39

     தாங்களே தங்களுடைய மனச்சாட்சிக்காக நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதை விடத் தங்களைப் பிறரிடம் நல்லவர்களாக நிரூபித்துக் கொண்டால் போதும் என்ற ஆசைதான் இன்று மிகப் பலரிடம் இருக்கிறது.


நரேந்திர மோடி
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

வியாபார வியூகங்கள்
இருப்பு உள்ளது
ரூ.230.00
Buy

வீடில்லாப் புத்தகங்கள்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

காலம்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

என் சீஸை நகர்த்தியது யார்?
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

அகத்தில் புழுங்கும் வெப்பம்
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

சதுரகிரி யாத்திரை
இருப்பு இல்லை
ரூ.150.00
Buy

இன்னொரு வனின் கனவு
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

தமிழக மகளிர்
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

புலன் மயக்கம் - தொகுதி - 2
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

உணவு யுத்தம்
இருப்பு உள்ளது
ரூ.250.00
Buy

அன்பே தவம்
இருப்பு உள்ளது
ரூ.220.00
Buy

சிவப்பு மச்சம்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

கால் முளைத்த கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

கர்ணன்: காலத்தை வென்றவன்
இருப்பு உள்ளது
ரூ.850.00
Buy

சிவப்புக் குதிரை
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

நீ பாதி நான் பாதி
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

பங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

எழுத்தாளன்
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

உங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy
     சத்தியமூர்த்தி அந்தக் கூடத்துக்குள் நுழைந்து நின்றவுடனே சீட்டு விளையாடிக் கொண்டிருந்த பூபதி அவனைப் பார்த்துவிட்டார். அதே சமயத்தில் அவனால் மனப்பூர்வமாக வெறுக்கப்பட்ட மற்ற இருவரும் கூட அவன் அங்கு வந்து நிற்பதைப் பார்த்து விட்டார்கள். கருகருவென்று மயிரடர்ந்த புருவங்களை மேலே ஏற்றி இறக்கி வளைத்து ஜமீந்தார் தன்னைப் பார்த்த பார்வை நெஞ்சில் வந்து குத்தித் துளைத்தெடுப்பது போலிருந்தது சத்தியமூர்த்திக்கு. 'நாடு சுதந்திரம் பெற்று ஜமீன் ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ முறையைத் தீர்த்துக் கட்டும் நில உச்சவரம்பு ஆகிய சட்டங்களெல்லாம் வந்த பின்பும் இன்றைய நிலையில் கூட மஞ்சள்பட்டியாரைப் போன்றவர்கள் ஊருக்கு ஊர் பங்களாக்களும், ஆடம்பர ஏற்பாடுகளும் செய்து கொண்டு பழைய ஜமீந்தார் வீறாப்புகளைச் சிறிதும் இழக்காமலும் குறைத்துக் கொள்ளாமலும் வாழ முடிகிறதே' என்பதை எண்ணிய போது சத்தியமூர்த்தி மனம் கொதித்தான். ஜமீந்தார் முறையை ஒழித்துவிட்டாலும் பணக்காரர்களில் பலருடைய இரத்தத்தில் ஓர் இயற்கையாக ஊறிப் போயிருக்கும் ஜமீந்தார் மனப்பான்மையை ஒரு போதும் ஒழிக்க முடியாது போல் தோன்றியது. ஜமீன் ஒழிப்புக்கு பின் இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மக்கள் மஞ்சள்பட்டியாரை ஜமீந்தார் என்றுதான் சொல்கிறார்கள். பழைய டாம்பீகங்களையும் ஆடம்பரங்களையும் விட்டுவிடாமல் நாட்டியத்தையும் சங்கீதத்தையும் காப்பாற்றுவதாகச் சொல்லிக் கொண்டு ஜமீந்தார் மஞ்சள்பட்டியில் இன்னும் நவராத்திரி விழாக் கொண்டாடுகிறார். மஞ்சள்பட்டி என்கிற சிறிய ஊரில் இருப்பதை விட அதிக வசதிகளும் ஆடம்பரங்களும் நிறைந்த மாளிகைகளும் பங்களாக்களும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் கோடை வாசத்துக்குரிய மலை நகரங்களிலும் ஜமீந்தாருக்குச் சொந்தமாக இருக்கின்றன.

     ஜமீந்தாரின் கொடிய கண்பார்வை தன்மேல் பட்டுத் திரும்பிய சில கணங்களில் இவ்வளவும் நினைத்தான் சத்தியமூர்த்தி. இதற்குள் பூபதியே அவன் பக்கம் எழுந்து வந்துவிட்டார். "வாருங்கள்! என் கடிதம் கிடைத்ததா? அப்போதிருந்து உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று புன்னகையோடு கூறிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து நின்றார் பூபதி. அவருக்குப் பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பதற்காக அவரைச் சந்தித்தவுடனே தன் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்ள எண்ணியிருந்த சத்தியமூர்த்தியைப் பேசவிடாமல் அவரே முந்திக் கொண்டு ஜமீந்தாரைப் பற்றி உற்சாகமாகக் கூற ஆரம்பித்து விட்டார்.

