18

     உண்மை பெரிய கோபுரத்தைப் போன்றது. கோபுரத்துக்கு அது கோபுரமாக இருக்கிறது என்பதால்தான் பெருமையே ஒழிய அதன் நிழல் பெரிதாக இருக்கிறது என்பதாலே பெருமையாகி விடாது. உண்மையாக வாழ்வதும் அப்படித்தான்.

     கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரி திறக்கப்படுகிற முதல் நாளாகையினால் மைதானத்திலும், பச்சைப் பட்டு விரித்தாற் போன்ற புல்வெளிகளிலும், மரங்களின் அடியிலும், விரிவுரைக் கூடங்களின் வராந்தாவிலும், கல்லூரி முதல்வருடைய அறை முன்பும் மாணவர்களின் பெருங்கூட்டம் கூடியிருந்தது. கல்லூரி காம்பவுண்டு முழுவதும் புதுமண வீடு போல் மகிழ்ச்சியும் ஆரவாரமும் நிறைந்திருந்தன. பட்டுப் பூத்தது போல் 'நெக்டை'யும் கஞ்சிப் பசை பளபளத்து மின்னும் 'பாண்ட்'டும் கோட்டுமாக விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும், குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்கள். வெளியூர்களிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் பிள்ளைகளின் அட்மிஷனுக்குத் தேடி வந்திருக்கிற பெற்றோர்கள் கூட்டமும் ஒரு புறம் காத்திருந்தது. இரட்டைப் பின்னலும், ஒற்றைப் பின்னலும், இன்னும் பலவிதமான தலையலங்காரங்களுமாகப் பல வண்ணப் பட்டுப் பூச்சிகளைப் போல் மாணவிகள் அங்கும் இங்குமாக மான்குட்டிகளாய்த் துள்ளித் திரிந்து கொண்டிருந்தார்கள். பெரிய சித்திரத்தில் முக்கியமான வர்ணங்கள் தீட்டப்பட்டிருக்கிற இடங்கள் மட்டும் பளீரென்று பார்க்கின்றவனுடைய கண்களைத் தேடி வந்து பதிந்து கொள்ளுகிற மாதிரி அவ்வளவு பெரிய காம்பவுண்டில் அத்தனை பெரிய கூட்டத்தில் மாணவிகள் நின்று கொண்டிருக்கிற இடங்கள் கலீர் கலீரென்று பொங்கும் சிரிப்பும், கிண்கிணிப் பேச்சுக்களும், கிளுகிளுக்கும் வளை ஒலிகளுமாகத் தனிக் கவர்ச்சியோடு இலங்கின. மஞ்சள் காவி பூசிய கல்லூரிக் கட்டிடங்களுக்குப் பின்னால் 'ஸீன்' கட்டித் தொங்கவிட்டாற் போல் மேகக் கொத்துக்கள் பதிந்த மலைச் சிகரங்கள் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் நகர்ந்து வருகின்றனவென அழகாகத் தோன்றின. பொன் உருகி மஞ்சள் வெள்ளமாய்ப் பொங்கினாற் போல் இலைகளே தெரியாதபடி மஞ்சள் நிறத்துக்குப் பூத்துக் கொட்டியிருந்த ஒரு வகை மரங்கள் கல்லூரிக் காம்பவுண்டில் அங்கங்கே நிறைந்திருந்தன. பச்சைப் புல்வெளிக்கும் அதன் மேல் பொன் பூத்தாற் போலப் பொங்கியெழுந்த இந்த மஞ்சள் மலர்த்தருக்களுக்கும் பொருத்தமாக இருந்தன.


ஃபிராய்ட்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

நேசமணி தத்துவங்கள்
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

சரோஜா தேவி
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

புண்ணியம் தேடுவோமே..! - பாகம் 2
இருப்பு உள்ளது
ரூ.210.00
Buy

கால்கள்
இருப்பு இல்லை
ரூ.390.00
Buy

கடவுளின் நாக்கு
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

வெற்றி சூத்திரங்கள் பன்னிரண்டு
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

நீங்க நினைச்சா சாதிக்கலாம்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

ஒரே ஒரு விஷயம்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

சிக்கனம் சேமிப்பு முதலீடு
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

எனதருமை டால்ஸ்டாய்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

கேம் சேஞ்சர்ஸ்
இருப்பு இல்லை
ரூ.220.00
Buy

தமிழகத் தடங்கள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

அயல் சினிமா
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

இவன் தானா கடைசியில்
இருப்பு உள்ளது
ரூ.75.00
Buy

நிலா நிழல்
இருப்பு இல்லை
ரூ.120.00
Buy

ஐ லவ் யூ மிஷ்கின்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

சுபாஷ்: மர்மங்களின் பரமபிதா
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

வெயிலைக் கொண்டு வாருங்கள்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy
     கல்லூரி அலுவலகத்தின் படிகளில் ஏறிக் கொண்டிருந்த போது சத்தியமூர்த்தியைப் பலர் சிரத்தையோடு திரும்பிப் பார்த்தார்கள். தூய வெள்ளை உடையும், மலர்ச்சியும் அழகும் மிக்க முகமாக மின்னல் நடந்து போவது போல் படியேறிப் போகும் இவன் யாராயிருக்கலாம் என்று அடக்க முடியாத ஆவலோடு திரும்பிப் பார்த்தார்கள் சுற்றியிருந்தவர்கள். கல்லூரி முதல்வரின் அறையும், ஹெட்கிளார்க், ரைட்டர், காஷியர், டைப்பிஸ்ட் முதலியவர்கள் அமர்ந்திருந்த அலுவலக அறையும் தனித்தனியாக இருந்தாலும் உட்புறமிருந்தே ஓர் அறையிலுள்ளவர்கள் மற்றோர் அறைக்குப் போய் வர வசதியாக அமைக்கப்பட்டிருந்தது. சத்தியமூர்த்தி நேராக முதல்வருடைய அறைக்குத்தான் போனான். முதல்வர் யாரோ நாலைந்து மனிதர்களை எதிரே உட்கார்த்திப் பேசிக் கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி உள்ளே வந்து நிற்பதைக் கவனிக்கவே அவருக்குக் கால் மணி நேரத்துக்கு மேல் ஆயிற்று. அவன் பக்கமாகத் திரும்பி நிமிர்ந்து பார்த்தவர், "ஓ..." என்று வியந்தவர் போல் சிரித்துவிட்டுச் சிறிது நேரம் நிரம்பவும் பரபரப்பாக இருப்பதற்கு அடையாளமாக ஓர் அர்த்தமுமின்றி மேஜை மேல் இந்தப் பக்கமாக இருந்த பைல் கட்டுகள் சிலவற்றை அந்தப் பக்கமாக நகர்த்தி வைத்துவிட்டுப் பியூனை ஆத்திரத்தோடு கூப்பிடுகிறவராய் மணியை உள்ளங்கையில் இரண்டு தரம் ஓங்கித் தட்டியபின் சத்தியமூர்த்தியை நோக்கி மேலும் கூறினார்:

