இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
15 வருடம்
ரூ.1180/-
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது

  புதிய வெளியீடு!58

     பலரிடம் வாழ்க்கையின் அந்தரங்கங்களைச் சொல்ல முடியாததைப் போல் சிலரிடமாவது அவற்றைச் சொல்லாமலிருக்கவும் முடியாது.

     பாரதியின் ஜுரம், ஜன்னி கண்டு பிதற்றுகிற எல்லைவரை வளர்வதும், குறைவதுமாக பத்துப் பதினைந்து நாட்கள் அவளை வாட்டி எடுத்துவிட்டது. தாய் தன் அருமை மகளைக் கவனிப்பது போலவும், அன்புத் தமக்கை தன் பிரியமுள்ள தங்கையைப் பேணி உபசரிப்பது போலவும், பாரதி உடல் நலமின்றிப் படுக்கையில் கிடந்த நாட்களில் இரவு பகலாகத் தூக்கம் விழித்து ஓடியாடி அவளுக்குப் பணிவிடை செய்தாள் மோகினி. சிறு வயதிலேயே தாயன்பை இழந்திருந்த பாரதி, மோகினியின் சில நாள் பணிவிடையிலேயே அதை உணர்ந்தாள். பார்க்கும் கண்களை அப்படியே இழுத்து நிறுத்தித் தன் மேல் நிலைக்க வைக்கும் மோகினியின் உடல் வனப்பும் அந்த வனப்பை உறுதிபடுத்திச் சாட்சி சொல்வது போல் அவளிடம் அமைந்திருந்த நாட்டியக்கலைத் திறனும் தான், இதுவரை பாரதிக்குத் தெரிந்திருந்தவை. இப்போதோ உடல் வனப்புக்கும், கலைத்திறனுக்கும் அப்பால் மோகினியின் மிக உயர்ந்த மனப்பண்பும் அவளுக்குத் தெரிந்து விட்டது. அந்த மனத்தில் கருணையும், பரிவும் நிறைந்துள்ளதை அவள் அநுபவப் பூர்வமாக புரிந்து கொண்டு விட்டாள். உடம்பின் வனப்பைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக மனத்தின் வனப்பை அவள் பெற்றிருக்கிறாள் என்பதை உணர்ந்த போது பாரதியால் அவள் மேல் எந்தக் காரணத்துக்காகவும் பொறாமைப்பட முடியவில்லை. சத்தியமூர்த்தியின் மனத்தை வென்று அவருக்கு ஆட்பட்டு, மோகினியால் அவருடைய அன்பைப் பெற முடிந்ததற்காகப் பெருமைப்பட்டு அந்தப் பெருமையோடு தன் ஆற்றாமையையும் நினைத்து உள்ளுருக முடிந்ததே தவிரப் பாரதியால் அவள் மேல் குரோதமடைய இயலவில்லை.