     "உங்களுக்கு நம் ஜமீந்தாரவர்களைத் தெரியும் அல்லவா? பெரிய கலாரசிகர், நல்ல தமிழபிமானி. இவருடைய முன்னோர்களில் சிலரைப் பற்றிப் பழைய புலவர்கள் இரட்டை மணிமாலை என்ன, நான்மணிமாலை என்ன, பிள்ளைத் தமிழென்ன, கோவை உலா மடலென்ன என்று இப்படி கணக்கு வழக்கில்லாமல் பாடிப் புகழ்ந்திருக்கிறார்கள். இந்த நிமிஷத்தில் கூட நம்முடைய ஜமீந்தாரைத் தூண்டிவிட்டுக் கூளப்ப நாயக்கன் காதலையும், விறலிவிடு தூதுவையும் பற்றிச் சொல்லச் செய்தால் விடிய விடியக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். பொழுது போவது தெரியாது மிஸ்டர் சத்தியமூர்த்தி! இதையெல்லாம் விட அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மல்லிகைப் பந்தல் கல்லூரியின் நிர்வாகக் குழுவில் நம் ஜமீந்தார் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறார் என்பதுதான்!" என்றிவ்வாறாகச் சத்தியமூர்த்தி பதில் சொல்லவோ சிந்திக்கவோ அவகாசம் கொடுக்காமல் மிக ஆர்வமாகச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டே போனார் பூபதி. அவற்றைச் செவியில் ஏற்று மனத்தில் சிந்தித்த பொழுது சத்தியமூர்த்தியினால் பொறுத்துக் கொள்ள இயலாத உண்மைகளாயிருந்தன அவை. ஓரளவு கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய கூளப்ப நாயக்கன் காதலும், விறலிவிடு தூதுவும் ஜமீந்தாருக்குத் தெரிவதைக் காரணமாகச் சொல்லி அவரை அதற்காகத் தமிழபிமானி என்று குறிப்பிடும் பூபதியை நினைத்து, அவன் உள்ளூரப் பரிதாபப்பட்டான். ஜமீந்தாரும் கண்ணாயிரமும் ஏற்கெனவே உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அசையாமல் சத்தியமூர்த்தியையே கடுமையாக உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

     பூபதியோ நிலைமை புரியாமல் சத்தியமூர்த்தி கையைப் பற்றி இழுத்து மிக அருகில் அழைத்துக் கொண்டு போய் ஜமீந்தாரிடமும் கண்ணாயிரத்தினிடமும், "சார் உங்களுக்கெல்லாம் ஓர் இளம் நண்பரை இப்போது அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்..." என்று தொடங்கி மடமடவென்று சத்தியமூர்த்தியைப் பற்றி அவர்களுக்குச் சொல்லத் தொடங்கிவிட்டார். ஜமீந்தாரும் கண்ணாயிரமும் சத்தியமூர்த்தியின் அறிமுகத்தையோ, அவனுடைய சிறப்பியல்புகளையோ சிறிதும் விரும்பவில்லை. தவிர சத்தியமூர்த்தி அவர்களுக்குப் புதிதாக அறிமுகமாக வேண்டியவனும் இல்லை. நிலைமையைச் சமாளிப்பதற்காகக் கண்ணாயிரம் ஏதோ காரியமாக எழுந்து போய் விட்டார். ஜமீந்தார் அப்படி எழுந்து போய்விடவில்லையானாலும் பூபதி கூறிய எல்லாவற்றையும் சிறிது கூட முகமலர்ச்சியில்லாமல் கடுகடுப்போடு கேட்டுவிட்டு 'ஐ... ஸீ' என்று அழுத்தமாகச் சொல்லியபடியே நிமிர்ந்து சத்தியமூர்த்தியை ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வை அவனை வாள் கொண்டு அறுப்பது போல் அறுத்தது. சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அந்த விரும்பத்தகாத சூழலில் நிகழும் விரும்பத்தகாத அறிமுகத்துக்காகக் கால்கள் பொருந்தாதபடி நின்று கொண்டிருந்தான் அவன். கால் மேல் கால் போட்டு அலட்சியமாக உட்கார்ந்திருந்த ஜமீந்தார் கால் பாதத்தை மேலும் கீழுமாக ஆட்டியபடி 'ஐ...ஸீ' என்று வார்த்தைகளை இழுத்ததை நினைத்து மனம் வெறுத்து அருவருப்பு அடைந்தாலும் அங்கே தன்னுடைய எந்த உணர்ச்சியையும் வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ள முடியாமல் நின்றான் சத்தியமூர்த்தி.

