விரிவுரையாளர் கேட்டார். சத்தியமூர்த்தியும் அதற்கு ஒப்புக்கொண்டான். மாலை ஐந்து மணிவரை அறையிலேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பின்பு இருவரும் சேர்ந்தே பூபதி அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் நடைபெற இருந்த விருந்துக்குப் புறப்பட்டார்கள்.

     "மாகாணத்திலேயே தலை சிறந்த கல்லூரி என்று சொல்கிறார்கள். ஆனால் இந்தக் கல்லூரியும் வம்புகள் நிறைந்ததாயிருக்கும் போல் தோன்றுகிறது சார்..." என்று பயந்து கொண்டே சுற்றும் முற்றும் மிரண்டுபோய்ப் பார்த்தவாறு கூறினார் பாடனி விரிவுரையாளர்.

     "வம்புகள் இல்லாத இடம் உலகத்திலேயே கிடையாது ஐயா! எதிர்கொண்டு நீந்தத் தெரிந்தவன் தான் வாழலாம். படித்துப் பட்டம் பெற்றுக் கல்லூரியிலிருந்து வெளியேறிய உங்களைப் போன்ற இளைஞர்களில் பலர் பிறரிடம் பழகுவதற்கே கூச்சமும் பயமும் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். நியாயமான துணிவையும், நேர்மையான நம்பிக்கைகளையும் கொடுக்க முடியாத படிப்பும் ஒரு படிப்பா என்று சில சமயங்களில் படிப்பின் மேலேயே வெறுப்பாக இருக்கிறது எனக்கு. இன்றைய சமூகத்தில் படித்தவர்கள் தான் கோழைகளாக இருக்கிறார்கள். படித்தவர்கள் தாம் பொய் சொல்லுகிறார்கள். படித்தவர்கள் தாம் பிறரை ஏமாற்றுகிறார்கள். சமயங்களில் தாங்களே ஏமாறவும் செய்கிறார்கள். உண்மையிலேயே ஒரு சமயமாக வழிபடுவதற்குக் கற்றுக் கொடுக்காத படிப்பினால் நாட்டுக்கும் பயனில்லை; நமக்கும் பயனில்லை" என்று சத்தியமூர்த்தி வேகமாகப் பேசுவதைக் கேட்பதற்கே தயங்கிப் பயந்தார் பாடனி விரிவுரையாளர். நியாயத்தையும் உண்மையையும் இவ்வளவு வேகமாக வற்புறுத்திப் பேசுகிற முதல் மனிதனை இப்போதுதான் வாழ்க்கையில் மிக அருகே சந்திக்கிறார் அவர்.

     "நீங்கள் ரொம்பவும் 'ப்ரொக்ரஸிவ்' (முற்போக்காக) ஆக இருக்கிறீர்கள். சில சமயங்களில் உங்கள் பேச்சைக் கேட்பதற்கே பயமாகவும் தயக்கமாகவும் இருக்கிறது" என்று அவர் பதில் கூறிய விதத்திலிருந்தே அவருடைய பயந்த சுபாவத்தைச் சத்தியமூர்த்தி புரிந்து கொண்டான். புதுமையாகவும் முற்போக்காகவும் நினைப்பதற்கும் பேசுவதற்கும் பயப்படுகிறவர்களே நம்மைச் சுற்றி இவ்வளவு பேர் இருக்கும் போது அப்படி வாழவும் செயலாற்றவும் துணிகிறவர்கள் எப்போது எப்படி வரப்போகிறார்கள் என்றெண்ணி ஆற்றாமையோடு பெருமூச்சு விட்டான் சத்தியமூர்த்தி.

     "நண்பரே! நம்முடைய நாட்டைப் போல் எல்லாவிதத்திலும் இரண்டுங்கெட்ட சூழ்நிலையில் உள்ள ஒரு நாட்டுக்குப் பெரிய வறுமை இப்போது என்ன தெரியுமா? முற்போக்காகப் பேசுவதற்கும், செயலாற்றுவதற்கும் மனிதர்கள் கிடைக்காத குறையை விட முற்போக்காக நினைப்பதற்கே மனிதர்கள் கிடைக்காத குறைதான் பெரிய வறுமை! செயலாற்றுவதற்குச் சோம்பல்படுகிற மனிதர்களைவிட நினைப்பதற்கே சோம்பல்படுகிற மனிதர்கள் நம்மிடையே அதிகமாக இருக்கிறார்கள். மனத்தினாலும் சிந்தனையினாலும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதற்கு இது ஓர் அடையாளமாகும்."