     "எக்ஸ்க்யூஸ் மீ... நௌ ஐ ஆம் வெரி பிஸி வித்... தி... நியூ அட்மிஷன்ஸ்... யூ ப்ளீஸ் மீட் மிஸ்டர் சிதம்பரம் அவர் காலேஜ் ஹெட்கிளார்... ஹி வில் மேக் நெஸஸ்ஸரி அரேஞ்மெண்ட்ஸ் டு ரெஸிவ் யுவர் ஜாயினிங் ரிப்போர்ட்..." இவ்வாறு கூறியபடியே வலது கை விரலால் தாடி நுனியைத் திரித்து விட்டுக் கொள்ளலானார் முதல்வர். மிகவும் இரசிக்கத்தக்கப் பிருகிருதியாயிருந்த அவரை எண்ணி மனத்துக்குள் சிரித்துக் கொண்டே ஹெட்கிளார்க் சிதம்பரத்தைக் காணப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி. ஹெட்கிளார்க் வாயெல்லாம் பல்லாகத் தெரியச் சிரித்த முகத்தோடு அவனை வரவேற்றார். "என்ன சார் அது? விடிந்ததும் விடியாததுமாகப் புறப்பட்டுப் போய் அலைந்து வேறு ரூம் பிடித்துத் தங்கிவிட்டீர்கள் போலிருக்கிறதே? ஆனாலும், நீங்கள் இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டியதில்லை. இன்னும் இரண்டு நாள் இங்கேயே தங்கிக் கொண்டு நிதானமாகப் பார்த்திருக்கலாமே...?" என்று போலியாக வருவித்துக் கொள்ளப்பட்ட பொய் அநுதாபத்தோடு அவனை விசாரித்தார் ஹெட்கிளார்க்.

     "அதைப் பற்றி என்ன வந்தது இப்பொழுது? இரண்டு நாள் பொறுத்துச் செய்ய வேண்டிய நல்ல காரியத்தை இன்றே செய்து விட்டதற்காக வருத்தப்பட ஒன்றுமில்லை. பிரின்ஸிபல் உங்களைப் பார்க்கச் சொன்னார். நான் 'ஜாயினிங் ரிப்போர்ட்' கொடுத்துவிட்டு அட்டெண்டன்ஸில் கையெழுத்துப் போட வேண்டும்" - சிரித்துக் கொண்டே சத்தியமூர்த்தி இதைச் சொல்லிக் கொண்டிருந்த போது முதல்வரின் அறையிலிருந்து மணி அடிக்கப் பெற்றுக் கூப்பிடும் ஒலியைக் கேட்டு ஹெட்கிளார்க் எழுந்து ஓடினார். அவர் திரும்பி வருகிற போது வரட்டும் என்று பக்கத்திலிருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்தான் சத்தியமூர்த்தி. பெரிய பெரிய ஸ்டீல் பீரோக்களும், பைல்களும் புத்தகங்களும் அடுக்கிய அலமாரிகளுமாக நிறைந்திருந்த அந்தக் கூடத்தில் ஹெட்கிளார்க்கைத் தவிர வேறு சில அலுவலர்களும் அமர்ந்திருந்தார்கள். சாயம் பூசிக் கனிந்த கைவிரல் நகங்கள் டைப்ரைட்டர் மேல் சுறுசுறுப்பாக ஓடி மின்னும்படி டைப் செய்து கொண்டிருந்தாள் ஓர் ஆங்கிலோ இந்தியப் பெண்மணி. கல்லூரி முதல்வரின் அறைக்குள்ளிருந்து திரும்பிய ஹெட்கிளார்க் அந்த லேடி டைப்பிஸ்ட்டின் அருகில் சென்று ஏதோ நாலைந்து காகிதங்களைக் கொடுத்து விவரம் சொல்லிவிட்டுப் பின் மீண்டும் தம் இடத்துக்கு வந்தார். மேசை இழுப்பறையைத் திறந்து ஏதோ அச்சிட்ட தாள்களை எடுத்தார்.

     "இப்போது நல்லவேளை இல்லை போலிருக்கிறதே, இராகுகாலம் முடிந்ததும் நீங்கள் 'ஜாயினிங் ரிப்போர்ட்'டில் கையெழுத்துப் போடுகிறீர்களா?" என்று சொல்லித் தயங்கினார் ஹெட்கிளார்க். சத்தியமூர்த்தி இதைக் கேட்டு நகைத்தான்.