     ஜமீந்தாருக்குச் சத்தியமூர்த்தியை அறிமுகம் செய்த போது அவர் அதிக அலட்சியமாக இருந்ததைப் பூபதியும் அறிந்து கொண்டாலும் அதற்குக் காரணமாக எதையும் மனத்தில் கற்பித்துக் கொள்ளவில்லை அவர். அந்த நேரத்தில் சத்தியமூர்த்தி நினைத்துத் தலைகுனியும்படியான வேறு ஒரு நிகழ்ச்சியும் அங்கு நடந்தது. அவனும் பூபதியும் அங்கு நின்று கொண்டிருந்த போதே ஜமீந்தார் ஒரு வேலைக்காரனைக் கூப்பிட்டு, "டேய்! பின்புறம் தோட்டத்தில் அந்தப் பேச்சியம்மன் படித்துறைக் கிழவன் நின்று கொண்டிருப்பான். நான் கூப்பிட்டேனென்று அந்தக் கிழவனை இங்கே வரச்சொல்" என்று ஏவினார். ஐந்து நிமிஷங்கள் கழித்து ஜமீந்தாரால் அழைக்கப்பட்ட அந்தக் 'கிழவன்' வந்து கைகட்டி வாய் பொத்தி நின்றபோது பூபதியோடு பேசிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி, தற்செயலாகத் திரும்பிப் பார்த்தான். அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. ஜமீந்தாருடைய ஏவலுக்காக ஓடிவந்து கைகட்டி வாய் பொத்தி நின்ற கிழவர் வேறு யாருமில்லை; அவனுடைய அருமைத் தந்தைதான். சத்தியமூர்த்திக்கு மனம் கொதித்தது. வந்து பவ்வியமாக நின்று கொண்டிருந்த அவனுடைய தந்தையிடம், "உள்ளே சிகரெட் 'டின்' இருக்கும். புதிதாக ஒன்று எடுத்துக்கிட்டு வாங்க..." என்று கூறி ஜமீந்தார் கட்டளையிட்டதைச் சத்தியமூர்த்தி தன் இருவிழிகளாலும் கண்டு இரு செவிகளாலும் கேட்டு வயிறெரிந்தான். அந்த நேரத்து உணர்ச்சிகளின் வேகத்தை அவனால் அங்கு வெளியே காட்டிக் கொள்ளவும் முடியவில்லை. இதே வெட்கத்தோடுதான் தந்தையும் அவனைப் பார்க்காதது போல் அங்கிருந்து மெல்ல நழுவிப் போயிருக்க வேண்டும். தன்னை அவமானப்படுத்தித் தலைகுனிய வைக்க வேண்டுமென்று ஜமீந்தார் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார் என்பதைச் சத்தியமூர்த்தியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் புரிந்து கொண்டு அங்கே என்ன செய்ய முடியும்? பூபதியோ அவனுடைய மனப்போராட்டங்களையும் வேதனையையும் உணர்ந்து கொள்ளாமல் எதை எதையோ அவனிடம் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அவனும் பூபதியும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே ஜமீந்தார் சிகரெட் 'டின்'னும் கையுமாகக் கண்ணாயிரம் பின் தொடர அவர்களைக் கடந்து பங்களாவின் முன் பகுதிக்குச் சென்றார். அப்படிச் செல்லும்போதே ஜமீந்தார் ஒரு கணம் பின்னால் திரும்பி, "ஏய் பூபதி! நானும் கண்ணாயிரமும் வெளியில் எங்காவது புறப்பட்டு விட்டோமோ என்று நினைத்துக் கொள்ளாதே. வெளியே தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்... பேசி அனுப்பிவிட்டு நீயும் வா... காற்றாடத் தோட்டத்தில் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருக்கலாம்" என்று பூபதியிடம் சொல்லிவிட்டுப் போனார்.

     ஜமீந்தாருக்கும் பூபதிக்குமிடையே இருப்பதாகத் தெரிந்த நெருக்கமும், நேசமும் சத்தியமூர்த்தியைத் திகைத்துப் போகச் செய்திருந்தன. 'ஏய் பூபதி! என்று போகிற போக்கில் மதயானை நடப்பது போல் நடந்து கொண்டே கூப்பிட்டுப் பேச வேண்டுமானால் மஞ்சள்பட்டி ஜமீந்தாருக்குப் பூபதியிடம் எவ்வளவு உரிமையும் நேசமும் இருக்க வேண்டும்?' என்றெண்ணி தனக்குள் வியந்தான் சத்தியமூர்த்தி. பூபதியோ அவனிடமே மேலும் மேலும் விடாப்பிடியாய் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

     "மிஸ்டர் சத்தியமூர்த்தி! ஜமீந்தாருக்கு எல்லாரிடமும் அத்தனை கலகலப்பாகப் பழக வராது. உங்களிடம் அவர் அதிகம் பேசவில்லையே என்று நீங்கள் வித்தியாசமாக நினைத்துக் கொள்ளக் கூடாது. நாங்கள் இருவரும் அண்ணன் தம்பி மாதிரி. இந்த ஜமீந்தார் இல்லேன்னா வியாபாரத்திலேயும் தொழில் துறையிலும் நான் இவ்வளவு செழிப்பாக வளர்ந்து முன்னுக்கு வந்திருக்க முடியாது. இவர் பரம உபகாரி. இப்போது நம் கல்லூரி இருக்கிறதே, அந்த இடம் முழுவதும் ஒரு காலத்தில் இவருக்குச் சொந்தமான பழத் தோட்டங்களாக இருந்தன. அவ்வளவு இடத்தையும் சும்மாவே எனக்குக் கொடுத்திட்டார். வியாபாரத்திலும் தொழிலிலும் கூட எனக்கு நொடிப்பு வந்த போதெல்லாம் நிறைய கைகொடுத்து உதவியிருக்கிறார். நான் இவரை வெறும் 'பிஸினஸ் பார்ட்னரா' மட்டும் நினைக்கிறதில்லை. ரொம்ப ரொம்ப வேண்டிய சினேகிதராகவே நினைக்கிறேன். நானும் என் பெண்ணும் எப்போது மதுரைக்கு வந்தாலும் இவருடைய பங்களாவில் தான் தங்குவது வழக்கம். இது எங்களுடைய சொந்த வீடு போல. மல்லிகைப் பந்தலிலே நம் ஜமீந்தாருக்கும் அரண்மனை போல் பெரிய பங்களா இருக்கிறது. பாவம்! சின்ன வயதிலேயே மனைவியைப் பறிகொடுத்து விட்டார். கலைத்துறையில் நிறைய அபிமானம் உடையவர்; பரதநாட்டியம்னா உயிர். கர்நாடக சங்கீதம்னாப் பசி தாகமே தெரியாது."