     மோகினியிடம் அமைந்திருந்த இணையிலாப் பேரெழிலும் கலைத்திறனும் பாரதிக்கு அவள் மேல் குன்றாத பயபக்தியை உண்டாக்கியிருந்தாலும் அவளிடம் சூது வாதும், கள்ளங் கபடும் மிகுந்த உலகியல் அறிவும் சிறிதும் இல்லாததால் அவள் இன்னும் ஒரு பேதையாகவே இருக்கிறாள் என்பதைப் பாரதி புரிந்து கொண்டிருந்தாள். பாரதி உடல் நலமின்றிப் படுக்கையில் கிடந்த பத்துப் பதினைந்து நாட்களில் தேவையான போது டாக்டருக்குப் ஃபோன் செய்து வரவழைப்பது தவிர மற்ற நேரங்களில் அன்பும், பரிவும், பாசமும் மிகுந்த ஒரு நர்ஸ் போலவே மோகினி உடனிருந்து கவனித்ததன் காரணமாக அவளும் பாரதியும் மனம் விட்டுப் பழக நேர்ந்தது. அப்படிப் பழக நேர்ந்த வேளைகளிலும் கூட மோகினி தன்னை ஒரு பேதையாகவே அவளிடம் நிரூபித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அதே சமயத்தில் பாரதியோ உலகியல் அறிவோடு ஒட்டிய சூதுவாதும், கள்ளங்கபடும் நிறைந்த புத்திசாலிப் பெண்ணாகத் தன்னையும் தன் உணர்வுகளையும் மறைத்துக் கொண்டு மோகினியிடம் பழகியிருக்கிறாள். மோகினிக்காகச் சத்தியமூர்த்தியிடம் கடிதம் கொண்டு போய்க் கொடுக்க நேர்ந்தது, அதனால் மனநலமும் உடல்நலமும் குன்றிப் போய்ப் பாரதி கல்லூரியிலிருந்து பகலிலேயே வீடு திரும்ப நேர்ந்த தினத்தன்று இரவில் அவளும் மோகினியும் தங்களுக்குள் சத்தியமூர்த்தியைப் பற்றிப் பேசிக் கொள்வதற்கு வாய்த்தது. பாரதி உடல் நலங்குன்றிச் சோர்வோடு வீடு திரும்பியிருந்ததனால் திரும்பிய உடனேயே "அந்தக் கடிதத்தை அவரிடம் கொடுத்தாயா பாரதி? படித்துப் பார்த்த பின்பு அவருடைய முகத்தில் மலர்ச்சியிருந்ததா? அல்லது கோபம் தெரிந்ததா? என்னிடம் தெரிவிக்கச் சொல்லி அவர் ஏதாவது பதில் கூறி அனுப்பினாரா, இல்லையா?" என்றெல்லாம் அவளிடம் கேட்க நினைத்திருந்தும், மோகினியால் அப்போதிருந்த நிலைமையில் ஒன்றுமே கேட்க முடியவில்லை. தளர்ந்து போய்ப் பாதிக் கல்லூரியிலேயே வீடு திரும்பி விட்ட பெண்ணிடம் தான் கொடுத்தனுப்பிய கடிதத்தையும் அதைப் படித்ததும் அவர் என்ன கூறினார் என்பதையுமே உடனடியாக ஆவலோடு விசாரித்துக் கொண்டு நிற்பது நன்றாயிராது என்று எண்ணியே மோகினி தன் ஆசையை அடக்கிக் கொண்டாள். 'அவரை அறையிலேயே போய்ப் பார்த்து அந்தக் கடிதத்தைக் கொடுத்தாச்சு அக்கா?' பாரதியே கல்லூரியிலிருந்து திரும்பி வந்ததும் வராததுமாகத் தானாகவே கூறத் தொடங்கிய போது கூட, 'கடிதத்தைப் பற்றி இப்போது என்ன வந்ததம்மா?' என்று மோகினி அதைத் தெரிந்து கொள்வதில் மட்டுமே அப்போது தனக்கு அக்கறையில்லை என்பது போல் நடித்து மறுக்க வேண்டியிருந்தது. அதே தினம் மாலையில் பாரதிக்குக் கடுமையான ஜுரம் வந்து விட்டதனால் மோகினி டாக்டரை உடனே அழைத்து வரச் சொல்லி டிரைவர் முத்தையாவை அனுப்பினாள். டாக்டர் வந்தார். பார்த்தார். ஓர் இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு மேலும் ஏதேதோ மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.