     "துணிவோடும் நம்பிக்கையோடும் வாழ்ந்தால் எல்லா வேளையும் நல்ல வேளைதான். எல்லாக் காலமும் நல்ல காலம்தான். இந்த நூற்றாண்டில் வாழ்க்கையே ஓர் அவசரமான சந்தர்ப்பமாயிருக்கிறது. அப்படியிருக்கும் போது நேரத்தின் மேலும் காலத்தின் மேலும் விருப்பு வெறுப்புக் கொண்டு என்ன சாதித்து விடப் போகிறோம்?" என்று அவன் கூறியதைக் கேட்டு ஹெட்கிளார்க் அவனை சந்தேகக் கண்களோடு உற்றுப் பார்த்தார். 'ஆள் சுத்த சுயமரியாதைக்காரனாக இருப்பான் போலிருக்கிறதே' என்று அந்த ஹெட்கிளார்க் தன்னைப் பற்றி அப்போது மனத்தில் வெறுப்பாக நினைப்பதை அவருடைய முகத்திலிருந்தே சத்தியமூர்த்தியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் ஹெட்கிளார்க்கின் வாய்ச் சொற்கள் மட்டும் மிகவும் நாசுக்காக அவனைப் பாராட்டுவது போல் வெளிவந்தன. "சார் ரொம்பவும் சீர்திருத்த மனப்பான்மை உள்ளவராக இருப்பீர்கள் போல் தோன்றுகிறது" என்று சிரிப்போடு சிரிப்பாகச் சேர்த்து விஷமத்தனமாகக் கூறியிருந்தார் அவர். அவருடைய வாய் அப்படிச் சொல்லியிருந்தாலும் மனத்தில் உள்ளூர, 'பயல் பெரிய 'சு' னா 'ம'னாவாக இருப்பான் போல் இருக்கே' என்று தான் அவர் நினைத்திருக்க வேண்டுமென்பதைச் சத்தியமூர்த்தியால் உய்த்துணர முடிந்தது.

     "இந்த உலகத்தில் மனிதன் உயிர் வாழ்கிற காலமே நல்ல சொப்பனத்தைப் போல் மிக மிக வேகமாகவும் சுருக்கமாகவும் ஓடி விடுகிறது. அதிலும் முக்கால்வாசி நேரத்தை இராகு காலம் எமகண்டம் என்று ஒதுக்கி விட்டால் முயற்சிக்கும் உழைப்புக்கும் மீதியிருக்கிற நேரம் தான் ஏது?" என்று தன் கருத்தையோ தன்னையோ அவர் தப்பாகப் புரிந்து கொள்ளாத வகையில் மேலும் தெளிவாக விளக்கிச் சொன்னான் சத்தியமூர்த்தி. ஹெட்கிளார்க் அவனுடைய விளக்கத்தைக் கேட்டுக் கொள்ளத் தயாராயில்லை.

     "எனக்கென்ன வந்தது! உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்" என்று ஜாயினிங் ரிப்போர்ட்டையும், கல்லூரி நிர்வாகத்தினர் ஆசிரியர்களோடு செய்து கொள்ளும் வழக்கமான உடன்படிக்கைத் தாளையும் எடுத்து அவனிடம் நீட்டினார் ஹெட்கிளார்க். அவற்றை வாங்கிப் படித்துவிட்டுப் பூர்த்தி செய்ய வேண்டிய இடங்களை விரைந்து பூர்த்தி செய்து கையொப்பமிடுவதற்கு முன் 'யுவர்ஸ் ஒபிடியண்ட்லி' - (தங்கள் பணிவுள்ள) என்றிருந்த இடத்தை 'யுவர்ஸ் ட்ரூலி' (தங்கள் உண்மையுள்ள) என்று அடித்துத் திருத்திவிட்டுக் கையொப்பமிட்டான் சத்தியமூர்த்தி. அவன் கையொப்பமிட்டுக் கொடுத்தவற்றை வாங்கி மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு அதே பழைய வங்சகச் சிரிப்போடு உள்ளடங்கிய ஆத்திரம் தொனிக்கும் குரலில் அவனிடம் கேட்டார் ஹெட்கிளார்க்.

     "இப்படி அடித்துத் திருத்தியிருப்பதனால் நாங்கள் உங்களிடம் 'ஒபிடியண்டை' (பணிவு) எதிர்பார்ப்பதற்கில்லை என்று அர்த்தமா? அல்லது உலகத்திலேயே நீங்கள் தான் உண்மையுள்ளவர் என்பதை நாங்கள் கண்டிப்பாகப் புரிந்து கொண்டு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமா?"

     "பணிவுள்ளவர் போல் குழைந்து நெகிழ்ந்து பேசித் திரிகிறவர்களும், உண்மையில் அப்படியில்லாமல் ஏமாற்றுவதில்லையா? பணிவுள்ளவனும் உண்மையாக வாழாமல் இருக்கலாம். ஆனால் உண்மையாக வாழ்கிறவன் பணிவில்லாமல் இருக்க முடியாது. உண்மை என்பது எல்லா நல்ல குணங்களையும் இணைக்கிற ஒரு பெருங்குணம். பணிவு அப்படி இல்லை. பிறரைக் கவர்கிற சிறிய குணங்களில் பணிவும் ஒன்று. பல பெரிய குணங்கள் இல்லாதவனிடம் பணிவு என்ற ஒரு சிறிய குணம் இருக்கலாம். ஆனால் உண்மை என்ற ஒரு பெருங் குணமோ எல்லாச் சிறிய குணங்களையும் உடன் கொண்டது."

     "அதாவது... அந்தப் பெருங்குணம் உங்களிடம் இருப்பதாக நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!... இல்லையா?"

     "ஒருவர் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டுமென்பதற்காக மட்டுமே உண்மையாக வாழ முடியாது! உண்மையாக வாழவேண்டுமென்பதையே நோக்கமாக வைத்துத் தான் அப்படி வாழ வேண்டும்! உண்மையைப் பற்றியே சந்தேகமாயிருப்பவர்கள் உண்மையைப் புரிந்து கொண்டு பாராட்டுவார்கள் என்பதையும் எதிர்பார்க்க முடியாது. உண்மை பெரிய கோபுரத்தைப் போன்றது. கோபுரத்துக்கு அது கோபுரமாக இருக்கிறது என்பதால் தான் பெருமையே ஒழிய அதன் நிழல் பெரியதாக இருக்கிறது என்பதாலே பெருமையாகி விடாது. உண்மையாக வாழ்வதும் அப்படித்தான்." இதைக் கேட்டு ஹெட்கிளார்க் முகத்தைக் கோணிக் கொண்டு இடுங்கிய கண்பார்வையால் அவனை வெட்டினார்.