     உணர்ச்சிகரமாகச் சத்தியமூர்த்தி கூறிய இந்த வாக்கியங்களுக்குப் பாடனி விரிவுரையாளர் ஒரு பதிலும் கூறவில்லை. மௌனமாகப் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார் அவர். அந்தச் சமயத்தில் சத்தியமூர்த்தியின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கே பயமாக இருந்தது அவருக்கு. உண்மை இந்த உதடுகளிலிருந்துதான் பிறந்து வருகிறது என்பது போல் அத்தனை அழகாகத் தன் சிவந்த உதடுகளைத் திறந்து சத்தியமூர்த்தி கொதிக்கக் கொதிக்க உணர்ச்சி வசப்பட்டுப் பேசியதைக் கேட்கப் பயந்தது தவிர அவன் முகத்தைப் பார்க்கவும் பயந்தார் அப்பாவியான அந்தத் தாவர இயல் விரிவுரையாளர். பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் பூபதியின் வீட்டுத் தோட்டத்தை அடைந்தார்கள். தோட்டத்துப் புல்வெளியின் இடையேயிருந்த செடி கொடிகளிலும் பெயர் புரியாத குரோட்டன்ஸ்களிலும் இயற்கையாகவே பல்வேறு நிறங்களில் பூத்துத் தொங்கும் ஒளிப் பழங்களைப் போல் வண்ண வண்ணப் 'பல்பு'கள் எரிந்து கொண்டிருந்தன. 'காம்பவுண்ட்' கேட் அருகே தன் வரவை எதிர்பார்த்து ஆவலோடும் மலர்ந்த முகத்தோடும் பாரதி காத்துக் கொண்டிருப்பதைச் சத்தியமூர்த்தி கவனித்தான். தான் வருவதைப் பார்க்க வேண்டுமென்றே தனக்காக மட்டும் காத்துக் கொண்டிருந்தவள் போல் தான் உள்ளே வந்ததும் அந்தப் பெண் தோட்டத்து முகப்பிலிருந்து அப்பால் போய்விட்டதையும் அவன் பார்த்தான். தோட்டத்துப் புல்வெளியில் தூய வெள்ளை விரிப்புகளோடு விருந்து மேஜைகளும் நாற்காலிகளும் வரிசையாக நீண்டு கிடந்தன. கல்லூரி முதல்வர் வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டு நின்றார். விரிவுரையாளர்களையும், கல்லூரி அலுவலர்களையும் தவிர, மல்லிகைப் பந்தல் நகரப் பிரமுகர்கள் சிலரும் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். மேசை விரிப்புகளின் மேல் வெளேரென்று மின்னும் பீங்கான் கிண்ணங்களும், தட்டுக்களும், நடுநடுவே அலங்காரமாக மலர்க்குடுவைகளும் ஒரு பெரிய செல்வந்தர் வீட்டு விருந்துக்கே உரிய களையோடும், கம்பீரத்தோடும் இலங்கிக் கொண்டிருந்தன.

     "தமிழ் டிபார்ட்மெண்ட்காரர்கள் எல்லாம் இதோ இங்கே உட்கார வேண்டும்" என்று காசிலிங்கனாரும், மிஸ் வகுளாம்பிகையும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பகுதியைச் சுட்டிக் காண்பித்தார் கல்லூரி முதல்வர். சத்தியமூர்த்தியும் அங்கே போய் உட்கார்ந்தான். சுற்றிச் சுற்றி வந்த வண்ணம் எல்லோருடனும் சிரித்துச் சிரித்து உரையாடிக் கொண்டிருந்த பூபதி நடுவே சத்தியமூர்த்தி உட்கார்ந்திருந்த பக்கமாகவும் ஒரு முறை வந்தார். சத்தியமூர்த்தி எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்தினான்; அவரும் அன்போடு விசாரித்தார். பின்பு காசிலிங்கனார் பக்கமாகத் திரும்பி, "இவர் உங்கள் டிபார்ட்மெண்டுக்குப் புது விரிவுரையாளராக வந்திருக்கிறார். சத்தியமூர்த்தி, முற்போக்கும், ஆர்வமும் நிறைந்த இளைஞர். நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்..." என்று சத்தியமூர்த்தியைக் காண்பித்துச் சொல்லிவிட்டு மேலே நடந்தார்.