     அதன் பின்பு இரவு எட்டு மணிக்குக் கண்ணாயிரம் வந்து சமையற்காரர் எங்கோ வெளியில் போய் இருப்பதாகவும் ஜமீந்தாருக்கு 'குளுக்கோஸ்' கரைத்துக் கொடுக்க வேண்டுமென்றும் மோகினியிடம் அவள் இதற்குச் சம்மதிக்காமல் போய்விடுவாளோ என்று பயத்தோடு பயமாகத் தயங்கியபடி வேண்டினார். "ஏன் நீங்களே கரைத்துக் கொடுக்கலாமே?" என்று மோகினி வேண்டா வெறுப்பாகக் கண்ணாயிரத்தைக் கேட்ட போது, "நானே கரைச்சுக் கொடுக்கத் தெரியாமே உன்னைக் கூப்பிடறதுக்கு இங்கே வந்து நிற்கலே... நான் கொடுக்கிறேன் அல்லது பக்கத்தில் நாய் மாதிரி நிற்கிறானே அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவன், அவனைக் கரைச்சுக் கொடுக்கச் சொல்றேன். வேறு யாரும் ஆளில்லாமல் உங்கிட்ட வந்து கெஞ்சலை. ஜமீந்தார் உடம்புக்குச் சுகமில்லாமல் படுத்தப்புறம் நீ அவர் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. அவரிடம் ஆறுதலா ரெண்டு வார்த்தை விசாரிக்கக் கூட இல்லை... அவர் உன் மேலே ரொம்பக் கோபமாயிருக்காரு. அதனாலே தான் சொன்னேன். உன் கையாலே நீயே குளுகோஸ் கரைச்சு எடுத்துக்க்கிட்டுப் போனியானா அவருடைய கோபம் தணியும்..." என்று கண்ணாயிரம் பதில் கூறினார். தான் ஜமீந்தாருக்குக் குளுகோஸ் கரைத்துக் கொடுக்க மறுத்தால் அந்த வேலையைத் தன் உயிர் அன்பராகிய சத்தியமூர்த்தியின் தந்தையிடம் சுமத்தித் தான் மறுத்த கோபமும் உடன் சேர அந்த அப்பாவிக் கிழவரை அவர்கள் விரட்டுவிரட்டென்று விரட்டப் போகிறார்களே என்ற எண்ணத்தினால் மறுபேச்சுப் பேசாமல் ஜமீந்தாருடைய அறையில் போய் அவருக்குக் குளுக்கோஸ் கரைத்துக் கொடுத்தாள் மோகினி.

     "மோகினி! ஒரு நிமிஷம் நில்லு! உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... உன்னைப் பார்த்தாலேயே எனக்கு உடம்பு தேறிடும் போலேயிருக்கு" என்று பல்லிளிக்கத் தொடங்கிய ஜமீந்தாரிடம், "பாரதி காலேஜுக்குப் போயி உடம்புக்கு இழுத்து விட்டுவிட்டு வந்திருக்கா... நான் அவளை கவனிக்கணும்" என்று கூறிக் கடுமையாக மறுத்துவிட்டுத் திரும்பினாள் மோகினி. கண்ணாயிரம் சிறிது நேரத்தில் எங்கோ வெளியே புறப்பட்டுப் போய்விட்டார். ஜமீந்தாருக்கு இரவில் சாப்பாடு இல்லை. ஓட்ஸ் கஞ்சி போட்டு அவருடைய அறையில் கொண்டுபோய்க் கொடுத்தாயிற்று. சமையற்காரர் இல்லாததனால் தானாகவே எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடவும் முடியாமல், யாரிடமும் கேட்கவும் கூசிக் கொண்டு அந்த இரவில் சத்தியமூர்த்தியின் தந்தை தவிப்பதை மோகினி குறிப்பாகப் புரிந்து கொண்டாள். மோகினி தன் மனத்தினுள்ளே அரும்பியிருக்கும் ஓர் அந்தரங்கமான பற்றுதலுடன் தானே இலையை எடுத்துப் போட்டுப் பரிமாறிவிட்டு அந்தக் கிழவரைச் சாப்பிட உட்காருமாறு அழைத்த போது, அவர் கூச்சமும் பயமுமாகத் தயங்கினார்.