     ஜமீந்தார் புகழ்பாடும் படலத்தில் பொறுமை இழந்த சத்தியமூர்த்தி துணிந்து, பூபதியின் பேச்சில் நடுவே குறுக்கிட்டான்.

     "சார்! உங்களுடைய கடிதத்தில் நீங்கள் டில்லிக்குப் புறப்படு முன் என்னிடம் ஏதோ முக்கியமாகப் பேச வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். உங்களுக்குக் குடியரசுத் தலைவர் 'பத்மஸ்ரீ' விருது வழங்கப் போவதைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய மனப்பூர்வமான பாராட்டுதல்களை ஏற்றுக் கொள்ளுங்கள்..." என்று சத்தியமூர்த்தி கூறிக்கொண்டே வந்த போது பூபதிக்குப் பின்புறமிருந்து வளைகள் கலகலத்து ஒலிக்கும் இனிய இசை கேட்டது. சத்தியமூர்த்தி நிமிர்ந்து பார்த்தான். பாரதி வந்து நின்று கொண்டிருந்தாள். தந்தைக்கு முன்னால் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்ள விரும்பிய பாரதி, "வணக்கம் சார்" என்று அவனை நோக்கிக் கைகூப்பினாள். அவனும் பதிலுக்குப் புன்முறுவல் பூத்து அந்த வணக்கத்தை ஏற்றுக் கொண்டு இந்த இரண்டு வார்த்தைகளால் பொதுவாக அவளை நலம் விசாரித்து வைத்தான். தந்தை அமர்ந்திருந்த நாற்காலியின் பின்புறத்தைக் கைகளால் பற்றியபடி அவளும் அங்கேயே நின்று கொண்டாள். சிகரெட் 'டின்' எடுத்துக் கொடுப்பதற்கும் ஓவல்டின் கொண்டு வந்து கரைத்துக் கொடுப்பதற்குமாக உள்ளே எடுபிடி வேலையாள் போல் அலைந்து கொண்டிருக்கிறவர் தன்னுடைய தந்தைதான் என்பது பாரதிக்கோ, பூபதிக்கோ தெரிந்திருக்கலாமோ என்ற தவிப்பினால் பொறுமையும் மலர்ச்சியும் இழந்து ஏதோ பொம்மை போல் ஒரு முறைக்காக அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அப்போது தன்னுடைய கம்பீரமான உருவம் கூனிக் குறுகிவிட்டது போல் அவனுக்கே ஒரு பிரமை உண்டாகியிருந்தது. தன்னைத் தர்மசங்கடமான நிலைமைக்கு ஆளாக்கிவிட்ட தந்தை மேல் கோபம் கோபமாக வந்தது அவனுக்கு. தந்தையை அந்த அளவு துணியச் செய்துவிட்ட தன் வீட்டு வறுமையின் மேலும் கோபம் வந்தது. இறுதியாகப் படைப்பின் மேலும் கடவுளின் மேலுமே கோபம் வந்து குமுறியது. ஒரு வேளை கண்ணாயிரமோ, ஜமீந்தாரோ தன்னை அவமானப்படுத்த வேண்டுமென்றே அந்த உண்மையைப் பூபதியிடமும், பாரதியிடமும் சொல்லியிருந்தும் அவர்கள் தன்னிடம் அதைத் தெரிந்து கொள்ளாதது போல நடிக்கிறார்களோ என்ற சந்தேகமும் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. சில இடங்களில் சில மனிதர்களோடு சேர்ந்து இருந்தாலே எதற்கோ அடிமைப்பட்டு விட்டது போல் அந்தரங்கமாக ஒரு தவிப்பும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும். அத்தகைய தவிப்புக்கும் குமுறலுக்கும் இப்போது ஆளாகியிருந்தான் சத்தியமூர்த்தி.

     "உங்கள் ஆசிரியரைப் பார்த்தாயா அம்மா? ஜமீந்தாரைப் பற்றிச் சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். பாதியிலேயே கேட்பதற்குப் பொறுமை இழந்து விட்டார்..." என்று பின்புறம் நின்றிருந்த மகளிடம் சொல்கிறாற் போலச் சொல்லிக் கொண்டே சத்தியமூர்த்தியை நோக்கிக் குத்தலாகப் பேசினார் பூபதி. சத்தியமூர்த்தியும் அவரை நோக்கி மௌனமாகப் புன்னகை புரிந்தான். இல்லை புன்னகை புரிவதாக நடித்தான். அந்தப் புன்னகையும் மனப்பூர்வமாக வரவில்லை. அதே வேளையில் 'சமூகத்தில் உள்ள பலர் அவர்களிடம் இருக்கும் நியாயமான தகுதிகளுக்காகக் கூடப் புகழப்படுவதில்லை. வேறு சிலரோ அவர்களிடம் இல்லாத தகுதிகளுக்காகவும் சேர்த்துப் புகழப்படுகிறார்கள் என்று அவன் மனம் நினைத்துக் குமுறிக் கொண்டிருந்தது. தமக்கு வேண்டியவர் என்பதற்காக ஜமீந்தாரிடம் இல்லாத தகுதிகளுக்காகவும் சேர்த்து அவரைப் பூபதி புகழ்ந்தது சத்தியமூர்த்திக்குப் பிடிக்கவில்லை. "மிஸ்டர் சத்தியமூர்த்தி! நான் உங்களைக் கூப்பிட்டனுப்பிய காரியம் ஒரு புறம் இருக்கட்டும். என் நண்பர் என்ற முறையில் நீங்கள் ஜமீந்தாரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படாவிட்டாலும் மல்லிகைப் பந்தல் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் எனக்கு அடுத்தபடி மிகவும் முக்கியமானவர் என்பதற்காகவாவது அவரைத் தெரிந்து கொள்ள வேண்டும். நம் ஜமீந்தார் சமீபத்தில் ஒரு பெரிய வாரப் பத்திரிகையை விலைக்கு வாங்கியிருக்கிறார். இந்த ஊரிலிருந்து வெளிவருகிற 'குத்துவிளக்கு' வாரப் பத்திரிகையை நீங்கள் பார்த்திருப்பீர்களே?"