     பூபதியின் மகள் பாரதி விருந்துக்கு வந்திருந்த நகரத்துப் பிரமுகர்களின் வீட்டுப் பெண்மணிகள் கூடியிருந்த கூட்டத்துக்கிடையே சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும், அவளுடைய மை தீட்டிய கருவிழிகள் அடிக்கடி சத்தியமூர்த்தி வீற்றிருக்கும் பக்கமே திரும்பிக் கொண்டிருந்தன. தன்னைச் சுற்றியிருக்கிறவர்களுக்காகத் தன் வாயும் இதழ்களும் சிரித்துக் கொண்டிருந்த அதே வேளையில் சத்தியமூர்த்திக்காகச் சிரிக்கும் அந்தரங்கமான நளின நகையைக் கண்களால் செய்து கொண்டிருந்தாள் அவள். ஒதுக்குப்புறமான இந்த மலைநாட்டு நகரத்துக்குக் கூட இத்தனை விதமான 'ஹேர் ஸ்டைல்களும்' (கொண்டை அலங்காரங்கள்) வந்து பரவியிருக்கின்றன என்பதை எடுத்துச் சொல்வது போல் அத்தனை விதமான தலையலங்காரங்களுக்கும் எடுத்துக் காட்டான பெண்கள் அந்த விருந்துக்கு வந்திருந்தார்கள். பத்துப் பன்னிரண்டு பேர் ஒரே சமயத்தில் சேர்ந்து ஜலதரங்கம் வாசிப்பது போல் சிரிப்பொலிகள் அந்தப் பெண்மணிகளின் கூட்டத்திலிருந்து எழுந்து பரவிக் கொண்டிருந்தன. சத்தியமூர்த்தி மனிதர்களையும் அவர்களுடைய மனப்பான்மைகளையும் படித்து முடிக்கும் சுபாவமான சுறுசுறுப்போடும், ஆர்வத்தோடும் அந்த விருந்துக்கு வந்திருந்தவர்களைப் படித்துக் கொண்டிருந்தான். சிலர் மனம் நிறைய அழுதுகொண்டே கூட்டத்தையும் தன்னையும் ஏமாற்றிக் கொள்ளும் பொருட்டு வாய் நிறையச் சிரித்தார்கள். இன்னும் சிலர் ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்துக் கொள்வதையே துக்கம் விசாரிப்பது போலத் தவிர்க்க முடியாமல் செய்து கொண்டிருந்தார்கள். சுகமோ துக்கமோ, உணர்ச்சிகளில் ஆழ்ந்து நிற்கத் தெரியாத மனிதர்கள் எட்டுக்கால் பூச்சி ஊர்வது போல் பொது இடத்தில் பட்டும் படாமலும் பழகுகிற 'அழகைக்' கவனித்து இதயம் புழுங்கிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரி நிர்வாகத்தினருக்கும் ஆசிரியர்களுக்குமிடையே எப்போதும் சுமுகமான உறவு நிலவுவதற்கும் குடும்பப்பாங்கான சூழ்நிலை உண்டாவதற்கும் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் இப்படி ஒரு தேநீர் விருந்து நடைபெறுவதாகக் கூறிக் கல்லூரி அதிபரின் தாராள மனப்பான்மையைப் புகழ்ந்து எல்லோரையும் வரவேற்று ஆங்கிலத்தில் பேசி விருந்தை தொடங்கி வைத்தார் முதல்வர். முதல்வர் அவ்வாறு கல்லூரி நிர்வாகியைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, 'முதலை எவ்வளவு நாகரிகமாகக் காக்காய்ப் பிடிக்கிறது பாரும் ஐயா' என்று சத்தியமூர்த்தியின் பக்கத்திலிருந்த ஒரு விரிவுரையாளரிடம் இன்னொரு விரிவுரையாளர் முணுமுணுத்ததை அவனும் கேட்டான். விருந்து தொடங்கியது. சிற்றுண்டிக்குப் பின் எல்லார் முன்பும் மேசை மேல் வைக்கப்பட்டிருந்த 'கப்-ஸாசரில்' பரிமாறுகிறவன் ஆவிபறக்கும் தேநீரை ஊற்றிக் கொண்டு போனபோது சத்தியமூர்த்தியை மட்டும் கவனிக்கத் தவறிவிட்டான். ஆனால் பாரதி அவனையே கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொள்ளும்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.