     "உங்களுக்கு எதுக்கம்மா இந்தச் சிரமம்? நீங்க ஜமீந்தார் ஐயாவைக் கவனியுங்க... யாராவது வேலைக்காரங்க வந்தப்புறம் நான் ஒரு வாய் கேட்டு சாப்பிட்டுகிட்டாப் போகுது" என்று பதறினார் அவர். 'என் அன்பரின் தந்தைக்கு நானே இலை போட்டுப் பரிமாறப் போகிறேன்' என்ற பெருமிதத்தோடு அவரை வற்புறுத்தி இலையில் உட்காரச் செய்து மேலும் தொடர்ந்து பரிமாறினாள் மோகினி. 'ஜமீந்தார் வலிந்து கூப்பிட்டனுப்பினாலும் அவர் உடல் நலமின்றிப் படுத்த படுக்கையாயிருக்கும் அறைக்குள் எட்டிப் பார்க்கக் கூட மறுத்து வெறுப்பும் அலட்சியமும் காட்டுகிற இந்தப் பெண் இன்று இருந்தாற் போலிருந்து திடீரென்று - நம்மை மட்டும் வற்புறுத்தி அழைத்து இலைபோட்டுப் பிரியத்தோடு பரிமாறுகிற காரணம் என்ன?' என்று புரியாமல் பயம் கலந்த மகிழ்ச்சியோடு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அந்தக் கிழவர். அவருக்குப் பரிமாறி முடித்ததும் 'தானும் ஏதோ சாப்பிட்டோம்' என்று பேர் செய்தபின் பாரதிக்காக கஞ்சியை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குள் போனாள் மோகினி. கஞ்சியை ஆற்றிக் கொண்டே பாரதியிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தாள் அவள்.

     "கடிதத்தை அவர் படித்துப் பார்த்தாரா பாரதி!"

     "அவர் உங்கள் கடிதத்தைப் படித்துப் பார்க்கத் தொடங்குகிற வரை நானும் அவரோடு கூட இருந்தேன் அக்கா! அப்புறம் எனக்குக் காலேஜுக்கு நேரமாகி விட்டதால் - கடைசிவரைக் காத்திருந்து அவர் என்ன பதில் சொல்லுகிறாரென்று கேட்டுக் கொண்டு வர முடியவில்லை" என்று தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு மறுமொழி கூறினாள் பாரதி. அவள் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு நடித்த அதே வேளையில் மோகினி தன் அந்தரங்கமான உணர்ச்சிகளையெல்லாம் ஒன்று விடாமல் அவளிடம் கொட்டத் தொடங்கினாள். பாரதி அவற்றையெல்லாம் ஏற்கெனவே மோகினி தன்னிடம் சத்தியமூர்த்திக்காகக் கொடுத்தனுப்பிய கடிதத்தில் படித்துப் புரிந்து கொண்டிருந்தாலும் இப்போதுதான் புதிதாகக் கேட்டுத் தெரிந்து கொள்கிறவளைப் போல் மிகவும் ஆர்வத்தோடு கேட்கத் தொடங்கினாள். மனித மனத்தின் பலவீனமான வேளைகளில் இப்படிப்பட்ட வேளையும் ஒன்றாகும். பலரிடம் வாழ்க்கையின் அந்தரங்கங்களைச் சொல்ல முடியாததைப் போல் சிலரிடமாவது அவற்றைச் சொல்லாமலிருக்கவும் முடியாது. பாரதியை மனப்பூர்வமாக நம்பி அவளிடம் தன் வாழ்க்கையின் அந்தரங்கங்களையெல்லாம் சொல்லிவிட வேண்டும் என்று அந்த விநாடியில் தன்னுள் பொங்கியெழும் உணர்ச்சி வேகத்தைத் தடுத்துக் கொள்ள முடியாமல் எல்லாவற்றையும் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் மோகினி. மோகினி கூறுவதைக் கேட்கக் கேட்கப் பாரதிக்குக் கண்கள் கலங்கின. பாவம்! பேதை மோகினி அப்போது தான் சொல்லிக் கொண்டிருந்த சோகமயமான சுயசரிதத்தையும், தான் சத்தியமூர்த்திக்கு ஆட்பட்டதையும் கேட்டு இளகிய சுபாவமுள்ளவளாகிய பாரதி சும்மா கண்கலங்கி அழுகிறாள் என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டாள். ஆனால் அவளுடைய கலக்கத்தில் சொந்தக் காதலில் ஏமாறிய ஏமாற்றமும் தோல்வியும் இருப்பதைப் பேதையான மோகினியால் ஒரு சிறிதும் புரிந்து கொள்ள முடியவில்லை.