     'பயல் திமிர் பிடித்தவனாகவும் இருப்பான் போலிருக்கிறதே' என்று இப்போது அவர் மனம் தன்னைப் பற்றி நினைப்பதாகச் சத்தியமூர்த்திக்குத் தோன்றியது. ஆனால் வெளிப்படையாக ஒன்றும் காட்டிக் கொள்ளாமல், "ஏதேது உங்களிடம் பேசி ஒன்றும் மீதம் கொண்டு போக முடியாது போலிருக்கே" என்றார் அவர். லேடி டைப்பிஸ்ட்டும், ரைட்டரும், தனக்கும் ஹெட்கிளார்க்குக்கும் நிகழ்ந்த இந்த விவாதத்தை அதுவரை சுவாரஸ்யமாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள் என்பதைச் சத்தியமூர்த்தி அப்போது தான் திரும்பிப் பார்த்துத் தெரிந்து கொண்டான். தான் 'ஒபிடியண்ட்லி' என்பதை அடித்துவிட்டு 'ட்ரூலி' என்று எழுதிக் கையொப்பமிட்டதை ஹெட்கிளார்க் சிறிதும் விரும்பவில்லை என்பதை அவன் உணர்ந்தான். வழக்கமாக எல்லோரும் கையெழுத்துப் போட்டுவிட்டுப் போகிற மாதிரி தானும் போடாமல் அப்படித் திருத்திக் கையொப்பமிட்டது தன்னைப் பற்றி அவர் மனத்தில் ஒரு விரும்பத்தகாத அபிப்பிராயத்தை முதல் பார்வையிலேயே ஏற்படுத்தியிருக்குமென்று அவனுக்குப் புரிந்தது. எல்லோரும் போகிற வழியில் போகாமல் தகுந்த காரணத்தோடு வழி விலகி நடக்கிறவனைப் பிறர் புரிந்து கொள்ள நீண்ட நாட்கள் பிடிக்கும் என்று தோன்றியது. 'ஜாயினிங் ரிப்போர்ட்' கொடுத்து முடித்ததும் ஹெட்கிளார்க் அவனை அழைத்துப் போய் வைஸ் பிரின்ஸிபலுக்கு (துணை முதல்வர்) அறிமுகம் செய்து வைத்தார். வைஸ் பிரின்ஸிபல் மற்ற ஆசிரியர்களை எல்லாம் அறிமுகம் செய்து வைத்தபின் 'தமிழ் டிபார்ட்மெண்ட்' அறைக்கு அவனை அழைத்துச் சென்று அவனுடைய 'ஹெட் ஆப் தி டிபார்ட்மெண்ட்'க்கு அவனை அறிமுகம் செய்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் காசிலிங்கனார் எம்.ஏ., பி.ஓ.எல்., எம்.லிட்., பி.எச்.டி., அவர்கள் அத்தனை பட்டங்களையும் தாங்கிக் கொள்ளக் கூட உடலில் ஆற்றலில்லாதவராய் எலும்பும் தோலுமாக மெலிந்து கோட் ஸ்டாண்டில் அப்படியே தூக்கி மாட்டி விடலாம் போல அத்தனை ஒல்லியாயிருந்தார். தமிழை ஆங்கிலம் போலவும் ஆங்கிலத்தைத் தமிழ் போலவும் உச்சரித்துப் பேசினார் அந்தப் பேராசிரியர். அவரிடம் அரைமணி நேரம் உட்கார்ந்து உரையாடியதில் அவரை நன்றாக எடை போட்டு முடித்து விட்டான் அவன். அவனைத் தவிர இன்னும் மூன்று விரிவுரையாளர்களும் இரண்டு டியூட்டர்களும் ஏற்கெனவே அங்கே தமிழ்த் துறையில் இருப்பதாகத் தெரிந்தது. அவனுடைய புரொபஸராகிய 'ஹெட் ஆப் தி டிபார்ட்மெண்ட்' கனமான சோடாபுட்டி மூக்குக் கண்ணாடியை அடிக்கடி கழற்றிக் கழற்றி மாட்டிக் கொண்டே, 'யூ ஸீ, யூ ஸீ...' என்று ஆரம்பித்துத் தப்பித் தவறி ஒரு தமிழ் வார்த்தை கூட வந்துவிடாமல் ஆங்கிலத்தில் பொழிந்து தள்ளினார். அந்த அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது நாலைந்து கல்லூரித் தோழிகளுடனே பாரதி அந்தப் பக்கமாய் ஏதோ காரியமாய் வருகிறவளைப் போல் வந்து தான் அங்கிருப்பதைக் கவனித்துக் கொண்டு போனதைச் சத்தியமூர்த்தியும் கவனித்தான். மறுபடியும் இரண்டு மூன்று முறை அதே போல ஆனால் உடனிருந்த தோழிகளின் தொகையை அதிகமாக்கிக் கொண்டு அந்தப் பக்கமாக வருவதும் போவதுமாயிருந்தாள். 'புதிய தமிழ் விரிவுரையாளர்' மிகவும் நல்லவர் என்று இந்தப் பேதைப் பெண் தன் தோழிகளைக் கூட்டிக் கொணர்ந்து என்னைக் காண்பித்துப் பெருமைப் பட்டுக் கொள்கிறாளோ?' என நினைத்தான் அவன்.