     சத்தியமூர்த்தி இப்போதும் பூபதிக்குப் பதில் ஒன்றும் கூறாமல் புன்னகை புரிந்தான். தனக்கு விருப்பமில்லாத விஷயமானாலும் அந்த விஷயத்தை எடுத்துச் சொல்கிறவருடைய விருப்பத்தைப் புண்படுத்தாமல் புன்னகை புரிந்தபடியே கேட்டுக் கொண்டு மௌனமாயிருந்துவிடும் பழக்கத்தை மேற்கொள்வது அவனுக்கு இன்று மட்டும் புதுமையில்லை. சிறிது நேரம் ஜமீந்தாருடைய புகழ்மாலை வளர்ந்த பின் கண்ணாயிரம் என்கிற பிரமுகரின் சாமர்த்தியங்களைப் பற்றியும் யாரோ முன்பின் தெரியாதவனுக்கு எடுத்துச் சொல்வது போல் பூபதி அவனிடம் சொல்லத் தொடங்கினார்.

     "கண்ணாயிரத்தை என்னவோ என்று நினைத்து விடாதீர்கள். அவர் பெரிய 'ஜீனியஸ்'. இந்த உலகத்தில் அவரால் முடியாத காரியம் என்று எதுவும் கிடையாது. முன்னால் 'மூன்லைட் அட்வர்டைஸிங் ஏஜென்ஸீஸ்' என்று ஒரு விளம்பரக் கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருந்தார். இப்போது 'குத்துவிளக்கின்' ஜெனரல் மானேஜராக இருந்து நிர்வாகம் செய்யும் பொறுப்பையும் ஜமீந்தார் அவரிடமே விட்டிருக்கிறார். மக்களுக்குக் கவர்ச்சியான புதுப்புது அம்சங்களைப் புகுத்திக் 'குத்துவிளக்கை' மிக வேகமாக மின்னச் செய்யப் போகிறார் கண்ணாயிரம்..."

     "... எனக்குத் தெரியும்..." என்று சுருக்கமாகப் பதில் வந்தது சத்தியமூர்த்தியிடமிருந்து. அவன் மனநிலையை உணர்ந்து கொண்டவர் போல் பேச்சைத் திடீரென்று வேறு திசைக்குத் திரும்பினார் பூபதி.

     "எனக்குப் பத்மஸ்ரீ விருது கிடைத்ததென்ற தகவல் தெரிந்ததோ இல்லையோ, விடிந்ததும், விடியாததுமாக, பிரின்ஸிபல் யானைத் துதிக்கை அளவுக்குப் பெரிய ரோஜாப்பூ மாலையைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டார். என் மகளும் நானும் மல்லிகைப் பந்தலை விட்டுக் காரில் புறப்படுவதற்குள் அநேகமாக எல்லா நண்பர்களும், தெரிந்தவர்களும் தேடி வந்து மகிழ்ச்சியைத் தெரிவித்துப் பாராட்டிவிட்டுப் போய்விட்டார்கள். முதலில் என் மகள் பாரதி மதுரை வரை வந்து என்னை வழியனுப்பிவிட்டு மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிவிடப் போவதாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தாள். இப்போது என்னவோ திடீரென்று 'நானும் டில்லிக்கு வருகிறேன் அப்பா' என்கிறாள். அவளுக்கும் 'ஏர்டிக்கட்' வாங்கியாயிற்று. நான் உங்களைக் கூப்பிட்டனுப்பிய காரியம்..." என்று தொடங்கிய பூபதி எதையோ நினைத்துத் தயங்கினார். பின்னால் திரும்பி மகள் பாரதியைத் தேநீர் எடுத்துக் கொண்டு வரச் சொல்லி சாமர்த்தியமாக அவளை உள்ளே அனுப்பிவிட்டுக் குரலைத் தணித்துக் கொண்டு சத்தியமூர்த்தியிடம் மெல்லக் கூறலானார் பூபதி.