     "என் கதை இதுதான் பாரதி! நான் இந்த ஊருக்கு வந்த புதிதில் நீ கூட ஒருநாள் என்னைப் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ பேசினாய்! 'ஜமீந்தார் உங்களுக்குக் கூட இதெல்லாம் சொல்வதில்லையா அக்கா?' என்று ஜமீந்தாரும் நானும் ரொம்ப நெருக்கமாக இருக்கிறாற் போல நீயாக நினைத்துக் கொண்டு கூறிய போது நான் திகைத்தேன். ஏதோ எங்கள் குடும்பம், என்றோ ஜமீன் உப்பைத் தின்று வளர்ந்திருக்கிறது என்ற நன்றியினாலும் இந்தக் கொடிய ஜமீந்தாரிடமுள்ள பயத்தினாலும் நான் சில சமயங்களில் இவர்களுக்கு அஞ்சிக் கட்டுப்படுகிறேன். என் மனம் வேறு எங்கே இருக்கிறதென்று இப்போதாவது நீ தெரிந்து கொண்டிருப்பாய் பாரதீ!" என்று மோகினி உருக்கமாகக் கூறி முடித்தாள். அவள் இவற்றையெல்லாம் கூறி முடித்த பின் சிறிது நேரம் பாரதிக்கும் அவளுக்குமிடையே பேச்சில்லாததோர் மௌனம் நிலவியது; இருவருக்குள்ளேயுமோ மௌனமில்லாத ஊமைப் பேச்சுக்கள் ஆயிரமாயிரமாகக் குமுறிக் கொண்டிருந்தன. இருவருக்குமிடையே வெளிப்படையாக நிலவிய மௌனம் இருவருள்ளேயும் குமுறும் மனத்தில் பேச்சுக்களை ஒரு விதத்தில் அள்விட்டுக் காட்டுவதாக இருந்தது. அந்த மௌனத்தைக் கலைத்து விட்டுப் பாரதிதான் முதலில் பேசத் தொடங்கினாள்.

     "அக்கா! நீங்கள் பாக்கியசாலி..." என்று இருந்தார் போலிருந்து அழுகை தயங்கும் குரலில் மோகினியிடம் கூறினாள் பாரதி. கூறிவிட்டு அசையாமல் மோகினியின் முகத்தையும் அப்போது கூர்ந்து கவனித்தாள் அவள்.

     "ஏன் அப்படிச் சொல்கிறாய்? என்னிடம் இன்று திடீரென்று என்ன பாக்கியத்தைக் கண்டுவிட்டாய் பாரதீ?"

     "தகுந்த காரணத்தோடுதான் சொல்கிறேன் அக்கா! நீங்கள் நிச்சயமாகப் பெரிய பாக்கியசாலி! பாக்கியசாலிகளால்தான் காதலில் ஜெயிக்க முடிகிறது. துர்பாக்கியசாலிகள் அநேகமாக எப்படியாவது தோற்றுப் போய்விடுகிறார்கள்..."

     "இருக்கலாம்! ஆனால் என்னுடைய பாக்கியமோ அல்லது துர்ப்பாக்கியமோ இன்னும் தீர்மானமாக முடிவாகவில்லையே அம்மா? என்னுடைய சகல சௌபாக்கியங்களும் அவர் ஒருவர்தான்! அவரோ என்னிடமிருந்து வெகு தொலைவில் விலகியிருக்கிறார். அவருக்குக் கெடுதல் செய்து அவரை இந்தக் கல்லூரியிலிருந்து வெளியேற்றித் துரத்தி அனுப்பிவிட வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்கள் யாரோ அவர்களுக்கே இந்தக் கையால் குளுக்கோஸ் கரைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் நான்! என்னுடைய இந்தப் பாவத்துக்கு விடிவு ஏது? அவருடைய பாதங்களை இந்தக் கண்களால் அருகில் நின்று ஒரு முறை பார்க்கவும் முடியாத கொடும்பாவியாகி விட்டேனே நான்?"