     அன்று மாலை ஐந்தரை மணிக்கு நிர்வாகி பூபதி அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் கல்லூரி ஆசிரியர்களையும் அலுவலர்களையும் தேநீர் விருந்துக்கு அழைக்கும் 'சர்குலர்' ஒன்று வந்தது. அது ஒரு 'கோ-எஜுகேஷன்' (ஆண்களும் பெண்களும் சேர்ந்து கற்கும்) கல்லூரி ஆகையால் ஆசிரியர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் சில பெண்மணிகளும் கூட இருந்தார்கள். தமிழ்ப் பகுதியில் மிஸ் வகுளாம்பிகை என்று ஒரு பெண் விரிவுரையாளராக இருந்தாள். 'புரொபஸர் சார்... புரொபஸர் சார்' என்று காசிலிங்கனாரைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாள் அந்த இளம் ஆசிரியை. 'வகுளம்!... யூ ஸீ...' என்று ஆரம்பித்துக் காசிலிங்கனாரும் அவளிடம் பேசுவதற்காகவே உண்டாக்கிக் கொண்டது போன்ற வாஞ்சையான குரலில் அடிக்கடி சிரத்தையாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அல்லது பேச முயன்று கொண்டிருந்தார். அங்கு வந்து சேர்ந்த முதல் விநாடியிலிருந்து ஒவ்வொரு அசைவிலும் பார்வையிலும் எதையும் தப்பவிட்டுவிடாமல் அந்தக் கல்லூரியையும் அங்குள்ள மனிதர்களையும் சற்றுப் புரிந்து கொள்ளத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. தோற்றத்தில் அழகும் புத்தியில் திறமையும் உள்ள இளம் ஆசிரியர்கள் மாணவர்களைக் கவர்ந்து வசப்படுத்திக் கொண்டு விடுவார்களோ என்று பயப்படுகிற ஒரு முதல்வர், எல்லா வேளையிலும் இராகுகாலத்தைத் தவிர வேறெதையும் அக்கறையோடு தேடிப் பார்க்க விரும்பாத ஒரு ஹெட்கிளார்க், தமிழை ஆங்கிலத்தைப் போலவும், ஆங்கிலத்தைத் தமிழைப் போலவும் உச்சரிக்கக்கூடிய ஒரு தமிழ்ப் பேராசிரியர். அடிக்கடி அடக்க முடியாமலும், தவிர்க்க முடியாமலும் ஏதோ புதுமையைப் பார்க்கிறவர்களைப் போல் தன் பக்கம் திரும்பிப் பார்க்கிற சக ஆசிரியர்கள் எல்லாரையும் மனத்தில் அளந்து நிறுத்திக் கொண்டிருந்தான் அவன். இடைவேளைக்குப் பின் தமிழ் 'டிபார்ட்மெண்ட்' அறையிலிருந்து புறப்பட்டு எல்லா ஆசிரியர்களும் பொதுவாகத் தங்கி ஓய்வு கொள்ளும் ஓய்வுக் கூடத்துக்குச் சென்றான் சத்தியமூர்த்தி. முதல்நாள் இரவு பஸ்ஸில் உடன் பயணம் செய்த பொருளாதார விரிவுரையாளர் தாமாகவே அவனைத் தேடி வந்து வலுவில் பேசத் தொடங்கினார். அவன் கேட்காமலிருக்கும் போதே அவராகவே கல்லூரி நிர்வாகி பூபதியைப் பற்றியும் முதல்வரைப் பற்றியும் ஏதேதோ அபிப்பிராயங்களைத் தெரிவிக்கலானார்.

     "பூபதி ரொம்ப 'ஷார்ட் டெம்பர்ட்' (விரைவில் உணர்ச்சி வசப்படுகிறவர்) மேன். அவர் நல்லதைக் கொண்டாடும்போது பிறர் சந்தேகப்படும்படியாக அளவு மீறிக் கொண்டாடுவார். இது நல்லதில்லையே என்று பிறர் வெறுக்கிறவற்றை அவர் நல்லதில்லை என்று புரிந்து கொண்டு வெறுக்க அதிக நேரம் பிடிக்கும். திடீரென்று கல்லூரிக்கு வருவார். விரிவுரையாளர்களோ, மாணவர்களோ அறியாதபடி வகுப்பறைகளுக்கு வெளியே நின்று விரிவுரைகளைக் கேட்பார். எந்த விரிவுரையாவது அவரை மிகவும் கவர்ந்து விட்டதோ அந்த விரிவுரையை நிகழ்த்திய ஆசிரியனை அவர் கொண்டாடிப் புகழ்கிற வேகத்தைப் பார்த்து மற்றவர்கள் எல்லாம் அவனை வெறுத்துப் பொறாமைப்படுகிற அளவுக்குச் செய்து விடுவார். வெறுக்கத் தொடங்கினாலும் அப்படித்தான். ஒன்றை விரும்புவதிலும் சரி வெறுப்பதிலும் சரி அவர் போய் நிற்கிற எல்லை எதுவோ அது மற்றவர்கள் அணுக முடியாததாயிருக்கும். அவருடைய மகிழ்ச்சியையும் தாங்கிப் பொறுத்துக் கொள்ள முடியாது. கோபத்தையும் தாங்கிப் பொறுத்துக் கொள்ள முடியாது. 'மேன் ஆஃப் மூட்ஸ்'. நிரம்ப 'எக்ஸைட்மெண்ட்' உள்ளவர். குண்டூசி குத்துகிற நேரத்தில் மாறி விடுவார். ஏன் மாறினார் என்று காரணமும் கண்டுபிடிக்க முடியாதபடி மாறி விடுவார்."

     "அதனால் என்ன சார்? மனிதர்கள் தாங்களும் பலாபலங்கள் உள்ள வெறும் மனிதர்களாகவே இருக்கிறவரை இன்னொரு மனிதனைப் பற்றி இப்படி விமர்சனம் செய்து என்ன ஆகப் போகிறது?" என்று அந்தப் பேச்சை அவ்வளவில் நிறுத்த முயன்றான் சத்தியமூர்த்தி. அப்படியும் அவர் தமது பேச்சை நிறுத்தவில்லை.

     "உங்களுக்குத் தெரியுமா மிஸ்டர் சத்தியமூர்த்தி? எல்லா லெக்சரர்களும் சேர்ந்து நம்முடைய பிரின்ஸிபலுக்கு 'க்ரொகடைல்' (முதலை) என்று பேர் வைத்திருக்கிறோம். அந்த முதலையின் ரூம் பக்கம் போனால், அப்புறம் 'ஒரே கஜேந்திர மோட்சம்'தான். அப்படியே ஆளைக் கவ்விக் குதறி விடும் குதறி. கடிபட்டவர் எந்த நாராயணமூர்த்தியைக் கூவி அழைத்தும் பயனில்லை. ஹெட்கிளார்க் பெரிய முதலைக்கு அநுசரணையாக இருக்கும் ஒரு குட்டி முதலை."