     தான் உட்கார்ந்திருந்த பெண்கள் பகுதியிலிருந்து விறுவிறுவென்று எழுந்து வந்த பாரதி பரிமாறுகிறவன் கையிலிருந்த தேநீர்க் கெட்டிலை வாங்கிச் சத்தியமூர்த்தியின் அருகே வந்து அவனுடைய தேநீர்க் கோப்பையை நிறைத்த பின்பே தன் மனம் நிறைந்தவளாகத் திரும்பிச் சென்றாள். விருந்து நடத்துகிறவருடைய மகள் என்ற முறையில் அவள் அப்படிச் செய்ததை எந்த விதத்திலும் தவறாக எடுத்துக் கொள்ள இடமில்லையாயினும் தனக்காக அவள் அப்படிச் செய்ய நேர்ந்தது அதனால் எல்லாருடைய கவனமும் சில விநாடிகள் தன் பக்கமாகத் திரும்ப நேர்ந்தததை எண்ணி நாணினான் சத்தியமூர்த்தி. ஒரு கூட்டத்திலிருந்து ஒருவனைத் தனியே பிரித்துத் தேர்ந்தெடுத்துச் செலுத்தப்படுகிற அன்பு அந்தக் கூட்டத்தின் நடுவே அவனுக்கே தண்டனை போல் தோன்றும். சத்தியமூர்த்திக்கும் அப்போதும் அப்படித்தான் தோன்றியது. பரிமாறுகிறவனுடைய கவனத்தில் தான் தவறிவிட்ட அடுத்த விநாடியே பக்கத்திலிருந்தவர்கள் கூடக் கவனித்துக் கண்டுபிடிக்கும் முன்பாக அந்தப் பெண் எழுந்து வந்த வேகம், அவள் அதைப் பெரிய இழப்பாக எண்ணித் தவித்துப் போய் ஓடி வருவதாகப் புலப்படுத்தியது.