     "கவலைப்படாதீர்கள் அக்கா! உங்களுடைய சௌபாக்கியத்தை உங்களுக்கு மிக அருகில் வரவழைக்கிறேன் நான். நீங்களே அவரைத் தேடிக்கொண்டு பார்க்கப் போனால் இந்த ஜமீந்தாரும் கண்ணாயிரமும் உங்களைக் கொன்று போட்டு விடுவார்கள். அதனால் என் தோழி மகேசுவரியிடம் நானே சொல்லியனுப்பிச் சத்தியமூர்த்தி சாரை இன்னும் இரண்டு மூன்று நாளில் இங்கு இந்த வீட்டுக்கு வரவழைக்கிறேன். தன் மாணவியாகிய என்னைப் பார்த்துவிட்டுப் போக வருவது போல் இங்கு வருவார் அவர். அப்போது நீங்கள் அவரைக் கண் குளிர உங்களுக்கு மிக அருகில் பார்க்கலாம். பேசலாம். உங்கள் கடிதத்தைப் பற்றியும் விசாரிக்கலாம்..."

     "இந்தப் பாவிகள் இருக்கிற நரகத்துக்கு அவர் வருவாரா பாரதீ?"

     "கட்டாயம் வருவார்! வரச்செய்வது என் பொறுப்பு அக்கா! கல்லூரியிலேயே மாணவ மாணவிகளிடம் அன்பும் கருணையும் நிறைந்த விரிவுரையாளர் அவர் ஒருவர் தான் அக்கா! அன்று தமிழ் வகுப்பில் நான் உடல் நலமில்லாமல் சோர்ந்து காணப்பட்ட போது கூட அவராகவே தான் பரிவோடு என்னைப் பார்த்து 'வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லி அனுப்பினார். அப்படிப்பட்டவர் நான் என் உடல் நிலையைச் சொல்லியனுப்பினால் ஒரு முறைக்கு விசாரித்துப் போவதற்காகவாவது நிச்சயம் வருவார்..."

     பாரதி இப்படிக் கூறிக் கொண்டிருக்கும் போதே மோகினி மனக்கண்களில் சத்தியமூர்த்தி அங்கு வருவது போலவும் பாரதியின் அறையில் நுழைந்து தன் மாணவியாகிய அவளுடைய உடல் நலனை விசாரிப்பது போலவும் அப்போது தான் காப்பியோடு அந்த அறைக்குள் புகுந்து அவரை திகைக்க வைப்பது போலவும் உல்லாசமாகத் தனக்குத்தானே கற்பனை செய்யத் தொடங்கி விட்டாள்.

     பாரதியின் குரல் குறுக்கிட்டு அந்த வேளையில் அவள் கற்பனையைத் தடை செய்திராவிட்டால் அவள் கனவுலகுக்கே போயிருப்பாள்.

     "அக்கா! இந்தப் பாட்டை நீங்கள் படித்திருக்கிறீர்களா? எத்தனை சோகமாகப் பாடியிருக்கிறார் பாருங்கள்? காதலில் தோல்வியடைந்தவர்களின் நினைவைச் சித்தரிப்பதாக இந்தப் பாட்டை நவநீதக் கவி பாடியிருக்கிறார்! சத்தியமூர்த்தி சாருடைய தமிழ் வகுப்புச் சொற்பொழிவுகளுக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்தவை இந்தக் கவிஞரின் உணர்ச்சி மயமான பாடல்கள் தான்! இதோ இந்தப் பாட்டைக் கொஞ்சம் பாருங்களேன், சொல்கிறேன்" என்று பக்கத்து ஸ்டூலில் மருந்துப் பாட்டில்களோடும் அவுன்ஸ் கிளாஸோடும் நடுவே கிடந்த கவிதைத் தொகுதி ஒன்றை எடுத்து அடையாளமாக அதில் ஒரு பக்கத்தைப் பிரித்து மோகினியிடம் நீட்டினாள் பாரதி. மோகினிக்கு அந்தப் பாடலை வாய் விட்டுப் பாடினாள்.