     'ஆனால்... இராகுகாலம் குளிகை காலம் சரிபார்த்துக் கொண்டு அப்புறம் கடிக்கிற குட்டி முதலை' என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு சிரித்தான் சத்தியமூர்த்தி. மல்லிகைப்பந்தல் கல்லூரியைப் பற்றி நாடு முழுதும் நல்ல பெயர் பரவியிருந்தாலும் அங்கேயும் உள் அரசியல் நிறைந்திருப்பது அங்கு வந்து சேர்ந்த முதல் தினமாகிய அன்றே சிறிது சிறிதாகப் புரிந்தது அவனுக்கு. அலைகளே இல்லாத சமுத்திரம் எங்குமே இருக்க முடியாதென்று முடிவுக்கு வந்தான் சத்தியமூர்த்தி. இடம் காற்று முதலியவற்றுக்கு ஏற்பச் சிறிய அலைகளாகவோ பெரிய அலைகளாகவோ எப்படியும் அலைகள் இருப்பதுதான் கடலின் இலட்சணம் போலும் என்று எண்ணி மன அமைதி பெற முயன்றான் அவன்.

     'முதல் தரமான மனிதர்கள் கருத்துகளைப் பற்றிப் பேசி விவாதிக்கிறார்கள். சாதாரணமான மனிதர்கள் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசி விவாதிக்கிறார்கள். மட்டரகமான மனிதர்கள் மட்டுமே தனி நபர்களைப் பற்றிப் புறம் பேசி விவாதிக்கிறார்கள்' என்று ஒரு சீனப் பழமொழி உண்டு. சத்தியமூர்த்தி இப்போது அந்தப் பழமொழியை நினைவு கூர்ந்தான். சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனைப் பற்றிச் சுதந்திரமாகப் பேசி விமர்சனம் செய்யும் உரிமை தனக்கு வேண்டுமென்று ஆசைப்படுகிறான். அதே சமயத்தில் தன்னைப் பற்றி பிறர் அப்படி விமர்சனம் செய்ய ஆசைப்படுவதை மட்டும் அவனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. பிறரைப் புரிந்து கொள்வதையும் பிறரைப் பற்றிச் சிந்திப்பதையும் சத்தியமூர்த்தி ஒருபோதும் வெறுத்ததில்லை. அவனே பலரைப் பற்றி அப்படிப் புரிந்து கொள்ள முயன்று சிந்தித்திருக்கிறான். ஆனால் ஒவ்வொருவரையும் பற்றி விமர்சிக்க இன்னொருவர் தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைத் தராசு ஆக்கி நிறுப்பது எவ்வளவு நல்லது என்று விளங்கிக் கொள்ள முடியாமல் தயங்கினான் அவன். சொந்த விருப்பு வெறுப்புக்களை அளவு கருவியாகக் கொண்டு நிறுக்காமல் சம்பந்தப்பட்டவர்களின் குணங்களையோ குணக்கேடுகளையோ நிறுத்து விமர்சனம் செய்வதை அவன் வெறுப்பதில்லை. ஒவ்வொரு மனிதனையும் பற்றிச் சமுதாயமே இப்படி ஒரு விமர்சனத்தை தயாராக வைத்திருக்கும். யாரும் அதைத் தவிர்க்க முடியாது. அதிலிருந்து தப்பவும் முடியாது. சிலரைப் பற்றி ஒரு சமுதாய விமர்சனமும் வெளிவராது. வேறு சிலரைப் பற்றி ஏதாவது ஒரு சமுதாய விமர்சனம், மொத்தமாக வெளிவராமலிராது. மனிதனை, நல்லவனாகவோ, கெட்டவனாகவோ தீர்மானம் செய்கிற உரிமை, நல்லதும் கெட்டதும் தன்னிடமே உள்ள ஒரு தனிமனிதனிடம் விடப்படுவதைக் காட்டிலும் பல தனி மனிதர் சேர்ந்த சமூகத்தினிடம் விடப்படுவது உத்தரவாதமுள்ள காரியமென்று தோன்றியது. பொருளாதார விரிவுரையாளர் பேசிய பேச்சுக்கள், சொந்த விருப்பு வெறுப்பிலும் விரக்தியிலும் பேசப் பெற்றதாகப் படவே அதை அப்படியே எடுத்துக் கொள்ளலாகாது என்று எண்ணிப் போகப் போக இவற்றை எல்லாம் புரிந்து கொள்ள வாய்ப்பு நேரும், என்பதாக நம்பினான் சத்தியமூர்த்தி. தன்னைப் போலவே புதிதாக வந்திருப்பவரும் பயந்த சுபாவமுள்ளவராகத் தோன்றுகிறவருமாகிய 'பாடனி' விரிவுரையாளர் ஒரு மூலையில் 'புது மணப்பெண்' போன்ற வெட்கத்தோடு கூசிக் கொண்டே உட்கார்ந்து 'ப்ளாண்ட் அனாடமி' என்ற 'பாடனி' புத்தகத்தைக் கர்மசிரத்தையாகப் படிப்பதுபோல் பாவித்துக் கொண்டு அதன் மூலம் மற்றவர்களிடமிருந்து தம்மைப் பிரித்துக் காப்பாற்றிக் கொண்டவராக ஒதுங்கி இருப்பதைச் சத்தியமூர்த்தி கவனித்தான். இன்னும் நாலைந்து விரிவுரையாளர்கள் ஒரு பக்கம் கூட்டமாகச் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு 'கோடை விடுமுறைக்குப் பின் பிரின்ஸிபல் திடீரென்று ஏன் தாடி வளர்க்கத் தொடங்கினார்?' என்பதைப் பற்றி அரட்டையும் சிரிப்புமாக வம்பளந்து கொண்டிருந்தார்கள். அந்தப் பகுதியிலிருந்து குபீர் குபீரென்று எழும் சிரிப்பலைகளால் கட்டிடமே அதிர்ந்தது.