     ஆனால் கல்லூரி நிர்வாகியின் ஒற்றைக்கொரு செல்வப் பெண்ணாகிய அவளே அப்படி எழுந்து வந்து பரபரப்போடு உபசரித்த காரணத்தினால் அந்த உபசரிப்புக்கு ஆளான சத்தியமூர்த்தியின் பக்கமாக மற்றவர்களின் பார்வை பொறாமை கால்கொள்ளும் குறிப்போடு சில விநாடிகள் திரும்பி நிலைக்கும்படி செய்து விட்டாள் அவள். விருந்து முடிந்ததும் பூபதி ஆங்கிலத்தில் பேசினார். புதிய ஆசிரியர்களுக்கு நல்வரவு கூறி வரவேற்றும், பழைய ஆசிரியர்களைப் பாராட்டி நன்றி சொல்லியும், கல்லூரி வருங்காலத்தில் எதிர்பார்க்கிற இலட்சிய சாதனைகளை விளக்கியும், அழகியதொரு சொற்பொழிவாற்றினார் அவர். அதற்குப் பின் துணை முதல்வர் (வைஸ்-பிரின்ஸிபல்) புதிய ஆசிரியர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். அவரும் ஆங்கிலத்திலேயே பேசினார். 'அத்தனை பேர்களும் தமிழறிந்தவர்களாகவே இருந்து கொண்டு ஏன் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் பேசிக் கொள்கிறார்கள்?' என்றெண்ணி வியந்தான் சத்தியமூர்த்தி. அந்தரங்கத்தில் தாய்மொழியை அவமரியாதை செய்யும் அந்த நிகழ்ச்சிக்காக வருந்தவும் செய்தான். அந்த நிலையில் அவனே முற்றிலும் எதிர்பாராத விதமாகப் பூபதி அவன் பக்கமாகக் கையைக் கான்பித்து, "இந்த ஆண்டில் புதிதாக வந்திருக்கும் ஆசிரியர்களின் சார்பாக என்னுடைய இளம் நண்பர் சத்தியமூர்த்தி சில வார்த்தைகள் பேசுவார்" என்று அவனை வம்பில் இழுத்துவிட்டார். சில விநாடிகள் தயங்கிய பின் சத்தியமூர்த்தி பேச எழுந்து சென்றான். பேசுவதற்குச் செல்லுமுன் தற்செயலாகப் பாரதியின் பக்கமாகச் சென்றது அவன் பார்வை. குழந்தைத்தனமான மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் அவள் தன்னுடைய பேச்சை எதிர்பார்த்து மலர்ந்திருப்பதையும் அப்போது அவன் கண்டான். 'பெரியோர்களே! நண்பர்களே! சகோதரிகளே!' என்று தமிழில் அவன் தன்னுடைய பேச்சைத் தொடங்கியதும் கல்லூரி முதல்வர் அவசரமாக எழுந்து வந்து, ஆங்கிலத்தில் பேசுமாறு அவன் காதருகே முணுமுணுத்தார். 'ஆங்கிலத்தில் பேசுவதுதான் கௌரவம்' என்று வேறு வற்புறுத்தினார். அவருடைய முணுமுணுப்புக்கு மறுமொழி கூறிய சத்தியமூர்த்தி, அவருடைய செவிகளுக்கு மட்டுமே கேட்கிறாற் போன்று மெதுவான குரலில் அடக்கிக் கூறாமல் கூட்டத்திலிருந்த எல்லாருமே கேட்கும்படி இரைந்து கூறினான்: "சார்... ஐ ஹானர் தி இங்கிலீஷ்... பட் ஐ ஒர்ஷிப் தி டமில்" (நான் ஆங்கிலத்தை மதிக்கிறேன். ஆனால் தமிழை வணங்குகிறேன்) என்று அவரைக் குத்திக் காட்டும் பொருட்டு ஆங்கிலத்திலேயே அவருக்குப் பதில் கூறிவிட்டு "நம்முடைய கல்லூரி முதல்வர் அவர்களை அவமதிக்கக் கூடாதாகையால் அவருடைய கேள்விக்கு ஆங்கிலத்திலேயே மறுமொழி கூறிவிட்டேன். இனி இங்கே, கூடியிருக்கிற உங்களையும் நம்முடைய தமிழ்மொழியையும் அவமதிக்கக் கூடாதென்பதற்காகத் தமிழில் பேசுகிறேன். தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற உங்களுடைய கூட்டத்துக்கு நடுவே அதே மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற நான் பேசும்போது, தமிழில் பேசுகிறது மன்னிக்க முடியாத குற்றமானால் போனால் போகிறதென்று நீங்கள் என்னை மன்னித்து வையுங்கள்.

     "இந்த நூற்றாண்டில் ஆங்கிலம் மனிதனுடைய பொதுமொழி. தமிழ் தமிழன் மட்டுமே பேசுகிற மொழி. இந்தி இந்தியைப் பேசுகிறவனுடைய மொழி. ஆனால், ஆங்கிலம் எல்லோருக்கும் மொழியாகத் தக்கவிதத்தில் புது யுகத்துக்கு ஏற்ற மனிதனின் உலக சமுதாயப் பொது மொழியாக இருக்கிறது. அதன் இடத்தை வேறொன்று நிரப்பவே முடியாது. ஆனால், அதற்காக நமக்குள் நாம் கூடப் பேசிக் கொள்ளும்போது தாய்மொழியைப் புறக்கணித்து, அந்தப் புறக்கணிப்பைச் செய்வதற்காகவே பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதில்லை. உலகத்தோடு பழகுவது ஒரு மனிதனுக்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் வீட்டோடு பழகுவதும். உலகத்தின் சமுதாய மொழியாக வளர்ந்து வீறு பெற்றுவிட்ட ஆங்கிலத்தை எப்படி மதிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். இந்த நாட்டின் பிரதேச மொழிகள் வளருவதற்கு ஆங்கிலம் ஒரு போதும் தடையாக இராதென்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். அதே சமயத்தில் அவரவர்களுடைய தாய்மொழியை மதிக்கவும் தெரிய வேண்டும்" என்று மொழிப் பிரச்சினையைப் பற்றித் தைரியமாக விளக்கம் சொல்லிவிட்டு, அந்தக் கல்லூரியின் சிறப்பியல்புகளாகத் தான் கேள்விப்பட்டிருந்தவற்றைச் சொல்லி, "அப்படிப்பட்ட கல்லூரியில் நானும் பணிபுரிய வந்திருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்" என்பதாகப் பேசி முடித்தான் சத்தியமூர்த்தி. அவனுடைய கணீரென்ற குரல் ஒலித்து நின்ற போதுதான் அந்தக் கூட்டம் அதுவரை எவ்வளவு அமைதியாயிருந்து கேட்டதென்பது புரிந்தது. முடித்துவிட்டுத் தன் இடத்துக்குத் திரும்பியபோது, 'என்னுடைய பேச்சால் முதன் முதலாக ஆங்கிலத்தில் பேசிய கல்லூரி முதல்வரும், பூபதியும் மனம் புண்பட்டிருக்கலாமோ?' என்ற சிறிய சந்தேகமும் அவனுள் கிளர்ந்தது. 'அவ்வாறு மனம் புண்பட்டிருந்தாலும் பரவாயில்லை. பிறர் மனம் புண்படுமே என்பதற்காக உண்மையை மறைத்துப் போலியாகச் சிரித்துவிட்டு மேலே போய்விடுகிற பழக்கத்துக்கு இனியாவது முடிவு கட்ட வேண்டும். நான் செய்தது சரிதான்' என்று அடுத்தகணம் அவன் மனமே அவனைப் பாராட்டவும் செய்தது. விருந்துக் கூட்டம் முடிந்ததும், பூபதியோ, கல்லூரி முதல்வரோ தன்னைச் சந்தித்துக் கடுமையாகக் கோபித்துக் கொள்வார்கள் என்று அவன் எதிர்பார்த்தான்.