     முன்னும் பின்னும் நினைவாகி - அது
          முடிவிற் பெரிய கனவாகி
     நீயும் நானும் கதையாகி நம்
          கதையும் உலகிற் செலவாகிக்
     காலப் படுகை யதன்மேலே - முன்
          கழிந்த நினைவுகள் கண்ணயர
     அழிந்த நினைவுகள் கண்கலங்க
          அங்கும் இங்கும் அலைபாயும்

     இந்தப் பாடலை மோகினி தன்னுடைய இனிய குரலில் ஓரளவு நன்றாகவே பாடி முடித்தவுடன் தன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் பாரதிக்கு அழுகை குமுறி வெடித்துக் கொண்டு வந்து விட்டது.

     "பாட்டு ரொம்பவும் உருக்கமாகத்தான் இருக்கிறது; அதற்காக நீ ஏன் இப்படி அழுகிறாய் பெண்ணே? சில பேருக்குச் சினிமாப் படத்தில் துன்பப்படுகிற காட்சிகளைப் பார்த்தால் கூட அழுகை வந்துவிடும். அதைப் போல நீயும் பச்சைக் குழந்தை மாதிரி இருக்கிறாயே அம்மா? பாட்டு நன்றாயிருக்கிறதென்றால் அதுக்குக் கூட இப்படி ஒரு அழுகையா?" என்று பாரதியின் உள்மனம் புரியாமல் மோகினி அவளைப் பேதையாக நினைத்துக் கொண்டு அந்தப் பேதைமையைப் புகழவும் தொடங்கிவிட்டாள். ஆனால் உண்மையில் மோகினிதான் அப்போது அசல் பேதையாக நடந்து கொண்டிருந்தாள். அதன் பின்பு ஒவ்வொரு நாளும் இப்படி இருவருக்குமிடையே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் மர்மமாக எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்தன. மோகினி தன் வாழ்க்கையில் பாரதிக்குச் சொல்ல இனி ஒன்றும் மீதமில்லை என்பது போல் ஒவ்வொரு நாளும் அவளிடம் மனம் விட்டுப் பழகி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். பாரதியும் கண்கலங்கி அழுவது போல் உணர்ச்சி வசப்பட்டு அவற்றைக் கேட்பது வழக்கமாயிருந்தது. பாரதி ஜுரமாகப் படுத்த பதின்மூன்றாவது நாளோ பதினான்காவது நாளோ, "அக்கா! இன்று மாலையில் கல்லூரி விட்டதும் சத்தியமூர்த்தி சார் என்னைப் பார்த்து விசாரிப்பதற்கு இங்கே வருவதாகச் சொல்லியிருக்கிறாராம். நேற்று இங்கே வந்திருந்த மகேசுவரி தங்கரத்தினத்திடம் நான் அவருக்குச் சொல்லியனுப்பினேன். அவர் இன்று இங்கே வர ஒப்புக் கொண்டிருப்பதாக அவள் சற்று முன்புதான் ஃபோனில் கூறினாள். நீங்கள் அவரைச் சந்திக்கத் தயாராயிருக்க வேண்டும்" என்று மகிழ்ச்சி மிக்கச் செய்தியைத் தெரிவித்தாள். இதைக் கேட்டு மோகினியின் மகிழ்ச்சியும் ஆவலும் எல்லையற்றுப் பெருகின. ஆர்வம் பொங்கும் மனத்தோடு மாலை வேளையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அவள். ஒரு நாளுமில்லாத திருநாளாக அன்று ஜமீந்தாருக்கு உடல்நிலை தேறி மாலையில் பங்களாவின் முன் வராந்தாவில் சாய்வு நாற்காலியை எடுத்துப் போடச் சொல்லிச் சாய்ந்து கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி அங்கு வரப் போவதாகப் பாரதி சொல்லியிருந்த நேரம் ஆகிவிடவே அவரைப் பார்க்கும் ஆவலை அடக்க முடியாமல் வாயிற்புறமாக அவர் அங்கு வருகிறாரா என்று பார்க்க வந்த மோகினியைத் தற்செயலாக அங்கு சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த ஜமீந்தார் பார்த்துவிட்டார்.