     "எதை வளர்க்கலாம்? எதை வளர்க்கலாம்? என்று யோசித்துப் பார்த்தபின் முடிவில் தன்னால் எதையுமே வளர்க்க முடியாதபடி உறுதியாகத் தெரிந்து கொண்டு தாடியையாவது வளர்க்கலாம் என்று வளர்க்கத் தொடங்கி விட்டார் போலிருக்கிறது. 'பெர்ஸனாலிட்டி' இப்போ முன்னைவிடக் கொஞ்சம் 'இம்ப்ரூவ்' ஆகியிருக்கு. 'மேஜிக் செய்ய வருகிற நவீன மந்திரவாதி மாதிரி இப்போ 'முதலை'யைப் பார்த்தாலே பயமாயிருக்கு சார்..." என்று விமர்சனம் செய்து கொண்டிருந்தார் ஒரு விரிவுரையாளர். சத்தியமூர்த்திக்கும் இந்த விமர்சனத்தைக் கேட்டுச் சிரிப்பு வந்தது. அதே சமயத்தில் 'நாளைய சமூகத்தை நன்றாக உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள் இப்படி வம்பும் அரட்டையுமாகத் தனிமனிதனின் பலவீனங்களைப் பற்றி விமர்சனம் செய்து தங்கள் நேரத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்களே' என்று வேறு விதமாக மாற்றிச் சிந்தித்த போது வேதனையாகவும் இருந்தது.


சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - Unicode - PDF - Buy Book
கள்வனின் காதலி - Unicode - PDF
சிவகாமியின் சபதம் - Unicode - PDF - Buy Book
தியாக பூமி - Unicode - PDF
பார்த்திபன் கனவு - Unicode - PDF
பொய்மான் கரடு - Unicode - PDF
பொன்னியின் செல்வன் - Unicode - PDF
சோலைமலை இளவரசி - Unicode - PDF
மோகினித் தீவு - Unicode - PDF
மகுடபதி - Unicode - PDF
கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode

தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
கபாடபுரம் - Unicode - PDF
குறிஞ்சி மலர் - Unicode - PDF - Buy Book
நெஞ்சக்கனல் - Unicode - PDF - Buy Book
நெற்றிக் கண் - Unicode - PDF
பாண்டிமாதேவி - Unicode - PDF
பிறந்த மண் - Unicode - PDF - Buy Book
பொன் விலங்கு - Unicode - PDF
ராணி மங்கம்மாள் - Unicode - PDF
சமுதாய வீதி - Unicode - PDF
சத்திய வெள்ளம் - Unicode - PDF
சாயங்கால மேகங்கள் - Unicode - PDF - Buy Book
துளசி மாடம் - Unicode - PDF
வஞ்சிமா நகரம் - Unicode - PDF
வெற்றி முழக்கம் - Unicode - PDF
அநுக்கிரகா - Unicode - PDF
மணிபல்லவம் - Unicode - PDF
நிசப்த சங்கீதம் - Unicode - PDF
நித்திலவல்லி - Unicode - PDF
பட்டுப்பூச்சி - Unicode - PDF
கற்சுவர்கள் - Unicode - PDF - Buy Book
சுலபா - Unicode - PDF
பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
அனிச்ச மலர் - Unicode - PDF
மூலக் கனல் - Unicode - PDF
பொய்ம் முகங்கள் - Unicode - PDF
தலைமுறை இடைவெளி - Unicode
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - Unicode - PDF - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
வேருக்கு நீர் - Unicode - PDF
கூட்டுக் குஞ்சுகள் - Unicode
சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
புதிய சிறகுகள் - Unicode
பெண் குரல் - Unicode - PDF
உத்தர காண்டம் - Unicode - PDF
அலைவாய்க் கரையில் - Unicode
மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book
கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
மாணிக்கக் கங்கை - Unicode - PDF
குறிஞ்சித் தேன் - Unicode - PDF
ரோஜா இதழ்கள் - Unicode

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 177/- : 1 வருடம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்!
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
      

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
வாடா மல்லி - Unicode - PDF
வளர்ப்பு மகள் - Unicode - PDF
வேரில் பழுத்த பலா - Unicode - PDF
சாமியாடிகள் - Unicode
மூட்டம் - Unicode - PDF
புதிய திரிபுரங்கள் - Unicode - PDF

புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108) - Unicode
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - Unicode - PDF
பார்வதி, பி.ஏ. - Unicode - PDF
வெள்ளை மாளிகையில் - Unicode
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode

பாரதியார்
குயில் பாட்டு - Unicode
கண்ணன் பாட்டு - Unicode
தேசிய கீதங்கள் - Unicode
விநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF

பாரதிதாசன்
இருண்ட வீடு - Unicode
இளைஞர் இலக்கியம் - Unicode
அழகின் சிரிப்பு - Unicode
தமிழியக்கம் - Unicode
எதிர்பாராத முத்தம் - Unicode

மு.வரதராசனார்
அகல் விளக்கு - Unicode
மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode

லா.ச.ராமாமிருதம்
அபிதா - Unicode - PDF

சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும் - Unicode
புயல் - Unicode

விந்தன்
காதலும் கல்யாணமும் - Unicode - PDF

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - Unicode - PDF
பனித்துளி - Unicode - PDF
பூவும் பிஞ்சும் - Unicode - PDF
தனி வழி - Unicode - PDF

ரமணிசந்திரன்

சாவி
ஆப்பிள் பசி - Unicode - PDF - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
விசிறி வாழை - Unicode

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு - Unicode
சர்மாவின் உயில் - Unicode

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF

மகாத்மா காந்தி
சத்திய சோதன - Unicode

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி - Unicode

மாயாவி
மதுராந்தகியின் காதல் - Unicode - PDF

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல் - Unicode

கௌரிராஜன்
அரசு கட்டில் - Unicode - PDF - Buy Book
மாமல்ல நாயகன் - Unicode - PDF

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - Unicode - PDF
ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode

பழந்தமிழ் இலக்கியம்

எட்டுத் தொகை
குறுந்தொகை - Unicode
பதிற்றுப் பத்து - Unicode
பரிபாடல் - Unicode
கலித்தொகை - Unicode
அகநானூறு - Unicode
ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode

பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை - Unicode
பொருநர் ஆற்றுப்படை - Unicode
சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
முல்லைப்பாட்டு - Unicode
மதுரைக் காஞ்சி - Unicode
நெடுநல்வாடை - Unicode
குறிஞ்சிப் பாட்டு - Unicode
பட்டினப்பாலை - Unicode
மலைபடுகடாம் - Unicode

பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
திருக்குறள் (உரையுடன்) - Unicode
நாலடியார் (உரையுடன்) - Unicode
நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF
ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF
திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம் - Unicode
மணிமேகலை - Unicode
வளையாபதி - Unicode
குண்டலகேசி - Unicode
சீவக சிந்தாமணி - Unicode

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம் - Unicode
நாககுமார காவியம் - Unicode
யசோதர காவியம் - Unicode - PDF

வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF
மனோதிருப்தி - Unicode - PDF
நான் தொழும் தெய்வம் - Unicode - PDF
திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF
திருப்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 177/- : 1 வருடம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்!
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
      

சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை - Unicode
திருவிசைப்பா - Unicode
திருமந்திரம் - Unicode
திருவாசகம் - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
சொக்கநாத வெண்பா - Unicode - PDF
சொக்கநாத கலித்துறை - Unicode - PDF
போற்றிப் பஃறொடை - Unicode - PDF
திருநெல்லையந்தாதி - Unicode - PDF
கல்லாடம் - Unicode - PDF
திருவெம்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF
திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF
பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF
இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF
இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF
இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF
இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF
சிவநாம மகிமை - Unicode - PDF
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF
சிதம்பர வெண்பா - Unicode - PDF
மதுரை மாலை - Unicode - PDF
அருணாசல அட்சரமாலை - Unicode - PDF

மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF
திருவுந்தியார் - Unicode - PDF
உண்மை விளக்கம் - Unicode - PDF
திருவருட்பயன் - Unicode - PDF
வினா வெண்பா - Unicode - PDF
இருபா இருபது - Unicode - PDF
கொடிக்கவி - Unicode - PDF

பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF
சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF
சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF
சித்தாந்த சிகாமணி - Unicode - PDF
உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF
உபதேச வெண்பா - Unicode - PDF
அதிசய மாலை - Unicode - PDF
நமச்சிவாய மாலை - Unicode - PDF

சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF
நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF
ஞானம் - 100 - Unicode - PDF
நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF
பூரண மாலை - Unicode - PDF
முதல்வன் முறையீடு - Unicode - PDF
மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF
பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF

கம்பர்
கம்பராமாயணம் - Unicode
ஏரெழுபது - Unicode
சடகோபர் அந்தாதி - Unicode
சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF
சிலையெழுபது - Unicode
திருக்கை வழக்கம் - Unicode

ஔவையார்
ஆத்திசூடி - Unicode - PDF
கொன்றை வேந்தன் - Unicode - PDF
மூதுரை - Unicode - PDF
நல்வழி - Unicode - PDF
குறள் மூலம் - Unicode - PDF
விநாயகர் அகவல் - Unicode - PDF

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - Unicode - PDF
கந்தர் கலிவெண்பா - Unicode - PDF
சகலகலாவல்லிமாலை - Unicode - PDF

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம் - Unicode
திருக்குறும்பலாப்பதிகம் - Unicode

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
திருக்குற்றால மாலை - Unicode - PDF
திருக்குற்றால ஊடல் - Unicode - PDF

ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - Unicode - PDF
கந்தர் அலங்காரம் - Unicode - PDF
கந்தர் அனுபூதி - Unicode - PDF
சண்முக கவசம் - Unicode - PDF
திருப்புகழ் - Unicode
பகை கடிதல் - Unicode - PDF
மயில் விருத்தம் - Unicode - PDF
வேல் விருத்தம் - Unicode - PDF
திருவகுப்பு - Unicode - PDF
சேவல் விருத்தம் - Unicode - PDF

நீதி நூல்கள்
நன்னெறி - Unicode - PDF
உலக நீதி - Unicode - PDF
வெற்றி வேற்கை - Unicode - PDF
அறநெறிச்சாரம் - Unicode - PDF
இரங்கேச வெண்பா - Unicode - PDF
சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF
விவேக சிந்தாமணி - Unicode - PDF
ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF
நீதி வெண்பா - Unicode - PDF
நன்மதி வெண்பா - Unicode - PDF
அருங்கலச்செப்பு - Unicode - PDF

இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை - Unicode
நேமிநாதம் - Unicode - PDF
நவநீதப் பாட்டியல் - Unicode - PDF

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - Unicode - PDF

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF
கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF

உலா நூல்கள்
மருத வரை உலா - Unicode - PDF
மூவருலா - Unicode - PDF
தேவை உலா - Unicode - PDF
குலசை உலா - Unicode - PDF
கடம்பர்கோயில் உலா - Unicode - PDF

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - Unicode - PDF
திருவருணை அந்தாதி - Unicode - PDF
காழியந்தாதி - Unicode - PDF
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF
திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF
திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF

கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
குலசை உலா - Unicode - PDF

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF

நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
நெஞ்சு விடு தூது - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
மான் விடு தூது - Unicode - PDF
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF
சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF
பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF
சீகாழிக் கோவை - Unicode - PDF

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம் - Unicode
மதுரைக் கலம்பகம் - Unicode
காசிக் கலம்பகம் - Unicode - PDF
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF
பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF
சோழ மண்டல சதகம் - Unicode - PDF
குமரேச சதகம் - Unicode - PDF
தண்டலையார் சதகம் - Unicode - PDF
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF
கதிரேச சதகம் - Unicode - PDF
கோகுல சதகம் - Unicode - PDF
வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF
அருணாசல சதகம் - Unicode - PDF
குருநாத சதகம் - Unicode - PDF

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
முத்தொள்ளாயிரம் - Unicode
காவடிச் சிந்து - Unicode
நளவெண்பா - Unicode

ஆன்மீகம்
தினசரி தியானம் - Unicode


அயல் சினிமா

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
வகைப்பாடு : சினிமா
இருப்பு உள்ளது
விலை: ரூ. 150.00
தள்ளுபடி விலை: ரூ. 135.00
அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

Buy

நேரடியாக வாங்க : +91-94440-86888