     ஆனால் அவன் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாகப் பூபதி அவனருகில் வந்து அவனைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். "நீங்கள் சொல்வதை நான் அப்படியே ஒப்புக்கொள்கிறேன் மிஸ்டர் சத்தியமூர்த்தி! பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட காரணத்தினால் தமிழ் நன்றாகத் தெரிந்தவர்களுக்கிடையேயும் என்னைப் போன்றவர்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருக்கிறது. இனியாவது அதை நாங்கள் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். சில சமயங்களில் ஆங்கிலமே தெரியாதவர்களுக்கு முன்னால் கூட ஆங்கிலத்தில் தான் பேச வருகிறது. நமக்குத் தெரியும் என்று காட்டிப் பிறரை மருட்டுவதற்காக ஒரு மொழியைப் பேசலாகாது. மொழிப் பழக்கமும் ஒரு நாகரிகம். பிறருக்கு நம் மனத்தைப் புரிய வைப்பதே அதன் நோக்கமாயிருக்க வேண்டும். ஆங்கிலத்தையும் நீங்கள் குறைத்துச் சொல்லவில்லை. அதை 'மனிதனின் மொழி' என்று அழகாகக் கூறினீர்கள். நீங்கள் கூறியது போல் அது உலகத்தின் சமுதாயப் பொதுமொழி. அதனால் நிச்சயமாக இனிமேல் எந்தப் பிரதேச மொழியும் பாதிக்கப்பட்டு வலிமை இழக்காது. ஆனால் ஓர் உதாரணத்திற்குச் சொல்லுகிறேன். வளர்ச்சியும் பக்குவமும் இல்லாத வேறு ஏதாவது ஒரு மொழி ஆங்கிலத்தின் இடத்தைக் கைப்பற்ற முயலுமானால் அது பல்வேறு மொழி இனங்களும் பிரிவுகளும் உள்ள இந்த நாட்டை உருக்குலைத்துப் பாழாக்கிவிடும். பல்வேறு மொழி இனங்கள் உள்ள இந்த நாட்டில் பழக்கவழக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையைக் காப்பாற்றி வருவது ஆங்கிலம் ஒன்றுதான் என்பதை நீங்களும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த நாட்டின் பழமையான பிரதேச மொழிகள் எல்லாம் பிழைத்து உயிர் வாழ வேண்டுமானால் இனிமேலும் இங்கே ஆங்கிலத்தைக் காப்பாற்றினாலொழிய வேறு வழி இல்லை" என்றார் பூபதி. கல்லூரி முதல்வரின் முகத்தில் மட்டும் கடுமையும் வெறுப்பும் குடி கொண்டிருப்பதைச் சத்தியமூர்த்தி கவனித்தான். பலருக்கு முன்னால் எழுந்து நின்று பேச வாய்த்த முதல் சந்தர்ப்பத்திலேயே எல்லாருடைய சிந்தனையிலும் தான் ஒரு பிரச்சினையாகிவிட்டதை அவனே உணர்ந்தான். 'உங்கள் பேச்சு மிகவும் நன்றாக இருந்தது' என்று அத்தனை பேருக்கும் நடுவே தேடி வந்து அவனைப் புகழ்ந்து விட்டுப் போனாள் பூபதியின் மகள் பாரதி. குறுகிய நோக்கமுள்ள சில பேராசிரியர்கள் அவனை வெறுப்புமிழுங் கண்களால் பார்த்துவிட்டுப் போனார்கள். விருந்திருக்கு வந்திருந்த பிரமுகர்களில் பலர் "அந்தப் பையன் யார் சார்?", என்று பூபதியிடம் அக்கறையோடு தூண்டித் தூண்டி விசாரிக்கும்படி அமைந்திருந்தது அவன் பேச்சு. அந்த அரைமணி நேரப் பேச்சில் எல்லலருடைய கவனத்துக்கும் ஆளாகியிருந்தான் அவன். விருந்து முடிந்து அறைக்குத் திரும்பும் போது பாடனி விரிவுரையாளர் சத்தியமூர்த்தியோடு உடன் வந்தார். மறுநாள் முதற்கொண்டு சத்தியமூர்த்தியுடன் தாமும் அந்த அறைக்கு வந்து தங்கப் போவதாகக் கூறிவிட்டுச் சென்றிருந்தார் அவர். அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து நீராடி விட்டுக் கல்லூரிக்குப் புறப்படத் தயாராக இருந்தான் சத்தியமூர்த்தி. காலை ஒன்பது மணி சுமாருக்குத் தம்முடைய பெட்டிப் படுக்கை முதலிய பொருள்களோடு முதல் நாள் கூறியிருந்தபடி தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசன் சத்தியமூர்த்தியோடு அந்த அறையில் வசிக்க வந்து சேர்ந்து கொண்டார். மூன்றாவது ஆளாக வேறு யாரையும் உடன் சேர்த்துக் கொள்ளாமல் தாங்கள் இரண்டுபேர் மட்டுமே அந்த அறையில் இருந்து கொண்டால் என்ன என்பதைப் பற்றி இருவரும் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள். இருவரும் தலைக்கு எட்டு ரூபாய் அதிகம் கொடுக்க நேர்ந்தாலும் இடம் தாராளமாயிருக்குமே என்று எண்ணினார்கள் அவர்கள்.