     "மோகீ! உடம்பு இன்னிக்குக் கொஞ்சம் தேவலை! உன் கையாலே காப்பி கலந்து கொண்டாயேன்..." என்று ஜமீந்தார் அப்போது வேண்டிக் கொண்டதை மறுக்கவும் முடியாமல் விரும்பி அங்கீகரிக்கவும் முடியாமல் மனப்போராட்டத்தோடு உள்ளே சென்ற மோகினி 'கடனே' என்று வெறுப்போடு ட்ரேயில் காப்பியை எடுத்து வந்து சாய்வு நாற்காலியருகே சென்று ஜமீந்தாரிடம் கொடுக்கவும் அதை வாங்கிக் கொண்டு ஜமீந்தார் அவளைப் பார்த்து ஏதோ சொல்லிச் சிரிக்கவும் அதே வேளையில் நேர் எதிரே வாயிற்புறமிருந்து சத்தியமூர்த்தி உள்ளே நுழையவும் சரியாயிருந்தது. நிமிர்ந்து பார்த்த மோகினி எதிரே வந்து நின்ற சத்தியமூர்த்தி தான் ஜமீந்தாருக்கு உபசாரம் செய்து பணிவிடை புரிவதாக எண்ணிக் கொண்டு முகத்தைச் சுளித்து எரித்துவிடுவது போல் தன்னை நோக்குவதைக் கண்டு மனம் பதறி நடுங்கினாள். சத்தியமூர்த்தி உள்ளே நுழைந்து வருவதைப் பார்க்க இயலாத நிலையில் ஜமீந்தார் பக்கவாட்டில் நோக்கியபடி சாய்வு நாற்காலியில் சாய்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்தார். ஆனால் அந்த வேளையில் ஜமீந்தாரையும் அவளையும் அங்கே சேர்த்துப் பார்க்க முடிந்த சத்தியமூர்த்தி அவளை எப்படி எப்படியோ தவறாகப் புரிந்து கொள்ளும்படி சந்தர்ப்பம் சதி செய்துவிட்டது.


கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் :  அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி :  சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி :  மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல் | கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் :  திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் :  அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் :  தினசரி தியானம்


விடை
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

திராவிட இயக்க வரலாறு - தொகுதி 1
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

ஆப்பிள் பசி
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

காதல் வழிச் சாலை!
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

அசடன்
இருப்பு உள்ளது
ரூ.1225.00
Buy

வீடு, நிலம், சொத்து : சட்டங்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

என் பெயர் ராமசேஷன்
இருப்பு இல்லை
ரூ.145.00
Buy

மேகமூட்டம்
இருப்பு உள்ளது
ரூ.85.00
Buy

பண நிர்வாகம் : நீங்கள் செல்வந்தராவது சுலபம்
இருப்பு உள்ளது
ரூ.81.00
Buy

சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

மன இறுக்கத்தை வெல்லுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

சிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

பெண்களுக்கான இயற்கை மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

காலம் உங்கள் காலடியில்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

தம்மம் தந்தவன்
இருப்பு உள்ளது
ரூ.235.00
Buy

சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

மர்மயோகி நாஸ்டிரடாமஸ்
இருப்பு உள்ளது
ரூ.220.00
Buy

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


சுந்தரமூர்த்தி நாயனார்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)