     "நான் டில்லியிலிருந்து திரும்புவதற்கும் கல்லூரி நவராத்திரி விடுமுறை முடிந்து திறப்பதற்கும் சரியாயிருக்கும். கல்லூரி திறந்த ஒரு வாரத்திற்குள் என்னுடைய பிறந்த தினம் வருகிறது. அதையொட்டி 'ஸ்தாபகர் தின விழாவோ' என்னவோ கொண்டாடப் போவதாகப் பிரின்ஸிபல் சொல்லிக் கொண்டிருக்கிறார். எனக்கு இதெல்லாம் பிடிப்பதே இல்லை... என்ன கொண்டாட்டம் வேண்டியிருக்கிறது? ஆனால் பிரின்ஸிபலும் மாணவர்களும் ஆசைப்படுவதைக் கெடுக்க விரும்பவில்லை. அந்த விழாவுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்கிற பொறுப்பு உங்களுடையதாக இருக்கணும்... நம்முடைய மந்திரியைக் கூப்பிடச் சொல்லியிருக்கிறேன். மந்திரிக்குக் கொடுக்கிறதுக்கு ஒரு வரவேற்பு இதழ் நீங்க எழுதணும். அதிலே இந்த விஷயத்தைக் கொஞ்சம் அழுத்தி வற்புறுத்தணும்..." என்று சொல்லிக் கொண்டே காதருகில் வந்து வரவேற்பு இதழில் வற்புறுத்த வேண்டிய விஷயத்தை இரகசியமாக அவனிடம் கூறினார் பூபதி. வரவேற்பு இதழில் எந்த விதமாகவும் தொடர்புபடுத்திச் சொல்ல முடியாத சொந்த நலனுக்குரிய ஒரு விஷயமாக இருந்தது அது. சத்தியமூர்த்தி திகைத்துப் போனான். பல பெரிய மனிதர்கள் 'ஜெகில் அண்ட் ஹைடாக' இருப்பதும் உள்ளொன்றும் புறமொன்றுமாக வாழ்வதும் அவனுக்குத் தெரியும். பூபதியைப் பற்றி அவன் அப்படி இதுவரை நினைக்கவில்லை. இன்றோ இந்த விநாடியிலிருந்தே அவரையும் அப்படி நினைக்கத் தொடங்குவதற்கு அவன் சிறிதும் தயங்கவில்லை. புகழுக்கும் பெருமைக்கும் சிறிது கூட ஆசை இல்லாதவர்களைப் போலப் பேசிக் கொண்டே அவற்றுக்காகத் தவித்து மாய்கின்ற பணக்காரப் பிரமுகர்கள் பலரைப் போலத் தான் பூபதியும் இருக்கிறார் என்று அவன் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டான். தர்மத்தையும், பக்தியையும் பற்றி அடிக்கடி பேசுவதன் மூலமாக மட்டுமே தங்களைப் புற உலகுக்கு நல்லவர்களாகக் காண்பித்துக் கொண்டு - வாழ்கிற வாழ்க்கையில் தர்மமோ, பக்தியோ, ஒழுக்கமோ சிறிதுமில்லாத ஆஷாட பூதிப் பிரமுகர்களில் பூபதியும் ஒருவராக இருப்பதைச் சத்தியமூர்த்தி தெரிந்து கொள்ள நேர்ந்து விட்டது. அவன் அப்போது அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே அருவருப்பும் கூச்சமும் அடைந்து எங்கோ பார்க்கலானான்.

     ஆனால் பூபதியோ கூசாமல் அவன் முகத்தைப் பார்த்து மேலும் ஏதோ சொல்வதற்கு இருந்த நிலையில் பாரதி தேநீர்க் கோப்பைகளோடு அங்கு வந்துவிட்டாள். தேநீரைப் பருகிக் கொண்டே சத்தியமூர்த்தி நினைத்தான்: 'தாங்களே தங்களுடைய மனச்சாட்சிக்காக நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதை விடத் தங்களைப் பிறரிடம் நல்லவர்களாக நிரூபித்துக் கொண்டாலே போதும் என்ற ஆசைதான் இன்று மிகப் பலரிடம் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாகப் பூபதியும் அந்தப் பலரில் ஒருவராகத்தான் இருக்கிறார்! ஒழுக்கமும் பண்பாடும் இல்லாத ஜமீந்தாரை வேறு பல சொந்தக் காரியங்களுக்காகப் பூபதி தாராளமாகப் புகழ்கிறார். அயோக்கியரான கண்ணாயிரத்தை 'ஜீனியஸாக' வருணிக்கிறார். இவற்றையெல்லாம் செவிகளில் ஏற்றுப் பொறுத்துக் கொள்ள முடியாமல் நான் மனம் புழுங்குகிறேன். இந்த இடத்தில் இந்த மாளிகையில் இப்படி உட்கார்ந்திருந்த போது நான் எதற்கோ அடிமைப்பட்டிருப்பதைப் போல் என் இதயமும் குமுறுகிறது. என் தோள்களில் பல்லாயிரம் தீமைகளைச் சாடி நொறுக்கும் அவ்வளவு பெருந்துணிவு தினவெடுத்துப் பொங்குகிறது' என்று இவ்வாறு சிந்தித்தபடி வீற்றிருந்த சத்தியமூர்த்தியைப் பூபதி வினவினார்.

     "ஏன் இங்கு வந்ததிலிருந்து நீங்கள் என்னவோ போலிருக்கிறீர்கள்? உங்களுக்கு உடம்பு சரியில்லையா...! போய் ஓய்வெடுத்துக் கொண்டு நாளை மாலை விமான நிலையத்துக்கு வாருங்கள். நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும். 'ஸ்தாபகர் தின விழா' நன்றாக நடைபெற்றால் அந்தப் பெருமை எல்லாம் உங்களுக்குத்தானே?"

     சத்தியமூர்த்தி அங்கிருந்து புறப்படத் துடித்துக் கொண்டிருந்தான். பூபதி இப்படி வினாவியதையே ஒரு காரணமாக வைத்து அவரிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து உடனே புறப்பட்டு விட்டான் அவன்.


சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - Unicode - PDF - Buy Book
கள்வனின் காதலி - Unicode - PDF
சிவகாமியின் சபதம் - Unicode - PDF - Buy Book
தியாக பூமி - Unicode - PDF
பார்த்திபன் கனவு - Unicode - PDF
பொய்மான் கரடு - Unicode - PDF
பொன்னியின் செல்வன் - Unicode - PDF
சோலைமலை இளவரசி - Unicode - PDF
மோகினித் தீவு - Unicode - PDF
மகுடபதி - Unicode - PDF
கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode

தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
கபாடபுரம் - Unicode - PDF
குறிஞ்சி மலர் - Unicode - PDF - Buy Book
நெஞ்சக்கனல் - Unicode - PDF - Buy Book
நெற்றிக் கண் - Unicode - PDF
பாண்டிமாதேவி - Unicode - PDF
பிறந்த மண் - Unicode - PDF - Buy Book
பொன் விலங்கு - Unicode - PDF
ராணி மங்கம்மாள் - Unicode - PDF
சமுதாய வீதி - Unicode - PDF
சத்திய வெள்ளம் - Unicode - PDF
சாயங்கால மேகங்கள் - Unicode - PDF - Buy Book
துளசி மாடம் - Unicode - PDF
வஞ்சிமா நகரம் - Unicode - PDF
வெற்றி முழக்கம் - Unicode - PDF
அநுக்கிரகா - Unicode - PDF
மணிபல்லவம் - Unicode - PDF
நிசப்த சங்கீதம் - Unicode - PDF
நித்திலவல்லி - Unicode - PDF
பட்டுப்பூச்சி - Unicode - PDF
கற்சுவர்கள் - Unicode - PDF - Buy Book
சுலபா - Unicode - PDF
பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
அனிச்ச மலர் - Unicode - PDF
மூலக் கனல் - Unicode - PDF
பொய்ம் முகங்கள் - Unicode - PDF
தலைமுறை இடைவெளி - Unicode
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - Unicode - PDF - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
வேருக்கு நீர் - Unicode - PDF
கூட்டுக் குஞ்சுகள் - Unicode
சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
புதிய சிறகுகள் - Unicode
பெண் குரல் - Unicode - PDF
உத்தர காண்டம் - Unicode - PDF
அலைவாய்க் கரையில் - Unicode
மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book
கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
மாணிக்கக் கங்கை - Unicode - PDF
குறிஞ்சித் தேன் - Unicode - PDF
ரோஜா இதழ்கள் - Unicode

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 177/- : 1 வருடம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்!
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
      

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
வாடா மல்லி - Unicode - PDF
வளர்ப்பு மகள் - Unicode - PDF
வேரில் பழுத்த பலா - Unicode - PDF
சாமியாடிகள் - Unicode
மூட்டம் - Unicode - PDF
புதிய திரிபுரங்கள் - Unicode - PDF

புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108) - Unicode
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - Unicode - PDF
பார்வதி, பி.ஏ. - Unicode - PDF
வெள்ளை மாளிகையில் - Unicode
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode

பாரதியார்
குயில் பாட்டு - Unicode
கண்ணன் பாட்டு - Unicode
தேசிய கீதங்கள் - Unicode
விநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF

பாரதிதாசன்
இருண்ட வீடு - Unicode
இளைஞர் இலக்கியம் - Unicode
அழகின் சிரிப்பு - Unicode
தமிழியக்கம் - Unicode
எதிர்பாராத முத்தம் - Unicode

மு.வரதராசனார்
அகல் விளக்கு - Unicode
மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode

லா.ச.ராமாமிருதம்
அபிதா - Unicode - PDF

சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும் - Unicode
புயல் - Unicode

விந்தன்
காதலும் கல்யாணமும் - Unicode - PDF

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - Unicode - PDF
பனித்துளி - Unicode - PDF
பூவும் பிஞ்சும் - Unicode - PDF
தனி வழி - Unicode - PDF

ரமணிசந்திரன்

சாவி
ஆப்பிள் பசி - Unicode - PDF - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
விசிறி வாழை - Unicode

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு - Unicode
சர்மாவின் உயில் - Unicode

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF

மகாத்மா காந்தி
சத்திய சோதன - Unicode

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி - Unicode

மாயாவி
மதுராந்தகியின் காதல் - Unicode - PDF

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல் - Unicode

கௌரிராஜன்
அரசு கட்டில் - Unicode - PDF - Buy Book
மாமல்ல நாயகன் - Unicode - PDF

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - Unicode - PDF
ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode

பழந்தமிழ் இலக்கியம்

எட்டுத் தொகை
குறுந்தொகை - Unicode
பதிற்றுப் பத்து - Unicode
பரிபாடல் - Unicode
கலித்தொகை - Unicode
அகநானூறு - Unicode
ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode

பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை - Unicode
பொருநர் ஆற்றுப்படை - Unicode
சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
முல்லைப்பாட்டு - Unicode
மதுரைக் காஞ்சி - Unicode
நெடுநல்வாடை - Unicode
குறிஞ்சிப் பாட்டு - Unicode
பட்டினப்பாலை - Unicode
மலைபடுகடாம் - Unicode

பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
திருக்குறள் (உரையுடன்) - Unicode
நாலடியார் (உரையுடன்) - Unicode
நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF
ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF
திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம் - Unicode
மணிமேகலை - Unicode
வளையாபதி - Unicode
குண்டலகேசி - Unicode
சீவக சிந்தாமணி - Unicode

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம் - Unicode
நாககுமார காவியம் - Unicode
யசோதர காவியம் - Unicode - PDF

வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF
மனோதிருப்தி - Unicode - PDF
நான் தொழும் தெய்வம் - Unicode - PDF
திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF
திருப்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 177/- : 1 வருடம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்!
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
      

சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை - Unicode
திருவிசைப்பா - Unicode
திருமந்திரம் - Unicode
திருவாசகம் - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
சொக்கநாத வெண்பா - Unicode - PDF
சொக்கநாத கலித்துறை - Unicode - PDF
போற்றிப் பஃறொடை - Unicode - PDF
திருநெல்லையந்தாதி - Unicode - PDF
கல்லாடம் - Unicode - PDF
திருவெம்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF
திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF
பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF
இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF
இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF
இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF
இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF
சிவநாம மகிமை - Unicode - PDF
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF
சிதம்பர வெண்பா - Unicode - PDF
மதுரை மாலை - Unicode - PDF
அருணாசல அட்சரமாலை - Unicode - PDF

மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF
திருவுந்தியார் - Unicode - PDF
உண்மை விளக்கம் - Unicode - PDF
திருவருட்பயன் - Unicode - PDF
வினா வெண்பா - Unicode - PDF
இருபா இருபது - Unicode - PDF
கொடிக்கவி - Unicode - PDF

பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF
சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF
சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF
சித்தாந்த சிகாமணி - Unicode - PDF
உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF
உபதேச வெண்பா - Unicode - PDF
அதிசய மாலை - Unicode - PDF
நமச்சிவாய மாலை - Unicode - PDF
நிட்டை விளக்கம் - Unicode - PDF

சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF
நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF
ஞானம் - 100 - Unicode - PDF
நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF
பூரண மாலை - Unicode - PDF
முதல்வன் முறையீடு - Unicode - PDF
மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF
பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF

கம்பர்
கம்பராமாயணம் - Unicode
ஏரெழுபது - Unicode
சடகோபர் அந்தாதி - Unicode
சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF
சிலையெழுபது - Unicode
திருக்கை வழக்கம் - Unicode

ஔவையார்
ஆத்திசூடி - Unicode - PDF
கொன்றை வேந்தன் - Unicode - PDF
மூதுரை - Unicode - PDF
நல்வழி - Unicode - PDF
குறள் மூலம் - Unicode - PDF
விநாயகர் அகவல் - Unicode - PDF

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - Unicode - PDF
கந்தர் கலிவெண்பா - Unicode - PDF
சகலகலாவல்லிமாலை - Unicode - PDF

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம் - Unicode
திருக்குறும்பலாப்பதிகம் - Unicode

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
திருக்குற்றால மாலை - Unicode - PDF
திருக்குற்றால ஊடல் - Unicode - PDF

ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - Unicode - PDF
கந்தர் அலங்காரம் - Unicode - PDF
கந்தர் அனுபூதி - Unicode - PDF
சண்முக கவசம் - Unicode - PDF
திருப்புகழ் - Unicode
பகை கடிதல் - Unicode - PDF
மயில் விருத்தம் - Unicode - PDF
வேல் விருத்தம் - Unicode - PDF
திருவகுப்பு - Unicode - PDF
சேவல் விருத்தம் - Unicode - PDF

நீதி நூல்கள்
நன்னெறி - Unicode - PDF
உலக நீதி - Unicode - PDF
வெற்றி வேற்கை - Unicode - PDF
அறநெறிச்சாரம் - Unicode - PDF
இரங்கேச வெண்பா - Unicode - PDF
சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF
விவேக சிந்தாமணி - Unicode - PDF
ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF
நீதி வெண்பா - Unicode - PDF
நன்மதி வெண்பா - Unicode - PDF
அருங்கலச்செப்பு - Unicode - PDF

இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை - Unicode
நேமிநாதம் - Unicode - PDF
நவநீதப் பாட்டியல் - Unicode - PDF

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - Unicode - PDF

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF
கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF

உலா நூல்கள்
மருத வரை உலா - Unicode - PDF
மூவருலா - Unicode - PDF
தேவை உலா - Unicode - PDF
குலசை உலா - Unicode - PDF
கடம்பர்கோயில் உலா - Unicode - PDF
திரு ஆனைக்கா உலா - Unicode - PDF

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - Unicode - PDF
திருவருணை அந்தாதி - Unicode - PDF
காழியந்தாதி - Unicode - PDF
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF
திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF
திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF

கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
குலசை உலா - Unicode - PDF

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF

நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
நெஞ்சு விடு தூது - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
மான் விடு தூது - Unicode - PDF
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF
சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF
பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF
சீகாழிக் கோவை - Unicode - PDF

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம் - Unicode
மதுரைக் கலம்பகம் - Unicode
காசிக் கலம்பகம் - Unicode - PDF
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF
பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF
சோழ மண்டல சதகம் - Unicode - PDF
குமரேச சதகம் - Unicode - PDF
தண்டலையார் சதகம் - Unicode - PDF
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF
கதிரேச சதகம் - Unicode - PDF
கோகுல சதகம் - Unicode - PDF
வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF
அருணாசல சதகம் - Unicode - PDF
குருநாத சதகம் - Unicode - PDF

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
முத்தொள்ளாயிரம் - Unicode
காவடிச் சிந்து - Unicode
நளவெண்பா - Unicode

ஆன்மீகம்
தினசரி தியானம் - Unicode


காட்சிகளுக்கு அப்பால்

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
வகைப்பாடு : சினிமா
இருப்பு உள்ளது
விலை: ரூ. 75.00
தள்ளுபடி விலை: ரூ. 70.00
அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

Buy

நேரடியாக வாங்க : +91-94440-86888