     இரண்டாவது நாளாகிய அன்று கல்லூரியில் அவன் ஒரு வகுப்புக்குச் செல்ல நேர்ந்தது. 'டயம் டேபிள்' (பாடவேளை) 'ஸெலபஸ்' (பாடத்திட்டம்) ஒன்றும் வகுத்து முடிக்கவில்லையானாலும், கல்லூரி முதல்வரின் கையொப்பமிட்ட 'சர்க்குலர்' (சுற்றறிக்கை) ஒன்று அவனுக்கும் வேறு சில ஆசிரியர்களுக்கும் பாடவேளை குறிக்கப்பட்டு அனுப்பப்பெற்றிருந்தது. புதிய ஆசிரியர்களில் சத்தியமூர்த்தி ஒருவனுடைய பெயர்தான் அன்று இருந்தது. அவன் அந்த வகுப்புக்குச் சென்றான். பி.ஏ. முதலாண்டு மாணவர்கள் அறுபது எழுபது பேர் ஒரு ஹாலில் அடைந்து கிடந்தார்கள். வகுப்பின் வலது பக்கமாக முதல் மூன்று பெஞ்சுகளில் மட்டும் மாணவிகள் உட்கார்ந்திருந்தனர். மற்ற எல்லாப் பெஞ்சுகளிலும், மாணவர்கள் இருந்தார்கள். பல்வேறு பாடப்பிரிவுகளையும், 'க்ரூப்'களையும் சேர்ந்த எல்லா மாணவர்களும் அங்கிருந்ததனால் ஒரு மணி நேரப் பொழுதுக்கு என்ன பாடம் நடத்தி அவர்கள் இதயமும் செவிகளும் நிறையச் செய்ய முடியுமென்று சத்தியமூர்த்தி சிந்தித்தான். மாணவர்களும் புத்தகம் ஏதும் கொண்டு வந்திருப்பதாகத் தெரியவில்லை. முதன்முதலாக ஒரு வகுப்புக்குள் நுழைந்து சும்மா உட்கார்ந்திருப்பதையும் அவன் விரும்பவில்லை. முதல் வரிசையில் பெண்கள் பகுதியில் உட்கார்ந்திருந்த பூபதியின் மகள் பாரதி தன்னிடமிருந்த ஆங்கிலக் கவிதைத் தொகுதி ஒன்றைத் தானாகவே அவனிடம் கொண்டு வந்து கொடுத்து, "இதில் ஏதாவது ஒரு பாடலை விளக்குங்கள் சார்" என்றாள். அவனுடைய மனநிலையைப் புரிந்து கொண்டு தானாகவே தயாராக எடுத்து வைத்திருந்தது போல அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்திருந்தாள் அவள். 'தமிழ் விரிவுரையாளராவது ஆங்கிலக் கவிதைக்கு அழகாக விளக்கம் சொல்வதாவது?' என்று மாணவர்கள் மருண்டார்களோ என்னவோ? சத்தியமூர்த்தி அந்தப் புத்தகத்தில் கைக்குத் தோன்றிய பக்கமொன்றைப் பிரித்தான். சத்தியமூர்த்திக்கு மிகவும் விருப்பமான கவிதை ஒன்று அந்தப் பக்கத்தில் வந்து வாய்த்தது. 'ஷீ வாக்ஸ் இன் பியூட்டி' என்று தொடங்கும் அழகிய கவிதை அது. பாரதியாரின் 'அழகுத் தெய்வம்' என்ற கவிதையை அதனோடு ஒப்பிட்டு மாணவர்களுக்கு விளக்கத் தொடங்கினான் சத்தியமூர்த்தி. பைரனின் அந்தக் கவிதையை உணர்ச்சி வசப்பட்டு விளக்கிக் கொண்டிருந்த போது, அவன் நினைப்பில் மோகினியின் நீர் பெருகும் விழிகள் தோன்றின. அவளுடைய சத்தியமான தூய அன்பு நினைவு வந்தது அவனுக்கு. நட்சத்திரங்கள் நிறைந்த, நிர்மலமான இரவு நேரத்து நெடு நீலவானத்தில் தனியாக மிதப்பதைப் போன்ற மோகினியின் தெளிவான அன்பை எண்ணினான் அவன். 'ஷீ வாக்ஸ் இன் பியூட்டி லைக் தி நைட் ஆப் க்ளெவுட்லெஸ் கிளைம்ஸ் அண்ட் ஸ்டாரி ஸ்கைஸ்' என்று அந்த வரிகளைக் கணீரென்று தொடங்கியதுதான் அவனுக்கு நினைவிருந்தது. அதன் பின் அவன் அந்தக் கவிதையில் தானே இரண்டறக் கலந்துவிட்டான். மோகினியோடு பழகிய அழகிய அநுபவங்கள் அவனுடைய அந்தச் சொற்பொழிவை இணையற்றதாகச் செய்தன.


கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் :  அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி :  சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி :  மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல் | கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் :  திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் :  அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் :  தினசரி தியானம்


அன்பும் அறமும்
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

மக்களைக் கையாளும் கலை
இருப்பு உள்ளது
ரூ.105.00
Buy

அள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

கல்பனா சாவ்லா
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

நெஞ்சக்கனல்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

அரசு கட்டில்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

சாண்டோ சின்னப்பா தேவர்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

துளசிதாசர் முதல் மீராபாய் வரை
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

வேணியின் காதலன்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

வான் மண் பெண்
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

அன்பே தவம்
இருப்பு உள்ளது
ரூ.220.00
Buy

வெற்றி நிச்சயம்
இருப்பு உள்ளது
ரூ.150.00
Buy

45 நொடி பிரசன்டேஷன்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

என் பெயர் ராமசேஷன்
இருப்பு இல்லை
ரூ.145.00
Buy

பேலியோ டயட்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

காலகண்டம்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

வெற்றி சூத்திரங்கள் பன்னிரண்டு
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

சூஃபி வழி : இதயத்தின் மார்க்கம்
இருப்பு உள்ளது
ரூ.380.00
Buy

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

சங்கமம்
இருப்பு உள்ளது
ரூ.30.00
Buy

சுந்தரமூர்த்தி நாயனார்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

வீழாதே தோழா
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இக பர இந்து மத சிந்தனை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)